Tuesday, January 19, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Meeting Of Family along with Babasaheb Tarkhad

பாபா சாஹேப்புடனான இரண்டாவது சந்திப்பு

பாபாவிடம் தங்களுக்கு ஏற்பட்ட இனிய அதிர்ச்சியான இன்பத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத் துடித்த பாட்டியும் , தந்தையும் அங்கிருந்து கிளம்ப முயன்றாலும் அது முடியவில்லை . ஏனெனில் பாபாவே அவர்களை அங்கு சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ள அவர்களும் அங்கு தங்க வேண்டி வந்தது . அங்கிருந்த மடவராவ் தேஷ்பாண்டே என்பவரிடம் ஆலோசனைக் கேட்டனர் . அவர் பாபாவுக்கு நெருக்கமானவர் என்பதினால் அவருடைய கருத்தைக் கேட்டே மற்றவர்கள் நடந்தனர் . அவர் அன்று காலைதான் தன்னிடம் அந்த பெண்மணியும் , அவளுடைய பிள்ளையும் வந்து விட்டார்களா என எவரையோ தேடிக்கொண்டு , அவர்கள் தம்மை வந்து பார்க்க இருப்பதாகவும் கூறி இருந்தார் என்ற செய்தியைக் கூறினார் . சாதாரணமாக சீரடிக்கு வருபவர்கள் பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னரே அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்பதினால் , அவர்களையும் பாபா கூறியபடி சில நாள் தங்கி இருக்குமாறு கூறினார் . அதனால் பந்த்ராவில் இருந்த பாபா சாஹேபிற்கு தாங்கள் சீரடியில் சில நாட்கள் தங்கி விட்டு வருவதாக செய்தி அனுப்பினர் . ஒரு வாரம் தங்கி இருந்த பின் அவர்கள் மீண்டும் பாபா சாஹேப்புடன் தாங்கள் சீரடிக்கு வருவதாகக் கூறிவிட்டு பாபாவிடம் விடைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றனர் .
அவர்கள் அங்கு தங்கி இருந்த பொழுது பாபாவின் பக்தர்களான மல்சபாதி , காகாசாஹெப் மகாஜானி , ஷ்யாம்ராவ் ஜெயகர் போன்றவர்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டது . அவர்கள் திரும்பி வந்ததும் என்னுடைய தத்தாவிடம் , பாபா நல்ல மருந்துகள் மட்டும் தருவதில்லை , அவர் பெரும் சக்தி படைத்தவர் ,என்று கூறி பல சம்பவங்களைக் கூறினாலும் அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் அதையே என்னுடைய தந்தையும் கூறியதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது . இருவருமே தங்கள் அடுத்த முறை சீரடி வரும்பொழுது என்னுடைய தாத்தாவுடன் வருவதாக வாக்குறுதி தந்துள்ளதாகவும் கூறினார்
பாபா சாஹேப்பிர்க்கும் பாபாவை சந்திக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது . அவர் தன்னுடைய நபர்களான காகா சாஹேப் திசிட் , சாம்ராவ் ஜெயகர் , நீதிபதி துரந்தார் போன்றவர்கள் மூலமும் பாபா பற்றி தெரிந்து கொண்டார் . அவர்கள் அனைவருமே பாபாவின் பக்தர்கள் . அவர் வேலையில் இருந்ததினால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நாள் வெள்ளியன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரடிக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார் . அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்தனர் . பாட்டி பெட்ஷீட்டைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள் . ரயில் நாசிக்கை விட்டு கிளம்பிவிட்டது . தாத்தாவும் அவர் நண்பர்களும் சீட்டு விளையாடத் துவங்கினர் . அப்போது வெள்ளை உடை அணிந்த பரதேசி அங்கு வந்து பிட்சைக் கேட்க அவன் மீது பரிதாபப்பட்ட தத்தா அவருக்கு ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தைத் தந்துவிட்டு அங்கிருந்து போய் விடுமாறு கூறினார் . ஒரு ரூபாய் என்பது அந்த காலத்தில் மிகப் பெரிய அளவிற்கான பணம் . என்னுடைய தத்தா 1980 ஆம் ஆண்டிலேயே கடாவ் மில்லில் செகரட்டரியாக இருந்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார் . தான் தந்த பணத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அந்த பகீரிடம் அந்த நாணயம் உண்மையானதுதான் எனவும் , அதில் ஜார்ஜு ஐந்தின் படம் போடப்பட்டு உள்ளதையும் கூறிய பின் பகிர் சென்று விட்டார் .
மறுநாள் சீரடி போனதும் அவர்கள் குளித்து விட்டு , காலை டிபனும் அருந்திய பின் துவாரகாமாயியை அடைந்தனர் . பாபாவிடம் சென்றதும் அவரை அவர்கள் வணங்கினர் . பாபா என்னுடைய தாத்தாவிடம் கூறினார் , 'மாதார்யா ( வயதானவரே என்று அர்த்தம் ) உன்னை உன்னுடைய பிள்ளையும் , மனைவியும் வற்புறுத்தி அழைத்து வந்து விட்டனரா ? ஆகவேதான் நீ இங்கு வந்தாயா ?' எனக் கேட்டார் .
அதன் பின் என்னைத் தெரிகின்றதா என பாபா கேட்க இல்லை என என் தாத்தா கூறினார் . தன்னுடைய காப்னியில் (சட்டை ) கைவிட்டு ஜார்ஜ் ஐந்து படம் பொறித்த நாணயம் ஒன்றை எடுத்த காட்டி , 'நேற்று இரவு நீ தந்தாயே அதுதான் இது என பாபா கூற , ஒரு கணம் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்த தாத்தா பேசும் முன்னேயே பாபா கூறினார் , 'நேற்று உன்னிடம் இருந்து நாந்தான் வந்து இதை பெற்றுக்கொண்டு வந்தேன் '. என் தாத்தாவிற்கு வெட்கமாகி விட்டது . பாபாவை பரதேசி என நினைத்து விட்டோமே என வருந்தினார் . பாபாவிடம் அதற்க்கு மன்னிப்பும் கேட்டார் . அப்போதுதான் அவருக்கு புரிந்தது , தன்னுடைய பிள்ளை ஜோதிந்த்ராவும் , மனைவியும் பாபா குறித்து கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே என .

