Wednesday, July 6, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 14.


அன்பானவர்களே
பக்தர்களின் பக்தி பெறுகும்போது பாபாவின் அருளும் பெருகுகின்றது என்பதை தினம் தினம் பார்க்கும் நாம் அதை மீண்டும் விளக்கும் இந்த அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா

முதல்  லீலை
எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் . ஒருமுறை என்னுடைய பாட்டி என்னை மயிலாப்பூரில் இருந்த சாயிபாபாவின் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று இருந்தாள். சீரடி ஆலயத்தைப் போலவே ஆலய சன்னதி அமைப்பு இருந்தது. பாபா இருந்த இடத்தின் இரண்டு புறமும் இரண்டு கண்ணாடிக் பேழைகள் இருந்தன. அங்கு சென்று இருந்தபோது வலது பக்கத்தில் இருந்த கண்ணாடி பேழைக்குள் சாயிபாபா நின்று கொண்டு இருந்தது போல சில நிமிடங்கள் எனக்கு தோன்றியது. அது உடனே மறைந்து விட்டது. என்னுடைய அம்மாவின் வழி தாத்தாக்களின் வீடு அந்த ஆலயத்தின் அருகில்தான் உள்ளது. ஆகவே நான் அங்கு எப்போதாவது போகும்போது சாயி ஆலயத்துக்கும் போவது உண்டு. நான் பெரியவன் ஆனதும் கூட அங்கு சென்று சாயி ஆலயத்துக்கும் சென்று கொண்டு இருந்தேன். ஆனால் அந்த காட்சி மீண்டும் எனக்கு கிடைக்கவில்லை.
2007 ஆம் ஆண்டு. புதன் கிழமை. நான் அந்த ஆலயத்துக்கு சென்று இருந்தேன். மிகவும் களைப்பாக இருந்தது. நான் அவரை வணங்கிவிட்டு கஷ்டப்பட்டு எழுந்தபோது யாரோ என்னை தூக்கி விட்டதைப் போல ஸ்பரிசம் இருந்தது. உடம்பெல்லாம் புல்லரித்தது. அது பாபாவின் ஸ்பரிசமோ என்று நினைத்தேன். அன்று மாலை நான் பாபாவின் ஒரு இணையதளதை படித்துக் கொண்டு இருந்தபோது ஒரு பக்தர் ஒரு ஆலயத்தில் தன்னை பாபா தூக்கி விட்டதைப் போல உணர்ந்ததைப் பற்றி எழுதி இருந்தார். எனக்கு ஏற்பட்ட அதே சம்பவம் பற்றி நான் படித்தபோது அதிசயமாக இருந்தது . அடுத்த நாள் நான் சாயியின் ஆலயத்துக்கு சென்றேன். அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. அப்போதுதான் அது வியாழன் கிழமை என்பதை உணர்ந்தேன். ஆகவே நேரமாகி விடும் என நினைத்து சாயியை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். பாபா எனக்கு உன் அருள் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த ஆலயத்தில் இருந்து என்னுடைய அலுவலகம் ஒரு கிலோ மீடர் தொலைவில்தான் இருந்தது. அதில் இருந்த ஆட்டோ டிரைவர் வெள்ளை நிற டிரஸ் அணிந்து இருந்தார். அதில் ஏரி உட்கார்ந்ததும் என் அலுவலகம் இருந்த இடத்தின் அருகில் நிற்கச் சொன்னேன். வழியில் மனதில் பல விதமான யோசனைகள் . நான் அமர்ந்து இருந்ததே எனக்கு தெரியாது. என்னை இறக்கி விட்டதும் தன்னுடைய சகோதரன் வீடு அருகில்தான் உள்ளது என்றும் தான் அங்கு செல்ல வேண்டும் என கூறி விட்டு அவசரமாக அவர் கிளம்ப நான் அவனுக்கு பன்னிரண்டு ரூபாய் - ஒரு பத்து ரூபாய் - மற்றும் இரண்டு ரூபாய் நாணயத்தை கட்டணம் கொடுத்தேன். அவர் 'உன்னை கடவுள் காப்பாற்றுவார்' எனக் கூறிவிட்டு சென்றார். நான் சாலையைக் கடந்து விட்டு திடீரென மனதில் எதோ உறுத்த அந்த ஆட்டோ டிரைவரை திரும்பிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. அங்கு பல ஆட்டோக்கள் இருந்தன. அனைத்து டிரைவர்களும் காக்கி உடை உடுத்தி அவர் மட்டும் ஏன் வெள்ளை உடையும் தலைப் பாகையும் அணிந்து இருந்தார்? நான் நினைத்துப் பார்த்தேன். அந்த டிரைவர் முகம் நினைவில் வந்தது. சாயி போலவே அவர் முகம் இருந்தது....அதேபோல உடை உடுத்தி இருந்தார். ஒ......சாயிபாபாவே என்னுடன் வந்து எனக்கு அருள் புரிந்து உள்ளார்.
அன்று நான் சாயி சரித்திரத்தை படிக்க எடுத்தேன். அதில் ஒரு பக்கத்தை காகிதம் வைத்து மார்க் செய்யப்பட்டு இருந்தது. அதில் இருந்த கதையை படித்தேன். ஒரு ஆறு. அதன் கரையில் அமையும் அதன் குட்டிகளும் இருந்தன. ஆமைகள் தனது பிள்ளைகளுக்கு பால் தருவது இல்லை. அன்பும் காட்டுவது இல்லை. ஆனால் தாய் ஆமை குட்டிகளை திரும்பிப் பார்க்கும்போது அங்கு கருணை தெரிகின்றது. அதுவே இன்பம். அடுத்து படித்தேன். அதில் பாபா தான் இரண்டு ரூபாய் நாணயத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாக எழுதப்பட்டு இருந்தது. அதாவது நம்பிக்கை மற்றும் பொறுமை. ஆக நான் அந்த டிரைவரிடம் தந்த இரண்டு நாணயங்களின் அர்த்தமோ அது ?
என்னொரு சம்பவம். நான் ஒரு வியாழர் கிழமை என்னுடைய தொலைபேசியை தொலைத்து விட்டேன். என்னுடைய தாயார் என்னை திட்டினார். அது மிகவும் விலை உயர்ந்தது. நான் நினைத்துக் கொண்டேன் அதை எடுத்தவன் மீண்டும் அதை திருப்பித் தந்துவிட்டால் நலமாக இருக்குமே. அதற்கு பாபாதான் உதவ வேண்டும். என்ன ஆச்சர்யம் ஒரு வாரம் பொறுத்து அடுத்த வியாழர் கிழமை பாபாவின் ஆலயத்துக்கு சென்றேன். அந்த மொபைல் பாபாவின் சன்னதியில் கிடந்தது. அதை என்னவென்று கூறுவது?

