Monday, December 28, 2009

Sai Baba Answered Our Prayer-Experience By Sumanth.


அன்புடையீர்,
தன் குழந்தை துயரத்தில் இருக்கும் பொழுது பாபா ஒரு தாயாரைப் போல ஓடி வந்து காப்பாற்றுகின்றார் என்பதற்கு இதோ இன்னொரு பக்தரின் அனுபவம். அவரை நம்பி அவரிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால் அவரிடம் இருந்து அளவற்ற அருள் கிடைக்கும்.
மனிஷா

ஓம் ஜெய் சாயி ஜெய் சாய்ராம்
அன்பு சகோதரி மனிஷா,

எனக்கும் என்னுடைய மனைவிக்கும் நடந்த சாயியின் அற்புதமான அனுபவங்கள் இவை. எனக்கு வயது 38 . என்னுடைய மனைவிக்கு 25 வயதாயிற்று. இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. முதலில் அவளுடைய பெற்றோர் எங்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. காரணம் என் வயது. ஆனாலும் சாயி மீது எனக்கு நம்பிக்கை இருந்ததினால் எங்கள் திருமணம் நன்கு நடந்து முடிந்தது. திருமண ரிஷப்ஷனில் நுழை வாயிலில் சாயி நாதர் படம் இருந்தது. நான் நினைத்தேன் அந்த சாயிதான் என்னுடைய மனைவியின் பெற்றோர்கள் மனதை மாற்றி உள்ளார்.
திருமணம் ஆகி எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அனைவரும் கேட்கத் துவங்கினார். அனைவரும் கேட்கத் துவங்கியதினால் என் மனைவிக்கும் வருத்தம் ஏற்பட்டது. நான் அவளுக்கு தைரியம் தந்தேன். பாபா நிச்சயம் அருள் புரிவார், கலங்காதே என்றேன். இரண்டாம் வருட திருமண நாள் வந்தது. எங்களுக்கு குழந்தை இல்லையே என வருத்தமுற்று சீரடி சென்று வர தீர்மானித்தோம். அது நவம்பர் மாதம் என்பதினால் முதலில் டிக்கட் கிடைக்கவில்லை, ஆனால் பிறகு கிடைத்தது. சீரடிக்கு போக இருந்த நாள் என்னுடைய பிறந்த தேதியான பிப்ரவரி இருபத்தி எட்டு. என் பிறந்த நாளில் பாபா அழைத்து உள்ளார் என்பது மகிழ்ச்சியாக இருக்காதா?
நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் மயிலாப்பூரில் இருந்த பாபா ஆலயம் செல்வதுண்டு. அப்படித்தான் ஒரு வெள்ளியன்று சென்று இருந்த பொழுது ' பாபா முதன் முதலாக சீரடிக்கு நாங்கள் வருவதை ஏன் தடுக்கிறாய்?' என எண்ணியபடி நின்று கொண்டு இருந்த பொழுது என் மனைவி வந்து எவரோ அவளிடன் பாபாவின் போட்டோ தந்து விட்டதாகக் கூறி அதை என்னிடம் காட்டினாள். அதில் இருந்தது ' என் பக்தனே என்னிடம் வா' . அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின் மறு நாள் சீரடி செல்ல டிக்கட் கிடைத்தது.
27 ஆம் தேதியன்று சீரடி சென்று தங்கினோம் . ஒரு பக்தர் மூலம் த்வரகாமாயி அருகில் தங்க ஒரு அறை கிடைத்தது. குளித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு ஆலயத்துக்கு சென்று அற்புதமான தரிசனம் பெற்ற பின் மீண்டும் விடியற்காலை ஒரு மணிக்கு எழுந்து காகட் ஆர்த்திக்கு சென்றோம். பல பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். காலை 4.30 க்கு உள்ளே சென்று தரிசனம் செய்த பின் மீண்டும் சாயி தரிசனத்துக்கு சென்றோம். நான் மனதில் வேண்டிக்கொண்டேன், 'பாபா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு'. வரிசையாக போய் கொண்டு இருந்த பொழுது ஒரு காவலாளி என்னை பாபா அருகில் அனுப்பி, எத்தனை நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்து கொள் என்று கூறினார். சுமார் ஐந்து நிமிடங்கள் நின்று கொண்டு இருந்த பொழுது அவனே பாபாவிடம் இருந்து ஒரு தேங்காயையும், பிரசாதத்தையும் எடுத்து எனக்கு கொடுக்க வியந்து நின்றேன் நான். தானாகவே என் பிறந்த நாளுக்கு பாபா பிரசாதம் தந்து உள்ளார். என்னுடைய மனைவியோ, பூசாரி கையில் வைத்து இருந்த பாபாவின் கிரீடத்தை தொட்டு வணங்க அனுமதி தந்ததாகக் கூறினாள். இரண்டுமே நல்ல சகுனம். நல்ல தரிசனம் முடிந்து மார்ச் மாதம் இரண்டாம் தேதி சென்னை வந்தோம்.

அங்கு போகும் முன் என்னுடைய மனைவி சாயி விரதத்தை துவக்கி இருந்தாள். அது ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதியன்று முடிந்தது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன் . ஒரு முறை குழந்தை இல்லையே என டாக்டரிடம் சென்று சோதனை செய்து கொண்ட பொழுது, என்னுடைய மனைவிக்கு எல்லாம் சரியாக உள்ளது எனவும், எனக்கு மட்டும் உயிர் அணுக்கள் சற்று குறைவாக இருந்தது எனக் கூறி இரண்டு மாதம் சாப்பிட மருந்து தந்தார். அதனால் வருத்தமுற்ற நான் தினமும் இரவில் பாபாவின் உடியை தண்ணீருடன் கலந்து குடித்து வந்தேன். டாக்டர் தந்த மருந்து முடிந்த கையோடு என் மனைவியின் விரதமும் முடிந்தது.
விரதம் முடிந்ததும் சாயிபாபா ஆலயத்துக்கு எப்போதும் போல சென்று பிரார்த்தனைகள் செய்து கொண்டு இருந்த பொழுது, எவரோ வந்து எனக்கும் என் மனைவிக்கும் பாபாவின் போட்டோ ஒன்றை தந்து விட்டு சென்றார். அதில் எழுதி இருந்தது ' நான் இருக்க பயம் ஏன்?' நாங்கள் நல்ல செய்தியை எதிர்பார்த்து கத்திருந்ததினால் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மறு நாள் டாக்டரிடம் என் மனைவிக்கு கர்ப்ப சோதனை சென்றோம். அவள் கருதரித்து உள்ளாள் எனத் தெரிந்தது. எங்களுக்கு பாபாதான் அருளி உள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. டாக்டர் தந்த மருந்துடன் சாயி பாபாவின் உடியையும் நான் சப்பிட்டத்தின் விளைவே அது. சாயி பாபாவை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றும் கை விட்டதே இல்லை . அவரை நம்புங்கள்
எஸ். சுமந்த்

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.