Wednesday, December 8, 2010

Sai Baba Always Helped Me At The Appropriate Time-Experience By Harshit Shrivastav


அன்பானவர்களே
இன்று ஹரிஷ் தனக்கு எப்படியெல்லாம் பாபா உதவி உள்ளார் என்பதை தெரிவித்து உள்ளார். முக்கியமாக அவருடைய ஏழாவது அனுபவம் சுவையானது. ஆகவே இந்த கடிதத்தை உடனடியாக வெளியிடுகிறேன்.
ஜெய் ஸ்ரீ ராம்
மனிஷா

வணக்கம்
என் பெயர் ஹர்ஷிட் ஸ்ரீ வட்சவா. நான் உங்களுடைய இணையதளத்தை தவறாமல் படிப்பவன். நான் என்னுடைய அனுபவத்தை இதுவரை வெளியிடவில்லை என்பதினால் இப்போது என்னுடைய அனுபவங்களை உங்களுக்கு எழுதி அனுப்பி எப்படியெல்லாம் பலமுறை பாபா எனக்கு கருணைக் காட்டி உள்ளார் என்பதை தெரியப் படுத்த விரும்புகின்றேன். நான் எழுதி உள்ளத்தில் பிழைகள் இருந்தால் அதை திருத்தி வெளியிடவும்.
இதை உங்கள் இனைய தளத்தில் வெளியிட்டு பாபாவின் அருள் எனக்கு கிடைக்க ஆசிர்வதிக்கவும். இதனுடன் நான் சிப்பூர் சாயி ஆலயத்தின் பாபாவின் படத்தையும் அனுப்பி உள்ளேன். அது எத்தகைய மகிமை வாய்ந்த ஆலயம் என்பதை அனைவரும் அறிவார்கள்.
நன்றி.

முன்னுரை
என்னுடைய இந்த அனுபவங்கள் மூலம் பாபா எப்படியெல்லாம் தனது பக்தர்களுக்கு கருணைக் காட்டுகிறார் என்பதையும் அவருடைய மகிமைகளைக் கேட்டால் அவர் எப்போதுமே  நம்முடன்    இருக்கின்றார் என்பதையும்  புரிந்து கொள்ளலாம். என்னுடைய ஏழாவது அனுபவமே மிகப் பெரியதும் முக்கியமானதும் ஆகும். இப்போது நான் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை மட்டுமே உங்களுடன்  பகிர்ந்து கொண்டு உள்ளேன். மற்றவற்றைப் பிறகு எழுதுவேன்.

என் அனுபவங்கள்
நான் 2005 ஆம் ஆண்டில்தான் பாபாவை பற்றி முதலில் அறிந்து கொண்டேன். அப்போது நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு எட்டு மணிக்கு சாயி பாபா என்ற தொடரை ஸ்டார் பிளஸ் வெளியிட்டு வந்தது. அதுதான் நான் பாபாவைப் பற்றி முதலில் அறிந்து கொள்ள சந்தர்ப்பம் தந்தது. வருட முடிவு விடுமுறையில் என் தந்தை வெளியூருக்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். நான் அதில் சீரடியையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். முதலில் அதை அவர்  ஏற்காவிடிலும்  பின்னர் அதற்கு ஒப்புக் கொண்டார். நான் சீரடிக்கு பயணம் செய்தது அதுவே முதல் தடவை.

என்னுடைய முதல் அனுபவம்.
எனக்கு போர்டு பரீட்சை நடந்து முடிந்தது. அதில் கணக்குப் பரிட்சையில் நான் சரியாகச் செய்யவில்லை. எனக்கு அறுபதுக்கும் குறைவான  மதிப்பெண்ணே  கிடைக்கும் என எண்ணி பாபாவின் படத்தின் முன் அழுதேன். நிறைய மார்க் கிடைக்க  எனக்கு அவரே உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டேன். என்ன அதிசயம். பரீட்சை முடிவு வந்தபோது எனக்கு அதில் பாபாவின் அருளினால் எனக்கு எண்பது மார்க்குகள் கிடைத்து இருந்தன. அதுவே என்னுள் சீரடிக்கு செல்லும் மன நிலையை ஏற்படுத்தி என் தந்தையிடம் சீரடிக்கும் செல்ல வேண்டும் என்று கூறியதின் காரணமாக இருந்தது.

