Wednesday, August 4, 2010

Devotee In Contact With Baba- R.B. Purandhare.

அன்பானவர்களே,
பாபா எப்படியெல்லாம் தன் பக்தர்களுக்கு வழி காட்டி உள்ளார் என்பதற்கு உதாரணம் புரந்தரேயின் இந்த அனுபவக் கதை. படியுங்கள்
மனிஷா
ஆர் . பீ . புரந்தரே என்பவரும் பாபாவின் பக்தர் . அவருக்கு பாபா ஒரு போட்டோவைக் கொடுத்திருந்தார். சீரடிக்கு 1909 ஆம் ஆண்டு அவருடைய தாயார் முதன் முதலாகச் சென்று இருந்தபோதே அவளிடம் தனக்கும் புரந்தரேவுக்கும் ஏழு ஜென்மங்களாகத் தொடர்ப்பு இருந்தது எனவும், அவர் எங்கிருந்தாலும் அவரை தான் மறக்க மாட்டேன் எனவும் பாபா கூறினாராம்.

புரந்தரேயிடம் பாபா ஒரு வீட்டைக் கட்டுமாறு கூறினார். ஆனால் எவரிடம் இருந்தும் பணம் பெற்றுக் கொள்ளாதே என்றார். புரந்தரே மாதம் இருபத்தி ஐந்து ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தவர். குடும்பமும் பெரியது. எப்படி வீட்டைக் கட்டுவது?
அவர் பாபாவை எப்போது பார்த்தாலும் பாபா வீடு பற்றிக் கேட்க அவரும் ஒன்றும் ஆகவில்லை என்பார். ஒருமுறை பாபாவுக்கு கோபம் வந்து அவரை அதற்காக கல்லால் அடிக்க, அவர் மீது அனுதாபம் கொண்ட சந்ரோர்கரும் , திகஷித்தும் தாம் அதை கட்டித் தருவதாகக் கூற பாபாவின் கோபம் என்னும் அதிகம் ஆயிற்று.

வேறு வழி இல்லாமல் அலுவலகத்தில் இருந்து கடன் வாங்கி மும்பையில் உள்ள பாந்திராவில் நிலம் வாங்கினார். அந்த நேரத்தில் அது எவரும் அற்ற பாழும் நிலமாக இருந்தது. நான் உன்னையும் உன் மனைவியையும் பாதுகாப்பேன் என பாபா கூறினார். அந்த வீட்டை கட்டி முடிக்க மூன்று மாதங்கள் ஆயின. இன்று அது பல மாடி கட்டிடமாக வளர்ந்து உள்ளது. அதில் புரந்தரேயின் பேரன் வசிக்கின்றார்.

புரந்தரேயின் தற்பொழுதைய வீட்டின் படம்
1909 ஆம் ஆண்டு புரந்தரேயின் மனைவி காலரா நோயினால் தாக்கப்பட்டார் . அவள் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கை விட்டு விட்டனர். கவலையுடன் நின்று கொண்டு இருந்தார் புரந்தரே. அப்போது பக்கத்தில் இருந்த தத்த ஆலயத்தின் ஜன்னலில் பாபா தோன்றி, அவளுக்கு என் உடியையும் தீர்த்தத்தையும் கொடு எனக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.


பாபா காட்சி தந்த தத்த ஆலயம்
புரந்தரே சற்றும் தாமதிக்காமல் தன் மனைவிக்கு பாபாவின் உடியையும் தீர்த்தத்தையும் கொடுக்க அவள் நல்ல குணம் அடைந்தாள் . பாபா அவரிடம் இருந்து இரண்டு ரூபாய் தட்ஷனை பெற்றுக் கொள்வார். இரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்கின்றீர்களே , ஏன் எனக் கேட்டால் பாபா கூறுவார், எனக்கு எத்தனை பணம் என்பது முக்கியமில்லை, அவர்களுடைய பக்தியையும் , சிரத்தையும் மட்டுமே பார்க்கிறேன்' .

புரந்தரேக்கு பாபா தந்த சில (பணம்)
சில சமயத்தில் பாபா புரந்தரேக்கு பணம் தருவார். அதை அவர் பாத்திரமாகப் பாதுகாத்து வந்தார். ஆனால் அவருடைய பேரனுக்கு அதன் அருமை தெரியாமல் அதைக் கொண்டு பொய் கடையில் தந்து பாபாவின் வெள்ளி சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜிக்கலானார்


புரந்தரேயின் வீட்டில் உள்ள பாபாவின் வெள்ளி உருவச் சிலை
பாபா பல பக்தர்களுக்கு தன்னுடைய படத்தையும் பணமும் தந்து உள்ளார். அதை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்து தியானிக்குமாறு கூறுவார். புரந்தரே பாபாவின் படத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். தனக்கு மனத் துயர் ஏற்பட்ட போதெல்லாம் அதன் முன் அமர்ந்து கொண்டு அழுவார்.

அவர் வீட்டில் உள்ள பாபாவின் படம் மேலே உள்ளதுதான்.

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.