Thursday, July 14, 2011

Sai Baba's Assurance-Experience of a Sai Devotee.


 

ஜெய் சாயி ராம்.
அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள். பாபா நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவருடைய அன்பும் ஆழமானது. ''நீ உன்னுடைய துயரத்தை என்னிடம் விட்டுவிடு. அதை நான் பார்த்துக் கொள்கிறேன் '' என்பது உண்மை என்பதை சாயியின் பக்தர்கள் தெரிந்து கொண்டு இருப்பார்கள். அவர் மீது நம்பிக்கை வைத்தால் அவருடைய குழந்தைகளின் துயரங்களை எந்த நிலையிலும் அவர் வந்து காப்பார் என்பது திண்ணம். தேவையான நேரத்தில் அவர் தமது பக்தர்களின் துயரத்தை துடைக்க ஓடி வருவார் என்பதை பெயர் கூற விரும்பாத இந்த சகோதரியின் கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மனிஷா

---------------------
ஒரு பக்தையின் அனுபவம் 
 
பாபாவுடனான பக்தர்களின் அனுபவத்தை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வெளியிட்டு சிறப்பான சேவையை செய்து வருகிறீர்கள். முன்னர் மூன்று முறை பாபா அவ்வப்போது எனக்கு உதவி செய்து உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் எனக்கு புதிய வேலை கிடைத்தது. அது கிடைத்தால் என்னுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பங்கீட்டுக் கொள்வதாக வாக்கு தந்து இருந்தேன். ஆகவே அதை இப்போது எழுதுகிறேன்.
நான் என்னுடைய அலுவலகத்தில் முதலில் உங்களுடைய இணையதளத்தை திறந்து பார்த்தப் பின்னர்தான் வேலை செய்வதை துவங்குப்வேன். எனக்கு என்னுடைய அனுபவத்தை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. மதிய உணவு இடைவேளையில் நான் அவுரன்காபாத்தை சேர்ந்த என்னுடைய நண்பருடன் பாபாவைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பேன். ஆனாலும் என்னுடைய அனுபவத்தை எழுதுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். போன மாதம் அலுவலகத்தின் பொருளாதார பிரச்சனைக் காரணமாக என்னை வேலையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். அப்போதுதான் எனக்கு பாபாவிற்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. பாபாவிடம் நான் வேண்டுவது எல்லாம் வேலைகளை இழந்துவிட்ட என்னுடைய மற்ற நண்பர்களுக்கும் வேலைக் கிடைக்க அருள் புரியுங்கள் என்பதே. இதோ என்ன அனுபவம்.
நான் பாபாவைப் பற்றி சிறு வயதிலேயே தெரிந்து வைத்து இருந்தேன். அவர் பஜனைகளைக் கேட்பது ஆனந்தமாக இருக்கும். எனக்கு திருமண வயதாகியது. திருமணத்துக்கு வரனை தேடிக்கொண்டு இருந்தார்கள். நான் என்ன பெற்றோர்களுக்கு கீழ்பட்டு நடப்பவள். ஒரு நாள் என்னுடைய மாமாவுக்கு தெரிந்த ஒருவர் எனக்கு ஒரு சாயிபாபாவின் சிலையை எனக்கு தந்துவிட்டு என்னை மணக்க விரும்புவதாகக் என் வீட்டில் கூறினார். அதற்கு முன்னால் நான் அவரை மணக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. ஆகவே பாபாவே எனக்கு கிடைத்து விட்டதினால் நான் பாபாவின் மீது பாரத்தை போட்டுவிட்டு அவர் என்ன முடிவு எடுக்கின்றாரோ அது நடக்கட்டும் என விட்டுவிட்டேன். தான் சிலையாக என்னிடம் வந்ததின் மூலம் எப்போதும் தான் எனக்கு துணையாக இருப்பேன் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் என்பதை பின்னால் நான் உணர்ந்தேன்.
அதன் பின் என் வருங்கால கணவர் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் சென்றதும் அவர் வீட்டில் இருந்து பல பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டன. அவர்கள் கல்யாணத்தை நிறுத்த விரும்பினார்கள். பல இடையூறுகளுக்குப் பின் திருமணம் முடிந்து அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு சென்றதும் முன்னர் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த என்னுடைய பழைய நண்பரை சந்தித்தேன். அவரும் எனக்கு ஒரு சாயிபாபாவின் சிலையை கொடுத்தார். ஆகவே எனக்கு நடக்க இருந்த அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் பாபா துணையாக இருந்தார் என்பது தெரிந்தது. என்னுடைய கணவர் நல்லவர்தான் என்றாலும் நான் அமெரிக்காவிற்கு வந்ததும் அவர் தன்னுடைய வீட்டினரின் ஆதிக்கத்தினால் என்னை கொடுமைப் படுத்தத் துவங்கினார். எனக்கு ஏற்பட்ட கொடுமைகளை விவரிக்க முடியாது. ஆகவே நான் வெறுப்பு அடைந்து பாபாவின் படங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தேன். பாபாவை மனதில் திட்டினேன். எனக்கு பொருந்தாத இந்த திருமணத்தை ஏன் எனக்கு நடத்தி வைத்தாய் என என் மனதில் அவரை திட்டிக் கொண்டு இருந்தேன். ஆனால் பாபாவின் இரண்டு வார்த்தைகளான நம்பிக்கை & பொறுமை என்பது உண்மையே என்பது நடந்தது.
என்னுடைய ஒரு நண்பர் பாபாவின் பதினோரு வாக்குறுதிகள் அடங்கிய காலண்டரை எனக்கு தந்தாள். அதை வைத்து இருந்தபோது அவள் பிரச்சனைகள் தீர்ந்தது என்று கூறி என்னையும் அதை வைத்துக் கொள்ளுமாறு கூறினாள். நானும் வேலை தேடிக்கொண்டு இருந்தேன். மெல்ல மெல்ல அனைத்தும் எப்படியோ போய் கொண்டு இருந்தன. தற்போது ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. பாபா கொடுத்த சகிப்புத் தன்மையினால் பல ஏற்ற இறக்கங்களுடன் என்னுடைய வாழ்கை ஓடிக் கொண்டு உள்ளது. திருமண வாழ்க்கையில் மாறுதல் ஏற்படத் துவங்கி உள்ளது. பாபாவை நம்பினால் அவர் கைவிடுவது இல்லை என்பது புரிகின்றது. அவர் தான் எப்போதும் நமக்கு உதவுகிறார். ஒரு தாயைப் போல நமக்கு ஆறுதல் தருகிறார். நீங்களும் அவரை நம்பினால் அற்புதமான அவருடைய அனுபவத்தைப் பெறுவீர்கள்.
நான் அவரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். நன்றி பாபா நன்றி.
பெயர் கூற விரும்பாத சகோதரி.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.