Friday, January 29, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Sandalwood Temple.

சாயி பாபாவின் சந்தன மர ஆலயம்

முன்னர் கூறியது போல தர்கட் குடும்பத்தினர் சாயி பாபாவைப் பார்க்க சீரடிக்கு அடிக்கடி செல்லத் துவங்கினர் . அங்கேயே சென்று தங்கிவிட வேண்டும் என அவர்கள் நினைத்தனர் . ஆனால் அது முடியவில்லை . பாந்திராவில் இருந்த வீட்டில் பாபாவின் மிகப் பெரிய அளவிலான போடோ ஒன்றை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினர். என்னுடைய தந்தைக்கும் , தத்தாவுக்கும் இருந்து விசேஷ குணம் என்னவெனில் அவர்கள் பாபாவின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படையாகக் கூறவில்லை . அவர்களுக்கு அவர் மீது அளவற்ற பக்தி இருந்தது . அவர் ஒரு அன்தர்யாத்மி தம்முடைய மனதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர் என நினைத்தவர்கள் . அவர்கள் பாபாவின் அறிவுறைகளான பொறு , பொறுமைக் கொள் என்ற தத்துவத்தை கடைபிடித்ததினால் அவர்களுக்கு தேவையானவற்றை அவர் தக்க சமயத்தில் தருவார் என நம்பினார் . ஒரு நாள் தத்தாவுக்கும் , என் தந்தைக்கும் ஒரே மாதிரியான கனவு வந்தது . அந்த கனவில் சாயி பாபா ஒரு அழகிய கலைநயம் மிகுந்த ஆலயத்தில் அமர்ந்து உள்ளார் போல இருந்தது . இருவருமே படங்கள் வரைவதில் வல்லவர்கள் என்பதினால் உடனே எழுந்து தம்முடைய கனவில் தோன்றிய அதே மாதிரிப் படத்தை வரைந்து வைத்துக் கொண்டனர் .
மறுநாள் காலை இருவரும் பார்த்துக்கொண்டபோது தமது கனவைபற்றி கூறிக்கொண்டு அவர்கள் போட்ட வரைபடத்தைக் காட்டிக்கொள்ள , இரண்டும் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு இருவருக்கும் ஒரே ஆச்சர்யம் . ஆகவே அந்த மாதிரியான பூஜை பெட்டியை செய்ய சந்தனகட்டைகளை உடனடியாக வாங்கினர் . ஒரு தச்சானை அழைத்து அந்த பந்திரா வீட்டின் மாடியிலேயே வந்து அந்த பூசை பெட்டியை செய்யச் சொன்னார்கள் . அதை செய்ய சுமார் ஒரு வருடகாலம் பிடித்தது . ஒன்பது அடி உயரமும், இரண்டரை அடிக்கு இருபதரை அடி சந்தனக்கட்டை பூஜை பீடம் தயார் ஆனது ..அதில் வைக்கா பாபா படம் வேண்டும். பாபா தன்னை புகைப்படம் எடுக்க எவரையுமே அனுமதித்தது இல்லை . ஆனாலும் அதற்கு அவர் தமக்கு அனுமதி தருவார் என்றே எண்ணினார்கள் . பாபா சஹேப்பும் , ஜோதிந்தராவும் ஒரு கோட்டு சூட்டு அணிந்துகொண்டு , தலையில் குல்லாயையும் வைத்துக்கொண்டு சோர்பஜார் என்ற இடத்துக்கு சென்றனர் . அந்த இடத்தில் அவர்களுக்கு ஒரு வினோத நிகழ்ச்சி நடந்தது . ஒரு முஸ்லிம் கடைக்காரன் அவர்களிடம் வந்து ' மதிப்பிற்குரியவர்களே , உங்களை எதிர்பார்த்து இத்தனை நாளும் காத்துக் கொண்டு இருக்கின்றேன் . உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது . எடுத்துச் செல்லுங்கள் ' என அழைத்தார் . அவர்களுக்கு பயமாகி விட்டது . எங்கேயாவது அந்த கடைக்காரன் திருடி வந்துள்ள சாமானை தம் தலையில் கட்டிவிட்டால் என்ன செய்வது என enni அவனிடம் தங்களை எப்படி அவனுக்குத் தெரியும் எனக் கேட்க , அவனும் தன்னுடைய கடைக்கு வருமாறும் அங்கு விவரத்தைக் கூறுவதாகவும் சொன்னான் . அங்கு சென்றதும் அவன் கூறினான் , 'சில நாட்களுக்கு முன் வயதான ஒரு ஆள் வந்து அந்த பார்சலைத் தந்துவிட்டு , வரும் வெள்ளிக்கிழமை ஒரு தந்தையும் , மாகனம் அங்கு வருவார்கள் எனவும் , தந்தை ஆங்கிலேயர்கள் அணிவது போல தொப்பி போட்டுக் கொண்டு இருப்பார் எனவும் , மகன் கருப்பு நிற காந்தி குல்லா அணிந்திருப்பார் எனவும் அவர்களிடம் அதை தந்துவிடும்படிக் கூறி விட்டு அதற்கு கூலியாக ஐம்பது ரூபாயையும் தந்துவிட்டு சென்றதாகவும் கூறினான் .ஆகவே தான் வாசலில் அமர்ந்துகொண்டு அவர்களை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்றான். கடைக்கு சென்றதும் , இன்னும் சற்று சந்தேகம் இருந்ததினால் அந்த பார்சலைப் பெருத்துக் காட்டுமாறு கூறிவிட்டு அதைப் பிரித்தார்கள் . என்ன அதிசயம் . அவர்களுடைய கண்களில் இருந்து நீர் ஆறாகப் பெருகியது .
அதில் அற்புதமான போடோ பிரேமில் வைக்கப்பட்டு இருத்த சாயி பாபாவின் படம் இருந்தது . அந்த கடைகாரனுக்கு நன்றி கூறிவிட்டு , அவனுக்கு இனாம் கொடுத்த பொழுது அதை வாங்க மறுத்துவிட்டான் . வந்தவர் தம்மிடம் மிகக் கண்டிப்பாக இனாம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கண்டிஷன் போட்டிருந்ததினால் வாங்க மறுத்தான் . வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்த சந்தன பூஜை பெட்டியில் சின்னதோ பெரியதோ செய்யத் தேவை இல்லாமல் அதற்கு ஏற்ப செயப்பட்டது போல அதை வைக்க முடிந்தது . அதை அந்த பூஜை அறையில் வைத்தபின் தினமும் விடியற்காலை என் தந்தை எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்து சந்தனப் போட்டு வைப்பார் . அடுத்து சீரடிக்கு போகும் நாளை எதிர்பார்த்து இருந்தனர் . வேளை வந்தது சீரடி சென்று துவாறகாமாயியை அடைந்த போது எவரோ ஒருவர் சாயி பாபாவை போடோ எடுக்க முயன்றதைக் கண்டு பாபா அவரிடம் கத்திக் கொண்டு இருந்ததைக் கண்டனர். பாபா அந்த போடோ எடுக்க நினத்தவரிடம் , இங்கு வந்து என் என்னை போடோ எடுக்கிறாய் ?. உனக்கு என்னை பார்க்க வேண்டுமானால் பாந்திராவில் உள்ள என் பாபு (என் தந்தையை அப்படித்தான் பாபா அழைப்பார் ) விட்டுக்குப்போய் தரிசனம் செய் . அதில் நான் உயிருடன் உள்ளேன் ' . அதைகேட்ட என்னுடைய தந்தைக்கு புரிந்தது , தான் தினமும் செய்யும் பூஜையை பாபா ஏற்றுக்கொண்டே வருகின்றார் . ஓடிச்சென்று பாபாவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார் . இப்படியாக பாபா தானே நிறுவிய பூஜை அறை இன்றும் என்னுடைய மறைந்து விட்ட சகோதரர் ரவிந்ராவின் வசாய் வீட்டில் பக்தர்களுடைய தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது .

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.


Posted Post :
Click On Link Below To Read .

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences of Tarkhad Family Chapter 3.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.