Wednesday, December 2, 2009

She will take you on her back-Radhakrishna Ayi and Mr Rege.

ராதாக்ருஷ்ண ஆயி

பாபாவின் அன்பும் கருணையும் கடல் அலை போன்றவை. அதை கூறிக்கொண்டே இருக்கலாம். சாயி சரித்திரத்தில் பல அற்புதமான கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் முத்து போன்றவை. ராதாக்ருஷ்ண ஆயி, ரிகே மாறும் பாபா மூவருக்கும் இடையே அற்புதமான உறவு இருந்தது. ராதாக்ருஷ்ண ஆயி பற்றி பாபா என்ன நினைத்தார் மற்றும் அவள் எப்படிப்பட்டவள் என்பது பற்றி விளக்குவது இது.
ராதாக்ருஷ்ண ஆயி ஐந்து அடி உயரமானவர். இரும்பைபோன்ற திடம் கொண்டவள். தான் உள்ள இடத்தில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள கிணற்றில் இருந்து தானே தன்னுடைய கைகளில் கிணற்று நீரைப் எடுத்துக் கொண்டு வருவார். அத்தனை கனத்தை தூக்க மிகவும் பலசாலிக்கு கூட எவருடைய துணையாவது தேவையாக இருக்கும். அவள் தனியாகவே அவற்றைத் தூக்கிவருவாள்.

ஒருமுறை அவள் ரிகேயின் இருதயத்தில் ஒரு குத்து விட்ட பின் ' நீ ஒரு சம்சாரி, இது வெற்று இடம் 'என்றாள். அதன் பிறகு அவள் தன் அவரை விட பலசாலி எனக் கூற அவரோ, தான் அவளுக்கு முன் ஒரு குழந்தை என்றார். ஆனாலும் அவள் விடவில்லை, யார் பலசாலி எனப் பார்கலாமா என சவால் விட்டாள்.

அந்த இடத்தில் இருந்த ரகாத் என்ற சாலை மதிய நேரத்தில் வெறிச்செனக் கிடக்கும். அங்கு சென்று இருவரும் ஒருவர் தோளில் மற்றொருவர் அமர்ந்து கொண்டு இருக்க தூக்குபவர் ஓட வேண்டும் எனக் கூறினாள். அவள் முதலில் அவர் தோள் மீது அமர இரண்டு பர்லாங் தூரம் ஓடியதும் போதும் எனவும், தான் மகிழ்ச்சி அடைந்து விட்டதாகவும் கூறினாள்.

அதன் பின் அவர் அவள் தோள் மீது அமர இரண்டு பர்லாங் ஓடியதும் நின்றனர். இப்போது சொல் யார் பலசாலி என அவள் கேட்க அவர், நீதான் பலம் மிக்கவள் எனக் கூற, சரி என் முதுகை விட்டு இறங்கு என்றாள். அவரோ தான் அவள் பின்னால் சென்று கொண்டு இருக்க ஆசைபடுவதினால் இறங்க மறுத்தார். அவர் அப்படி இறங்கவில்லை எனில் தூக்கிப் போட்டுவிடுவேன் என்று கூற அவரோ, வளைப்புத் தாய் தூக்கிப் போட்டாலும் பரவாயில்லை என்றார். தான் இறங்க வேண்டும் எனில் அவள் தனக்கு ஆன்மீக குருவாக வேண்டும் என வேண்டிக்கொள்ள அவள் சம்மதம் தந்தாள். அது அனைத்துமே பாபாவின் முன் ஏற்பாடுதான். ஏன் என்றால் திரும்பி வந்தவர்களை என்ன நடந்தது என அவர் கேட்ட போது அவர்கள் நடந்ததைக் கூறினார்கள் . அதற்கு பாபா கூறினார் ' சரி உன்னை அவள் சுமக்கட்டும் , நானும் அது போலவே உன்னை சுமப்பேன் ' .

ரிகேயை அதன் பின் யோகா செய்வதை நிறுத்திவிட்டு ''மனம், இருதயம் இரண்டையும் இணைத்துக் கொண்டு கைகளுடன் ஒன்று சேர்த்து பக்தி செய் அது போதும்'' என்றார். ராதாக்ருஷ்ண ஆயி விளம்பரத்தை விரும்பாதவர். ஒருமுறை மும்பயியில் இருந்து வந்தவர் அவளைக் கேட்காமல் புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிச் சென்றபோது அவருடைய வண்டியை ஒரு மைல் தூரம் ஓடியவண்ணம் துரத்திச் சென்று கமேராவை பிடுங்கி கிழே போட்டு உடைத்துவிட்டு திரும்பினாள். அந்த விஷயத்தை தத்ய கோடி படில் என்பவர் அவள் முன்னாலேயே ரிகேயிடம் கூறினார்.
(Translated into Tamil by Santhipriya )


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.