Tuesday, June 1, 2010

Sai came in black form in my home-Experience By Ashalatha.

இன்று நான் சகோதரி ஆஷா லதா எழுதி உள்ள இன்னொரு அனுபவத்தை பிரசுரிகின்றேன்.
மனிஷா

ஆஷா லதாவின் அனுபவம்
நான் சாயி இந்த உருவில் என்னுடைய வீட்டுக்கு வருவார் என எதிர்பார்கவில்லை. அந்த கதையை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது இன்று தெரியவில்லை. எனக்கு ஒரு முறை சாயி பாபா ஒரு பெண் உருவில் வந்தார். ஆனால் இந்த முறை அவர் இந்த ரூபத்தில் வர உள்ளது எனக்குத் தெரியாது.

நான் பாபாவை கருப்பு நிறத்தில் பார்க்க எண்ணினேன். அப்போதுதான் ராமராவ் என்பவர் பெங்களூரில் சிவம்மா தாயியின் ஆசிரமத்தில் இருந்த கருப்பு வண்ண பாபாவின் சிலையைப் பற்றி எழுதி இருந்தார். அதன் பின் நாக்பூரில் இருந்து வந்த என்னுடைய இன்னொரு நண்பர் அங்கு உள்ள ஆலயத்தில் பாபாவின் பெரிய அளவிலான சிலை கருப்பு நிறத்தில் உள்ளது எனக் கூறினார்.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தேதியன்று என் தோழியான காவேரி என்பவள் ஒரு புதியதாக திறக்கப்பட்டு உள்ள கடைக்கு சென்று இருந்ததாகவும் அங்கு மூன்று சாயிபாபாவின் அழகான சிலைகள் இருந்தன என்றும் அதில் ஒன்றை எனக்கு வாங்க இருந்ததாகவும் கூறினாள்.
அதைக் கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான விலையை நான் தருவதாகக் கூறினாலும் அவள் அதை வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். அப்போது பேச்சோடு பேச்சாக நான் முன்னர் கருப்பு வண்ண சாயிபாபாவை காண விரும்பிய செய்தியை நினைவில் கொண்டு அதில் ஒரு சிலை மிகவும் கருத்த நிறத்தில் ஆரஞ்சு வண்ண சால்வையை போர்த்தியபடி இருந்ததாகவும், ஆனால் அது கருப்பா என்பது தெரியவில்லை எனவும் கூறினாள்.
அதைக் கேட்ட எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. அவள் மேலும் தான் அதற்கான பணத்தை எடுத்து வைத்துள்ளதாகவும் அன்று மத்தியானம் தன் கணவர் வந்த பின் கடைக்குச் சென்று அதை வாங்கி வருவதாகவும் கூறினாள். ஆனால் அந்த கடையில் மூன்றே மூன்று சிலைகள்தான் இருந்தது எனவும், கூட்டமும் அதிகம் என்றும் கூறினாள். இந்த ஊரிலோ சாயியின் பக்தர்கள் அதிகம் உண்டு. எவராவது அதை வாங்கிப் போய் இருந்தாள் என்ன ஆவது? எனக்கு தவிப்பாக இருந்தது. அன்று மாலை என்னுடைய கணவர் அதே கடைக்கு சென்று இருந்தார். நான் ஒரு கணம் அவரிடம் அதை வாங்கி வருமாறு கூறலாமா என நினைத்தேன். ஆனாலும் மனதில் வேண்டாம் எனத் தோன்றியது விட்டு விட்டேன். இரவு பாபாவுக்கு ஷேஜ் ஆரத்தியை நடத்திவிட்டு உறங்கச் சென்றேன். என் கணவர் இன்னும் வரவில்லை. என் தோழிக்கு தொலைபேசியில் அதை க்கடையில் இருந்து வாங்கி வருமாறு கூறலாமா என நினைத்து அவளுக்கு போன் செய்தேன். அவள் போனை எடுக்கவே இல்லை.

