Friday, April 15, 2011

Shirdi Sai Baba 100 Year Old Painting and Wallpaper


அன்பானவர்களே
நான் இன்று சகோதரர் கவுசிகன் அவர்கள் அனுப்பி உள்ள சாயி பாபாவின் படத்தை வெளியிட்டு உள்ளேன்.  இந்தப்  படம் 'பிவுபுரி' சாயி ஆலயத்தில் உள்ள 100 வருட முந்தைய  சாயி பாபாவின் படத்தை தழுவி வரையப்பட்டது. நான் ஏற்கனவே 'பிவுபுரி' சாயி ஆலயத்தைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு உள்ளேன். ஆனாலும் அதை படிக்காதவர்கள் கீழ் காணும் செய்தியை கிளிக் செய்து மீண்டும் அதைப் படிக்கலாம்.

'பிவுபுரி' சீரடி சாயிபாபா ஆலயம்: - இங்கே கிளிக் செய்து படிக்கவும்.


'பிவுபுரி' சீரடி சாயிபாபா ஆலய படங்கள் : -  இங்கே கிளிக் செய்து பார்க்கவும் 

ஆலயத்தைப் பற்றிய எண்ணங்களை தெரியப்படுத்த : -  இங்கே கிளிக் செய்யவும்

இனி இந்த படத்தைப் பற்றிய விவரத்தைப் படிக்க திரு கவுசிகன் எழுதி உள்ளதைப் பார்க்கவும்.
சாயிராம்
மனிஷா
-------------------------------------------------------------
சாயி பாபாவின் காலடிக்கு எனது வந்தனம்.
பிவுபுரி சாயி ஆலயத்தில் சாயி பாபா உயிருடன் இருந்தபோது அவருடைய  ஆலோசனைகளை ஏற்று வரையப்பட்டு அந்த ஆலயத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்கு முந்தைய சாயி பாபாவின்  படத்தை மீண்டும் மறு பதிப்பு செய்து வெளியிட விரும்பிய ஒரு பக்தரின் விருப்பத்தை ஏற்று  அதை செய்து கொடுத்தேன்.
அதையே நான் சுவர் படமாக வெளியிட்டு உள்ளேன். அனைவரிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்ன என்றால்  இதை மீண்டும் வேறு மாதிரி மாற்றி அமைத்து வியாபார ரீதியாக பயன்படுத்தாமல் உங்களுடைய சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே.  எங்களுடைய  நியாயமான வேண்டுகோளை மதித்து வேண்டுகோளை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன் ,
கவுசிகன்
கொலம்போ
www.graffixxsolution.com



ஆலயத்தில் உள்ள உண்மையான  படம்




அதை மீண்டும் சற்று மாற்றி அமைத்து வரையப்பட்ட படம்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.