Friday, March 5, 2010

Shirdi Sai Baba And Leela Of His Kafani.

பாபா மிகவும் எளிமையான வாழ்கையையே வாழ்ந்தார். அது அவருடைய காபினியைப் பார்த்தாலே தெரியும். பாபாவின் காபினியை காஷிராம் ஷிம்பி என்ற தையல்காரர் தைப்பார்.

அவருடைய கிழிந்து போன காபினிகள் கூட பளீர் என இருக்கும். காபினி மாயாவைக் குறிக்கும். மாயாவை இரண்டு காட்சிகள் குறிக்கும். ஒன்று வெளியில் தெரிவது, இரண்டாவது அதன் ஆடம்பரத் தன்மை. வெள்ளை நிறம் ஆசைகளை அழித்துவிட்டதைக் குறிக்கும். (வெண்மையான காபினி) ஆசைகளை அழித்துவிட்ட நிலையில் பாதியை எட்டி விட்டால் இளம் மஞ்சள் நிறத்தை அணிவார்கள் , பூரண நிலையை எட்டி விட்டவர்கள் வெண்மை நிறத்தை அணிவார்கள் .

பாபா அணிந்த காபினித் துணி முரட்டுத் துணியாகும். முதலில் ஆரஞ்சு நிறத்தில் அதை அணிந்தவர் , பின்னர் பச்சை நிறத்துக்கு மாறி அதன் பின் வெண்மை காபினியை மட்டுமே அணியத் துவங்கினார்.

துவாரகாமாயியில் ஒரு மூலையில் அவருடைய காபினிகள் மூட்டையாகக் கிடக்கும். பாபா தனது கிழிந்துவிட்ட காபினியை உடனடியாகத் தூக்கிப் போடா மாட்டார். கிழிந்த இடத்தை தைத்து அணிய முயற்சிப்பார். ஆனால் தத்யா அவரை வற்புறுத்தி கிழிந்த காப்பினியை தூக்கிப் போட்டுவிட்டு புதியதை அணியச் சொல்வார்.எதையாவதுக் கூறி அதை தட்டிக் கழிக்க பாபா முயற்சி செய்வார். இப்படி பல நாள் செல்லும். சிலவேளை அதைப் பொறுக்க முடியாத தத்யா காபினியின் கிழிந்து போன இடங்களை விரலை விட்டு பெரியதாகக் கிழித்து விட்டு அதைப் போட்டுக் கொள்ள முடியாமல் ஆக்கி விடுவார்.

தனது உபயோகமட்ற காபினிகளை பாபா தனக்கு மனதில் தோன்றியபடி விநியோகம் செய்து விடுவார். எவருக்கு ப்ராப்தம் இருந்ததோ அவர்களுக்கு அது கிடைத்தது. பலரும் அதை பெற்றுக் கொள்ள ஆசைபட்டாலும் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும். அப்படி காபினியை பெற்ற சில அதிருஷ்டசாலிகள் நூல்கர், உதவேஷ், காகா திக்ஷித் போன்றோர். ஜி.ஜி. நார்கே என்பவர் பாபாவின் காபினி தனக்கு கிடைக்காதா என ஏங்கினார், ஆனால் அவருக்கு பாபா அதைத் தரவில்லை. அந்த கதையை ஜி.ஜி. நார்கேயின் அனுபவத்தில் படிக்கலாம்.

தத்யா சாஹேப் நூல்கர் என்பவர் ஒரு முறை சாவடிக்கு சென்று இருந்த போது அப்பா கோடே என்பவர் தூணில் சாய்ந்து நின்றபடி சிறிது நூலை தன் விரலில் சுற்றிக் கொண்டு இருந்ததைக் கண்டார். என்ன' கையில் அடி பட்டு விட்டதா' எனக் கேட்ட போது அவர் கூறினார், 'இல்லை இது பாபாவின் கிழிந்த காபினியில் இருந்து கிடைத்தது'. எதற்காக காபினியை கிழித்தாய் என்ற போது அவர் தான் காபினியை கிழிக்கவில்லை எனவும், விளக்கு திரியாக உபயோகிக்க பாபாவே காபினியைக் கிழித்தார் என்று கூறினார் . மேலும் 'நான் அதைத் தருமாறு பாபாவிடம் வேண்டினேன்'. அவரும் எனக்கு கொடுத்தார் என்றார். தத்யா அது தனக்கும் கிடைக்க கூடாதா என எண்ணினார். அப்போது தத்யாவுக்குத் தெரியாது பாபா அவருக்கும் காபினியைத் தர இருகின்றார் என்பது.

