Wednesday, March 17, 2010

Mahima Of Dakshina-Experience By Reena.

தட்ஷணையின் மகிமை
அன்பானவர்களே
பாபா அனைத்தையும் அறிந்துள்ளவர். பக்தர்களில் குறை அறிந்து அதை நிவர்திப்பவர். தனக்கு அவர்கள் தரவேண்டியதை மறந்துவிட்டாலும் அதை நினைவு படுத்தி வாங்கிக் கொண்டாலும், தான் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டதை விட பல மடங்கு அதிகம் அவர்களுக்கு திருப்பித் தருவார் என்பது உண்மை . அதை இந்த சாயி பத்தையின் அனுபவம் கூறுகின்றது. படியுங்கள்.
மனிஷா

ரீனா எனும் பக்தையின் அனுபவம்
நான் அமெரிக்காவில் வசிக்கின்றேன். நானும் என்னுடைய கணவரும் சாயி பாபாவை நம்புபவர்கள். அவரை உண்மையான மனதுடன் வணங்குபவர்கள். 2007 ஆம் ஆண்டு கருவுற்று இருந்த எனக்கு பன்னிரண்டாவது வாரத்தில் கரு சிதைவு ஏற்பட்டது. எங்களுக்கு வயது முப்பது ஆகி விட்டதினால் ஏழு மாதங்களுக்குப் பின் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒரு மருத்துவரை அணுகினோம் .அதற்கு சில சோதனைகளை செய்ய வேண்டும் எனவும் அதற்கான செலவு சுமார் நாலாயிரம் டாலர் அதாவது ஒரு லட்சத்து தொண்ணுற்றி இரண்டு ரூபாய் ஆகும் என்றார். எங்களிடம் இருந்த காப்பீடு (இன்சுரன்ஸ்) அதை சரி கட்டிவிடும் என் கருதி அதை செய்து கொண்டோம்.

ஆனால் அவர்களோ ஏழு மாதத்தில் அந்த சோதனைகளை செய்து கொண்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது எனக் கூறி விட்டனர். நாங்கள் அதிர்ந்து போனோம். அத்தனை பெரிய தொகையை எப்படி சேர்த்து வைத்துள்ள பணத்தில் இருந்து திருப்புவது? வியாபார ரீதியான காப்பீடு திட்டத்தில் அனாவசியமாக சேர்ந்து நாங்கள் ஏமார்ந்து விட்டோம் என் எண்ணி வருந்தினோம்.

அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் நான் எனக்கு ஒரு பிராஜக்ட் கிடைத்தால் சாயிபாபாவின் ஆலயத்துக்கு ஆயிரம் டாலர் கொடுபதாக வேண்டிக் கொண்டு இருந்தேன். 2008 ஆம் ஆண்டு எனக்கு ஒரு நல்ல பிராஜக்ட் கிடைத்தது. அந்த பிராஜக்ட் முடிந்து பணமும் வந்துவிட்ட வேளையில்தான் அந்த நஷ்ட செய்தியும் வந்தது. நான் பாபாவின் ஆலயத்துக்கு பணத்தைத் தருவதா இல்லை சோதனைகளுக்கான பணத்தை திருப்புவதா என் யோசனை செய்தேன். அத்தனை பெரிய பணத்தை ஆலயத்துக்கு தந்துவிட்டால், மருத்துவ செலவுக்கான பணத்தை எப்படி திருப்புவது?

நாங்கள் மனதில் சஞ்சலம் அடைந்தாலும் , வார்த்தையை காப்பாற்றலாம் என முடிவு செய்தோம். இல்லை என்றால் தெய்வ குற்றமாகிவிடும். ஆகவே பாபாவின் ஆலயத்துக்கு பணத்தை அனுப்பிவிட்டோம். பத்து நாட்கள் ஆயின. திடீர் என காப்பீடு கம்பனியில் (இன்சுரன்ஸ்) இருந்து பணத்தை மருத்துவமனைக்கு தந்து விட்டதாக செய்தி அனுப்பினார்கள். முதலில் கொடுக்க மாட்டோம் எனக் கூறியவர்கள், எப்படி எங்களிடம் கூறாமலேயே பணத்தை தந்துவிட்டு எங்களுக்கு செய்தியை அனுப்பி இருந்தனர் என்பது புரியவில்லை. அந்த மாயத்தை என்னவென்று கூறுவது? சாயி சரித்திரத்தில் இருந்தது நினைவுக்கு வந்தது. 'எனக்கு நீ தருவதை விட பல மடங்கு அதிகம் நான் உனக்கு திருப்பித் தருவேன்'.
(Translated into Tamil by Santhipriya)


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.