Friday, July 29, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 15


அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள். நம்மை அனைத்து நேரங்களிலும் பாபா கண்காணித்துக் காப்பாற்றுகிறார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவர் ஒருவர் அவருடைய அருளை புரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு பேரானந்தம் கிடைக்கும். கீழே மூன்று அன்பர்களின் அனுபவங்களை வெளியிட்டு உள்ளேன்.
மனிஷா

---------------------

லீலை-1

நான் சாயியின் பக்தர். அவருக்கு என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாபா ஒரு மருத்துவராகி எனக்கு கர்மாவை விலக்க வழி செய்யும்போது மற்ற பக்தர்களுக்கும் அதை செய்ய மாட்டாரா என்ன?
அவர் என்னுடைய வாழ்க்கையில் தினம் தினம் நடத்திக் காட்டிய ஒரு அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த கொடிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் கொடுப்பாரா இல்லையா என்பது தெரியாது என்றாலும் பிரச்சனை எழும்போதெல்லாம் அவர் எனக்கு மிகக் குறைந்த அளவிலான வேதனை கிடைக்கும் அளவிலேயே வைத்து என் பிரச்சனைகளை முடிக்கின்றார்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். பூர்வ ஜென்ம கர்மாவோ எதுவோ தெரியாது நான் கடந்த ஐந்து வருடங்களாக தினமும் சரியான நேரத்தில் காலையில் இயற்கை உபாதைக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறேன். நான் பச்சை காய்கறிகள் , எளிதில் ஜீரணம் ஆக பல விதமான மருந்துகள் , பழங்கள் என எதை சாப்பிட்டாலும் பலன் இல்லை.
காலை சரியாக இந்த இயற்கை உபாதையை கழிக்க முடியாததினால் அலுவலகம் போகும் முன் அல்லது போன உடனே என கழிவறையை தேட வேண்டி வந்தது . நான் செல்லும் வழியில் அந்த உபாதை எழும்போது வழியில் எங்கு கழிப்பிட வசதி உள்ளதோ அங்கேயே இறங்கிக் கொண்டு கழிவறையை நோக்கி ஓட வேண்டி இருந்தது. இதனால் என்னால் எந்த வேலையையுமே சரிவர செய்ய முடியாமல் இருந்தது. நான் பாபாவிடம் சரண் அடைந்தப் பின் எனக்கு நல்ல முடிவு வந்தது. அலுவலகம் செல்லும் முன்னால் அல்லது காலையிலேயே என்னால் இயற்கை உபாதையை விலக்கிக் கொள்ள முடிந்தது. அது மட்டும் அல்ல எனக்கு பாபாவின் அருளினால் நல்ல அலுவலகத்தில் வேலையும் கிடைத்தது. அங்கு நல்ல கழிப்பறை வசதிகள் உள்ளன. முன்னர் எல்லாம் நான் எங்கு தேர்வுக்குச் சென்றாலும் முதலில் கழிவறை வசதி நல்ல முறையில் உள்ளதா எனப் பார்த்தப் பின்னரே தேர்வு அறைக்கு செல்வது உண்டு. இல்லை என்றால் தேர்விற்கு செல்லாமலேயே வீடு திரும்பி விடுவேன். இவை அனைத்துமே கர்மாக்களின் வினைகள்தான் என்றே நான் நினைக்கின்றேன்.
சாயியின் அருளினால் நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிந்தது. அவர் ஒரு மருத்துவர் போல எனக்கு உதவி உள்ளார். நாம் விரும்பியபடி வாழ்வதற்கு நமக்கு சாயியைத் தவிர உதவி செய்யக் கூடியவர்கள் யாராக இருக்க முடியும்?
நாம் சாயிபாபாவிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பது முக்கியம் அல்ல. அவரிடம் நாம் முழுமையான அன்பை செலுத்தி வந்தாலே அது போதும். அவர் அனைத்து இடங்களிலும் உள்ளார். பாபா கூறுவது உண்டு. 'நான் என்னுடைய கடவுளின் உண்மையான வேலையாள் '. அவரே கடவுள் என்னும்போது அவர் ஏன் அப்படிக் கூறினார்? அவரைத் தவிர வேறு கடவுள் யாரும் உள்ளனரா? கடவுள் ஏன் பலவிதமான துயரங்களைக் கொண்ட உலகை படைத்தார், அதை நீக்க கார்மாக்கள் எனும் ஒன்றையும் கூறி வதைக்கின்றார் என நான் வருந்துவது உண்டு.
பாபா நீ ஒருவர் மட்டுமே கடவுளாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இத்தகைய நிலையை படைத்து இருக்க மாட்டாய். பாபா நீயே கர்மாக்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவரும் பரமாத்த்மா உள்ளார் என்பதை உணர வைக்க வேண்டும். எங்கள் வாழ்கை நலமாக இருக்க நீயே அருள் புரிய வேண்டும்.

