Wednesday, November 25, 2009

Unbiased love of Sai-Devotees Experience.

சாயி சரித்திரத்தில் பாபா எப்படிஎல்லாம் தம்முடைய பக்தர்களின் பிணி தீர்த்து அவர்களை காப்பாற்றி உள்ளார் எனவும், தன்னிடம் நம்பிக்கை வைக்காதவர்களையும் தம் வழியில் கொண்டு வந்துள்ளார் என்பதையும் காட்டும் சம்பவங்கள் நிறையவே உள்ளன. அவர்கள் மீது அளவற்ற அன்பை பொழிந்து தன்னுடைய தீவிர பக்தர்களாக மாற்றியுள்ளார் என்பதற்கும் நிறைய கதைகள் உண்டு. அவருடைய லீலைகளை படிக்கும் பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது. இதோ ரத்னா விஸ்வா என்பவருடைய கதையை படியுங்கள்
மனிஷா

ஜனவரி மாத மத்தியில் ஒரு நாள் என்னுடைய தந்தை உடல் நலமின்றே போக, அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவருக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி போன்று உள்ளதாகவும், அது காச நோயாக அல்லது கான்சர் நோயாக இருக்கும் எனவும் டாக்டர் கூறி விட அனைவரும் அதிர்ந்து போனோம் . காச நோயை குணப்படுத்தி விடலாம். கான்சர்?
நானும் என்னுடைய சகோதரனும் அமேரிக்காவில் இருந்தோம், என்னுடைய பெற்றோர் இந்தியாவில் இருந்தனர். அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது நான் என்னுடைய தாயாருக்கு தைரியம் சொன்னேன். கவலை படாதே, நமக்கு பாபா துணை உள்ளது, அவர் பார்த்துக் கொள்வார் என்றேன். மறு நாள் என் தாயார் ஏன் தந்தையை டாக்டரிடம் சென்ற பொழுது அவர் மருந்து தந்து விட்டு ஆறு வாரம் அதை சாப்பிடுமாறும் , அது காச நோயாக இருந்தால் கட்டி கரைய ஆரம்பிக்கும் என்று கூறினார். கட்டி 15 % குறைந்தாலும் அது நல்ல அறிகுறி என்றும் ஆறு வாரம் பொறுத்து வருமாறும் கூறினார்.
என்னுடைய தாயார் சாயி விரதத்தை துவக்கினாள். என்னுடைய தந்தையிடம் ஒன்பது வாரங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் எடுக்க போகலாம் எனக் கூறி விட்டாள். விரதத்தை துவக்கியவள், எப்போதும் போல ஒரு நாள் சாயி கோவிலுக்கு சென்றாள். அவள் மனதில் அதிசயமாக அமைதி நிறைந்தது. எதோ நல்லது நடக்க இருந்ததை உணர்ந்தாள்.

கண்களை மூடிக்கொண்டு மனதில் அழுது கொண்டு இருந்தவள் கண்களை திறந்த பொழுது எங்கிருந்தோ வந்த பூசாரி, பாபா சிலையின் காலடியில் இருந்த மல்லிப்பூவை எடுத்து வந்து என் தந்தையிடம் தர அவர் அதை என் தாயாரின் தலையில் வைத்துக் கொள்ள அதை தந்து விட்டார்.

அந்த சம்பவத்தை என் தாயார் என்னிடம் போனில் கூறிய பொழுது நான் அழுது விட்டு கூறினேன் ' அம்மா, பாபா உனக்கு கருணை காட்டி விட்டார். தான் பூவை தந்து உனக்கு துணை இருப்பதை உறுதி செய்து விட்டார் என்று உள்ளபோது ஏன் கவலை படுகின்றாய்? அவரிடம் அனைத்தையும் விட்டு விடு. அவர் பார்த்துக் கொள்வார் என்றேன்'

ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஒன்பது வார விரதம் முடிந்தது. பதின்மூன்றாம் தேதி டாக்டரிடம் செக்கப் செய்ய அழைத்துச் சென்றாள். எக்ஸ்ரே முதலியவற்றை பார்த்த டாக்டர் அனைத்தும் நல்ல குணம் அடைந்து உள்ளது எனவும் இனி கவலைபட ஒன்றும் இல்லை, விரைவில் பூரண குணம் அடைந்து விடுவார் எனக் கூற என்னிடம் அதை போனில் தெரிவித்தாள்.
என்னுடைய தந்தை பாபாவின் பக்தர் இல்லை. ஆனாலும் தாயாரின் வற்புறுத்தலுக்காக பாபாவின் ஆலயம் சென்றார். மெடிக்கல் செச்கப்பிற்காக சென்றதற்கு ஒருநாள் முன், அது வியாழன் கிழமை, அவர் தலையை பூசாரி வந்து தொட்டு ஆசிர்வதித்தார். அதை பாபாவே வந்து செய்ததாகவே நினைத்தோம் . தந்தை அதை கூறியபின் பாபாவின் தீவிர பக்தராகவும் மாறிவிட்டார். நோய் சிறியதாக இருந்தாலும், அவர் குணம் அடைந்தது பாபாவின் அருளினால்தான் . பாபாவே எங்கள் தந்தை, தாயார்,. அவர் பாதத்தில் நாங்கள் தலை வைத்து வணங்குகின்றோம்.
ரத்னா விஸ்வா
( Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.