என்னுடைய இரண்டாவது அனுபவம்.
நான் வியாழன் கிழமைகளில் தவறாமல் பாபாவின் ஆலயத்துக்கு செல்வது உண்டு. அப்போது நான் இண்டர்மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். என்னிடம் இருந்த சைக்கிளில் ஆலயம் செல்வது உண்டு. ஒரு நாள் அவசரத்தில் சைக்கிளின் பூட்டை எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். நேரமும் ஆகிவிட்டது. ஆலயத்தை மூடிவிடுவார்கள் என்பதினால் பூட்டு இல்லாத சைக்கிளை எடுத்துச் சென்று ஆலய வாசலில் வைத்து விட்டு பாபா நீதான் அதை பார்த்துக் கொள்ளவேண்டும் என வேண்டிக் கொண்டேன். அப்போது அந்த இடத்தை ஒருவன் பெருக்கிக் கொண்டு இருந்தான். நான் சைக்கிளை வைத்துவிட்டுச் சென்றதும்  பெருக்கிக் கொண்டு இருந்தவன் அதை நிறுத்தி விட்டு வந்து என் சைக்கிளில் அமர்ந்து கொண்டுவிட்டான். நான் திரும்பி வந்ததும் சைகிளைவிட்டு இறங்கி மீண்டும் பெருக்கத் துவங்கினான். பாபா என் சைக்கிளை தானாகவே வேறு ஒருவர் உருவில் வந்து காத்து இருக்கின்றார். அது எனக்கு பாபாவின் மகிமையை நன்கு வெளிப்படுத்தியது.

என்னுடைய மூன்றாவது அனுபவம்.

ஒரு நாள் நான் பாபாவின் ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். எனக்கு சில பிரச்சனைகள். அதற்கு பாபாதான் விடை தர வேண்டும் என எண்ணியபடி அவர் ஆலயத்தில் சஞ்சலத்துடன் அமர்ந்து இருந்தேன். அப்போது அங்கு ஒரு குரங்கு வந்தது. ஆனால் நான்  அதை சட்டை செய்யவில்லை. வந்த குரங்கு ஆலயத்து வளாகத்துக்குள் இருந்த மரத்தின் மீது அமர்ந்து இருந்தது. பூஜை முடிந்து பிரசாதம் தரப்பட்டபோது மரத்தில் இருந்து இறங்கி வந்த அந்தக் குரங்கு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது. அதைப் பார்த்த எனக்கு புத்தி வந்தது. எதற்கும் அமைதியாக பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே பாபா அந்தக் குரங்கின் செய்கை மூலம் எனக்கு காட்டி  உள்ளார். அடுத்து சில நாட்களில் என்னுடைய பிரச்சனைக்கும் பாபா நல்லபடியான முடிவைத் தந்துவிட்டார்.

என்னுடைய நான்காவது அனுபவம்.
என்னுடைய தாயாருக்கு பித்தப் பையில் கல் இருந்தது. அதனால் அவர் அடிக்கடி அவதிப் பட்டார். பொறுக்க முடியாத வலி வந்துவிட்டால் அழதே விடுவார். ஒரு முறை நான் என்னுடைய தாயாருடன் என்னுடைய தாய் மாமன் வீட்டிற்குப் போய் இருந்தேன். இரவு இரண்டரை மணி ஆகியபோது தூங்கிக் கொண்டு இருந்த நான் என்னுடைய தாயார் அழும் சப்தத்தைக் கேட்டு விழுத்து எழுந்தேன். வழியால் துடித்துக் கொண்டு இருந்தாள். என்ன செய்வது எனப் புரியவில்லை. என்னிடம் பாபாவின் உடியும்  இல்லை. ஆகவே என்ன செய்கின்றேன் என்பது புரியாமல் பக்கத்தில் இருந்த ஒரு மலர் செட்டியில் இருந்த சிறிது களி மண்ணை எடுத்து பாபா, இதை உன் உடியாக நினைத்து தருகிறேன் என்று  அவரையே வேண்டிக் கொண்டு அதை தண்ணீரில் கலந்து என்னுடைய தாயாருக்கு தந்தேன் . என்ன அதிசயம். சிறிது நேரத்திலேயே அவளுக்கு வலி குறைந்து தூங்கத் துவங்கினாள். அதன் பின் சில நாளில் அவளுக்கு ஆபிரேஷன் செய்து அந்தக் கல்லை எடுத்தார்கள். அவளுக்கு ஆபிரேஷன் செய்த மருத்துவரும் பாபாவின் பக்தரே. அவர் ஆபிரேஷன் செய்யும் முன்னால் எங்கள் எதிரிலேயே பாபாவை வேண்டிக் கொண்டே அதை செய்தார். உள்ளே சென்ற என்னுடைய தாயார் அங்கு மாட்டப்பட்டு இருந்த சாயி பாபாவின் படத்தையும் பார்த்து உள்ளார். ஆகவே பாபா எப்போதும் எங்களுடன் இருந்து எங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்கிறார் என்பதை கூறவும் வேண்டுமா? .