அதன் பிறகு தாத்தாவின் வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . அவர் பாபாவின் தீவிர பக்தர் ஆனார் . எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் பாபாவைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்தது இல்லை . அவர் பாபாவுக்கு காபின் தைத்துக் கொள்ள வட்டவடிவில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த மிக நீளமான துணியை அனுப்பினார் . சீரடியில் இரவில் வெளிச்சம் தர பெட்ரமாஸ் விளக்குகளை அனுப்பினார் . தான் அங்கு சென்றால் பாபா கூறும் இடத்தில் அவற்றை ஏற்றி வைப்பார் . எப்படியாக எங்கள் குடும்பத்தில் மூன்ற்பேர் பாபாவின் பக்தர்கள் ஆயினர் . பாபா அவர்களை காந்தம் இரும்பை இழுப்பது போல இழுத்துவிட்டார் . அவர்கள் அடிக்கடி சீரடி சென்றனர் .
பாபா அந்த வெள்ளி நாணயத்தை தாத்தாவிடம் திருப்பித் தந்துவிட்டு , 'மாதர்யா , உனக்கு இதை திருப்பித் தருகிறேன் . பத்திரமாக வைத்துக் கொடு இரு , உன் வாழ்வில் வளம் பெருகும் என்றார் . மேலும் , என்னை நம்பு , இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு பொய் கூற மாட்டேன் எனக் கூறினார் .
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.


Posted Post :Click On Link BelowTo Read .

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.



(
Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.