Wednesday, December 1, 2010

You and Me are not different.




பாபா அனைத்தையும் அறிந்தவர் .அவர் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுபவர். இதோ அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை பெற்ற ராமராவின் கதையை படியுங்கள்.
மனிஷா

ராமாராவ் கூறினார் ' நான், என் மனைவி, என்னுடைய தங்கை மற்றும் அவரவர் குழந்தைகள் என பதினாலு பேர் சென்னை ஈஸ்ட் கோஸ்ட் சாலை என்ற இடத்தில் இருந்த பாபாவின் ஆலயத்துக்குச் சென்றோம்.
அது தனியாருக்குச் சொந்தமான ஆலயம் என்றாலும் அனைவரையும் வர விடுவார்கள். அது ஆரத்திக்கான நேரம். நான் மனதில் நினைத்தேன் 'ஆரத்திக்கு நேரம் ஆகிவிட்டது. அதை பார்த்துவிட்டுச் சென்றால் நன்றாக இருக்குமே'. ஆனால் என்னுடைய கருத்தை நான் மற்றவர்கள் மீது திணிக்க விரும்பவில்லை.
உள்ளே சென்ற நாங்கள் பதினைந்து நிமிடத்தில் வெளியில் வந்து விட்டோம். அங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோ தொலைவில் உள்ள முதலை பார்க்குக்குச் செல்ல முடிவு செய்து இருந்ததினால் அங்கு கிளம்பினோம். அங்கு சென்றதும் குழந்தைகளை இறக்கி விட்டோம். பெரியவர்கள் வண்டியிலேயே அமர்ந்து கொண்டோம். அப்போதுதான் என்னுடைய மருமகன் தான் பாபாவின் ஆலயத்தில் தனது புது காலணியை தவற விட்டுவிட்டு வந்ததை கவனித்தான்.

நான் சரி நீங்கள் விளையாடிக்கொண்டு இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன் எனக் கூறிவிட்டு அங்கு சென்று பாபாவின் ஆலயத்துக்குள் செல்லத் துவங்கினேன். என்ன அதிசயம். அப்போதுதான் பாபாவின் ஆரத்தி துவங்கியது. என் ஆசைப்படியே நான் அதில் கலந்து கொண்டு திரும்பி வந்தேன். என் மருமகனிடம், எப்போதும் நீ இப்படித்தான் செருப்பை தொலைத்து விடுவாயா எனக் கடிந்து கொண்டதற்கு அவன் , அன்றுவரை தான் ஒரு நாள் கூட செருப்பை மறந்தது இல்லை என்றும் என்று எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை எனவும் கூறினான். எனக்கு இருந்த ஆசையை பாபா நிறைவேற்றிவிட்டார். பாபா கூறுவார் 'நீயும் நானும் வேறல்ல' என்று. அது உண்மையோ?

(Translated into tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.