இரண்டாவது லீலை
நான் டென்னிஸ் விளையாட்டு பயிற்சி எடுத்துக் கொண்டு வீடு வந்தேன். வரும்போது நினைத்தேன்  என்னுடைய தந்தைக்கு மூன்றே வாரத்தில் வேலை கிடைத்ததைப் போல மூன்றே  வாரங்களில் எனக்கும் வேலை கிடைக்க வேண்டும். அது உண்மை  என்றால் இன்று மாலை வானத்தில் சூரிய அஸ்தமனம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அன்று மாலை நான் நினைத்ததைப் போல சூரியன் இளம் சிவப்பு நிறத்தில் மறைய நான்  அதை புகைப்படம் பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னுடைய மொபைல் சரியாக வேலை செய்யவில்லை என்பதினால் அதை படம்  பிடிக்க முடியவில்லை. அதன் பிறகு நான் மொபைலில் விளையாத அதை எடுத்தேன் .ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. ஆகவே மறுநாள் நான் என்னுடைய இன்னொரு மொபைலை எடுத்துக் கொண்டேன். அதில் சில  செய்திகள் இருந்தன. அதில் ஒரு செய்தி 'சாயி' என இருந்தது. அதை திறந்து பார்த்த நான்  அதிர்ந்து  நின்றேன். நான் முதல் நாள் மாலை எடுத்த அதே புகைப்படம் என்னுடைய பழைய மொபைலில் இருந்து அதில் செய்தியாக வந்துள்ளது. அது பாபாவின் மகிமையே.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.