Wednesday, January 13, 2010

Live Experiences of the Tarkhad Family: Preface and Introduction of Tarkhat Family.

Dear all,

Wish you all a very Happy Pongal/Makar Sankranti and a very happy Baba's day,
May Baba' bless each and everyone with happiness and peace .I am happy to announce to all Sai devotees that from today for the first time we are publishing the "Live Experience of Tarkahd Family with Sai Baba" in Tamil .This is an attempt to make these wonderful heart stirring Sai leelas go far and wide to all the Sai devotees and experience the bliss and unique Sai blessings that Tarkahd family had with Baba while HE was in blood and flesh . These experiences are not just mere Sai leela but nectar directly from Baba for all Sai devotee s.It is a blessing to read these experience and witness the love and grace of Baba for His children .

Dear all these experiences of Tarkahd family shall be posted in parts and are in same order as in the original English book written and published by Shri Virendra Jyotindra Tarkhad .
I would like to extend my heartfelt thanks to Uncle Jayaraman ji who is recklessly working and translating all the Sai Baba related articles and contributing Tamil article for all the Tamil devotees.Thank you is not enough to show my gratitude and I pray to Baba for Uncle and his Family and wish Him all my regards .Jai Sai Ram .

அன்பானவர்களே,
உங்களுக்கு சங்கராந்தி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். இன்று பாபாவின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இன்று முதல் நாம் தர்கட் குடும்பத்தின் அனுபவங்களை படிக்கலாம். இது எந்த அளவு சாயிபாபா லீலைகளைப் புரிந்து இருக்கின்றார் என்பதை விளக்கும். இதை லீலை என்று கூறுவதை விட எந்த அளவு அமிர்தம் குடித்தது போல அவருடைய பக்தருக்கு அந்த அனுபவங்கள் இருந்து இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும். இவற்றை புத்தகமாக தர்கட் குடும்பத்தினர் வெளியிட்டு உள்ளனர். சாயிபாபாவைப் பற்றிய கட்டுரைகளை ஜெயராம்ஜி எனும் சாந்திப்ரியா தொடர்ந்து தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினரை பாபா காப்பாற்றட்டும்.
மனிஷா
விரேந்திர ஜோதிந்திர தர்கட் : முன்னுரை

ஜோதிந்திர ராமச்சந்திர தர்க்ட் சீறடியில் தான் சாயிபாபாவிடம் பெற்ற அனுபவங்களை சாயிபாபாவின் போதனைக்களைபோல கருதி அதை கூறி உள்ளார். விஜேந்திர ஜோதிந்திர தர்க்ட் என்பவர் அவருடைய பிள்ளை. அவர் மும்பையில் சாந்தாகுருஸ் என்ற இடத்தில் இன்ஜினீயராக பணி செய்து ஒய்வு பெற்றவர். அவர் எழுதி உள்ள பதினேழு பாகங்களில் பதினாறு பாகங்கள் அவருடைய தந்தையின் அனுபவங்கள். தனது தந்தை தன்னிடம் கூறியவற்றை நினைவில் வைத்திருந்து அவற்றை எழுதி உள்ளார். அவருடைய தந்தை எந்த அளவு சாயி பாபாவிடம் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதை அவர் விளக்கி உள்ளது படிக்க வேண்டியவை. பாபா எந்த அளவு சக்தி கொண்டு இருந்தார் என்பதை அவைகளை படிக்கும் வாசகர்கள் உணரலாம்.எந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நம்மை சாயி பாபாவிடமே அழைத்துச் சென்றுவிடுவதை காணலாம். ராமச்சந்திர ஆத்மாராம் தர்க்ட் ஸ்ரீ தாஸ் குண மகராசுடன் சேர்ந்து சாயி பாபா சமஸ்தானை நிறுவி சாயி லீலா என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். சாயி சத்சரிதாவில் உள்ள ஒன்பது பாகங்கள் மூலம் மறைந்துவிட்ட ஸ்ரீ அண்ணா சாஹிப் தபோல்கர் தர்கட் குடும்பத்தினர் சாயி பாபாவிடம் கொண்டு இருந்த உண்மையான பக்தியை எடுத்துரைக்கின்றார். நான் முடிவாக கூற விரும்புவதுஇதுதான்:

அனந்தகோடி பிரும்மானந்தனாயகா ராஜாதிராஜ யோகிராஜ் பரப்ரம்மா

ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகராஜ் கி ஜெய்

என்னுரை

அன்பான வாசகர்களே ,

என் பெயர் விஜேந்திர ஜோதிந்திர தர்க்ட். நான் க்ராம்டன் கிரிவுஸ் மற்றும் சீமன்ஸ் போன்ற கம்பனிகளில் இஞ்சியினராக பணி புரிந்து ஒய்வு பெற்றவன். சாயி சரித்திரத்தில் காணப்படும் ஒன்பதாம் பாகம் தர்க்ட் குடும்பத்தினர் சாயிபாபாவிடம் பெற்ற அனுபவங்களை தெரிவிக்கின்றது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ள பாபாசாஹிப் தர்கட் என்னுடைய தாத்தா ஆவார். ஆனால் இந்த நூலின் நான் கூறி உள்ளவை எல்லாம் என்னுடைய தந்தையான ஜோதிந்திர ராமச்சந்தியா தர்க்ட் தன்னுடைய வாழ்வில் தாம் பாபாவிடம் கண்ட அற்புத அனுபவங்களை என்னிடம் கூறியவை . என் தந்தை 1895 ஆம் ஆண்டு பிறந்து 1965 ஆம் ஆண்டில் மறைந்து விட்டார். நான் சிறு வயதில் இருந்தபோது அவர் கூறிய இந்த கதைகள் எனக்கு மந்திரவாதிக் கதைகள் போல இருந்தது . ஆனால் எனக்கு வயதான போது உணர்தேன் அவர் பாபாவிடம் பழகிய பத்து ஆண்டுகளில் அவர் பெற்றிருந்த அனுபவங்கள் கதை அல்ல , பாபாவின் தெய்வீகத்தை எடுத்துக் கூறும் நிகழ்ச்சிகளே. அவருக்கு கிடைத்த அவை அனைவரும் பெற முடியாத பொக்கிஷம். அவை நமது அறிவுக்கு அப்பாற்பட்டவை நான் வாசி போர்ட் என்ற இடத்தில் உள்ள தர்க்ட் என்ற கிராமத்தில் உள்ள தர்க்ட் குடும்பத்தை சேர்ந்தவர் . எங்களுடைய குடும்பப் பெயர் தர்கட் என்பது . என்னுடைய வம்சாவளியினர் போர்துகீய அரசை எதிர்த்து சிம்மாஜி அப்பா என்ற மாபெரும் மராத்திய மன்னருடன் ஒன்று சேர்ந்து போராடியவர்கள் . அந்தப் போரில் போர்த்துகீசியர் தோற்றுவிட அந்த மன்னன் தர்க்ட் கிராமத்தின் ஜகாகிரியை என் வம்சாவளியினருக்குக் கொடுத்தார். அதன் பின் ஆங்கிலேய அரசு அதை மராட்டியர்களிடம் இருந்து பறித்துக்கொள்ள என்னுடைய தாத்தாவின் தந்தையின் தந்தை மும்பைக்கு வந்துவிட்டனர் . அதனால் எங்கள் வம்சாவளியினரும் அங்கேயே வந்த தங்கிவிட்டனர்.
நான் சீரடிக்கு பலமுறை சென்று இருக்கின்றேன் . அங்கு பல சாயி பக்தர்களைக் கண்டதும் எனக்கே வெட்கம் ஏற்படுவது உண்டு , 'உண்மையிலேயே நான் என் தந்தையைப் போல உண்மையான பக்தியுடன் இருக்கின்றேனா ?' நான் அனைவரிடமும் கூறுவது உண்டு, 'பாபாவுடனான என்னுடைய தந்தையின் நெருங்கிய பழக்கமே என்னையும் சீரடிக்கு அடிக்கடி வரவழைகின்றது. பாபாவுடன் 1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டுவரை மிக நெருங்கிப் பழகியவர்கள் எங்களுடைய தர்க்ட் குடும்பத்தைச் சேர்ந்த என்னுடைய தந்தையின் தாயார் , தந்தையின் தந்தை , மற்றும் என்னுடைய தந்தையும்தான். என்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவங்களை , சாயியின் லீலைகளை , நான் சாயி பக்தர்களுக்கு கூறுவது உண்டு . அதன் பின் பூனாவில் இருந்த சாயி மண்டல் என்னை அழைத்து அவற்றை கூறுமாறு கேட்க , என் வீட்டில் அதை ஒரு கதையை கூறுவது போலக் கூற பக்தர்கள் வரிசையில் வந்து நின்று என்னை வணங்கிவிட்டு சென்றனர் . ஆகவே அதை விட்டுவிட்டு நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதை புத்தகமாக எழுத முடிவு செய்து 2003 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி , எனக்கு அறுபது வயதான பொழுது அதை எழுதத் துவங்கினேன் . என்னுடைய தந்தை 1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை சுமார் பதினேழு முறை சீரடிக்கு சென்று இருப்பார் என நினைக்கின்றேன். அவர் பூர்வ ஜென்மத்தில் செய்து இருந்த புன்ணியத்தினால்தான் பாபாவுடன் நெருக்கமாகப் பழகி உள்ளார். அவருக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவங்கள் அவருக்கு திருமணம் நடக்கும் முன்பே அதாவது 14 வயது முதல் 25 வயதுக்குள் நடந்து உள்ளது. நான் நிறைய ஈரங்களில் எண்ணியது உண்டு, அத்தகைய தெய்வப் பிறவியுடன் நெருக்கமாக இருந்தவர் என் குடும்ப வாழ்கையில் வந்தார்? அப்படி வராமல் இருந்திருந்தால் நான்தான் பிறந்து இருப்பேனா, இல்லை உங்களுக்கு அந்த அனுபவங்களை தெரிந்துகொள்ள வாய்புத்தான் இருந்திருக்குமா? நான் சாயி சத்சரிதா என்ற அற்புத காவியத்தை இயற்றிய மறைந்துவிட்ட ஹெமட்பன்த்தோ அல்லது அண்ணாசாஹெப் தபோல்கரோ போன்றவர் அல்ல. அவர்கள் இடத்தை நான் நெருங்கக் கூட முடியாது.

வீ.ஜி.தர்கட்

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.

Translated in Tamil by Shantipriya.
Photo:Sai Temple Tanzania
Dress acceptedBy Baba :Devotee Indira .
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.