Monday, September 6, 2010

Devotee In Contact With Baba--- Part-2 Madhav Rao Deshpande.


நான் ஒருநாள் டிவி பார்த்துகொண்டு இருந்தேன். அப்போது என் மனம் அலை பாய்ந்தது. முன்னர் என்னுடைய பாட்டி தூங்கும் போது கதைகள் சொல்வாள். அவை ராமாயணம் போன்றவற்றை பற்றி இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு சிந்திக்கும் மனது இல்லை என்பதினால் அவள் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பேன், அவ்வளவே.
நான் மிகவும் கடவுள் பக்தி வாய்ந்த குடும்பத்தில் வளர்ந்தவள். ஆகவே இன்று டிவி பாத்துக் கொண்டு இருக்கையில் நான் நினைத்தேன், இவை எல்லாம் உண்மையாக இருக்குமா? ராமாயணம், மகாபாரதம் போன்றவை, தர்மம், நியாயம், நல் ஒழுக்கம், கர்ம வினை போன்றவற்றை போதிக்கும் இதிகாசங்கள் எனக் கூறுவார்கள். அதை முன்னர் எல்லாம் நான் உண்மையாக இருக்குமா பொய்யாக இருக்குமா என எண்ணிப் பார்த்தது இல்லை, ஆனால் இன்றோ. நான் நினைத்தேன் அந்த காவியங்கள் உண்மையாக நடந்தவையா? என்னைப் போல என்னும் எத்தனை மனிதர்கள் அது குறித்து சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ?
ஆனால் என்ன செய்வது, யோசிக்கும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? மகாபாரதாம் பொய் என்றால் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உரைத்ததாகக் கூறப்படும் பகவத் கீதையும் பொய்யா? பகவத் கீதை உண்மை என்றால் மகாபாரதம் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது?
விடை தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த மனதுக்கு விடை தருவது போல ஒரு நாள் நான் சீரடி சாயி பாபாவைப் பற்றி படித்துக் கொண்டு இருந்த புத்தகத்தில் விடை கிடைத்தது. பாபா சாமாவுக்கு உண்மையைக் காட்டிய ஒரு கதை. சத்தியமான உண்மை என்பதே அது.
மனிஷா



ஒரு நாள் சாமா பாபாவிடம் பேசிக்கொண்டு இருக்கையில் அவரிடம் கேட்டார் 'பாபா, விஷ்ணு லோகத்தில் விஷ்ணு, பிரும்ம லோகத்தில் பிரும்மா என திருமூர்த்திகளைக் குறித்து பொன்மணிகள் நிறைந்த 'த்ரிலோகா' என கூறப் படுகின்றதே, அவை உண்மையா?. தேவா எனக்கு அதை காட்டக் கூடாதா?' பாபா கூறினார் ' தெய்வங்களுக்கு அதில் காணப் படும் பொருட்கள் அனைத்தும் துச்சமானவை. சத்தியமான உண்மையான அவை கடவுட்கள் ஏற்படுத்திக் கொண்டவை'. ஆனால் சாமா அவற்றை பார்த்தால்தான் நம்ப முடியும் என்பது போல பேசினார்.
அவ்வளவுதான், சில நொடிகள் கடந்தன. சாமா பிரும்ம லோகத்தில் இருந்தார். அவரை சுற்றிலும் வைர, தங்க ஆபரணங்கள் மின்னின. பிரும்மா அங்கு அமர்ந்தபடி தனது அரச சபையினருடன் விவாதித்துக் கொண்டு இருந்தார். தங்க நாற்காலிகள், தங்க ஆபரணங்கள், தங்கத் தட்டுப்கள் என அனைத்துப் பொருட்களும் தங்கம், தங்கம் என ஜொலித்தது.
கண்களைத் திறந்த சாமாவிடம் இதுவே பிரும்ம லோகம் என்றார் பாபா. அடுத்து கண்களை மூடிக்கொண்ட சாமாவுக்கு சத்ய லோகம், வைகுண்ட லோகம், கைலாசம் என அனைத்து உலகையும் பாபா காட்டினார்.
அவற்றை எல்லாம் கண்ட சாமா மெய்சிலிர்த்தார். எத்தனை எத்தனை பொன்னும், பொருட்களும் நிறைந்தவை அவை. பாபா கூறினார், 'சாமா அவை எல்லாம் நமக்காக ஏற்பட்டவை அல்ல. அதை அடைய நாம் முயற்சி செய்யக் கூடாது. நம்முடைய குறிகோள் வேறாக இருக்க வேண்டும்.' கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது போல சாயி பாபா சாமாவுக்கு பலவற்றை உபதேசித்தார்.
சாமா உண்மையில் எத்தனை பாகியசாலியாக இருந்திருந்தால் பாபாவுடன் மாட்டும் வாழாமல், அவருடைய அருளினால் தேவலோகத்தின் காட்சிகளையும் தாம் பார்த்து இருப்பார். நாம் சாமாவைப் போல அதிருஷ்டசாலியாக இல்லாவிடிலும் அவரைப் போன்ற ஒரு சிறு துளி அதிருஷ்டசாலியாக பாபாவிடம் இருப்போம்.

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.