Thursday, November 4, 2010

Baba can come in any form-Experience by Ashwin

அன்பானவர்களே,
சாயிராம். அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். பாபாவின் பக்தரான அஷ்வினுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவையானது. அதை இதோ படியுங்கள்.
மனிஷா


அஷ்வின் எழுதி அனுப்பி உள்ள அவருடைய அனுபவம்

மனிஷாஜி,
ஓம் ஸ்ரீ சாயிராம்.
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சாயிபாபா நிறைய கருணைக் காட்டுகிறார் என நினைக்கின்றேன். சாயிபாபாவுடனான என்னுடைய அனுபவங்களை எழுதி நீண்ட நாளாகிவிட்டது. இந்த வருடமும் நான் சீரடிக்குப் போய் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. சாயிபாபா என்முன் தோன்றி என்னுடன் பேசியுள்ளார் என்றே கருதுகிறேன். ஆகவே இதை நீங்கள் அவசியம் உங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

--நான் அமெரிக்காவில் டெக்சாஸ் மானிலத்தில் மேல் படிப்பு படித்துக் கொண்டு இருக்கின்றேன். கோடைக்கால விடுமுறைக்கு இந்தியா வந்தேன். நான் என்னுடைய பூணூல் வைபவத்துக்குப் பின்னால் நான் சீரடிக்குச் செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அது அப்போது நடக்கவில்லை. வருடங்கள் ஓடி விட்டன. ஆகவே இந்த முறை இந்தியாவுக்குச் சென்றதும் கண்டிப்பாக என்னுடைய தாயாருடன் அங்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.

நாங்கள் சீரடிக்கு பயணம் செல்ல முடிவு செய்து குளிர்சாதன பெட்டியில் இடம் வாங்க முயன்றபோது எங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே எங்களுக்கு பயணத்தில் சிறிது சிரமம் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தாயார் கூறியது போல எது நடக்க வேண்டுமோ அது மட்டுமே நடக்கும் என்பதினால் நடப்பது நடக்கட்டும் என அதை ஏற்றுக் கொண்டேன். சீரடிக்குச் சென்றோம் .
முதல் நாள் அன்று அதிக கூட்டம் இல்லாமல் எங்களால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. சாயி சத் சரித்திரத்தை அவர் காலடியில் வைத்து விட்டு எடுத்து வந்து அதில் இருந்து சில பகுதிகளை 'முக தரிசன ' இடத்தில் அமர்ந்து படித்தேன். எங்களுக்கு எந்த நுழைவு சீட்டும் கிடைக்கவில்லை என்பதினால் எங்களால் ஆர்தியைக் காண உள்ளே செல்ல முடியவில்லை. ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரடிக்கு வந்ததே ஒரு அதிசயம் என்று மனதை தேற்றிக் கொண்டேன். அன்று இரவு எனக்கு ஒரே உடம்பு வலி. ஜுரம் வந்து விட்டது போல இருந்தது. ஆனால் என்ன அதிசயம். மறுநாள் நாங்கள் மதிய ஆரத்திவரை எந்த பிரச்சனையும் இன்றி பார்க்க முடிந்த அளவு உடல் நிலை சீராக ஆகியது. மாலையில் கிளம்பி ஊருக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த அதிசயம் மதியம் நிகழ்ந்தது.

ஊருக்குச் செல்லும் முன் மதிய தரிசனத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என நாங்கள் தரிசனத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தோம். 'சாயி சரித்திரத்தையும் எடுத்துக் கொண்டு வரப் போகிறாயா' என என்னுடைய தாயார் கேட்டாள். ஆனால் நானோ 'இல்லை. நான் சாயி சரித்திரத்தை எடுத்து வரப்போவதில்லை. முடிந்தால் பாபாவுடன் நேரில் பேசப் போகின்றேன்' என்று கூறினேன். என்னுடைய தாயார் என்னைப் பார்த்து கேலியாக சிரித்தாள் . தரிசனத்துக்குச் சென்றால் அங்கு ஒரே கூட்டம். அவளுக்கு முதுகில் அறுவை சிகிச்சை ஆகி இருந்ததினால் அதிக நேரம் நிற்க முடியாது. ஆகவே வெளியில் சென்று பிரசாதத்தை விலைக்கு வங்கிக் கொண்டு நானாவளி மற்றும் அப்துல் பாபாவின் சமாதிகளைப் பார்த்துவிட்டு அதன் பின் முக தரிசனத்துக்கு வரலாம் எனக் கிளம்பிச் சென்றோம்.

