Wednesday, August 11, 2010

Devotee In Contact With Baba-Keshava Gawankar.

அன்பானவர்களே, இன்று பாபாவின் தினம். நான் ஒருவரைப் பற்றி எழுத நினைத்தும் பாபாவின் அனுமதி கிடைக்காததினால் இன்றுவரை எழுத முடியாமல் போய் விட்டது. இன்று பாபாவுடன் மிக நெருக்கமாக இருந்த கேசவ கவாங்கர் என்பவரது அனுபவத்தை எழுதுகிறேன். அவர் தன்னுடைய பெற்றோர்களுடன் மும்பையில் வசித்து வந்தவர்.
மனிஷா

அவருக்கு அப்போது ஏழு வயது. ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து நிற்காமல் இருந்தது. என்ன மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. மார்பில் கடுமையான சளி இருந்தது. கவாங்கருடைய வீட்டுக்கு அருகில் வழகறிஞ்சரான மற்றொரு கவாங்கர் என்பவர் இருந்தார். அவர் கேசவ கவாங்கருடைய பெற்றோர்களிடம் பாபாவை ஒரு முறை வேண்டிக் கொள்ளுமாறு கூறினார். ஆகவே அந்த வீட்டில் இருந்த அத்தையும் குழந்தை குணம் அடைந்து விட்டால் சீரடிக்கு அழைத்து வருவதாகவும், பேடாவும் (இனிப்பு பண்டம்) கொண்டு வருவதாகவும் வேண்டிக் கொண்டாள். அன்று மாலையில் இருந்தே ஜுரம் குறையத் துவங்கியது. மறுநாள் காலை ஜுரம் குறைந்து விட்டது. மேலும் தொப்பிளுக்கு மேலே, மார்பில் சிறு ஓடைப் போல இருந்தது. அதில் இருந்து சளி வெளியே வந்து கொண்டு இருந்தது. மருத்துவரை உடனே அழைத்தனர். வந்து பார்த்தவர் அதிசயித்தார். இனி ஒன்றும் செய்ய இயலாது என கை விட்டுவிட்ட நோயாளிக்கு எப்படி இந்த மாதிரியாக குணம் அடைய வழி வந்தது? வேறு மருந்து கொடுத்துவிட்டு சென்றார். பையன் பூரண குணம் அடைந்தான்.
கேசவ கவாங்கர்
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. 1918 ஆம் ஆண்டு கேசவாவுக்கு பன்னிரண்டு வயதாயிற்று. அவனுடைய பெற்றோரும் அத்தையும் பீடாவை வங்கிக் கொண்டு சீரடிக்குச் சென்றனர். பாபாவிடம் பேடாவைக் கொடுத்ததும் அவர் அவர்களுக்கு ஆறு பேடாவை மட்டும் கொடுத்துவிட்டு மீதி அத்தனையும் சாப்பிட்டுவிட்டார். அருகில் இருந்த சாமா என்ன பாபா அத்தனையும் சப்பிட்டு விட்டீர்களே எனக் கேட்க பாபா கூறினார், அவர்கள் என்னை ஐந்து வருடங்களாக பட்டினியாக வைத்திருந்தார்களே, அதனால்தான்சப்பிட்டு விட்டேன் என்றார். அதன் பிறகு கேசவை அருகில் அழைத்து முதுகை தடவி விட்டார். இரண்டு அணா தட்சணைக் கேட்டார். கேசவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த சாமா கூறினார், 'சரி நான் தந்துவிட்டேன் பாபா என்று கூறு அது போதும்' என்றார். அவனும் கூற பாபா உடனேயே தன்னுடைய காபினி ஒன்றை அவனுக்கு பரிசாகத் தந்தார். சாமா பாபாவிடம் ' பாபா எவன் சிறுவன். அதை நான் பத்திரமாக வைத்து இருந்து அவன் பெரியவனாக ஆனதும் தருகிறேன் 'என்று கூற பாபா சம்மதித்தார் .
பாபா தந்த காபினி
அனைவரும் நமஸ்கரித்துவிட்டு பாபாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். அப்போது பாபா கேசவை தன் அருகில் இழுத்து தன் பக்கத்தில் அமரச் சொல்லி அவன் கன்னத்தில் தட்டினார். கேசவாவுக்கு மயக்கம் வந்தது. தான் நட்சத்திரக் கூட்டத்தில் மிதப்பதை உணர்ந்தார். அவனுடைய உடம்பு ஆடிக்கொண்டே இருந்தது. அது சில மணி நேரம் நீடித்தது. அதன் பின் பாபா அவன் தலை மயிரை கொத்தாகப் பிடித்து அவனை எழுப்ப தன் நினைவுக்கு வந்தவன் பாபாவை நமஸ்கரித்தான். பாபா அவனுக்கு உடியை அவன் நெற்றியில் தடவி கையிலும் தந்த பின் ''ஜோ பீட்டா அல்லா பலா கரேகா' ' ( போ மகனே, போ , அல்லா உனக்கு நல்லது செய்வார்) என்று கூறி அனுப்பினார்.
அப்போது 1914 ஆம் ஆண்டு பாபாவுக்கு இரண்டு ரூபாயை தட்சிணயாகத் தந்த 'திரியம்பக் விட்டல் குரு' என்பவர் அங்கு வர பாபா அவரிடம் தான் அவரிடம் தன்னுடைய ஒரு மகனை ( கேசவ் ) அனுப்புவதாகக் கூறினார்.
அவருடைய மேற்பார்வையில் கேசவ் ஆன்மீக புத்தகங்கள் போன்றவற்றை படித்தாலும் பல்கலை கழகத்தில் படித்து ஒரு மருத்துவராக மாறி பாபாவின் தீவிரமான பக்தராக மாறினார். ராம நவமி மற்றும் விஜய தசமியை தன்னால் முடிந்த அளவு மும்பையில் விமர்சையாகக் கொண்டாடி அன்னதானங்கள் செய்து வந்தார். 1939 ஆம் ஆண்டு பாபா அவர் கனவில் தோன்றி பிட்சை எடுத்து பாக்கார் செய்து ( ஒரு வகை இனிப்புப் பண்டம் ) தானம் கொடு என்றார்.
இனிப்புப் பண்டம் -பாக்கார்
அவரும் பாபா கூறியபடியே பிட்சை எடுக்க மிக அதிக அளவு பிட்சை கிடைத்தது. அதைக் கொண்டு பாக்கரை செய்து 200 -300 பக்தர்களுக்கு கொடுத்தார். நேவித்தியமாக பாபாவின் படத்தின் முன் வைத்த அந்த இனிப்பு பாகார் சுமார் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆயும் எந்த சேதமும் அடையவில்லை, துர்நாற்றமும் இல்லை, எறும்புகளும் அதை அண்டவில்லை என்பது அதிசயம்.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.