Thursday, February 25, 2010

Shirdi Sai Baba's Magical Chillum.


மகிமை பெற்ற பாபாவின் புகை குழாய் ( சில்லும்)

சாயிபாபா வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று சில்லும்தான் ( புகைக் குழாய்) புகை பிடிப்பார். அந்த உண்மை அந்த புகைக் குழாயை செய்து தரும் மண் பாண்டம் செய்யும் குயவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் தினமும் அவன் இருநூறு அல்லது முன்னூறு புகை குழாயை செய்து தந்து பணமும் பெற்றுக் கொள்வான். ஒரு புகை குழாய் இரண்டு பைசாவாகும். அதற்கு பாபா பணம் தருவார். அதுவே அவன் வருமானம்.

அவற்றை பாபா துவாரகாமாயியில் ஒரு மூலையில் போட்டு வைப்பார். வரும் பக்தர்கள் அதை எடுத்துக் கொண்டு புகை பிடிப்பார்கள். சிலர் தமது வீட்டுக்கும் அதை கொண்டு செல்வார்கள். ஒரு நாள் 'தியோ' என்பவர் அங்கு வந்து பாபாவிடம் அவருக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று குழாய் மட்டுமே தேவைபடுகையில் எதற்காக அத்தனை சில்லுமை வாங்கி மூலையில் குவித்து வைகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு பாபா ' உண்மைதான் எனக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று போதும். ஆனால் இங்கு வரும் பக்தர்கள் அதை எடுத்து புகைக்கின்றனர் அல்லவா. அது மட்டும் அல்ல நமக்குத் தெரியாமல் சிலர் அதை தம் வீட்டுக்கும் எடுத்துச் செல்கின்றனர் , அதற்குதான் இது' என்றார்.
பாபா இங்கு சென்றாலும் அவருடன் சிலும்மும் பயணித்தது. அது அவருடைய ஒரு அங்கம். அதனால் குயவனும் பிழைத்து வந்தான், பாபாவின் கரங்கள் பட்ட மண்ணும்,புகை குழாயும் மகிமை பெற்றன.

பாபாவால் அனுக்ராகிக்கப்பட்ட பெண்மணி சாந்தி பாய் படேல் என்பவர். அவருக்கு பாபா தான் புகையை இழுத்த சிலுமை முதலில் தருவார். அவ்வளவு அன்பு. அவளுடன் பாபா சென்று தங்கி உள்ளார். பாபாவை சீரடிக்கு அழைத்து வந்த பெருமை அவரையே சாரும்.

பாபா சில பக்தர்களை தான் உபயோகித்த சில்லுமை எடுத்து பயன் படுத்த அனுமதிப்பார். அது அவர்களுக்கு அவர் அளித்த அருள். பாபாவின் பக்தரான பாலாராம் துறந்தார் என்பவர் சீரடிக்கு வந்தார். அவர் கடுமையான ஆஸ்துமா நோயினாலும் கடுமையான இருமலினாலும் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவர் துவாரகாமாயிக்கு சென்ற போது பாபா தான் புகை இழுத்துக் கொண்டு இருந்த சில்லுமை அவருக்குத் தந்து புகையை இழுக்கச் சொன்னார். அவர் பாபாவிடம் பெரும் பக்தி கொண்டவர் என்பதினால் எதுவும் கூறாமல் பாபாவிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டு புகையை இழுத்தார். முதலில் புகை உள்ளே சென்றதும் சங்கடமாக இருந்தது. ஆனாலும் சிறுது நேரம் புகையை இழுத்த பின் பாபாவிடம் அதை திருப்பித் தந்து விட்டார்.

