Tuesday, November 17, 2009

B.V Narsimha Swami ji -Baba Himself Favours the Movement.

Chapter 14.

பாபா பற்றிய குறிப்புக்களை எடுப்பது அத்தனை சுலபமாக அமையவில்லை । பலரிடமும் கேட்டு அறிந்த செய்திகள் உண்மையானவையா என ஆராய வேண்டி இருந்தது . மிகை படுத்தி கூறப்பட்டவை அனைத்தையும் களைந்து எடுத்து , உண்மையான செய்திகளை மட்டும் சேகரித்து ஒன்றாக இணைக்க வேண்டி இருந்தது அத்தனை சுலபமான காரியமாக எல்லை . அனாலும் ஸ்வாமிஜி அந்தபணியில் தயக்கம் காட்டவேயில்லை . தான் கேட்டறிந்த செய்திகளின் உண்மைகளை தானே சென்று பார்த்து அதன் பின்னரே அவற்றை உபயோகித்தார்

நரசிமஸ்வாமிஜியின் கருத்தின்படி , எந்த ஒருவரும் தன்னுடைய குருவின் சக்தியை எடை போடக்கூடாது என எண்ணியவர் . அவர் எழுதிய சகோரி முனிவர் என்ற நூலின் தொண்ணுற்றி ஏழாம் பக்கத்தில் அது குறித்து எழுதி உள்ளார் .ரமண மகரிஷி , உபசினி மகாராஜ் மற்றும் பாபா பற்றிய செய்திகளை நரசிமஸ்வாமிஜி அவர்கள் எழுதி உள்ளது போல வேறு எவராலும் எழுத முடியுமா என்பது சந்தேகமே . ஏன் எனில் அதற்காக அவர் தாமாகவே இடமிடமாக சென்று செய்திகளை அறிந்து பார்த்த பின்னரே எழுதினர் . அதனால்தான் அவர் எழுதிய செய்திகள் உண்மையானவையே என ஏற்க வேண்டி இருந்தது . எந்த ஒருவருக்கும் கடவுளின் ஆசிகள் இல்லை எனில் அதை செய்ய முடியாது . அவர்களுக்கு தேவையான பொறுமை வந்திருக்காது என்பதே உண்மை .

நரசிமஸ்வாமிஜி கூறினார் ‘ பாபாவின் அருளினலோ என்னவோ எனக்கு பல இடங்களில் இருந்தும் அழைப்புக்கள் வந்தன. நான் ஒருமுறை பூனாவிற்கு சென்றபோது ரச்நேஸ் என்பவற்றின் அனுபவங்களை பற்றிய குறிப்புக்கள் எடுத்துக்கொண்டு இருந்தபொழுது குவாலியரை சேர்ந்த பீ . ஆர் . அவஸ்தி என்பவருடைய மகனிடம் இருந்தும் அழைப்பு வந்தது . அங்கு நான் சென்றபொழுது அவஸ்தி அவர்கள் என்னை தன்னுடைய நெடு நாளைய நண்பனைப்போல நடத்தியது மட்டும் அல்லாமல் அங்கு இருந்த அறுபது பாபாவின் பக்தர்களுடைய அனுபவங்களை கேட்டறிய உதவி செய்தார் .

எனக்கு அப்போது மராத்தி மொழி புரியாது । வந்தவர்கள் மராட்டிய மொழியில்தான் பேசினார்கள். அனாலும் அவஸ்தி அவர்கள் தானாகவே முன்வந்து அவர்கள் பேசிய அனைத்தையும் எனக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தது மட்டும் அல்லாமல் அவைகளை கோர்வையாக அமைக்கவும் உதவினர் . முதலில் இருந்தே நான் பாபா பற்றிய செய்திகளை ஆராய்ந்து அறிந்த பின்னரே பிரசுரிக்க எண்ணி இருந்ததினால் , நான் அதற்கு எடுத்துக்கொண்ட சிரமங்களை பெரிது படுத்திக் கொள்ளவில்லை . நான் பிரசுரிக்க இருந்த செய்திகள் பாபாவின் சக்தியை அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் இருக்க வேண்டும் , அவை உண்மைக்கு மாறுபட்டு இருக்கக்கூடாது என எண்ணியவன் . என் உறுதியை அதில் இருந்து நான் தளத்திக் கொள்ளவில்லை . பாபாவின் கருணைக்கு வேறு என்ன சாட்சி வேண்டும் ?