நாங்கள் முக தரிசனத்துக்கு சென்றபோது அந்தக் கூடத்தில் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். என்னுடைய தாயார் வாங்கிக்கொண்டு வந்த பிரசாதத்தைப் பிரித்து அந்த சிறுவர்களை அழைத்து அவர்களுக்கும் கொடுக்க அதில் ஒருவன் சிறிது மட்டுமே எடுத்து தின்றான். 'போதும் நிறைய சாப்பிட்டுவிட்டேன்' எனக் கூறினான். நான் என்னுடைய தாயாரிடம் 'பிரசாதத்தை வாங்கிக்கொள்ள மறுப்பது தவறல்லவா, ஆகவே அதை அவனுக்கு தந்து இருக்க வேண்டாமே' என்றேன்.

வெள்ளை பைஜாமாவை போட்டுக் கொண்டு இருந்த அந்த சிறுவன் நெற்றியில் திலகமும் இருக்க அவன் ஒரு பூசாரியின் பிள்ளைப் போல காட்சி தந்தான் . நான் என்னுடைய கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு சாயிபாபாவை தியானிக்கத் துவங்கினேன் . அந்த சிறுவன் என்ன பின்னால் நின்று கொண்டு என்னை கவனித்தபடி இருந்திருக்கின்றான் என நினைகின்றேன். கண் முழித்த என்னிடம் திடீரென அவன் கேட்டான் ' நீங்கள் இங்கு முன்னரும் இங்கு வந்து இருக்கின்றீர்களா '?. நான் கூறினேன், 'ஆமாம் நான் போன வருடம் வந்தேன் . ஒவ்வொரு ஆண்டும் வர வேண்டும் என நினைத்துக் கொண்டு உள்ளேன்'.
உடனேயே அந்த சிறுவன் கூறினான், 'உங்களைப் பார்த்தால் எனக்கு முன்னரே தெரிந்தவர் போல உள்ளது. உங்களுடைய நீண்ட தலை முடியைப் பார்க்கையில் உங்களை எங்கேயோ பார்த்து இருப்பது போல தோன்றுகிறது . அதனால்தான் உங்களுடன் பேசுவதற்காக இங்கு வந்தேன்'.

நான் சிரித்தபடி மவுனமாக இருந்தேன் . அவன் கேட்டான் ' உங்கள் பெயர் என்ன?' . நான் கூறினேன் 'என் பெயர் அஷ்வின்'. ' சரி, சரி, அங்கே அமர்ந்து உள்ளது உங்களுடைய தாயாரா ?' என அவன் கேட்க நானும் 'ஆமாம்' என்றேன்.

அந்த சம்பாஷனையை தூரத்தில் இருந்து வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டு இருந்த என்னுடைய தாயார் அந்த சிறுவன் சுட்டியாக உள்ளான், ஆகவே ஏதாவது ஜோதிடரின் பிள்ளையோ என்னவோ என நினைத்து எனக்கு வருங்காலத்தைப் பற்றி ஏதாவது கூறினானா எனக் கேட்டாள். நான் நடந்ததைக் கூறினேன்.
அதன் பின் நான் மீண்டும் மவுனமாகி அமர்ந்து இருந்தேன். 'உனக்கு ஏதாவது ஆசை உள்ளதா" எனக் கேட்ட அந்தச் சிறுவன் ' உனக்கு மிகப் பெரிய ஆசை உள்ளது, சரிதானே' எனக் கேட்க நான் கூறினேன் 'நண்பா , ஆளை விடப்பா .எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மன நிம்மதி வேண்டும். அதுவே என்னுடைய மிகப் பெரிய ஆசை'.

அவனுடைய வயது எட்டு அல்லது பத்து இருக்கும். 'என் தாயாரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' என்று அவன் கேட்க அவள் நாங்கள் ஹைதிராபாத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறிவிட்டு எதோ ஒரு பெரிய மனிதரிடம் பேசுவது போல அவனுடன் பேசிக்கொண்டே இருந்தாள். மீண்டும் தியானத்தில் இருந்த நான் தியானம் கலைந்து ' உன் பெயர் என்ன ?' எனக்கேட்டேன். அவன் கூறினான் ' என் பெயர் ருஷிகேஷ் என்பது. ஆனால் என்னை அனைவரும் சோட்டே பண்டிட் என்றே அழைக்கின்றார்கள். ஆமாம், உங்களுக்கு பிரமோத் மோர்ஜி என்பவரைத் தெரியுமா?'

நான் கூறினேன் ' பெயர் கேள்விப்பட்டதாக உள்ளது. ஆனால் எனக்கு அவரைத் தெரியவில்லையே' . அவன் கூறினான் ' இங்கு உள்ளவர்களிடம் பிரமோத் மோர்ஜியை பற்றிக் கெட்டப் பின் என்னையும் யார் என்று கேட்டால் அனைவரும் எங்களைப் பற்றிக் கூறுவார்கள்' என்றான். அது மட்டும் அல்ல பிரமோத் மோர்ஜி என்பவர் சாயி சந்தானின் காப்பாளராக இருந்தவர் என்றும் தெரிவித்தான்.

