Wednesday, June 9, 2010

I am Your Protector -Experience of Sai devotee Manohary .

நானே உனக்கு பாதுகாவலன்


அன்பானவர்களே
நம்மை காப்பவர் சாயினாதரே என்பதில் ஐயம் இல்லை.அவர் கருணை மிக்கவர், தனது குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர். அவர் மீது முழு நம்பிக்கையும் வைத்தால் நமக்கு ஏற்படும் துயரங்களில் இருந்து அவர் நம்மை நிச்சயமாகக் காப்பார். இதோ சாயியின் பக்தை மனோகரியின் அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா

மனோகரியின் அனுபவம்

நான் பாபாவை கடந்த பத்து வருடங்களாக வணங்கி வருகின்றேன். அவர் என்னுடைய நன்மைகள், தீமைகள் என அனைத்திலும் என்னுடன் இருந்து ஆபத்சகாயனாக இருந்து உதவி வந்துள்ளார்.

நான் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியில் இருந்த ஊரில் என்னுடைய கணவரும் பிள்ளைகளும் வேலை செய்கின்றனர். என்னுடைய இளய மகன் பட்டப் படிப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் என்னுடன் சில நாட்கள் துணைக்கு இருக்க ஒரு வார விடுமுறையில் வந்திருந்தான். அது 2009 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் பத்தொன்பதாம் தேதி . எங்கள் வீட்டில் பாபாவின் பஜனை நடந்து முடிந்தது. நாங்கள் உறங்கச் சென்றோம். மறுநாள் விடியற்காலை நான்கு மணி. இருக்கும் என்னை எவரோ தட்டி எழுப்புவது போல உணர்ந்தேன். எழுந்தவள் பார்த்தால் எதிரில் யாரும் இல்லை.

ஆகவே நான் ஜன்னலை நோக்கினேன். அதன் வெளியில் நெருப்பு எரிவது போல இருந்தது. ஓடிச் சென்று ஜன்னலில் இருந்து பார்த்தால் அடுத்த வீட்டில் நெருப்பு பிடித்துக் கொண்டு இருந்தது. நான் ஓடிச் சென்று என் மகனை எழுப்பினேன் தீ அணைப்பு நிலையத்துக்கும் டெலிபோன் செய்தேன். தீ அணைப்பு வண்டி வந்து கொண்டு இருந்தது. நாங்கள் வீட்டை திறந்து கொண்டு வெளியே போக கதவை திறந்தால் அந்த தீயோ காற்றினால் எங்கள் வீடுப் பக்கமாக வீசத் துவங்கியது. வீட்டின் பின் புறமாக வெளியேறவும் வழி இல்லை. வெளியே செல்ல முடியாத நிலைமை. என்ன செய்வது வீட்டிற்குள் ஒரே வெப்பமாக இருந்தது. பாபாவை வேண்டிக் கொண்டேன்.
நல்ல வேளையாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர் எங்கள் வீட்டுக்கும் ஆபத்து உள்ளது என்றும் உடனே வெளியே வந்து விடுமாறும் கூறி எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நாங்களும் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்தில் இருந்த இன்னொருவர் வீட்டில் சென்று தங்கினோம்.
அந்த தீயினால் எங்கள் வீடு சிறிது சேதம் அடைந்தாலும் பக்கத்து வீடு முழுவதும் அழிந்து விட்டது. அவற்றையும் சேர்த்து எங்கள் வீட்டையும் சரி செய்ய மூன்று வாரங்கள் ஆகும் என்பதினால் நாங்களும் மூன்று வாரம் வெளியில் எவருடனாவதுதான் இருக்க வேண்டிய நிலைமை ஆயிற்று . எங்கள் வீட்டு சீரமைப்புக்கு இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தந்தது. ஆகவே அந்த பணத்தில் தீயினால் ஏற்பட்டு இருந்த சேதங்களை சரியாக்கினோம் . நான் பாபாவை என்னேரமும் வேண்டிக்கொண்டே இருந்தேன். அப்போது சாயி பாபா பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் ஒரு பக்கத்தில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ' இனி நீ உன் வீட்டுக்கு தைரியமாகப் போகலாம். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன். என் மீது நம்பிக்கை வை. நானே உன் பாதுகாவலன்' . வீடு பற்றி எரிந்த போது எடுத்த படங்களை கீழே கொடுத்துள்ளேன். பாபா எங்களை பாதுகாப்பதாகக் கூறினார். பாதுகாக்கவும் செய்தார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் அல்லவா.
(Translated into Tamil by Santhipriya)




Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.