முதலில் இருந்தே நான் பாபா பற்றிய செய்திகளை அறிந்து ஆராய்ந்த பின்னரே பிரசுரிக்க எண்ணி இருந்ததினால் , நான் அதற்கு எடுத்துக்கொண்ட சிரமங்களை பெரிது படுத்திக்கொள்ளவில்லை . நான் பிரசுரிக்கும் செய்திகள் பாபாவின் சக்தியை அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் இருக்க வேண்டும் , அவை உண்மைக்கு மாறுபட்டு இருக்கக்கூடாது என எண்ணியவன் . என் உறுதியை அதில் நான் தளத்திக் கொள்ளவில்லை. பாபாவின் கருணைக்கு வேறு என்ன சாட்சி வேண்டும் ?

ஒவ்வொரு பக்தனுக்கும் தான் விரும்பும் கடவுளிடம் இருந்து அல்லது தனது குருவிடம் இருந்து தனக்கு கிடைத்த அனுபவங்கள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என நினைப்பது உண்டு . அது அவரவர்களுடைய எண்ணம் . அதை தவறு எனக் கூற முடியாது . அனாலும் பல பக்தர்கள் பாபாவிடம் இருந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை என்னிடம் வந்து பகிர்த்து கொண்டனர் .அவஸ்தி அவர்களுடைய நண்பர் ஒருவர் ஒரு வக்கீல் . அதுவரை தான் பாபாவிடம் இருந்து பெற்ற அனுபவங்களை எவரிடமும், ஏன் அவஸ்தியி டமும் அது வரை கூறியது இல்லையாம். ஆனாலும் என்னிடம் வந்து அவற்றை பகிர்ந்து கொண்டார்.

நான் அவர் கூறிய அனைத்தையும் தட்டெழுத்து மிஷினில் டைப்பிங் செய்து கொண்டபின் என் நண்பரான ஜி .பி . தத்தார் என்பவரிடம் கொடுத்து அதை பத்திரமாக வைத்து இருக்கும்படிக் கூறி இருந்தேன். என்ன துரதிஷ்டம் , அவர் அந்த பேப்பர்களை தொலைத்துவிட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார். என்னிடமோ மாற்றுப் பிரிதி கூட இல்லை. ஆனாலும் நான் நம்பிக்கையை தளரவிடாமல் அவர் வீட்டிற்கு சென்று எந்த மேஜை மீது அமர்ந்து அவரிடம் அதை தந்தேனோ அங்கு சென்று அமர்ந்துகொண்டு , அங்கிருந்த ஒரு கட்டு பேப்பரை கையில் எடுக்க , அந்த காகிதக் குவியலிலே அந்த பேப்பர் கிடைத்தது . அதுவே பாபாவின் கருணைக்கு சாட்சி .

என்னிடம் வந்த பல பக்தர்கள் அப்போது அங்கு வந்த அனைவருடைய அனுபவங்களையும் அப்படியே நம்பவேண்டாம் எனவும் , வந்துள்ள பலர் ஏமாற்று பேர்வழிகள் என்று கூறினர் . நான் அவற்றை எல்லாம் பாபாவே பார்த்துக் கொள்வர் என தீர்மானமான நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால் என்னிடம் வந்து தமது அனுபவங்களை கூறிய சில ஏமாற்று பேர்வழிகளை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது . அனைவருடைய அனுபவங்களையும் நான் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை . எது உண்மை என மனதுக்கு தோன்றியதோ எவற்றை என்னால் அறிந்து கொள்ள முடிந்ததோ அவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு மீதி பாதியை தள்ளிவிட்டேன் .