அந்த சமயத்தில்தான் என் மனதில் தோன்றியது . ஒருவேளை சாயிபாபாவே அந்த சிறுவனின் உருவில் வந்து உள்ளாரோ? ஆகவே அவனிடம் நான் கூறினேன், 'எனக்கு ஒரு பெரிய ஆசை உள்ளது. நான் தற்போது வெளிநாட்டில் தங்கிப் படிக்கின்றேன். அடுத்த வருடம் படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்ப வேண்டும். இங்கேயே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். அதன் பின் என்னுடைய ஆசையான சீரடிக்கு வந்து கொண்டிருக்கும் நிலை தொடர வேண்டும்'. அவன் ஒன்றும் கூறவில்லை. நான் மேலும் தொடர்ந்தேன்' நீ எப்போதுமே இந்த இடத்தில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டுதான் இருப்பாயா?'
'ஆமான் நான்தான் இங்குள்ளவர்களிலேயே வயதில் குறைந்தவன். சரியா. அடுத்த முறை வந்தால் என்னை வந்துப் பார். என் பெயர் ருஷிகேஷ், மறந்து விடாதே' எனக் கூறிவிட்டு கண்ணடித்து விட்டுச் சென்றுவிட்டான்.

நான் கூறினேன், 'சோடே பண்டிட்ஜி, நிச்சயமாக நான் அடுத்த முறை வந்தால் உன்னைப் பார்கின்றேன். உன் வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகக் கூறு '.

'எனக்கு தாய் தந்தை எவருமே இல்லையே' என்று அவன் கூற நான் மனம் வருந்தினேன் . அவன் கூறினான் 'அனைவருமே என்னை பிரமோத் மோர்ஜியின் பிள்ளை என்றே கூறுகிறார்கள். ஆனால் அவரை மறக்காதே'
நான் அவனிடம் இருந்து இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றேன். என்னுடைய தாயாரிடம் நடந்த அனைத்தையும் கூறினேன். நாங்கள் அதன் பின் தரிசன வரிசையில் சென்று நின்றோம். அப்போது எவரோ என் முதுகில் தட்டுவதை கண்டேன். மீண்டும் அதே சோடே பண்டிட். என் பின்னால் நின்று இருந்தவன் என்னிடம் ஒரு பூவைக் கொடுத்துவிட்டு ' உன் ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். அடுத்த வருடம் சீரடிக்கு மீண்டும் வா' எனக் கூறிவிட்டுச் சென்றான்.

நாங்கள் திரும்பி செல்லும் வழியில் என்னுடைய தாயார் ஒரு கடையில் நின்று பாபாவின் படங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு இருந்தாள். திடீரென நாம் வந்திருக்ககூடாது. இன்னும் சிறிது நேரம் இருந்திருக்கலாமே என நினைத்த நான் என்னுடைய தாயாரிடம் கூறிவிட்டு மீண்டும் அந்த சிறுவனை சந்தித்த இடத்துக்குச் சென்றேன். அப்போதும் அவன் அதே சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்று ' 'நான் அடுத்த முறை வரும்போது உனக்கு என்ன கொண்டு வரவேண்டும் எனக் கேட்க ' . அவன் ' மகிழ்ச்சியாக நீ வரும்போது எதைக் கொண்டு வந்தாலும் எடுத்துக் கொள்வேன்' என்றான் . பாபா கூறியது நினைவில் வந்தது ' என்னைப் பார்க்க வருபவர்கள் தூய அன்புடன் எதைக் கொண்டு வந்தாலும், ஏன் ஒரு இலையையோ, மலரையோ அல்லது ஒரு துண்டு உணவையோ கொண்டு வந்தாலும் அதை நான் நிறைவான மனதோடு ஏற்றுக் கொள்வேன்'

என்னுடைய தாயார் கடைக்காரனிடம் பேசிக்கொண்டு இருக்கையில் அவன் கூறினானாம் ' அந்த ஆலயத்தில் யாருமே சோடே பண்டிட் என்ற பெயரில் கிடையாது. அங்கு எந்த சிறுவர்களையும் விளையாட விடுவது இல்லை. அந்த இடத்தில் உள்ள ஆலய சேவகர்கள் அனைவரும் ஆலய சீருடைதான் அணிந்து இருப்பார்கள்.ஆகவே அப்படி எவரும் அங்கு கிடையாது. அதைக் கேட்ட நான் தாயாரைப் பார்த்து சிரித்தேன் . சோடே பண்டிட் என்ற உருவில் வந்திருந்தது சாயி பாபாவேதான் என்பதில் ஐயமே இல்லை.
மனிஷாஜி, இந்த என்னுடைய அனுபவத்தை மறக்காமல் வெளியிடுங்கள்.
(Transltaed into Tamil by Santhipiriya).

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.