Wednesday, January 19, 2011

Sai Miracle Book- Launch of Kannada Edition.


அன்பானவர்களே
சாயி மகிமை என்கின்ற புத்தகம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடபட்டப் பிறகு தற்போது கன்னட மொழியில் வெளியிடப்பட்டு உள்ளது. சகோதரி ஆஷா லதா எழுதி உள்ள கடிதத்தைப் படித்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவும்.
மனிஷா

அன்புள்ள சகோதரி மனிஷா,
நம்முடைய சச்சிதானந்த சத்குரு சாயிபாபா 'சாயி மகிமை' என்கின்ற தன்னைப் பற்றிய புத்தகத்தை கன்னட மொழியில் வெளிவருவதற்கு நமக்கெல்லாம் அருள் புரிந்து உள்ளார் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆமாம் சாயியின் அருளினால் சாயியின் மகிமை என்ற புத்தகம் 2011 ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்டது. பாபா கூறுவார் '' நான் என்னுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வேன்"அவர் கூற்றின்படியே இந்த புத்தகமும் தன்னைப் பற்றிய புத்தகத்தை இன்னொரு இந்திய மொழியில் வெளியாக ஏற்பாடு செய்துவிட்டார்.
மகிமைகள்  என்ற இந்தப் புத்தகத்தை பெங்களூரில் உள்ள சாயி ஆன்மீக மையம் வெளியிட்டு உள்ளது. இது ஏற்கனவே தமிழ்தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது.  சாயி கூறி உள்ளது போல இந்தப் புத்தகம் அனைத்து மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்பதே நம் விருப்பமும். அது நடைபெற சாயி மா தனது லீலை மூலம் நமக்கெல்லாம் அருள் புரிவார் என நம்புகிறோம்.
சகோதரி, நான் இந்த விழாவின் அழைப்பிதழையும் அந்த விழாவில் எடுத்த புகைப் படங்களையும் உங்களுக்கு அனுப்பி உள்ளேன். அவற்றை அனைவரும் பார்த்து மகிழ நீங்கள் உங்கள் இணையதளத்தில்  வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியர் ரணதீர் குமாரை அணுகவும், இல்லை என்றால்  எனது முகவரியான  rashalatha@yahoo.co.in  என்ற id க்கு கடிதம் எழுதவும்.  
ஆஷா  லதா   
அழைப்பிதழும், புத்தகத்தின் முகப்பு அட்டையும் .
இதைப் பெரியதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்


அந்த விழாவில் எடுத்த புகைப் படங்களைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்




(Translated into Tamil by Santhipriya)

  

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.