ஒரு நாள் தத்யா துவாரகாமாயிக்கு சென்று இருந்த போது பாபா அவருக்கு தான் பயன்படுத்திய காபினியைத் தந்து 'இதை குளிர் காலத்தில் உபயோகித்துக் கொள், குளிருக்கு இதமாக இருக்கும்' என்றார்.இப்படியாக பாபா மற்றவர் மனதை அறிந்து கொண்டு அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவார்.

அது போல பாபாவுடன் ஜோதிந்தராவின் உறவும் தந்தை மகன் போன்றது. அவர் பாபாவுக்காக எந்த சேவையும் செய்வார். ஒரு நாள் பாபா தான் குளிக்கப் போகுமுன் அவரையும் உதவிக்கு அழைத்துச் சென்றார். தான் குளிக்கப் போவதாகவும், தான் தரும் காபினியை துவைத்துவிட்டு கையில் வைத்து கொண்டு வெய்யிலில் காய வைக்கும்படியும், ஆனால் அதன் நுனி பூமியில் தொடாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினார். சாதாரணமாக பாபா குளித்துவிட்டு வர வெகு நேரம் ஆகும் என்பதினால் துணி சுலபமாகக் காய்ந்து விடும்.

பாபா குளிக்கச் சென்றார். பாபா காபினியை எப்போது தருவார் என எதிர்பார்த்து காத்திருந்தார். சற்று நேரம் ஆனதும் காபினியை பாபா தராததினால் ஆவலில் அவர் குளிக்கும் இடத்தை எட்டிப் பார்த்தார். தனது கண்களை நம்ப முடியவில்லை. பாபாவின் உடலில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த ஒளி வெள்ளம் நாலாபுறமும் பரவி இருந்தது. கண் பார்வையே போய்விடும் போல இருந்தது. பாபாவை நிர்வாண கோலத்தில் பார்த்ததற்கு மனம் வருந்தினார். அதே நேரத்தில் பாபா அவரை அழைத்து தனது காபினியைத் தந்தார்.

அதை வேகமாக வாங்கிகொண்டு வந்து கிணற்றடியில் சென்று துவைத்தார். வெய்யில் அடித்த இடத்தில் சென்று அதை கையில் பிடித்துக் கொண்டு நின்றார். நேரமாக ஆக காபினி கனகத் துவங்கியது. அவரால் அதை கையில் வைத்திருக்க முடியவில்லை. கைகளில் வலி எடுக்க ஆரம்பித்தன.

பாபா தன்னை சோதனை செய்கிறார் என்பது புரிந்தது. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே 'காபினியை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க எனக்கு சக்தி கொடு 'என ஹனுமானை வேண்டினார். அவ்வளவுதான், பாபா குளிக்கும் இடத்தில் இருந்து கூவினார்' என்ன ஹனுமானை எதற்காக வேண்டுகிறாய்?' அவர்தான் அந்தர்யாமி ஆயிற்றே. ஜோதிந்திரா பாபாவிடம் தான் தவறாக அவர் குளிக்கும்போது எட்டிப் பார்த்த விவரத்தைக் கூறி கூறி அதற்காக மன்னிப்பு கேட்டார். பாபா அதை ஏற்றுக் கொண்டார் போலும். உடனேயே காபினியின் கனம் குறையத் துவங்கியது. அதன் பிறகு அப்படிப்பட்ட தவறுகளை செய்ய மாட்டேன் என ஜோதிந்திரா உறுதி கூறினார்.
(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.