Wednesday, November 10, 2010

Act according to My advice -Few words of Baba



அன்பானவர்களே
இந்த பக்தாம்ருததை ஒரு முறை படித்தாலே நூறு அஸ்வமேத யாகம் செய்ததின் பலன் கிடைக்கும். சாயியின் இந்த அறிவுரைகள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளைப் போன்றது. அதில் மூழ்கி ஆனந்தம்அடையுங்கள்.
மனிஷா


கனு மகராஜ் அங்கு அமர்ந்திருந்தபடி பாபா நானாவுக்கு கொடுத்துக் கொண்டு இருந்த அறிவுரைகளை கேட்டுக் கொண்டு இருந்தார்.
''கடவுளின் உருவச் சிலை என்பது கடவுள் அல்ல என்றாலும் அதற்கு பூஜை செய்வதின் மூலம் நமது மனம் கட்டுப்பாட்டில் இருக்கும். மனதை ஒருமுகப் படுத்தும். நாம் ஆன்மீக நூல்களை நிறைய படிக்க வேண்டும். அவற்றில் கூறியுள்ளபடி நடக்க முயல வேண்டும்.

எல்லா விஞ்ஞானங்களை விட ஆத்மா ஞானமே மேலானது . அது மலைகளில் சிறந்த மலையான மேருவைப் போன்றது. அந்த நிலையை எந்த ஒருவன் பெறுகின்றானோ அப்போது முக்தியும், ஹரியும் தானாகவே அவர்களைத் தேடி வருவார்கள் . அந்த ஞானத்தை அடையும் இடத்திற்கு ஏறிச் செல்லும் ஏணியில் ஏறுவது கடினமானதுதான். மாருதி காகா, ஹரிபந்த், பெர்ரி போன்றோர்களும் மற்றும் பிற பக்தர்களும் ஒன்று சேர்ந்து அதில் ஏறி முக்தி பெற முயல வேண்டும். முன்னரே நான் உனக்கும் நிம்மோல்கருக்கும் தந்துள்ள அறிவுரைப்படி நடந்தால் அதுநிச்சயம் முடியும்.

ஒவ்வொருவரும் கடவுளிடம் சரண் அடைந்து விட வேண்டும். நம்பிக்கையுடன் தினமும் சித்த தரிசனம் பெற முயல வேண்டும். மனைதை ஒரு நிலைபடுத்தி வைத்துக் கொண்டு கடவுளையே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும். உன்னுடைய இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டு தியானத்தில் இரு, முக்தி தானாக வரும். சமீபத்தில்தான் அட்கரும் வேணுவும் ஆத்மா ஞானத்தைப் பெற்று உள்ளனர். ''

அப்படிக் கூறிவிட்டு பாபா தன்னுடைய கையை சந்டோர்கர் தலை மீது வைத்தார். சந்டோர்கர் பாபாவின் கால்களில் விழுந்து வணங்கிக் கூறினார் ' நான் உன்னிடமே பிரார்த்தனை செய்கின்றேன் பாபா. இந்த உலகின் நாயகனே, என் தந்தையே, தாயாரானவரே, முக்தி பெறுவதற்கு சம்சாரக் கடலில் இருந்து என்னை கரை சேர்க்கும் தோணியைப் போன்றவரே, அறியாமையில் இருந்த எங்களுக்கு கடவுளைப் பற்றிய ஞான போதனை செய்து கடலின் மறுபுறத்திற்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். எங்களுக்கு கருணை புரிவாயா?'
பாபா கூறினார் ' நீங்கள் அனைவரும் என்னுடைய பக்தர்களே. நான் என்றும் உங்களுடன் இருப்பேன். கவலைப்பட வேண்டாம். கடவுள் உங்களுக்கு அனைத்தையும் தருவார். உங்களுடைய வேண்டுகோட்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இதை என்றுமே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், இவை என்னுடைய வார்த்தைகள்'.

பாபாவின் கருணை பெரியது. பக்தர்களே வாருங்கள், பாபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள். நாம் தகுதி உள்ளவர்களோ இல்லாதவர்களோ, அவர் நமக்கு கருணை புரிவார். சந்டோர்கர் மற்றும் ஹரிபந்த் போன்றோர் இன்று வந்துள்ளனர். பாபா அவர்களுக்கு விருந்து தயாரித்துள்ளார். ஞானம், பக்தி மற்றும் விருப்பு வெறுப்பற்ற நிலை என்பதே அவர் அந்த விருந்தில் வைத்துள்ள உணவுகள். அவற்றில் எத்தனை ஜீரணிக்க முடியுமோ அத்தனை கிரகித்துக் கொள்ளுமாறு பாபா கூறுகின்றார். அவருடைய வாயிலில் நாம் ஒரு நாயைப் போல நிற்போம். அவர் நமக்கும் ஏதேனும் தருவார். அதை பெற்றுக்கொள்ள விரைந்து வாருங்கள், காலம் எவருக்காகவும் காத்திருப்பது இல்லை.
............பாகம் -8.......தொடரும்
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.