Wednesday, November 18, 2009

B.V Narsimha Swami ji-Early Days of His Mission .



நரஸிம்மஸ்வாமிஜி தன்னுடைய குருவை தேடி அலைந்து அவரை கண்டபின் அவர் அருளையும் பெற்ற கதையை படித்துவிட்டோம் . மெஹிர் பாபா என்ற அவதார புருடர் சாயீ பாபாவைத் தவிர உபசினி மகாராஜ் , தேஜுதின் பாபா மற்றும் பெட் நாராயண மகாராஜ் போன்றவர்களே முழுமையான ஞானம் பெற்ற தெய்வ பிறவிகள் என நம்பினார் . ஆனால் அவர்களில் இன்று சாயிநாதர் மட்டுமே இன்னமும் பல அற்புதங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றார் .
ப்ரொபசர் C.G। நார்கே என்பவர் நரஸிம்மஸ்வாமிஜியிடம் சாயிபாபா பற்றிக் கூறும்பொழுது , அவர் இந்த உலகில் மட்டும் அல்ல , நமக்குத் தெரியாத வேறு உலகிலும் அற்புதங்களை நடத்தி வருகின்றார் எனக் கூறினார் . சாயிபாபா தானே விரும்பினால் தவிர அவரிடம் எவரும் நெருங்க முடியாது என்றார் . அதனால்தானோ என்னவோ சாய்பாபா விரும்பியதினால் மட்டுமே சாயிபாபாவின் அருள் நரஸிம்மஸ்வாமிஜிக்கு கிட்டியது . அதற்கும் காரணம் இருந்திருந்தது . தன்னைப் பற்றிய உண்மையை நரஸிம்மஸ்வாமிஜி தவிர வேறு எவரும் மக்களிடையே பரப்ப முடியாது என சாயிபாபா நம்பியதினால்தான் அவர் நரஸிம்மஸ்வாமிஜியை தன்னுடைய சிஷ்யராக ஏற்றுக்கொண்டு உள்ளார் .
1939 ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பியவர் சாயி பிரசாரத்தை மேற்கொண்டு 1936 முதல் 1939 ஆம் ஆண்டுவரை மகாராஷ்டிராவுக்கு தாஸ்குண மஹாராஜ், M.B.ரிகே மற்றும் அவஸ்தி என்பவர்களுடன் பயணம் செய்து ஒரு சாயி அலையையே உருவாக்கி ஏற்படுத்தி இருந்தார் . மராட்டிய மாநிலத்தில் ஒரு சிறிய கிராமமான ஷிரடியில் இருத்த சாயிநாதர் புகழ் மராட்டிய மாநிலம் முழுதும் பரவ மக்கள் ஷிரடி நோக்கி பயணம் செல்லத் துவங்கினார்கள் . அதன்பின் அடுத்த காரியமாக சாயியின் பெருமையை இந்தியா முழுவதும் பரப்ப முடிவு செய்தார் நரஸிம்மஸ்வாமிஜி .
அப்போது சாயி பக்த மண்டல் என்ற அமைப்பு மட்டுமே ஷிர்டியில் இருந்தது . அதன் மூலம் வருடத்திற்கு மூன்றுமுறை அதன் உறுப்பினர்களுக்கு உடி பிரசாதம் அனுப்பப்பட்டு வந்தது . அதன் வேலை அது மட்டுமாகவே இருந்தது . ஆகவே சாயி பக்த மண்டலியை அனைத்து இடத்திலும் நிறுவுவதே முதல் வேலை ஆயிற்று .
அதற்கு ஏற்ப அவர் 1939 ஆம் ஆண்டில் அகில இந்திய சாயி சமாஜத்தை சென்னையில் நிறுவினார் . அதன் பணி சாயினாதார் பற்றிய மகிமைகளை அனைத்து இடத்திலும் பரப்புவதே . நரஸிம்மஸ்வாமிஜி தன்னிடம் வந்து எவர் பேசினாலும் சாயினாதரை பற்றியே பேசினார் , அவர் செய்து வந்த பிரசங்கங்களிலும் அவரிடம் வந்தவர்களிடமும் சாயி பற்றியே பேச அவரை சுற்ற ஓர் சாயி பக்த கூட்டம் அமைந்தது .
