Wednesday, March 10, 2010

For 2 Thousand Years We Have Had A Close Relationship.


அன்பானவர்களே,
நானா சாஹேப் மற்றும் ராம மாருதி என்பவர்களே 1911 ஆம் ஆண்டு அனந்த ராவ் திம்பக் கார்னிக் என்பவர் சீரடிக்கு வருவதற்கு காரணமானவர்கள். நானா என்பவர் கார்னிக்கின் பால்ய கால தோழர். நானா மேல் படிப்புக்காக வேறு எங்கோ சென்று விட்டார். அவர்கள் மீண்டும் 1911 ஆம் ஆண்டில் சந்தித்துக் கொண்டனர். நானா கார்னிக்கிர்க்கு பாபாவின் அற்புத லீலைகளை எடுத்து உரைத்தார். அவருடைய தெயவாம்சங்களைப் பற்றியும் கூறினார். அதுவே கார்னிக் பாபாவிடம் நெருக்கமாகப் போக போடப்பட்ட முதல் விதை.

தாஸ் கணு மகராஜ் நானாவின் வீட்டுக்கு வந்து பஜனைகளை செய்வது உண்டு. அப்போது ராம் மாருதி அங்கு வந்து ஆனந்தத்தினால் தன்னை மறந்து ஆடுவார். கார்னிக்கும் அவருடைய மகன்களும் அந்த பஜனைக்கு வருவது உண்டு. 1911 ஆம் ஆண்டு முடிவில் அப்படித்தான் ஒருநாள் அவர்கள் நானாவின் வீட்டுக்குப் போய் இருந்த போது கார்னிக் ராம் மாருதியிடம் சென்று தனக்கு அநுக்ரகம் செய்து உபதேசம் செய்யுமாறு கோரினார். அவரோ பாபாவின் படத்தைக் காட்டி அவரிடம் சரண் அடையுமாறு கூறினார். அதற்கு சில நாட்கள் முன்னர்தான் கார்னிக்கின் மூத்த மகன் சீரடிக்கு செல்ல தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆகவே மாருதியின் அறிவுரையை ஏற்று அவர்கள் சீரடிக்கு செல்ல முடிவு செய்தனர்.

போவதற்கு முன்னர் கார்னிக் இரண்டு முடிவுகளை செய்து இருந்தார். சத்யநாராயணா பூஜையின் தட்சணையாக தான் வைத்து இருந்த ஒண்ணேகால் ரூபாயை பாபாவுக்கு தர வேண்டும். ஒரு வேளை பாபா தட்சணை கேட்காவிடில் அதையும் தராது திரும்பி வந்து விட வேண்டும்.

கோபர்கோனுக்கு சென்றதும் அங்கிருந்து சீரடிக்குச் செல்ல வண்டியை தேடினார்கள். இருந்த ஒரே ஒரு மாட்டு வண்டியையும் ராம் மாருதியின் பஜனைக் குழுவினர் ஏற்பாடு செய்து கொண்டு போய் விட்டனர். என்ன ஆனாலும் சரி சீரடிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற முடிவில் வந்து இருந்த கார்னிக் குடும்பத்தினருக்கு நல்ல வேளையாக ஒரு டோங்கா கிடைத்தது. அதில் ஏறிக் கொண்டு சீரடிக்கு பயணம் செய்தனர்.

சீரடிக்குச் சென்று துவாரகாமாயியில் பாபாவை தரிசனம் செய்தனர். பாபா கார்னிக்கின் மூத்த மகனை அழைத்து அவரிடம் தட்சணையும், பிரசாதமும் கேட்டு வாங்கிக் கொண்டார். அடிகடி அவர் நெற்றியில் உடியைத் தடவி விட்டார். கார்னிக் பாபாவுக்கு சரண் சேவை செய்தார். ஆனாலும் பாபா அதை கண்டு கொள்ளவில்லை. அனைத்தும் முடிந்ததும் அவர்களை வாடாவுக்கு சென்று அமர்ந்து கொள்ளுமாறு பாபா கூறினார். கார்னிக்கோ பாபா தன்னிடம் தட்சணை வாங்கிக் கொள்ளாவிடில் திரும்பிச் சென்று விடலாம் என்ற முடிவில் வந்து இருந்தார். ஆனால் பாபாவோ அவரையும் நோக்கி வாடாவுக்கு சென்று அமருமாறும் தான் அவருக்கு அனுமதி தராதவரை சீரடியைவிட்டு செல்லக் கூடாது என்றும் கூறினார்.