என்னுடைய ஐந்தாவது அனுபவம்.

நான் AIEEE பரிட்சைக்குப் படித்துக் கொண்டு இருந்தேன். அதிக நேரம் படித்து விட்டதினால் அசதியாக இருந்தது. ஆகவே என்னுடைய தந்தையிடம் என்னை பரீட்சைக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னால் எழுப்பி விடும்படி கூறி விட்டு படுத்துத் தூங்கி விட்டேன். நல்ல தூக்கம். திடீரென கனவில் சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு வந்த பாபா 'ஏய், எழுந்திரு' எனக் கூற அலறிக் கொண்டு எழுந்தேன். நான் விரும்பியபடியே பரீட்சைக்கு சரியாக ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக அல்லவா என்னை பாபா எழுப்பி விட்டார். நான் ஓடிச் சென்று தன்னை மறந்து  நல்ல தூக்கத்தில் இருந்த என் தந்தையையும் எழுப்பினேன். நடந்ததைக் கூற அவர் பேச்சு மூச்சு இல்லாமல் நின்றார். பாபா எப்படி எல்லாம் தனது பக்தர்களுக்கு உதவுகிறார் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி  வேண்டும்?

என்னுடைய ஆறாவது அனுபவம்.

நான் B.Tech. முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தேன். என்னுடன் அறையில் தங்கி  இருந்த இன்னொருவன்  சுயநலவாதி. ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டு இருக்கையில் வேண்டும் என்றே அறையை வெளியில் பூட்டிக் கொண்டு போய்விட்டான். தூங்கி எழுந்த என்னால் வெளியில் போக முடியவில்லை ஆத்திரத்தில் கதவை உதைத்துப் பார்த்தேன். திறக்கவில்லை. வெளியே பூட்டப்பட்டு இருந்தது.  என்ன செய்வது எனப் புரியாமல் பாபாவை வேண்டிக் கொண்டேன். அவரை வேண்டிக் கொண்டப் பின் மீண்டும் கதவை திறக்க முயல அது சாதாரணமாக திறந்து கொண்டு விட்டது. பூட்டை யார் எடுத்து திறந்தார்கள் என  அனைவரிடமும் கேட்டேன் . எவருமே அந்தப் பக்கம் வரவில்லையே என்றனர். அது பாபாவின் மகிமையே என்பதை உணர்ந்தேன். அதன் பின் அந்த நண்பனுடன் நான் தங்கவில்லை. தேவையான நேரத்தில் பாபா தன்னுடைய பக்தர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.

என்னுடைய ஏழாவது அனுபவம்.

