Wednesday, August 25, 2010

Devotee In Contact With Baba- Uddhavesh alias Shyamdas Baba-(Part-2)

உத்தவேஷ் பாபாவின் அனுபவம் தொடர்கின்றது. ஒரு முறை உத்தவேஷ் துவாரகா, போர்பந்தர், கிரினார், சோமநாத் போன்ற இடங்களுக்கு மூன்று அல்லது மூனரை மாதம் நீடிக்கும் தீர்த்த யாத்திரைக் கிளம்பினார்.

தமது குழுவினர் மற்றும் தமது வேலைகாரனுடன் யாத்திரை சென்றவர் அவர்களுடன் கிரினார் பர்வதத்தை அடைந்தார். அங்கிருந்து மலை மீது உள்ள தத்தாத்ரேயா பாதுகைகளை தரிசனம் செய்த பின் பக்கத்தில் உள்ள அம்பாஜி டேகரி மற்றும் கோரஷரநாத் ஆலயத்திற்கும் செல்ல முடிவு செய்தனர்.

அவர்கள் மலை மீது ஏற ஆரம்பித்த நாள் வியாழக் கிழமை. கிளம்ப சற்று தாமதமாகி விட்டாலும் கிளம்பி விட்டானர். ச்யாம்தாஸ் (உத்தவேஷ்) மலை மீது ஏறிக்கொண்டு இருக்கையிலேயே நான் உன்னுடனேயே இருக்கின்றேன் என பாபா கூறுவது போல உணர்ந்தார். அந்த படிக்கட்டில் சுமார் நாற்பது அல்லது ஐம்பது படிகள் மிகவும் செங்குத்தாக இருந்தது. அதில் ஏறிப்போக கடினமாக இருந்தாலும் கடுமையான வெய்யிலையும் பொருட்படுத்தாமல் சென்றனர். அவர்கள் போவதற்கு என்னும் இருநூறு அல்லது முந்நூறு படிகளே பாக்கி இருக்கும். அவர் கொண்டு வந்திருந்த தண்ணீர் காலி ஆகிவிட்டது. தாகம் தொண்டையை அடைக்கபடி ஏற முடியாமல் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். வலது புறம் விழுந்து இருந்தால் மலைக்கு கீழே அடையாளம் காண முடியாமல் நெடிய பள்ளத்தில் விழுந்து மறைத்து இருப்பார். நல்ல வேளை இடப்புறம் விழுந்திருந்தார். மற்றவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தனர் . எங்கும் தண்ணீர் காணப் படவில்லை. அவர் வாயில் இருந்து நுரை வர ஆரம்பித்தது. தாராபாய் என்பவர் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு விசிற ஆரம்பித்தார். எவராவது கீழே சென்று தண்ணீரை எடுத்து வரலாம் என முடிவு செய்தனர்.

அப்போது ஒரு அதிசய நிகழ்ச்சி நடந்தது. தலையில் ஒரு தண்ணீர் குடத்துடன் வந்த மலைவாசி தாராபாயிடம் 'அம்மா இந்த குழந்தைக்கு இந்த நீரைக் கொடுங்கள். அவர் முகத்திலும் சிறிது தெளியுங்கள், அவன் நலமாகி விடுவான், எனக்கு சிறிது வேலை உள்ளது. நீங்கள் திரும்பி வரும்போது பார்க்கலாம் ' என்று கூறி தண்ணீர் குடத்தை தந்து விட்டு மலை ஏறிப் போக ஆரம்பித்தார். அவர் கூறியதை இயந்திரம் போல அனைவரும் செய்தனர். ச்யாம்தாஸ் தன நிலைக்கு வந்தார். மலை மீது ஏறிப் போய் கொண்டு இருந்த மலைவாசியை பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே அவர் மறைந்து விட்டார்.

தமது பயணத்தை தொடர்ந்தவர்கள் அற்புதமான தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் மிதந்தவாறு, திரும்பி வந்து அந்த இடத்தில் நின்று கொண்டு அந்த மலைவாசியை தேடினர். வந்தது யார் என அப்போதுதான் அனைவரும் அவரைக் குறித்து பேசலாயினர். ஆனால் ச்யாம்தாசுக்கு மனதில் புரிந்து விட்டது வந்தது சாயிநாதரே . என் எனில் அவர்தானே அவரிடம் கூறி இருந்தார், நீ எங்கு சென்றாலும் உன் முன்னாலோ பின்னாலோ நான் வந்து கொண்டே இருப்பேன் என்று. நெடு நேரமாகியும் மலைவாசியைக் காணவில்லை. அனைவரும் களைப்பு அடைந்து விட்டதினால் என்னும் காத்திருக்க முடியாது என கீழே வந்து விட்டனர்.
அன்று இரவு ச்யாம்தாஸ் தூக்கம் வராமல் தவித்தார். வந்தது உண்மையில் யார்? என்னால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? கீழே விழுந்தாலும் சிறிது கூட அடிபடவில்லை. இரவு தன்னை மீறி பாபாவின் கருணையை நினைத்து அழுதார். விடியற் காலை நான்கு மணிக்கு பாபா அவர் கனவில் வந்து கூறினார், 'அரே ச்யாம்தாஸ் இதற்கெல்லாம் ஏன் அழுகிறாய், நீ செய்ய வேண்டியது என்னும் நிறைய உள்ளது. அதை பிறகு நீ தெரிந்து கொள்வாய் . எழுந்திரு'.

ச்யாம்தாஸ் அமைதி அடைந்தார். சில காலம் பொறுத்து அவர் பாபாவை சீரடிக்கு சென்று தரிசித்தபோது பாபா கேட்டார் ' நான் உன் தாகத்தை தீர்க்க தண்ணீர் தந்தேன் அல்லவா'. அதைக் கேட்ட ச்யாம்தாஸ் பாபாவின் கால்களில்தன் தலையை வைத்து அவர் பாதத்தைக் கண்ணீரால் கழுவினார்.
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.