Sunday, February 7, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Sai the Savior of Ganesh Murti.

விநாயகருடைய மூர்த்தியைக் காப்பாற்றிய பாபா


எங்கள் வீட்டில் சந்தன கட்டையினால் செய்த ஆலயத்தில் விநாயகருடைய சிறிய சலவைக்கல் மூர்த்தியும் வைக்கப்பட்டு இருந்தது . வலப்புறத்தில் தும்பிக்கையை திருப்பி வைத்துக் கொண்டு உள்ளதினால் அது விசேஷமான மூர்த்தி என நம்பப்பட்டதினால் அதை ஒரு சின்ன வெள்ளிபீடத்தில் வைக்கப்பட்டு இருந்தது . அது எங்களுக்கு கிடைத்த கதையே தனியானது . அது இன்றும் எங்கள் வீட்டில் இருப்பதற்குக் காரணம் சாயி பாபாதான் என்பதை விளக்கும் இதைப் படியுங்கள் .மும்பை நகரில் ரீகல் சினிமா தியேட்டருக்கு அருகில் இருந்த புராதான சிலைகள் விற்கும் கடைக்கு என்னுடைய தாத்தா செல்வதுண்டு . ஒரு முறை அங்கு சென்று இருந்த பொது ஒரு ஆங்கிலேயர் கடைக்காரனுடன் பேரம் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டார் .

பேரம் பேசிக்கொண்டு இருந்தவர் ஆங்கிலேயர் என்பதினால் என்னுடைய தாத்தா என்ன நடக்கிறது என வேடிக்கைப் பார்த்தபடி இருந்தார் . அவர் தாமரைப் பூவில் அமர்ந்த கோலத்தில் பலவிதமான வண்ணங்கள் பூசப்பட்ட ஒன்பது அங்குல உயர ஒரு விநாயகர் சிலையை வாங்க பேரம் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டார் . கடைக்காரரும் அது சோமநாதர் ஆலயத்தை சேர்ந்தது எனவும் அதற்கு பதினைந்து ரூபாய் கொடுக்குமாறும் கேட்க , அந்த ஆங்கிலேயரோ ஐந்து ரூபாய்க்கு தருவாயா என பேரத்தை ஆரம்பித்து எட்டு ரூபாய்க்கு மேல் தர மாட்டேன் என்றார் . என்னுடைய தாத்தா ஆவலினால் அந்த ஆங்கிலேயரிடம் அதை எதற்கு வாங்குகின்றாய் எனக் கேட்க , அவரும் அதை தான் பேப்பர் வெயிட் எனப்படும் பொருளாக மேஜை மீது வைக்க வாங்க இருப்பதாக கூறினார் . அதைக் கேட்ட என்னுடைய தாத்தா கோபமுற்று தன்னுடைய பர்சைத் திறந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியில் எடுத்து அதை கடைக்காரனிடம் தந்து , அந்த மூர்த்திக்கு எண்பது ரூபாயை எடுத்துக் கொண்டு தன்னிடம் அதை பாக் செய்து தருமாறு கூறிவிட்டார் . மேலும் விவரம் கேட்டபோது அந்த சிலை சோமநாத் ஆலயத்தின் மூலக் கதவில் இருந்தது என்ற விவரம் கூறினான் .

அப்படிப்பட்ட மூர்த்திகளை ஒரு பேப்பர் வெயிட்டாக உபயோகிக்க தம்மால் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார் . வீட்டிற்குத் திரும்பியவர் வீட்டில் நடந்ததைக் கூறி அதை சாயிநாதர் வைக்கப்பட்டு உள்ள சந்தனமர ஆலயத்தில் அவருடன் வைத்து வணங்கலாம் எனக் கூறியதை அனைவரும் ஆமோதித்தனர் . வலதுபுறத்தில் திரும்பி இருந்த தும்பிக்கையைக் கொண்ட விநாயகரை வணங்க வேண்டும் எனில் மிகுந்த ஆசாரத்துடன் இருக்கவேண்டும் என்பதினால் சாதாரணமாக அதை வீட்டில் வைக்க மாட்டார்கள் என்றாள் .

அதனால் வீடு பூசாரியை வரவழித்து அவரிடம் ஆலோசனைக் கேட்டபோது அவரும் அதை உபயோகிக்க எந்த தடையும் இல்லை எனவும் , ஆனால் ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி அன்று அந்த சிலையின் வண்ணத்தை எடுத்துவிட்டு புதிய வண்ணம் அடித்தால் அதை நிச்சயமாக பூஜையில் வைத்து உபயோகிக்கலாம் எனக் கூறிவிட அந்த மூர்த்தி பூஜை அறையில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தது . ஒவ்வொரு வருடமும் என்னுடைய தந்தை அந்த மூர்த்தியை எடுத்து தர்பண்டையின் என்ற திரவத்தால் வண்ணத்தை துடைத்துவிட்டு புது வண்ணம் அடிப்பார் . அதில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு உதவுவோம் . நான் பள்ளியில் படித்தபோது என் நண்பர்கள் விநாயக சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் கணபதியை வாங்குவது உண்டா எனக் கேட்டால் , நானோ நாங்கள் வாங்குவதில்லை, மாறாக எங்கள் வீட்டில் கணபதி நிரந்தரமாக உள்ளார் என்பேன் . இப்படியாக தர்கத் குடும்பம் பிரதான சமாஜிகள் என்ற நிலையை விட்டுவிட்டு ( கடவுளின் சிலை பூஜை வழிபாட்டை ஏற்காதவர்கள் ) சிலை வழிபாட்டை ஏற்றது .