கார்னிக்கிற்கு தர்ம சங்கடமாகி விட்டது. மறுநாள் அவருடைய மகன் அலுவலகத்துக்குப் போக வேண்டுமே. ஆகவே அவர்கள் பாபாவைப் பார்த்து அவரிடம் அனுமதி பெறச் சென்றனர். மூன்று முறை சென்ற பின்னர்தான் பாபா கிடைத்தார். கார்னிக்கை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு பாபா அவருடைய மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று கூறினார் ' தான் கர்மாவினால் ஏற்க வேண்டிய இன்னல்களை ஒருவரும் ஏற்காமல் இருக்கக் கூடாது. 'கார்னிக்கின் மகன் உடல் நலமின்றி இருந்ததினால் மிகவும் சோர்வாக இருந்தார். கோபமான குரலில் பாபா மீண்டும் கூறினார் 'கேடு கெட்டவனுக்கு இத்தனை நாளும் உணவு தந்து அவனுடைய பாபங்களை கழுவுமாறு கூறினால் , மாட்டேன் என்கின்றான். அவன் தன்னுடைய பாபத்தை தானேதான் களைய வேண்டும். அவனைப் பார்த்து எப்படி அனைவரும் நகைகின்றனர் பார்'.

அடுத்து பாபா கர்னிக்கை அருகில் அழைத்து எங்கே என தட்சணை என்றார். கார்னிக் பாபாவின் பாதங்களை பற்றிக் கொண்டு அதில் முத்தங்களை பொழிந்தார். கார்னிக் தன்னுடைய மகனை நோக்க அவர் தன்னிடம் வைத்து இருந்த ஒண்ணேகால் ரூபாயை பாபாவிடம் தந்தார். அதை பெற்றுக் கொண்ட பாபா ஆனந்தக் கூத்தாடினார்' இதோ பார், எனக்கு இவர் ஒண்ணேகால் ரூபாயை தந்துள்ளார்.....ஒண்ணேகால் ரூபாய்' எனப் பாடினார். அதன் பின் கார்னிக்கிடம் கூறனார் ' இந்த வீடு உன்னுடையதுதான். நான்தான் இங்கு வந்து அமர்ந்து உள்ளேன். ஆகவே நீ இனி அடிக்கடி இங்கு வர வேண்டும்'.

கார்னிக் மன மகிழ்ச்சி அடைந்து வீடு திரும்பலானார். அவர் ஏழை. ஆகவே எப்படி அடிக்கடி பாபாவை சந்திக்கப் போக முடியும் ? அனைத்தையும் சிந்தித்துக் கொண்டே சென்றவர் நினைத்தார் ஒரு வேளை பாபா தன்னை அடிக்கடி நானாவின் வீட்டுக்கு போகச் சொல்கின்றாரோ? நானாவும், பாபாவும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்தனர். நானாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் சீரடியில் நடந்ததைக் கூறினார். நானா அவரை தினமும் ராம ரக்ஷா தோத்திரத்தை படிக்குமாறு கூற அவரும் தினமும் சந்தோர்கருடைய வீட்டுக்குச் சென்று சத்சங்கத்தில் பங்கு ஏற்றார்.

ஒரு மாதத்துக்குப் பின் மீண்டும் கார்னிக், அவருடைய இரண்டாவது மகனுடன் சீரடிக்கு சென்று இருந்தார். அவர், அவருடைய மகன் மற்றும் ராம மாருதி மூவரும் ஆரத்திக்கு பின் பாபாவின் முன்னால் சென்று நின்று கொண்டு இருந்தனர். பாபா கார்னிக்கை பார்த்துக் கூறினார் ' நமக்குள் இரண்டாயிரம் வருடங்களாக நெருங்கிய தொடர்ப்பு இருந்துள்ளது. முதலில் இருந்தே உனக்கு வேடிக்கை செய்வது பிடிக்குமே'.

பாபாவின் தரிசனத்துக்குப் பிறகு கார்னிக் பாபாவிடம் இருந்து சற்று தள்ளியே அமர்ந்து கொண்டு இருந்தார். பாபா அவரிடம் நமக்குள் ஏன் இடைவெளி வேண்டும், கிட்டே வா என அவரை தனது அருகில் அழைத்து ஒரு குழந்தையை தாயார் கட்டிக் கொள்வது போல அவரை கட்டித் தழுவினார். எனக்கு ஆறு ரூபாய் தட்சணை கொடு எனக் கேட்டார்.

கார்னிக் தன்னுடைய மகனிடம் அதை தருமாறு கூறினார். பாபா கூறினார் ' எந்த மகன் உடனே தட்சனையை தருவானோ அவனுக்கு அல்லா அருள் புரிவார்'. மேலும் ' உனக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடம் கேட்கத் தயங்காதே' என்றார். அதன் பின் கார்னிக் தனது மகனிடம் இருந்த அத்தனை பணத்தையும் வாங்கிகொண்டு பாபாவிடம் தந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் கார்னிக் தனது தந்தை போலவே உள்ளதாக நினைத்து பாபாவிடம் தன்னுடைய தந்தைக்கு அருள் புரியுமாறு வேண்டினார்.

பாபா கூறினார் 'என்னுடைய அருள் இல்லாமல் இங்கு ஒரு இலைகூட அசையாது. நான் அனைவருக்கும் ஒரே அளவில்தான் அருள் புரிகின்றேன்' அதைக் கேட்ட கார்னிக் அதுவே பாபா தனக்கு அளித்த முதல் உபதேசம் என் நினைத்தார். திரும்பி வந்து நானாவை சந்தித்தவர் அவரிடம் அனைத்து விஷயங்களைப் பற்றியும் கூறினார்
( Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.