Wednesday, July 14, 2010

Birth and Growth of All India Sai Samaj details-Tamil.

அகில இந்திய சாயி சமாஜத்தின் தோன்றமும் அதன் வளர்ச்சியும்
கட்டுரை எழுதியது : சாந்திப்பிரியா

சாயி பாபாவின் அருளைப் பெற்று திரும்பிய நரஸிம்ம ஸ்வாமிஜி , சாயி குறித்து அனைவரும் அறிந்திடவேண்டும் என்ற தீர்மானத்துடன் 1941 ஆம் ஆண்டில் அகில இந்திய சாயி சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார். அதை 1956 ஆம் ஆண்டில் சொசைடிஸ் ஆக்ட் ( சங்கங்களின் பதிவு சட்டம் ) என்பதின் கீழ் பதிவு செய்தார் . அந்த சாமாஜத்தின் முக்கிய குறிகோள் என்ன என்பதை இப்படி கூறி இருந்தனர்.
(1 ) கடவுள் பக்தியை பெருக்குவது, முக்கியமாக சீரடி சாயி பாபா பக்தியை பெருக்குவது
(2) மேற்கண்ட முயற்சிக்கு தேவையான பிரசாரதுண்டுகள் , நூல்கள், பத்திரிகைகள் வெளியிடுவது
(3) சாயிபாபா பற்றிய சொற்பொழிவுகள் , சாயிபாபாவுக்கு ஆரத்தி முதலியன செய்வது.
(4)அந்த சாமஜத்தின் உறுப்பினராக எந்த வயதானவர்களுக்கும் உரிமை உண்டு.
(5) எந்த மதத்தினரும், இந்துவோ, முஸ்லிமோ, பார்சியோ அல்லது கிருஸ்துவரோ, அனைவரும் அதில் உறுப்பினராகலாம்.
சீரடியில் இருந்து திரும்பிய ஸ்வாமிஜி சாயிநாதருடைய பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியின் முதல் கட்டமாக சாயி சுதா என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதன் பின்னரே அகில இந்திய சாயி சமாஜத்தை துவக்கினார். ஸ்வாமிஜி அற்புதமான பேச்சாற்றல் ஆற்றல் கொண்டவர் , நன்கு பேசி , உண்மைகளை எடுத்துரைத்து கூடி உள்ள கூட்டத்தினரை கவரும் தன்மை கொண்டவர் . சாயி சுதா பத்திரிகை நல்ல வரவேற்பு பெற்றது , மக்கள் அதை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர் . அவர் எழுதிய தலையங்கம் , கட்டுரைகள் , கருத்துக்கள் என அனைத்தும் சாயி மீதான பக்தியை வெளிப்படுத்தி மக்களை அவர் பால் இழுத்தது . முதல் வருடம் முழுவதும் அவருடைய பேச்சுகள் , எழுத்துக்கள் மற்றும் பிரயாணங்களை பற்றியே அதில் நிறையச் செய்திகள் இருந்தன. 1940 முதல் 1950 ஆம் ஆண்டு வரை அவர் விதைத்த விடை ஆலமரமாகி , ஆயிரக்கணக்கான வேர்களுடன் கூடிய மரம் போல வளர , வடக்கு , தெற்கு , கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து திசைகளிலும் சாயி மண்டலி , சாயி பஜனை கூட்டம் , சாயி நூலகங்கள் , போதனைகள் என சாயி புகழ் பரவியது . இன்றைக்கு ஒவோருவர் வீட்டிலும் சாயி படம் உள்ளது என்றல் , சாயி பக்தர்கள் உள்ளனர் என்றால் அதற்குக் காரணம் நரசிம்மஸ்வாமியின் அயராத உழைப்பே தவிர வேறு எதுவுமே இல்லை . ஸ்வாமிகள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள், தாலுக்காக்கள் என இடம் இடமாகச் சென்று , சொற்பொழிவு ஆற்றியும் , பஜனைகளை நடத்தியும் , பலரது இல்லங்களில் தானே சென்று சாயி பூஜை நடத்தியும் பிரசாரம் செய்தார் . அவர் சென்ற இடங்களில் முக்கியமானவை மதுரை , காஞ்சிபுரம் , வந்தவாசி , வேலூர் , கும்பகோணம் , தஞ்சாவூர் , திருச்சி ,புதுக்கோட்டை மற்றும் கோயம்பத்தூர் போன்றவை உண்டு . அதன் பின் ஸ்வாமிகள் கூடூர் , நெல்லூர் , சிராலா , குண்டூர் , விஜயவாடா , விசாகப்பட்டினம், செகாந்திராபாத் , ஹைதிராபாத் , ராமச்சந்திரபுரம் போன்ற இடங்களுக்கும் சென்று அந்த இடங்களில் எல்லாம் சாயி அலையையே உருவாக்கி ஒவ்வொரு ஊரிலும் , தாலுக்காவிலும் சாயி மன்றமும் , சாயி சங்கமும் நிறுவ வழி வகுத்தார் . அது போலவே கர்நாடகாவில் பெங்களுரு , ஹுப்ளி , மைசூர் , ஷிமகோடா, அர்சிகேரே போன்ற இடங்களுக்கும் சென்று அங்கும் சாயி மன்றமும் , சாயி சங்கமும் நிறுவ வழி வகுத்தார் . கேரளாவில் பாலக்காடு , கோழிக்கோடு , காலிகட் , திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்து மன்றங்களும் , சாயி கூடங்களும் அமைய ஏற்பாடு செய்தார் .
தெனிந்தியாவில் தனது பணியை முடித்துக் கொண்ட பின் அவர் வடக்கு நோக்கி பயணம் செய்தார். பூனா, பாம்பே, இந்தூர், அலகாபாத், கல்கத்தா , பரோடா போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்றவர் தமது சொற்பொழிவினாலும் , எழுத்துக்களினாலும் பல பக்தர்களை சாயியின்பால் இழுத்தார் . ஸ்வாமிகள் முதலில் ரமண மகரிஷி பற்றி எழுதியதினால் மேல் நாடுகளில் இருந்து ரமணருக்கு பல சிஷ்யர்கள் வந்தனர். அதே சமயம் நரஸிம்ம ஸ்வாமிஜியின் மேல் ஈடுபாடு கொண்ட பல முக்கியமானவர்கள் சாயி பிரசார வேலையில் அவருடன் தம்மை இணைத்துக் கொண்டனர். அதில் ஒ. கே.வராத ராவ், வீ .வேங்கடராம அய்யர் ,பாரிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, குப்புசுவாமி அய்யர், கோதண்டராம செட்டி, ராதாகிருஷ்ண ஸ்வாமி , துர்கையா நாயுடு, வரதப்பா செட்டி போன்றோர் அடக்கம். ஸ்வாமி கேசவையகாரு என்பவர் ஷெனாய் நகர் என்ற இடத்தில் செய்து வந்த பூஜைக்கு நிறைய பேர் வந்தனர். அவர் அந்த பூஜை முடிந்ததும் வரும் அனைவருக்கும் பாபாவின் வீபுதியான உடியைக் கொடுப்பதுண்டு. அது மட்டும் அல்ல அவர் பிரசங்கமும் செயவதுண்டு. ஒருமுறை கோயம்பத்தூரில் பாபா மறைந்தபின் அவர் நாகப் பாம்பு உருவில் வந்தார் என்ற நம்பிக்கை பரவ அந்த ஊரில் நாக சாயி ஆலயம் எழுப்பப்பட்டது .