சாயி யார் என்ற அவருடைய புத்தகம் , அன்றைய காலத்தில் ஒரு அணா என்ற விலையில் வெளிவர ,சாயி பிரசாரத்தில் அது அமோக வெற்றி பெற்றதும் , அடுத்து ஆறு அணா விலையில், அற்புத சாயி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது . அதில் முன்பிறவி பற்றியும் இப்பிறவியில் சாயி அவதரித்த கதையையும் அற்புதமாக எடுத்துரைக்க , அதுவம் நல்ல வரவேற்பு பெற்றது . பின்னர் அந்த புத்தகம் தெலுங்கு , பெங்காலி , குஜராத்தி மற்றும் இந்தியிலும் மொழி ஆக்கப்பட்டு வெளி வந்தது. M.B. ரிகே என்பவர் முன்னுரை எழுத மற்றும் ஒரு புத்தகம் பாபா கூறியவற்றை உள்ளடக்கி , அவர் உபதேசங்கள் என வெளியாயிற்று . அதுவே இன்று சாயிபாபாவின் பொன்மொழிகள் என வெளியாகி தமிழ் தெலுங்கு , கன்னடம் , மலையாளம் மற்றும் இந்தியிலும் மொழி ஆக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது . அந்த புத்தகம் மெட்ராஸ் பிரசிடென்சி ,மைசூர் , திருவிதாங்கூர் மற்றும் அணைத்து மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.
1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதியன்று நெல்லூரில் இருந்து வந்த பாப்பையா செட்டீ என்ற ஜமிந்தார் அந்த புத்தகத்தினால் பெரிதும் கவரப்பட்டு நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்து 11,455 ரூபாயை தந்தார். தன்னுடைய சொந்த சொத்தான பல லட்சக்கணக்கான பணத்தையே உதறிவிட்டு வந்தவர் அதை பெற்றுக்கொள்ள ஒரு கணம் யோசித்தார் . அவர் முன் மூன்று கேள்விகள் எழுந்தன . அதை சாயி பிரச்சரத்திற்காக ஏற்றுக்கொள்வதா , எல்லை பிஷெட் தேபோசிட்டில் போட்டு அதில் வரும் வட்டியில் ஏழைகளுடைய நலனுக்குத்தருவத எல்லை சாயி சமஸ்தானத்திடம் ஆலய வைப்பு நிதியாகத் தரலாமா ? விடை தெரியாததினால் சிட்டு குலுக்கி போட்டு அதை ஒரு குழந்தையாய் அழைத்து எடுக்கச்சொல்லி முடிவு செய்தனர். அந்த பணத்தை சீரடி சாயி சமஸ்தானத்திடம் கொடுக்க அவர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர் . ஆகவே அதை சென்னைக்கு கொண்டு வந்து சாயி பிரசாரத்திற்கு உபயோகிக்க முடிவு செய்தார்.
1940 ஆம் ஆண்டு சாயி சுதா என்ற பத்திரிகை துவங்கப்பட்டது . தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கில் பத்திரிகை துவங்கியது . 1943 ஆம் ஆண்டில் மரணம் அடைந்த திரு சம்பத்குமார் என்பவர் அதுவரை அதன் ஆசிரியராக இருந்தார் ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தரும் , ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமி என்பவர்களும் அதன் பின் அதை நிர்வாகித்தனர் . நரஸிம்மஸ்வாமிஜி அடுத்து சாயி பக்தர்களின் அனுபவம் என்ற புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டார் .