இந்த அனுபவம் அற்புதமானது. இப்போது அதை நினைத்தாலும் புல்லரிக்கின்றது. விடுமுறை வந்தது. தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல வேண்டும். நான் தனியாகப் போவது அதுவே முதன்முறை. எனக்கு வழியோ தெரியாது.  நான் இருந்த ஊரில் இருந்து முதலில் பரேலிக்கு போய்தான் அங்கிருந்து என்னுடைய ஊருக்கு செல்ல வேண்டும். பரேலிக்குச் செல்ல மதுராவிற்குதான் சென்று பஸ்ஸை பிடிக்க வேண்டும். நான் மதுராவிற்குச் சென்றேன். அங்கு சென்றதும்தான் அனைத்து பஸ்சும் போய்விட்டது, இனி அடுத்த பஸ் மறுநாள்தான் கிடைக்கும் என்றார்கள். என் தந்தைக்கு போன் செய்தேன். அவர் அதை எடுக்கவில்லை. ஆகவே என்ன செய்வது எனப் புரியாமல் ரயில் நிலையத்துக்கு ஓடினேன்.  ரயிலும் இரவு பதினோரு மணிக்குத்தான் என்றார்கள். அது தெரியாமல் நான் ரயில் டிக்கட்டை வாங்கிவிட்டேன்.  டிக்கட்டில் அதை தந்த நேரத்தை பதிவு செய்து இருப்பார்கள்.  அதில் 7:20 எனப் போட்டு இருந்தது. அது தெரியாத நான்  ரயில் 7:20 க்கு புறப்படும் என நினைத்தேன். என் வாட்சிலோ மணி 7:15 எனக் காட்டியது. விழுந்து அடித்துக் கொண்டு ஓடினேன். பிளாட்பாரத்தை அடைந்தேன். அங்கு 7:20 க்கு புறப்பட ஒரு ரயில் தயாராக இருந்தது . அது பரேலி செல்லும் ரயில்தான் என்றார்கள் . ஆகவே ஓடிச் சென்று அதில் ஏறிக்கொண்டேன். ஒரே குளிரினால் எனக்கு ஜுரமே வந்துவிட்டது. நடுங்கிக் கொண்டே அமைந்தேன்.
அப்போது வெள்ளை தலைப்பாகை கட்டிக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் வந்து என்னிடம் பிச்சைக் கேட்க நான் அவரை திட்டி அனுப்பிவிட்டேன். அவரோ சிரித்துக் கொண்டே போய்விட்டார். வேறு எவரிடமும் பிச்சை கேட்கவில்லை. நான் தவறு செய்துவிட்டேனோ என நினைத்தேன். ஆனால் எனக்கு உடல் நலமின்றி தவித்ததைப் பார்த்த மற்ற பயணிகள் எனக்கு படுக்க இடமும் தந்து கம்பளியும் தந்து உதவினார்கள். அப்போது என் தந்தையிடம் இருந்து போன் வந்தது. நான் ரயிலில் பயணம் செய்வதைக் கூறிவிட்டு பரேலியில் வந்து அழைத்துக் கொள்ளுமாறு கூறினேன். அவர் கோபத்துடன் என்னை திட்டினார். இரவு பதினோரு மணிக்கு முன்னால் பரேலிக்கு ரயிலே கிடையாது எனும்போது   எந்த ரயிலில் பயணம் செய்கிறாய்? வேறு எங்கேனும் செல்லும் ரயிலில் ஏறி விட்டாயா எனக் கேட்க நான் பயந்துபோய் சக பிரயாணிகளை கேட்க அவர்களும் அது பரேலிக்கு அன்று முதல்தான் விடப்பட்டு உள்ள புதிய ரயில் என்றார்கள். நான் என் தந்தையிடம் அதைக் கூற  அவர் திடுக்கிட்டார். உடனே பரேலிக்கு வரத் தயார் ஆனார். எப்படி பரேலிக்கு வருவது. அன்று அவர் இருந்த ஊரில் இருந்து பரேலிக்குச் செல்ல அந்த நேரத்தில் ரயில் இல்லையே என்பதினால் பஸ்ஸில் வர பஸ் நிலையத்துக்கு செல்லக் கிளம்பினார்.
என்ன அதிருஷ்டம் அவருக்கு.  பஸ் நிலையம் செல்ல வண்டி கிடைக்கவில்லை. அன்று வாடகை வண்டிகள் பந்த் என்பதினால் அவை ஓடாதாம். என்ன செய்வது, பஸ் நிலையம் வெகு தூரத்தில் உள்ளதே என கவலைப்பட்டபடி ஒன்றும் புரியாமல் நடக்கலானார். வழியும் நல்ல வழி அல்ல. ஒன்பது மணிக்குள் பஸ் நிலையம் செல்லவில்லை எனில் பஸ்களும் போய்விடும். ஏன் என்றால் அது சிறிய ஊர். வெளிச்சம் அதிகம் இல்லாத அந்த இடங்களில் திருட்டு பயம் வேறு அதிகம் உண்டு. ஹனுமாரை வேண்டிக்கொண்டே நடக்கத் துவங்கினார். என்னுடைய தந்தை ஹனுமாரின் பக்தர்.  அப்போது அவரை நோக்கி ஒரு ஸ்கூட்டர் வந்தது. வந்தது திருடனோ என என் தந்தை பயந்துவிட்டார். ஸ்கூட்டரில் வந்தவர் அவர் பக்கத்தில் வண்டியை நிறுத்தி அதில் ஏறிக் கொள்ளுமாறு கூறினார். பயத்தினால் ஒரு மயக்கத்தில் இருந்த என் தந்தை அதில் ஏறிக் கொண்டார். இங்கு செல்கின்றோம் என்பதைக் கூடக் கூறவில்லை. அந்த ஸ்கூட்டரில் வந்தவர் நேராக பரேலியில் அவரை இறக்கி விட்டு, என்னை நன்றாக தொந்தரவு செய்து விட்டாய், பரேலி ரயில் நிலையம் பக்கத்தில்தான் உள்ளது விரைவாக நடந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.
அவர் போனதும்தான் என்னுடைய தந்தைக்கு உறைத்தது. அடேடே, வந்தவர் யார், அவருக்கு எப்படி நான் பரேலிக்கு போகிறேன் எனத் தெரியும்?. பரேலி அதிக தூரம் இல்லை என்றாலும் ஸ்கூட்டரில் எப்படி அத்தனை விரைவாக கொண்டு வந்து விட்டார்? யார் அவர்? புரியாவில்லை . அதன்பின்தான் அது ஹனுமானா அல்லது பாபாவா எனத் தெரியாமல் திடுக்கிட்டு நின்றார்.
சரி என்ன நடகின்றதோ நடக்கட்டும் என எண்ணிக் கொண்டே  பரேலி ரயில் நிலையத்தை அடைந்தார். அப்போது அவரிடம் ஒரு வெள்ளை தலைப்பாகை அணிந்த பிச்சைக்காரர் வந்து குடிக்க சிறிது தண்ணீர் கேட்டார். என் தந்தையும் வயதான அவருக்கு உதவ தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தார். ஆனால்  அந்த மனிதரைக் காணவில்லை. அங்கிருந்த மற்றவர்களிடம் அந்த பிச்சைக்காரரைப்  பற்றிக் கேட்க அவர்களோ தாம் அங்கேயேதான் ஒரு மணி நேரமாக இருப்பதாகவும் அப்படிப்பட்ட அடையாளத்துடன் எவருமே அங்கு வரவில்லை என்றார்கள். அதைக் கேட்ட என் தந்தைக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அழுதுவிட்டார். மனதார பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். அடுத்து நான் ஏறிவந்த ரயிலும் வந்து சேர்ந்தது. நானும் என்னுடைய தந்தையும் மகிழ்ச்சியுடன் ஊருக்குப் போய் சேர்ந்தோம். வழியில் அவர் தனக்கு நடந்ததைக் கூறினார். அவர் கூறிய அந்த மனிதரின் அடையாளத்தைக் கேட்ட நான் வெட்கி தலை குனிந்தேன். பிச்சைக்காரரைப் போல வந்துள்ள பாபாவுக்கு நான் தட்சணை தராமல் போனதற்கு வருந்தினேன். அவரிடம் மனதார மன்னிப்பும்  கேட்டுக் கொண்டேன். பாபா அன்று என்னுடைய தந்தைக்கு இரண்டு முறை தரிசனம் தந்து உள்ளார்.  என் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் அது. பாபாவின் கருணையை என்னவென்றுக் கூறுவது?