௧௯௪௧ ஆம் ஆண்டில் அகில இந்திய சாயி சமாஜம் உருவாக்கப்பட்டது. முதலில் திருவிளக்கேணி என்ற இடத்தில் வேங்கடசால முதலி தெருவு என்ற இடத்தில் வாடகை வீட்டில் அது துவக்கப்பட்டது. அதன் பின் 1942 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் பதிமூன்றம் தேதியன்று சென்னையிலேயே இருந்த டி .எஸ். வீ . கோயில் தெரு என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் அது மாற்றப்பட்டது. அந்த வீட்டில் ஒரு எலி செத்து விட எவருமே வாடகைக்கு கிடைக்கவில்லை என்பதினால் சாயி சமாஜத்திற்கு அதை வாடகைக்கு கொடுத்தனர். ஆனால் ஸ்வாமிஜிக்கு அது பற்றிய கவலை இல்லை. தீயவைகளை சாயி அழித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததினால் அதை வாடகைக்கு எடுத்து அதை அகில இந்திய சாயி பிரசாரத்திற்கு பயன் படுத்தினார். என்ன அதிஷ்டம் அந்த வீட்டுக்காரருக்கு, பின்னர் அந்த வீடு நல்ல விலைக்கு விற்பனை ஆயிற்று. அதனால் அந்த இடத்தை ஸ்வாமிஜி காலி பண்ண வேண்டி வந்தது. 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தற்பொழுது ராமகிருஷ்ணா சாலை என அழைக்கப்படும் இடத்தில் இருந்த ப்ராடீஸ் தெருவில், சாயி மன்றம் மாறியது. ஆனால் அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு சில வருடங்களிலேயே அந்த வீடு தேவைப்பட்டதினால் அதையும் காலி செய்து கொண்டு தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் உள்ள வெங்கடேச அக்ரகாரம் என்ற தெருவில் இருந்த தியாகராஜா அய்யரின் வீட்டில் 1949 ஆம் ஆண்டு அது மாற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டு டாக்டர் ராமமூர்த்தி என்பவர் சாயியின் வாழ்க்கை என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அவர் உருவத்தில் சாயிபாபா போலவே தோற்றம் தந்ததினால் வந்தவர்களில் பலர் அவரை சாயிபாபா என நினைத்து அவருக்கு ஆரத்தி காட்டி வணங்கினர். பலர் நாடக முடிவில் பாபா சமாதி அடைந்த காட்சியைக் கண்டு மயங்கி விழுந்தனர். ஸ்வாமிஜி அவரை பெரிதும் பாராட்டினார். அந்த டாக்டர் சாயிபாபாவின் தீவீர பக்தர் ஆவார். பக்தர்களுடைய காணிக்கைகளினாலும் , நண்பர்களின் உதவியுடனும், 1952 ஆம் ஆண்டில் தற்பொழுது ஆலயம் உள்ள இடம் வாங்கப்பட்டது. அதில் அவருக்கு உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள், ஜே .டி பன்னலால், எம்.டி.கிருஷ்ணமூர்த்தி மற்றும வீ. கே. பந்துலு போன்றவர்களைக் கூறலாம். 1952 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று அதாவது 07.07.1952 அன்று அந்த இடத்தில் சாயி சமாஜம் அமைக்கப்பட்டு அங்கு அலுவலகம் தோன்றியது. 1952 முதல் 1960 ஆம் ஆண்டு வரை அகில இந்திய சாயி சமாஜம் மெல்ல மெல்ல வளர்ந்தது. தாமரைப்பாக்கம் அருணாச்சல சாஸ்த்ரிகள் என்பவர் தலைமையில் 19 .10.1953 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேக வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1953 ஆம் ஆண்டு ஆலயப் பணிகள் நடந்து கொண்டு இருந்தபொழுது கர்பக்ரஹம் மற்றும் கோபுரம் மட்டுமே கட்டத் தேவையான பணம் இருந்தது. ஆனாலும் எந்த வகைகளிலோ பணம் வந்து கொண்டே இருந்தது. ஆலயம் எழுந்தது. அந்த ஆலயம் இருந்த இடத்தின் ஒரு மூலை பகுதியிலேதான் நரசிம்மஸ்வாமிஜி அவர்கள் ஒரு குடிசை போன்ற கொட்டகையில் வாழ்ந்து கொண்டு இருந்தார். பாம்பும் , கீரியும் சுற்றித் திரிந்த இடங்கள் அவை. நாய், பூனை என அனைத்தும் அந்த கொட்டகையை சுற்றி சுற்றி வந்தன. இது எதற்காக கூறப்படுகின்றது என்றால் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி அங்கு சுவாமிகள் இருந்து வந்தார். அவருக்குத் துணை சாயிநாதர் மட்டுமே. ஸ்வாமிஜியின் எண்ணம் எல்லாம் அங்கு ஆலயத்தைத் தவிர ஏழைகளுக்கு இலவச மருத்துவமனை கட்ட வேண்டும், படிப்பறிவு தர பாடசாலை கட்டவேண்டும் என்பதே. 1953 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் முடிந்த சில மாதங்களில் நரசிம்மஸ்வாமிகள் ஒரு விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேரவேண்டி வந்து விட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவ மனையில் இருந்தாலும் அங்கும் தன்னுடைய கடமையை செய்தபடிதான் இருந்தார். பல புத்தகங்கள் எழுதினார். முதல் இருபது ஆண்டுகளில் சாயி பாபா பற்றிய அறிமுகம், சாயி பாபா யார், பூஜா விதி, பக்தர்களின் அனுபவங்கள், சாயி ஸஹஸ்ரநாமவளி போன்ற புத்தகங்கள் வெளியாயின. விதி வேலை செய்தது. 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் தேதியன்று நரஸிம்ஹ ஸ்வாமிகள் சாயியிடம் கலந்து விட்டார். அவர் சமாதி அடைந்தாலும் அவர் துவங்கி வைத்திருந்த வேலைகள் தொடர்ந்தன.

