Wednesday, September 15, 2010

Karma - Part-2

Baba speaks on Karma , Pain-Pleasure an illusion       (PART-2)

அகம் , துன்பம், பாகம் என்ற மாயைகளைப் பற்றி பாபா
 
நானாவுக்கு பாபா கூறிய அறிவுரைகள் தொடர்கின்றது. நானா பாபாவிடம் கேட்டார் ' பாபா இந்த உலக பந்தத்தில் இருந்து ஒருவர் விடுதலை அடைந்து விட்டால் இன்பம், துன்பம், கர்மா போன்றவை எங்கிருந்து ஏற்படும்?'
பாபா கூறினார் ' நானா, நீ கூறிய அனைத்துமே மாயைகளே. அவை நிரந்தரமானது அல்ல, உண்மையானதும் அல்ல. நான் பல விதத்திலும் விளக்கிக் கூறினேனே. ஒருவனுக்கு வயிறு நிறைய உணவு கிடைகின்றது, மற்றொருவன் பட்டினியால் அவதிப் படுகின்றான். அதன் காரணம் கர்மாவே . எதற்காக உணவு அருந்துகின்றோம்? வயிற்றை நிரப்பவே. எதற்காக விதவிதமான துணிகளை அணிகின்றோம்? நமது உடலை மறைக்கவே . அது எப்படிபட்ட இனிமையைத் தரும் என்பதை உணருவதே நம்முடைய மனநிலை . இன்பமும் துன்பமும் நம்முடைய மன நிலைக்கேற்ப பெரியதாகவும் சிறியதாகவும் தோன்றும். அது உண்மையில் மாயை.... நாளடைவில் தானாக விலகிவிடும் மாயை. அது வரும், வந்தபின் போகும் . எழுந்து வந்து மீண்டும் கடலுக்குள் மறைந்து போகும் கடல் அலையைப் போன்றதே.
அந்த எண்ணங்களுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா..ஆசை, கோபம்...போன்ற ஆறு விதமான மோசமான குணங்கள். அவையே நமக்கு நிஜமில்லாததையும் நிஜம் போலக் காட்டும். ஒரு பணகாரனுடைய செல்வ நிலையைப் பார்க்கும் ஏழைக்கு என்ன தோன்றும். நமக்கும் அவரைப்போல பணம் வேண்டும்...அங்குதான் ஆசை தோன்றுகின்றது. எதற்காக மற்றவரைப் பார்த்து நாம் நம்முடைய ஆசையை பெருக்கிக் கொள்ளவேண்டும்? அதற்குதான் கூறுவது, ஒருவனின் மனதில் உள்ள அந்த ஆறு தீய குணங்களையும் அழித்து விடு என. அதை அழித்து விட்டால் துயரமேது?, இன்பம் எது? அனைத்தும் ஒன்றாகவே நமக்குத் தெரியும். உண்மையான துயரம் எது தெரியுமா....மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பது...உண்மையான இன்பம் எது தெரியுமா?....பிறப்பு இல்லாமை. மற்ற அனைத்துமே மாயைதான் நானா, இதை முதலில் தெரிந்துகொள்'
அப்படி என்றால் இந்த உலகில் எப்படி வாழ்வது ?
பாபா கூறினார் ' இதை கவனமாகக் கேள் . உள்ளவரை மனதில் திருப்தி கொள். இல்லாததற்காக வருந்தாதே. உனக்கு செல்வம் வரும்போது மரங்களில் காய்கள் காய்கும்போது எப்படி அதன் கனத்தினால் மரங்கள் வளைந்து நிற்கின்றதோ அது போல உன் மன நிலை வைத்துக் கொள். செல்வம் வந்து விட்டால் தலை கணம் கொள்ளாதே. அனைவரிடமும் நல்லவனாக, கருணை மிக்கவனாக இருக்கவேண்டும். ஆனால் அதே நேரம் தீயவர்களிடம், துஷ்டனிடம் அந்த குணத்தை காட்டாதே. செல்வம் நிலையானது அல்ல. அது மதிய நேரத்தில் அவ்வபோது வந்து போகும் நிழலைப் போன்றதே. அதில் மயங்கி விடாதே. உன்னிடம் செல்வம் இருக்கின்றது என்பதினால் மற்றவரை ஏளனம் செய்யாதே . தானம் கொடுப்பதையும் அளந்து கொடு . தன்னிடம் இல்லை என்பதினால் மற்றவர்களிடம் இருந்து அதை கடனாகப் பெற்றுக் கொண்டு உன்னை உயர்த்திக் கொள்ளதே. தேவைக்கு அதிகமாக எதையும் வைத்துகொள்ளமுயலாதே. .
செல்வம் தேவைதான். அதற்காக கருமியாக இருக்காதே, அளவுக்கு மீறியும் கொடுக்காதே, கொடுக்காமலும் இருக்காதே. உன்னிடம் செல்வம் இல்லை என்றால் எவரும் உன்னை சீண்ட மாட்டார்கள். அளவுக்கு மீறி தர்மம் செய்துவிட்டு ஒன்றும் இல்லாமல் நிற்காதே. ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும்போது ஒரு கணம் யோசனை செய் அவர் இதற்கு தகுதியானவரா?
உண்மையில் யாருக்கெல்லாம் தானம் செய்வது நல்லது? உடல் நலமுற்றோர் , அனாதைகள், உண்மையில் அறிவுடையோர், பொது ஜன நன்மைக்கான திட்டங்கள், ஏழைகள், சமுதாயத்தில் நலிவுட்ற பெண்கள் போன்றவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் ............

பாகம் -3. --தொடரும்...
(Translation in Tamil : Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.