என்னுடைய தாத்தா துணி நெய்யும் தொழிலில் திறமைசாலி என்பதினால் பரோடா மகராஜாவின் அழைப்பேன் பெயரில் பரோடா நகருக்கு சென்று அங்கு ஒரு ஆலையை நிறுவ வேண்டி இருந்தது . அவர்களுக்கு நதியின் பக்கத்தில் இருந்த பெரிய வீட்டில் இடம் தரப்பட்டது . ஒரு முறை நல்ல மழை வந்து வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வீட்டிற்குள்ளும் புகுந்து விட்டது .

என் பாட்டிக்கு பயமாகிவிட்டது . வீட்டிற்குள் புகுந்த தண்ணீர் மணிக்கு மணி ஏறிக்கொண்டே போய் வீட்டிற்குள் மாடிக்கு செல்லும் மேல் படிவரை சென்றுவிட்டது . உடனே பாடி ஒரு தாமிர பாத்திரத்தை எடுத்து வந்து அதற்குள் விநாயகருடைய சிலையை வைத்துவிட்டு , அப்படி அந்த பாத்திரமும் முழுக வேண்டி வந்து விட்டால் அந்த நீரிலேயே விநாயகர் சிலையை முழுக அடித்துவிடுவேன் எனவும் தீர்மானம் செத்தாள் .

என்ன அதிசயம் , ஏறிக் கொண்டு சென்ற நீரின் அளவு அந்த தாமிர பத்திரம் வரை சென்றபின் இன்னும் மேலே செல்லவில்லை. திடீர் என வெள்ளம் வடியத் துவங்க அனைத்தும் நல்லபடியாகிவிட்டது . விநாயகர் சிலை காப்பாற்றப்பட்டு விட்டது . ஆகவே அந்த ஆண்டு ஒன்றரை நாளுக்கு பதிலாக ஐந்து நாட்கள் விநாயகர் பூஜை செய்தோம். இப்படியாக சென்று கொண்டு இருந்தபோது ஒரு வருடம் ஹர்தலிக நாள் எனப்படும் விரத தினத்தன்று விநாயகருக்கு எப்போதும் போல அந்த ஆண்டும் புதிய வண்ணம் அடிக்கும் போது அதன் கை உடைந்துவிட்டது . அது என்னுடைய தந்தைக்கு அபசகுனமாகபட்டது . எப்படி சேதம் அடைந்த சிலைக்கு பூஜை செய்வது என்ற நிலை வந்தபோது , அது குடும்ப சிலை என்பதினால் அந்த பூஜை முடிந்ததும் பாபாவிடம் சென்று அது குறித்தக் கேட்கலாம் என முடிவாயிற்று .

முதலில் இருந்தே அந்த விஷயத்தில் பாபாவை கலந்து ஆலோசிக்காததினால் வெட்கமாயிட்று அவர்கள் ஏற்கனவே தாம் அவரைக் கேட்காமல் அந்த சிலைக்கு பூஜை செய்து வந்ததற்கு ஆத்மார்த்தமாக அவரிடம் மன்னிப்புக் கோரி இருந்தனர் . அவர்கள் துவாரகாமாயிக்கு சென்றனர் . அனைத்தும் அமைதியாக இருந்தது . அனைவரும் சென்றபின் அவர்களை அருகில் அழைத்த பாபா கூறினார், ‘அம்மா , நாம் விட்டில் உள்ளவன் எலும்பு முறிந்துவிட்டால் வீட்டைவிட்டு துரத்துவதில்லையே . அதற்கு பதிலாக அவனை நல்ல முறையில் அல்லவா கவனித்துக் கொள்கின்றோம் ’ எனத் தானாகவே கூற , பாட்டி அவர் கால்களில் விழுந்தாள் . எத்தனை அந்தராத்மியாக இருந்திருந்தால் பாபாவுக்கு தங்கள் அங்கு வந்த காரணம் புரிந்து இருக்கும் ? எங்கள் குடும்பத்தில் பாபா இப்படியாக செய்த அற்புதங்களை என்னென்று சொல்வது ? பாபா எங்கள் விநாயகரைக் காப்பாற்றிவிட்டார் . இன்றும் எங்கள் வீட்டில் அந்த விநாயகருடைய மூர்த்தி பூஜை வழிபாட்டில் உள்ளது .

(Translated into Tamil by Santhipriya

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted

Post :
Click On Link Below To Read .

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences of Tarkhad Family Chapter 3.

4.Live Experience of Tarkhad Family Chapter 4.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.