ஜெ. டி. பன்னாலால் என்பவர் பொருளாளராக பதவி ஏற்றார். நரசிம்மஸ்வாமிகள் தான் மரணம் அடையும் முன்னரே தன்னுடைய வாரிசாக அகில இந்திய சாயி சமாஜத்திற்கு டி. பீமாராவ் என்பவரை நியமித்து விட்டார். நரசிம்ம ஸ்வாமிகள் மறைந்தபின் அவரை மயிலாப்பூர் சுடுகாட்டில் தகனம் செய்தனர். அவர் மறைந்ததும் 1961 முதல் 1970 ஆம் ஆண்டு வரை திரு பீமாராவ் அவர்கள் சாயீ சமாஜ் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்தார். 1952 ஆம் ஆண்டு சாய் சமாஜ நடவடிக்கைகள் விரிவு அ டைந்து கொண்டு இருந்த பொழுது, பெங்களூரில் ஒரு கிளையை அமைக்க விரும்பிய நரஸிம்ஹஸ்வாமி அவர்கள் ராமகிருஷ்ண ஸ்வாமிஜி என்பவரை அங்கு அனுப்பி இருந்தார்।அது மட்டும் அல்ல அவருக்கு சாயிபதானந்தா என்ற பட்டத்தையும் வழங்கி இருந்தார். நரசிம்மஸ்வாமி பிரசாரம் செய்யச் சென்ற இடங்களுக்கு எல்லாம் ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியும் சென்று அவருக்கு உதவியாக இருந்தார். நரசிம்ம ஸ்வாமிகள் மறைந்த பிறகு சாயி சமாஜத்தை பீமராவும் பந்துலு என்பவர்களும் திறமையாக கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் பீமாராவ் உடல் நலமற்று படுத்த படுக்கையாக கிடந்தவுடன் அந்த நிர்வாகத்தை ராமகிருஷ்ண ஸ்வாமிஜி ஏற்க வேண்டி இருந்தது. அந்த பொறுப்பை அவர் ஏற்றதும் சென்னை மற்றும் பெங்களூர் கிளைகளை ஒன்றாக சாயி பிரசார வேலையில் இணைந்து செயல்பட வைத்து 1963 முதல் 1980 ஆம் ஆண்டுவரை அகில இந்திய சாயி சமாஜத்தின் வேலையை தாமே நிர்வாகித்து வந்தார்.