என்னுடைய  எட்டாவது  அனுபவம்.
என்னுடைய இரண்டாவது சீரடிப் பயணத்தில் என்னுடன் ஆலயத்துக்கு வந்த என் தங்கை தான் வகுப்பில் ஆறாவதாக வர வேண்டும் என்றும், அதற்கு பாபா உதவ முடியுமா எனவும் வெகுளித்தனமாகக் கேட்டாள். அவள் பரீட்சை முடிவு வந்தது. அவள் விரும்பியதைப் போலவே  அவள் வகுப்பில் ஆறாவதாக வந்திருந்தாள். அதன் மூலம் பாபா  அனைவருக்குமே தான் ஒரே மாதிரியாகவே உதவுவேன் என்பதை எங்களுக்குக் காட்டிவிட்டார்.

என்னுடைய ஒன்பதாவது அனுபவம்.

ஒரு நாள் என் வீட்டில் அலமாரியை ஒழித்துக் கொண்டு இருந்தேன். அதில் பாபா படம் போட்ட 1990 ஆம் ஆண்டு காலண்டர் ஒன்று கிடைத்தது. அதை என் தந்தையிடம் காட்டியபோது அவர் பாபா முதன் முதலில் எங்கள் வீட்டிற்குள் அந்தப் படம் மூலமே வந்துள்ளதாகக் கூறி மகிழ்ந்தார். அது என் பிறந்த வருடம். அதைக் கேட்ட என் மனதில் தோன்றியது நான் பிறந்தவுடன் பாபா என்னை காப்பாற்றவே எங்கள் வீட்டுக்குள் வந்திருந்தார். நான் அனைத்து பக்தர்களிடமும் கூறிக் கொள்வது என்ன என்றால் பாபா மீது முழு நம்பிக்கை வைத்தால் அவர் நம்மை கைவிடுவது இல்லை என்பதே .
ஓம் ஜெய் சாயி ராம்
ஹரிஷ் ஸ்ரீ வத்சவா
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.