Tuesday, November 10, 2009

I have known him for Thirty generations.


அவனை எனக்கு முப்பது ஜென்மங்களாகத் தெரியும்
I have known him for Thirty generations

எப்போது நான் சாயி பாபாவின் லீலைகளை படித்தாலும், எவருடைய அனுபவங்களை கேட்டாலும் பௌளர்ணமி நிலாவின் தோற்றம் கண்டு கடல் அலைகள் எப்படி மேலும் மேலும் உயர எழுகின்றதோ அப்படி ஒரு சந்தோஷம் என் மனதில் தோன்றும். பாபா தன கையால் தொட்டார், தலையை வருடினார், என்னுடன் பேசினார், என்னுடன் இருந்தார் என மற்றவர் கூறும் பொழுதெல்லாம் நான் அப்படி ஒரு அதிருஷ்டசாலியாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கியது உண்டு. குறைந்த பட்சம் துவாரகாமாயியில் ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தபடி அவைகளை கண்டு களித்து இருக்கலாமே என என மனம் எண்ணுகின்றது. பாபா தூரத்தில் இருந்தாலும் தன்னுடைய பக்தர்களை எப்படி எல்லாம் பாதுகாத்து வந்து உள்ளார் என்பதற்கு இதோ மற்றொரு சம்பவம்.

ப்ரொபஸ்ஸர் ஜி,ஜி, நார்கே என்பவர் திரு பூட்டி என்பவருடைய மாப்பிள்ளை. அவருடைய மனைவி முதல் தாய், மற்றும் மாமனார் என அனைவரும் பாபாவின் பக்தர்கள். ஒரு முறை பாபாவைக் காண விருப்பம் கொண்ட பூட்டி, பாபாவுக்கு கடிதம் எழுத அவரும் அவரை சீரடிக்கு வரச் சொன்னார்.
1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜி,ஜி, நார்கே சீரடிக்கு சென்றார். பாபா பூட்டியின் குடும்பத்தினருடன் மிகவும் குதூகூலமாகப் பழகுவதுண்டு. முதன்முதலாக மாதவராவ் தேஷ்பாண்டே அவரை பாபாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தபொழுது பாபா கூறினாராம், ' இவனை எனக்கு முப்பது ஜென்மங்களாகத் தெரியும் ' முன்பிறவி பற்றி அவருக்கு இத்தனை தெரிந்து உள்ளதா என ஆச்சர்யப் பட்டனர் ?

பாபாவிடம் முதன் முதலாகச் செல்பவர்களை பாபா கூர்ந்து நோக்குவார். அவர்களுடைய எண்ணம் அனைத்தும் அவருக்குத் தெரிந்துவிடும். நார்கேயிர்க்கும் அப்படிப்பட்ட அனுபவமே ஏற்பட்டது. அவர் பார்த்த பார்வை அவருடைய இருதயத்தில் ஆழப் பதிந்து விட்டிருந்தது. பாபா அவரை ஆக்ரமித்துக் கொண்டு விட்டார் போலும். அது முதல் அவர் பாபாவுக்கு சேவை செய்ய எண்ணம் கொண்டார்.ஆரத்திகளில் கலந்து கொண்டார்.
முதல் சில மாதங்களில் பாபா ஏன் இப்படி கத்துகின்றார், இத்தனை கோவப்படுகின்றார் என்பதை பார்த்த நார்கேயுக்கு பாபா புத்தி பேதலித்தவரோ என்று ஐயம் ஏற்பட்டது. ஒரு நாள் பாபாவின் கால்களை மச்சாஜ் செய்ய நார்கே போய் இருந்த பொழுது பாபா அவர் தலையைத் தடவிக் கொண்டு கூறினார் ' நான் புத்தி பேதலித்தவன் இல்லை'
நார்கேயுக்கு பாபா தன் மனதில் ஓடுவதை கண்டு பிடித்து விட்டாரே என்று ஒரே ஆச்சர்யம். . அவருக்கு ஒரு உண்மை புரிந்தது.பாபா ஒரு அந்தர்யாத்மீ .ஒவ்வொருவரின் இதயத்துடன் கலந்து உள்ளவர்.
அதன் பின் பல முறை நார்க்கே கவனித்தார், பாபாவிடம் இருந்து எதையுமே மறைக்க முடியாது. முன் காலம், இக்காலம் மற்றும் வரும் காலத்தையும் அறிந்தவர் அவர். பாபா எவருடனும் பேசும் பொழுதும் அவர்களின் இருதயத்தின் உள்ளே அமர்ந்து கொண்டுதான் பேசுகின்றார். அவர் ஒரு அந்தர்யாத்மீ . பலமுறை பாபாவை கவனித்தார் நார்க்கே . அத்தனை முறையும் பாபாவுக்கு நடந்த அனைத்தும் தெரிந்தே இருந்தது என்பதை தம் கண்ணாரக் கண்டார்.
இதையே நம்முள் கடவுள் உள்ளார் என்கின்றோம் . சாயிபாபா கடவுள்தான் என்பதில் இப்போது நார்க்கேயிர்க்கு சந்தேகமே இல்லை. 1913 ஆம் ஆண்டு பாபா கூறினாராம் 'உன்னுடைய மாமனார் சீரடியில் ஒரு கல்லால் ஆன நினைவகத்தைக் கட்டுவார். அதன் நிர்வாகியாக நார்க்கேயே இருப்பார்.'
1916 ஆம் ஆண்டில் திரு பூட்டி தற்போது பாபாவின் கல்லறை உள்ள இடத்தில் ஒரு கட்டிடம் கட்டினார், அதை 1918 -1919 ல் நார்க்கே டிரஸ்டியாக இருந்து நிர்வாகித்தார்.

Courtesy:Translation to Tamil by Santhipriya.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

6 comments:

Unknown said...

Om Sai Krishna! Your Divine Leelas fill my heart with ecstasy and love. Please bless me with unwavering devotion to you. Hold my hand and never let go.. You are my soul and light!

Unknown said...

Ohm saii ramm

Unknown said...

Ohm saii ramm

Unknown said...

Ohm Sai ram....

Unknown said...

Ohm sai sree sai...,

Unknown said...

Om Sai Ram🙏

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.