சாயிசுதா பத்திரிகையை நல்ல முறையில் நடத்தி நரசிம்ம ஸ்வாமி பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார். 1965 ஆம் ஆண்டில் சாயிசுதாவின் வெள்ளி விழாவை நடத்தி அகில இந்திய சாயி பக்தர்கள் கூட்டத்தையும் கூட்டினார். அது மட்டும் அல்ல அவருடைய தலைமயில் சாய் சமாஜம் இருந்தபொழுது சாயி பாபாவின் மஹா சமாதியின் தங்க விழாவையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். ஆனால் பேரிடியாக 1962 ஆம் ஆண்டில் திரு பந்துலுவும் நரசிம்ம ஸ்வாமியின் பாதத்தில் கலந்துவிட அது ஒரு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஏன் எனில் பந்துலு அவர்கள் நரசிம்ம ஸ்வாமி விட்டுப் போய் இருந்த அனைத்து காரியங்களையும் ஒரு உண்மையான ராணுவ வீரர் போல தொய்வு இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருந்தார். அதுவரை உதவி பிரசிடென்ட் பதவியில் இருந்த பீ. கோபாலசுவாமி என்பவர் நிர்வாகியாக பொறுப்பேற்றார்.
தான் மறையும் முன்னர் டாக்டர் மகாதேவன் என்ற மருத்துவரை நியமித்து சிறிய இலவச மருத்துவ மையத்தை சாயி சமாஜம் இருந்த இடத்திலேயே நரசிம்ம ஸ்வாமி அவர்கள் துவக்கி இருந்தார். தினமும் சுமார் 30 முதல் 40 நோயாளிகள் வரை அதில் வைத்தியம் பெற்றுச் சென்று வந்தனர். அது மட்டும் அல்ல ஹோமியோபதி சிகிட்சையும் ஆரன்பிக்கப் பட்டது. திரு பந்துலு அவர்களின் நினைவாக 1962 ஆம் ஆண்டில் அந்த மையத்தில் பல் வலி சிகிட்சை பிரிவும் அமைந்தது. அந்த வளாகத்துக்கு உள்ளேயே இலவச நூலகமும் அமைய 1965 ஆம் ஆண்டு ஸ்ரீ. சேஷாத்ரி என்பவர் செச்ரடரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு பாபாவின் நெருங்கிய பக்தரான ஸ்ரீ எம். பீ .