அதற்குப் பின்னர் அவருக்கு ஆஸ்துமா நோயும் , இருமாலும் மறைந்தே போயிற்று. அந்த சிலும்முக்கு அத்தனை சக்தி இருந்துள்ளது. ஆனால் பாபா மகா சமாதி அடைந்த நாளன்று மட்டும் அவருக்கு அந்த ஆஸ்துமாவும், கடுமையான இருமலும் இருந்தது. மறு நாளைக்குப் பிறகு அதன் சுவடே தெரியவில்லை.
அமராவதியில் கணேஷ் கார்பாண்டே என்பவர் பெயர் பெற்ற வக்கீல். அவர் பர்மாவில் சிறை தண்டனை பெற்று இருந்த லோகமான்ய திலகரின் வக்கீல். பாபாவின் தீவீர பக்தர். அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டை போட்டு கைது செய்ய முனைந்து இருந்த பிரிட்டிஷ் அரசின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க அவரை பாபா சீரடியிலேயே வைத்து இருந்தார்.

அதனால் கணேஷ் கார்பாண்டேயின் அரசியல் மற்றும் வக்கீல் தொழில் நலிவடைந்தது. ஆனால் அவர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கியவர். ஆரத்தி நேரத்தில் பாபா அவரை செய்கையால் தம் அருகில் அழைத்து சில்லுமை புகைக்கக் கொடுப்பார். மற்ற நேரத்தில் அது அவரது மனதை கட்டுப் படுத்தும். 22 .01 .1912 அன்று கணேஷ் கார்பாண்டே கூறினார் ' வழிபாடு செய்து கொண்டு இருந்த போது பாபா இரண்டு மலர்களை தன்னுடைய மூக்கு துவாரத்தில் வைத்துக் கொண்டு, இரண்டை தனது காதில் சொருகிக் கொண்டார். அதை பார்த்த எனக்கும் அதே போல் செய்யுமாறு கூறிய செய்கை எனப் புரிந்து கொண்டேன். அதன் பின் அவர் என்னை அழைத்து எனக்கு சில்லுமை புகைக்கக் கொடுத்தத்தின் மூலம் அதை உறுதி செய்தார். '

சாயி சகுநோபாசன் என்ற ஆரத்தி புத்தகத்தை எழுதிய கிருஷ்ணாஜி பீஷ்மா என்பவருக்கு பிராமண பக்தர்களும் பாபா புகை பிடித்த சிலுமை எடுத்து புகை பிடித்தது அருவருப்பாக இருந்தது. ஆனால் தான் அதை செய்ய மாட்டேன் என்ற தீர்மானத்துடன் இருந்தார். ஒரு நாள் பாபா அவருக்கு ஒரு கதையைக் கூறினார். அது கிருஷ்ணாஜி பீஷ்மாவுக்கு முதல் நாள் கனவில் வந்த கதை. அப்போது பாபா பேசிக்கொண்டே அவரிடம் தன்னுடைய சில்லுமைத் தர அதை வாங்கி புகையை இழுத்தவர் பேரானந்த ஆன்மீக நிலைக்கு சென்று விட்டார். அதன் ஒய்ன் அவரும் தீவீரமானபக்தராகிவிட்டார்.

போகாஜி ஷிண்டே ஏன்பவரே துவாரகாமைய்க்கு சேவை செய்ய முதலில் வருபவர். அவர் பாபாவுக்கு தீப் புண் காயம் ஏற்பட்டபோது பாண்டேஜ் போட்டு மருந்தும் போடுவார். அப்போது பாபா அவரிடம் தான் புகைத்த சில்லுமைத் தருவார். அவரும் அதை வாங்கிக் கொள்வார்.

எப்போதும் சாவடியில் வியாழர் கிழமைகளிலும் பண்டிகை தினத்திலும் சில்லுமை தருகிறார்கள். அத்கர்ஸ் ஆரத்தி மற்றும் சௌக்யாதார ஜீவா போன்ற பூஜைகளில் சில்லுமும் பாபாவுக்கு தரப்பட்டு ஆராதிக்கப் படுகின்றார். அதை தரும் பாக்கியம் பெற்றவர்கள் தத்யா வம்சாவளியினர் ஆவர்கள்.

Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.