அதே நேரத்தில் அகில இந்திய சாயி சமாஜத்திற்கு இளமை துடிப்பான ஒருவர் பிரசாரத்தை மேற்கொள்ளத் தேவையாக இருந்தது. அதைத் தவிர வயதாகி வந்ததினால் நரஸிம்மஸ்வாமிஜிக்கும் ஒரு உதவியாளர் தேவையாக இருந்தது
அப்போது சென்னை தலைமை நீதிபதியின் மாப்பிள்ளையான ஒ .கே . வரதராவ் என்பவர் ரிசர்வ் பாங்கில் வேலை பார்த்து வந்தார். அவர் அகில இந்திய சாயி சமாஜத்தின் முதல் செகரட்டரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடைய மனைவியான சாரதா என்பவர் நரஸிம்மஸ்வாமிஜிக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய அவருடைய தத்து மகளாயினார். பினர் சாரதாவே நரஸிம்மஸ்வாமிஜிக்கு அனைத்து உதவியும் செய்து வந்தார், அவருடைய பயணங்களை தீர்மானித்தார், பத்திரிகையில் எழுத உதவினார் .
அவர்கள் நரஸிம்மஸ்வாமிஜியிடம் வந்தபொழுது அவர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது.
''சாயிபாபாவே அனைத்து கடவுளின் அவதாரமும் என்றால் நாங்கள் லக்ஷ்மி , சரஸ்வதி , கணேஷர் போன்றவர்களை வணங்கலாமா வேண்டாமா ?''
நரசிம்ச்ச்வாமி அவர்களுக்கு விளக்கினார்
'‘ சாரதா இதோ பார் . நான் நரசிம்மசாமி என்ற உருவத்தில் உள்ளவன் என்றாலும் என் உடம்பில் உள்ள கை , மூக்கு , கண்கள் , காது என அனைத்தும் தத்தம் வேலையை தனித்தனியாக செய்கின்றன . அனால் அவை அனைத்தும் உள்ளது ஒரு உடலில்தானே. ஆகா நாம் பல செயல்களை செய்யும் ஒரு உடலை கொண்டவர்கள் எனும் பொழுது ஏன் இந்த கேள்வி எழ வேண்டும் ?''
சாரதா மௌனம் ஆகி விட்டாள். அவளுக்கு விடை கிடைத்துவிட்டது.
வரதராவ் வக்கீலுக்கு படித்தவர் என்பதினால் அகில இந்திய சாயி சமாஜத்தின் விதி முறைகளை வகுத்தார் .அவர் சாயி சமாஜத்தின் அனைத்து பிரசாரத்திலும் பங்கு கொண்டார். அதனால் பல இளைஞ்சர்களும் அதில் சேர்ந்தனர் .
நரஸிம்மஸ்வாமிஜி எப்படி எதிலும் தாம் என்பதை தவிர்த்தே வந்து இருந்தார் என்பதை விளக்க வராத ராவ் ஒரு செய்தியை கூறினார் . சாயி சமாஜத்தின் எந்த புத்தகத்திலும் அது பதிப்புரிமை பெற்றது என குறிப்பிடாமல் எவர் வேண்டுமானலு அதில் கூறியவற்றை பிரசுரிக்க அனுமதி தந்து இருந்தார் . ஒரு முறை தவறுதலாக வரத ராவ் ஒரு புத்தகத்தில் பதிப்புரிமை பெற்றது என பிரிண்ட் செய்து விட அதை விரும்பாத நரஸிம்மஸ்வாமிஜி அதை எந்த உரிமமும் இல்லாதது என மாற்றச் சொன்னார் . வேலை காரணமாக அதை அவரால் உடனடியாக செய்ய முடியாமல் போய் விட்டது. மாலையில் வந்து பார்த்தால் அதை நரஸிம்மஸ்வாமிஜியே செய்து கொண்டு இருந்ததை கண்டார் . அந்த நிகழ்சியை மனம் கூர்ந்து ஒரு பிரசங்கத்தில் வரத ராவ் தெரிவித்தார்.
.........வளரும்
To be continued.
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.