ரிகே என்பவருடைய ஆலோசனைகளும் தொடர்ந்து கிடைக்கலாயின. முதலில் சமாஜத்தின் மேல் கூரை துத்தநாகத் (ஜின்க்) தகடுகளினால் மூடப்பட்டு இருந்தது. அதை முழுவதும் சிமென்ட் கூரையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து முடிந்ததும் புதுக்கோட்டையை சேர்ந்த திரு. பாகவதச்வாமி என்பவர் அதை திறந்து வைத்தார். அடுத்த பத்து ஆண்டுகளிலேயே அங்கு சாயி வித்யாலய என்ற பெயரில் பாடசாலையும் துவக்கப் பட்டது. 1971 ஆம் ஆண்டு வரை திரு. எம். பீ . ரிகே அவர்களின் ஆலோசனைகள் தொடர்ந்து கிடைத்தன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். பாபாவின் பொன்விழா ஆண்டான 1968ல் பாகவத சம்மேளன் என்ற உற்சவம் நடைபெற்றது. திரு ஹரிதாஸ் கிரி, புருஷோத்தம கோஸ்வாமி போன்றோர் நிகழ்ச்சிகள் நடத்தினர். பிருந்தாவனை சேர்ந்த திரு ஹரிகோவிந்தஜி என்பவர் சைதன்யா மகாபிரபு லீலா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண லீலா என்ற நிகழ்ச்சியை சிறுவர்கள் மூலம் நடத்திக் காட்டினார். தினமும் நாம சங்கீர்த்தனம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு சாயி சமாஜத்தின் வெள்ளி விழா ஆண்டில் சாயி பாபாவின் கோடி அர்ச்சனை நடந்தது. பாபாவின் பெயரை ஒரு கோடி முறை ஜபிக்க வேண்டும். அது 1966 ஆம் ஆண்டு முடிந்தது. ஆனால் மீண்டும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அடுத்த இரு ஆண்டுகளில் வர இருந்த சாயி பாபாவின் 50 ஆவது சமாதி வைபவத்தை முன்னிட்டு, 1966 ஆம் ஆண்டு முதல் மீண்டும் கோடி அர்ச்சனை துவக்கப்பட்டு 1968 ஆண்டில் அது முடிந்தது. அடுத்த பத்து ஆண்டுகள் மீண்டும் சோதனை. திரு ரெகே அவர்களும் பாபாவின் திருவடியில் சரண் அடைந்தார். திரு கோபலகிருஷ்ண பாகவதஸ்வாமியும் நாராயண கதி அடைந்தார். 1980 ஆம் ஆண்டு சாயிபதானந்த ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியும் சாயி சமாஜத்தின் ஆணி வேர்களாக இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள் . அவர்கள் எடுத்துக் கொண்ட பணியை வேறு என்ன என்று சொல்ல முடியும் ?

அதற்கு முன் 1970 ஆம் ஆண்டு சாயி சமாஜ பொறுப்பை திரு நடேசன் அவர்கள் ஏற்றுக் கொண்ட பொழுதுதான் சாயிபாபாவின் முக்கிய கட்ட வாழ்வை விளக்கும் பெரிய பெரிய சித்திரங்களை மண்டபத்தின் சுவர்களில் ஓவியமாக வரைய வைத்தார். பஜனைகளும், நாம சங்கீர்த்தனைகளும் மீண்டும் முழு வேகத்தில் நடக்கத் துவங்கின. திரு நடேசன் அவர்கள் மறைவுக்குப் பின் திரு விஸ்வநாதன் என்பவர் சமாஜத்தின் பொறுப்பேற்றார். அவருடைய காலத்தில்தான் சாயிபாபாவின் இரண்டு வருடாந்திரக் கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. அந்த கட்டத்தில்தான் சாயிபாபாவின் பாதுகைகள் சீரடியில் இருந்து நெல்லூர் வழியே சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதை பலரும் வந்து வணங்கி ஆசி பெற்றனர் என்பது மிகவும் முக்கிய நிகழ்ச்சியாகும் .1980 ஆம் ஆண்டில் சாயிபதானந்த ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி மறைந்த பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்பதில் ஐயம் இல்லை. 1990 ஆம் ஆண்டில் திரு எம் . வாசுதேவன் என்பவர் செகரடேரியாகவும், திரு ஆர். எஸ் .