கிடைத்த பதினைந்து அனுபவங்களை முதலில் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் தொடர்ந்து சீரியலாக வெளியிட்டேன் , அது நல்ல வரவேற்பு பெற்றது . அந்த பத்திரிகை இருபதாயிரம் பிரிதிகள் விற்றுக் கொண்டு இருந்ததினால் பாபாவின் புகழை அனைவரும் அறிய ஒரு கருவி ஆயிற்று . அந்த நிலையில் என் நண்பர் ஒருவர் நான் எழுதிய கட்டுரைகளினால் மக்கள் மனதில் பாபா ஒரு மந்திரவாதி என்ற உருவம் பதிந்து உள்ளதாகவும் , அவருக்கு அதனால் பெருமை கிடைக்கவில்லை எனவும் கூறினர் .

அவரிடம் நான் கேட்டேன் ‘அப்படி என்றல் கிருஷ்ணர் செய்தது என்ன ?’ . அவர் கூறினார் ‘ அது கிருஷ்ணருடைய குணம் ’. நான் பதில் கூறினேன் , ‘ அது போலத்தான் இதுவும் பாபாவின் குணம் ’. அந்த நண்பனை நான் குறை கூற விரும்பவில்லை . எந்த ஒரு தீவிரமான பக்தனுக்கும் தன்னுடைய குருவுக்கு மிஞ்சியவர் கிடையாது என்ற எண்ணம் இருக்கும் . அவர் வேறு ஒரு கடவுள் பக்தர் . சாய்பாபாவின் பெருமையை அவரால் ஏற்க முடியவில்லை என்பதில் என்ன தவறு இருக்க முடியும் . அவரவர் வழி அவரவருக்கு .

அப்போதுதான் நான் ஒரு உண்மையை உணர்ந்தேன் . தனித்தனியான பக்தர்களின் அனுபவங்களை வெவ்வேறு மொழிகளில் இருந்து பெற்று ஆங்கிலத்தில் எழுதியது நல்ல விளைவை தரவில்லை . அகவே அதற்கு பதில் ஆங்கிலத்த்தை தவிர்த்து என் தாய் மொழியில் எழுதுவதே சிறந்தது .
.
ராமகிருஷ்ணர் காளிமாதவிடம் அவள் புகழை இந்த உலகில் பரப்ப எவராவது மனித உருவில் வரக்கூடாத என வேண்டியது நினைவில் வந்தது .நான் பாபாவின் பேச்சுக்களை படித்த பொழுது ஒரு உண்மை தெரிந்தது , அதாவது அவர் எத்தனை பெரிய தெய்வம் என்பதும் எதனை சக்தி படைத்தவர் என்பதும் புரிந்தது . அவர் கூறிய அனைத்துமே தெய்வீகம் நிறைந்து இருந்தது, அவர் உண்மையில் மனித உருவில் வந்துள்ள கடவுளே எனவும் தெரிந்தது . அதனால்தான் அவருக்கு அத்தனை சக்தி இருந்து உள்ளது .

அவர் பற்றி நான் பல செய்திகளை வெளியிட்டேன். அவரை என்னால் புரிந்து கொள்ள முடிந்த அளவில் அவர் பற்றி எழுதினேன். 1939 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் மும்முறை மறு பிரசுரம் செய்ய தேவையான அளவில் விற்பனை ஆயிற்று. தமிழில் வெளியான சாய்பாபா பற்றிய புத்தகம் மலையாளம் , கன்னடம் மற்றும் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டது. சாயீபாபாவிற்கு பல பக்தர்கள் பெருகினர். பல இடங்களில் ஆரத்தியும் பூஜைகளும் நடந்து பாபா கூறியவை அங்கு படிக்கப்பட்டன. அதனால் பல பக்தர்கள் தாமாகவே முன்வந்து என்னிடம் பாபாவின் பெருமைகளை கூறத் துவங்க பாபாவிடம் இருந்து பெற்ற அனுபவங்கள் என்ற புத்தகம் எழுத தூண்டுதல் ஆயிற்று .
...........வளரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Early days of Sai Prachaar.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.