இரவு எவரோ கதவை தட்டினார்கள். என் கணவராக இருக்கும் எனப் போய் கதவை திறந்தேன். என் தோழி எனக்காக சாயி சிலையை வாங்கி வந்து இருந்தாள். என்னுடைய வியப்புக்கு அளவே இல்லை. சாதாரணமாக எவரும் மற்றவர்கள் வீட்டுக்கு அதிக நேரம் கழித்து இரவில் செல்ல மாட்டார்கள். ஆகவே அவள் தான் தாமதமாக அதுவும் சொல்லாமல் வந்ததற்கு மன்னிப்பு கேட்டாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன தெரியுமா? வந்தவள் தன்னுடைய தொலைபேசியை எடுத்து வர மறந்து விட்டாள். எப்படி வெளிக் கதவை திறக்குமாறுக் கூற எனக்கு அங்கிருந்து போன் செய்வது? என்ன செய்வது எனப் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே நல்லவேளையாக இன்னொருவர் வந்து கதவை திறந்தார்.அவளால் உள்ளே வர முடிந்தது.
தூங்கி இருப்பேனோ என பயந்து கொண்டே வந்தவள் என் வீட்டில் விளக்கு ஏறிவதைப் பார்த்து தைரியமாக உள்ளே வந்தாள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த சிலையை வைக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ என்னை அறியாமலேயே கடந்த சில நாட்களாக பூஜை அறையில் சிறு இடத்தை தேவை இல்லாமல் ஒதுக்கி வைத்து இருந்தேன். அந்த சிலையை மார்போடு கட்டி அணைத்தேன். அது போலத்தான் இரண்டு வருடங்களுக்கு முன் சாயி பாபாவின் மிக அழகிய சுவரில் மாட்டும் படத்தை எனக்காக வாங்க சென்ற என் தோழியிடம் பணம் இல்லாமல் திரும்பி வந்தாள். ஒரே ஒரு படம்தான் இருந்தது என அவள் கூறினாள். எனக்கு அந்த கடையில் பொருள் வாங்க உறுப்பினர் கணக்கு இல்லை.
ஆனால் நான் மறுநாள் அங்கு சென்றபோது இரண்டு படங்கள் இருந்தன. அந்த கடைகாரியோ நேற்று ஒரே ஒரு படம் மட்டுமே இருந்தது எனக் கூறியதினல்தான் இன்று அவசரம் அவசரமாக வந்திருந்தேன். சாயி பாபா என்னை அன்றைக்கே அதை வாங்க வேண்டும் என விரும்பி இருந்து இருக்க வேண்டும். அதனால்தான் வந்துள்ளேன் என நினைத்தேன். எனக்கு சாயி உருவில் வந்தாளே ஒரு பெண்மணி ( மாமி) . அவள் கதை என்ன தெரியுமா?

அவள் அமெரிக்காவுக்கு வர மூன்று முறை முயற்சி செய்தும் விசா கிடைக்கவில்லை. கடைசி முறையாக அவளுக்கு சாயியின் அருளினால் விசா கிடைத்தது. அவளுக்கு ஒரு கனவு. சாயிபாபா தனது பிரும்மாண்ட உருவை காட்டியபடி ஆகாயத்தில் தனது இரண்டு கைகளையும் பரப்பி வைத்துக் கொண்டு இருந்தார். அவர் கை நீட்டிய இடத்தில் சூரியனின் ரேகைகள் வரிவரியாக தோன்றின. அவளுக்கு பல ஆலயங்களையும் பிற இடங்களையும் ஆகாயத்தில் காட்டினார். அந்த கனவுக்கு என்ன பொருள்? தெரியவில்லை. அமெரிக்காவுக்கு வந்தவளுடைய மூன்று மகள்கள், மகன், அவர்களுடைய பிள்ளைகள் (பேரன்) என அனைவரும் ஒவ்வொரு ஊரில் இருந்தனர்.

அவள் அங்கு இருந்த போது அனைவர் வீட்டுக்கும் செல்ல வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பல ஆலயங்களையும், தான் கனவில் கண்ட அத்தனை இடங்களையும் சுற்றிப் பார்த்தாள். மீனாட்ஷி அம்மன் ஆலயத்தில் இருந்து வெளியே வந்து படியில் இறங்கியபோது அவள் கண்களில் விழுந்த சூரிய ஒளி அவள் கனவில் வந்த காட்சியைப் போலவே அப்படியே இருந்ததாம்.

அவள் என் வீட்டுக்கு வந்த போது சாயியின் இல்லத்தில் நுழைவதைப் போல உள்ளது எனக் கூறி என்னை கட்டிக் கொண்டாள். அவள் என் வீட்டுக்கு வந்ததில் எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் அவள்தானே முன்பு ஒரு முறை என் வீட்டுக்கு சாயி உருவில் வந்தவள்.
(Translated into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

1 comments:

Anonymous said...

i would love to read the experiences in english as i don't understand tamil.What i need to do?
You have a wonderful blog spreading the fame of Our SAI.Keep up the good work.

sharada

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.