ராமகிருஷ்ணர் என்பவர் ப்ரெசிடென்ட் ஆகவும் பொறுப்பு ஏற்றனர். அவர்களைத் தவிர திரு கருணாகரன் மற்றும் திரு ராமசுவாமி என்பவர்களுடன் பிற கமிட்டி உறுப்பினர்களும் திறன்பட சாமாஜத்தை நடத்தத் துவங்கினார். 1952 ஆம் ஆண்டில் திரு ராதா கிருஷ்ணச்வாமிஜியை பெங்களுருக்கு அனுப்பிய பொழுது அது அவருக்கு மன வருத்தத்தைத் தந்தது. ஆனால் அவரை அனுப்பாமல் இருந்திருந்தால் இன்றைக்கு அங்கு ஆலமரமாய் அமைந்து உள்ள அகில இந்திய சாயி சமாஜக் கிளை வளர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே. அவர் பெங்களுருக்கு வந்தபின் அந்த சாயி சமாஜத்தில் நடைபெற்ற சில முக்கியமான சம்பவங்கள் இவை.
(1) 1952 ஆம் ஆண்டில் திரு ராதா கிருஷ்ணச்வாமிஜி பெங்களுருக்கு வந்தார். 1954 ஆம் ஆண்டில் ஸ்ரீ சாயி ஆன்மீய மையம் துவக்கப்பட்டது.

(2) 1962 ஆம் ஆண்டில் தற்போது சாயி மையம் உள்ள இடத்தை ஸ்ரீ டோம்லூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தானமாகத் தந்தார்

(3) 1965 ஆம் ஆண்டு ஜூன் பதினேழாம் தேதியன்று அங்கு கட்டப்பட்ட கட்டிடத்தை திரு ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி திறந்து வைத்தார்.

(4) 1967 ஆம் ஆண்டு திரு துரைசுவாமி என்ற பக்தர் தந்த சாயி பாபாவின் முழு உருவ கலர் படத்தை திருமதி சரஸ்வதி பாய் கிரி என்பவர் அன்றைய ஆளுநராக இருந்த திரு வீ.வீ. கிரி என்பவர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

(5) 1972 ஆம் ஆண்டில் ஹர்ஷத் படேல் என்பவர் தந்த சலவைக்கல்லில் செய்த கிருஷ்ணர் சிலையை திரு ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி பிரதிஷ்டை செய்தார்.

(6) 1978 ஆம் ஆண்டில் சாயினாதரின் அறுபதாவது சமாதி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் சலவைக்கல்லினால் செய்த சாயிநாதரின் முழு உருவச் சிலையை பிரதிஷ்டை செய்தனர். அதே ஆண்டு திரு நாராயண மூர்த்தி என்பவர் கன்னடத்தில் மொழி பெயர்த்த 'சாயிநாதர் உதிர்த்த முத்துக்கள்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

(7) 1980 ஆம் ஆண்டில் சாயிபாதனந்தா திரு ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி மகாசமாதி அடைந்தார்

(8) 1981 ஆம் ஆண்டில் சலவைக்கல்லில் செய்த திரு ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

(9) 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நரசிம்ம ஸ்வாமி பற்றியும் ராதா கிருஷ்ணச்வாமிஜியின் பொன்மொழிகளும் போன்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

(10) 1985 ஆம் ஆண்டு புது தியான மண்டபமும் திறக்கப்பட்டு மகாகும்பகாபிஷேகம் நடைபெற்றது.

(11) 1987 ஆம் ஆண்டில் சாயிபாதனந்தா என்ற பத்திரிகை துவக்கப்பட்டது.

