Friday, March 18, 2011

Sai Baba's Omniscience -Experience by Sai Devotee



அன்பானவர்களே,
சாயிபாபா அனைத்து இடங்களிலும் உள்ளார் என்பதை எடுத்துக் கட்டும் இந்த சகோதரியின் அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா

ஒரு பக்தையின் அனுபவம்
'லோக சமஸ்த சுகினோ பவந்து'.  நான் வியாழக் கிழமை அன்று எங்கள் வீட்டின் அருகில் இருந்த சாயி ஆலயத்துக்கு சென்று இருந்தேன். ஆனால் அந்த ஆலய பண்டிதர் அதுவரை வரவில்லை. ஆகவே நான் அங்கேயே காத்து இருந்தேன்.
அப்போது நான் மனதில் நினைத்துக் கொண்டேன்,' பாபா எனக்கு அலுவலகம் செல்ல வேண்டும். வழியில் நிறைய வாகன நெரிச்சலினால் போக்குவரத்து நேரமும்  அதிகரிக்கும். என்ன செய்வது".  அப்போதுதான் அன்று பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்ய இருப்பதை  அறிந்தேன்.
பண்டிதர் வந்தார். பால் அபிஷேகம் துவங்கியது.  அந்த பால அபிஷேகம் ஏற்பாடு செய்து இருந்த அனைவரையும் அழைத்து அந்த பாலை பாபா மீது  ஊற்றுமாறு  கூறினார். நான் எழுது அலுவலகம் செல்லக் கிளம்பினேன். அப்போது அலுவலகம் செல்லக் கிளம்பிய என்னிடம் அவர்கள் வந்து என்னையும் அந்த அபிஷேகத்துக்கு அழைத்தனர். முதலில் நான் சற்று தயங்கினாலும் அவர்களின்  வற்புறுத்தலினால் பாலை எடுத்து பாபாவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தேன்.
அதை செய்தவுடன் எனக்கு மனதில் இனம் புரியாத நிம்மதி ஏற்படவே அலுவலகம் செல்வதை மறந்து அங்கேயே அமர்ந்துகொண்டு அபிஷேகம் முடியும் வரைப் பார்த்தேன். அலுவலகம் சென்றேன். என்ன ஆச்சர்யம் எவருக்குமே நான் தாமதமாக வந்தது தெரியவே இல்லை. அதைப் பற்றி எவரும் கேட்கவும் இல்லை.
ஆகவே அவருக்கு நன்றி கூறுவதற்காக  நான் மறுநாள் இன்னொரு சாயி ஆலயம் சென்றேன். அவர் சிலைக்கு மாலை அணிவிக்க விலை உயர்ந்த மாலையையும் வாங்கிச் சென்று இருந்தேன். 'நான் நினைத்தேன், பாபா நீ எங்களுக்கு அவ்வப்போது இல்லாமல் எப்போதாவது மட்டுமே உனது மகிமையை காட்டுகிறாய்.  எனக்கும் புரிகின்றது.  அடிக்கடி நீ உனது மகிமையை எங்களுக்குக் காட்டினால் அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் '.
அவருடைய கருணையைப் பெற நாம் பொறுமையோடுதான் காத்து இருக்க வேண்டும். அவரை நம்மிடம் அழைத்து வர நமக்கு உண்மையான பக்திதான் தேவை.  மகான்கள் கூறுவது போல கடவுள் அனைவரிடமும் நெருங்குவதும்  இல்லை. அது உண்மைப் போல அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை  மீண்டும் எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது.  
அன்று என்னைப் பார்க்க வந்த நண்பர் ஒருவர் ஹனுமானின் பிரசாதம் என்று கூறி குங்குமத்தை தந்தார்.  அன்று ஹனுமாருக்கு உகந்த நாள்.  அன்று மாலை சாயி ஆலயம் சென்றேன். அந்த ஆலயத்தில் சாயி சிலையுடன் ஹனுமாரின் சிலையும் இருந்தது. சாயியை வணங்கியப் பின்  ஹனுமாரை வணங்கச் சென்றேன்.
அந்த ஆலயத்தில் பக்தர்களை சுவாமியின் சிலையை தொட்டு வணங்க அனுமதிப்பது இல்லை. பண்டிதர்கள் மட்டுமே சிலையைத் தொடலாம். மற்றும் சிலைக்கு மாலைகளை அணிவிப்பதோ, அலங்கரிப்பதோ பழக்கம். அப்போது அங்கு மூன்று மாலைகளை எடுத்துக் கொண்டு அங்கு வந்திருந்த பக்தர் ஒருவர் அதில் இருந்த பெரிய துளசி மாலையை என்னிடம் தந்து அதை ஹனுமாருக்கு போடுமாறு  கேட்டுக் கொண்டார். என்ன அதிசயம் என்னை அந்த மாலையை போட பண்டிதர் அனுமதித்தார். என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல எனக்கு புல்லரித்தது.  ஹனுமாரின் நாளில் அவருக்கு மாலை அணிவிக்க பாபாவின் ஆலயத்தில் எனக்கு வாய்ப்பு வந்ததை பார்க்கும்போது நமது உண்மையான பக்தியை இறைவன்  ஏற்றுக் கொள்வார் என்பது எத்தனைப் பெரிய உண்மை என்பதை உணர்ந்தேன் . 
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.