(12) 1993 ஆம் ஆண்டில் நரசிம்ம ஸ்வாமி அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது

(13) 1997 ஆம் ஆண்டில் சாயி ஆன்மீக மையத்தை டிரஸ்ட் என பதிவு செய்தனர்

(14) 2003 ஆம் ஆண்டில் ராசபயான சுவாமிஜியின் பொன் விழா கொண்டாடப்பட்டது.

2002 ஆம் ஆண்டில் துவங்கி 2003 ஆம் ஆண்டு பாபாவின் மகாசமாதி தினத்துக்கு முன் நூறுகோடி சாயி நாம ஜபம் செய்து முடிக்க சேலத்தில் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை சென்னையில் ஆல் இந்திய சாயி சமாஜத்தின் முன்னாள் பிரசிடெண்டாக இருந்த சங்கரையாகாரு என்பவர் துவக்கினார். அதுபோல கேரளாவில் இருந்த ஆனந்தாஷ்ரம் என்ற ஆசிரமத்தில் 15500 கோடி சாயி ஜபம் செய்ய வேண்டும் என ஏற்பாடு ஆகி 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 5815 கோடி 'ஓம் ஸ்ரீராம் , ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெயராம் ' என்ற ஜபம் செய்யப்பட்டு முடிந்து இருந்ததாக தெரிய வருகின்றது.

அகில இந்திய சாயி சமாஜத்தின் தற்பொழுதைய வேலைகளாக கீழ் கண்டவை நடை பெறுகின்றன
1 )மருத்துவ சேவை
2) பல்வேறு பள்ளிகளிலும், பல்கலை கழகங்களிலும் சாயி பக்தி மார்கமும், நரஸிம்ஹஸ்வாமியின் பங்கும் என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடை பெறுகின்றன
4) ஆன்மீக சொற்பொழிவுகள்
5) சமூகத்தில் உள்ள நலிவுற்ற மக்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தல்.
6) தினமும் அன்னதானம்
7) சாயி பாடசாலை
8) ஸ்தாபகர் தினத்தன்று இலவச வேட்டிகள், சட்டைகளை தானம் செய்வது
9) சாயிசுதா என்ற மாதப் பத்திரிகை வெளியிடுவது
10) பொது நூலகம்
11) சாயிநாதருடைய புத்தக நூலகம் போன்ற சேவைகள் அடங்கும்.

இன்று அகில இந்திய சாயி சமாஜத்தை சென்னையில் திரு பாலசுந்தரம், திரு. தங்கராஜ், திரு செல்வராஜ், திரு போகிந்திரன், திரு காமாக்ஷி வரதராஜன், அண்ணாதுரை மற்றும் ஹரிஷ் போன்றவர்கள் திறமையாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சாமஜம் பல நற்பணிகளை, நரஸிம்ஹஸ்வாமிஜி விட்டுச் சென்ற பணிகளை , அவருடைய கனவுகளை உண்மையான காட்சிகளாக மாற்றிக் கொண்டு உள்ளனர்.

அதுபோலவே பெங்களூர் கிளையில் திரு சேஷாத்ரி அவர்கள் தலைமையில் திரு ராகவன், திரு கோபிநாத், திரு ஸ்யாமராவ் , திரு சந்திரசேகரன் போன்றவர்கள் நரசிம்ம ஸ்வாமி நினைவு அகலாமல் இருக்கும் அளவில் சாயி சமாஜத்தை , சாயி ஆலயத்துள் வளர்த்து வருகிறார்கள். ஹைதிராபாத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயி விரதங்கள் நடந்துள்ளன. "ஸ்ரீ சாயி கோடி நாம லிகித மஹா யக்னா " என்ற யாகம், அதாவது ஸ்ரீ சாயி நமஹ என எழுதப் பட்ட இரண்டு கோடி நாமங்கள் எழுதப்பட்ட புத்தகங்கள் யாகம் செய்யப் பட்டு அங்குள்ள ஸ்தூபிகளில் புதைக்கப்படுகின்றனவாம்.
அகில இந்திய சாயி சமாஜ பக்தர்கள் மகாநாடு -----1946 -1987
1946 ஆம் அண்டு முதல் 1987 ஆம் ஆண்டுவரை அகில இந்திய சாயி சமாஜ பக்தர்கள் மகாநாடு பல்வேறு இடங்களில் நடைபெற்றன.
அவற்றில் முக்கியமானவை கீழே தரப்பட்டு உள்ளது.
1) சென்னை : 1946 ஆம் ஆண்டு நரஸிம்ஹஸ்வாமிஜின் தலைமையில் சென்னை கிளையின் சார்பில் நடைபெற்றது.
2) கோயம்பத்தூர் : 1946 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி ஆசிர்வதிக்க தாஸ் கனு மகாராஜ் தலைமையில் நாக சாயி ஆலய சார்பில் நடைபெற்றது.
3) மதுரை : 1949 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி தலைமையில் ஸ்ரீ சாயி சாமஜ சார்பில் நடைபெற்றது.
4) கல்கத்தா : 1950 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி தலைமையில் ஸ்ரீ சாயி சாமஜ சார்பில் நடைபெற்றது.
5) தார்வார் : 1951 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி தலைமையில் சென்னை கிளை மற்றும் தார்வார், ஹுப்ளியை சேர்ந்த பல பக்தர்கள் சார்பில் நடைபெற்றது.
6) தார்வார் : 1952 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி தலைமையில் சாயி தாச மண்டல் சார்பில் நடைபெற்றது.
6) தார்வார் : 1952 ஆம் ஆண்டு நரசிம்ம ஸ்வாமி தலைமையில் சாயி தாச மண்டல் சார்பில் நடைபெற்றது.
7) பரோடா : 1955ஆம் ஆண்டு பரோடா மகாராஜாவாக இருந்த பாதேசிங்க் தலைமையில் சாயி நாத பக்த மண்டல் சார்பில் நடைபெற்றது.
8) கோயம்பத்தூர் : 1963 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் நாக சாயி ஆலய சார்பில் நடைபெற்றது.
8) சென்னை : 1965 ஆம் ஆண்டு ஸ்ரீ பீமராவ் தலைமையில் அகில இந்திய சாயி சமாஜ் சென்னை கிளை சார்பில் நடைபெற்றது.
9) மதுரை : 1966 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் சாயி சமாஜ் மதுரை சார்பில் நடைபெற்றது.
10) பெங்களூர் : 1967 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் சாயி சமாஜ் , இப்ராகிம் சாஹிப் தெரு பெங்களூர் சார்பில் நடைபெற்றது.
11) சென்னை : 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் அகில இந்திய சாயி சமாஜ் சென்னை கிளை சார்பில் நடைபெற்றது.
12) நெல்லூர் : 1970 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் ஸ்ரீ சாயி பக்த மண்டல், நெல்லூர் சார்பில் நடைபெற்றது.
13) சென்னை : 1974 ஆம் ஆண்டு ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி பிறந்த நாள் விழாவாக ஏழு நாட்கள் பஜனை, சொற்பொழிவுகளுடன் அகில இந்திய சாயி சமாஜ் சென்னை கிளை சார்பில் நடைபெற்றது.
14) செகந்திராபாத் : 1975 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் சாய் சமாஜ், பிக்கெட், செகந்திராபாத் சார்பில் நடைபெற்றது.
15) பூனா : 1978 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி தலைமையில் சாய் தாச மண்டல் சார்பில் நடைபெற்றது.
16) நாக்பூர் : 1979 ஆம் ஆண்டு ஸ்ரீ நாயிடுகாரு தலைமையில் ஸ்ரீ சாய் சமாஜ் பக்த சமாஜ் சார்பில் நடைபெற்றது.
17) நெல்லூர் : 1983 ஆம் ஆண்டு ஆர் . என். ரெட்டி தலைமையில் ஸ்ரீ சாய் பக்த மண்டலி சார்பில் நடைபெற்றது.
17) கல்கத்தா : 1984 ஆம் ஆண்டு ஸ்ரீமதி ராஜகுமாரி பிரபாதேவி தலைமையில் ஸ்ரீரடி பாபா மந்திர் சொசைட்டி சார்பில் நடைபெற்றது.
18) சென்னை : 1987 ஆம் ஆண்டு ஸ்ரீமதி இந்திரா கேர் தலைமையில் அகில இந்திய சாயி சமாஜ் சென்னை கிளை சார்பில் நடைபெற்றது.
19) கர்வால் : 1987 ஆம் ஆண்டு ஸ்ரீ. எம். ரங்காச்சாரி மற்றும் ஸ்ரீ. டி. கேசவராவ் தலைமையில் சாயி சுதா டிரஸ்ட், கௌசாலி, ஹிமாசல பிரதேசம் சார்பில் நடைபெற்றது.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.