ஓம் ஷீரடி வாசாய வித்மஹே
சத்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

லீலை- 2
சாயியும் விஞ்ஞானமும்

நான் துபாய்க்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. நான் துபாய்க்கு வந்து சேர்ந்த இரண்டாம் நாளே சென்னையில் இருந்த என்னுடைய சகோதரரின் இரண்டு வயது மகள் டெங்கு ஜுரத்தினால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளாள் என்றும் அவள் இன்னும் 4 அல்லது 5 மணி நேரமே உயிருடன் இருப்பாள் என்றும் செய்தி வந்தது. அவளுடைய நோயின் தன்மையைக் கருதி அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என மருத்துவர் கூறி விட்டாராம். என்னால் உடனடியாக துபாயில் இருந்து மீண்டும் செல்ல முடியாது. ஆகவே சாயியை அவள் உடல் நலம் அடைய வேண்டிக் கொண்டேன்.
நான் என்னுடன் நரசிம்ஹா சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதி இருந்த சாயி புத்தகத்தை எடுத்து வந்து இருந்தேன். அது 700 -800 பக்கங்களைக் கொண்டது. அதில் நான் 75 பக்கமே படித்து முடித்து இருந்தேன். மன வருத்தத்தைக் குறைக்க அதை எடுத்து நான் பிரித்தேன். ஏதேற்சையாக நான் திறந்த அந்த பக்கத்தில் சாயிபாபா கூறிய இந்த வாசகம் இருந்தது. '' கவலைப் படாதே, குழந்தை பிழைத்து விடும்''. அதைக் கண்ட நான் வியப்பு அடைந்து அதை மீண்டும் மீண்டும் படித்தேன். பல இடங்களிலும் சென்று நின்றவாறு மீண்டும் மீண்டும் அதைப் படித்தேன். என் மனதுக்கு புரிந்தது, நிச்சயமாக சாயிபாபாவின் அருளினால் குழந்தை பிழைத்து விடும். அது போலவே அடுத்த 2 அல்லது 3 நாட்களிலேயே குழந்தை மீண்டும் பிழைத்து நல்ல நிலைக்கு வந்தது.
இதை விஞ்ஞானத்தினால் விளக்க முடியாது. நான் 75 பக்கங்களே படித்து இருந்த புத்தகத்தை அன்று திறந்தபோது ஏன் அந்த வாசகம் கொண்ட பக்கம் எனக்கு வர வேண்டும்? அதைப் படித்ததும் சற்று நேரத்தில் இறந்துவிடும் என மருத்துவர்கள் கூறிய இறக்க இருந்த குழந்தை பிழைத்ததான தகவல் கிடைத்தது? இது புரியாத புதிர்
எஸ். ஸ்ரீதர், சென்னை
சாயியின் அடிமை

லீலை-3
நான் சிறு வயது முதலேயே பாபாவின் படத்தை பூஜை அறையில் பார்த்து உள்ளேன். அவரையும் சிவன், விஷ்ணு போன்ற கடவுள் என்றே நினைத்து இருந்தேன். ஆனால் அவர் நம்முடன் வாழ்ந்து உள்ள மனிதர் என்பது தெரியாது. நான் 7 வது வகுப்பு படிக்கையில் என்னுடைய ஆசிரியர் பாபா 1918 ஆம் ஆண்டுவரை வாழ்ந்ததாக கூறினார். அது முதல் நானும் பாபாவின் பக்தரானேன்.
நான் B.Tec படித்து முடித்துவிட்டு இன்னொரு வகுப்பில் சேர்ந்தேன். என்னுடன் மேலும் இருவர் படித்தார்கள். அதில் ஒருவள் அருகிலேயே இருந்தாள். இன்னோருவள் வீடு செல்ல சுமார் 40 நிமிடம் ஆகும். அவளும் சாயியின் பக்தையே . என்னுடைய தாயாரும் தந்தையும் அவரவர்களின் அலுவலகங்களில் மும்முரமாக பணி ஆற்றி வந்ததினால் குருபூர்ணிமா அன்று சாயியின் ஆலயத்துக்கு என் தோழிகளுடன் செல்ல முடிவு செய்தபோது என் பெற்றோர்களுக்கு கூறவில்லை. குருபூர்ணிமாவுக்கு முதல் நாள் என்னுடைய ஒரு தோழி தான் வகுப்புக்கு வருவேனா இல்லையா என்பதை பின்னர் கூறுவதாகவும், இன்னொரு தோழி தன்னுடைய திட்டத்தைப் பற்றி பின்னர் தெரிவிப்பதாகவும் செல்போன் மூலம் தகவல் அனுப்பி இருந்தார்கள். ஆகவே என்னால் சாயியின் ஆலயத்துக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக் குறி எழுந்தது. மனம் வருந்தியது. நான் பாபாவை வேண்டினேன். பாபா என் தோழிகளுடன் நான் வந்தால் எனக்கு பச்சை நிற சால்வையில் காட்சி தர வேண்டும். அப்படி வேண்டிக் கொண்டு முடித்ததும் அடுத்த ஒரு நிமிடத்தில் இரண்டு தோழிகளிடம் இருந்தும் தாங்கள் வருவதாக மீண்டும் செய்தி வந்தது.
மறுநாள் குளித்துவிட்டு பதினோரு மணிக்கு பாபாவின் ஆலயம் சென்றோம். வாயிலில் பிச்சை கேட்ட ஒருவருக்கு பதினோரு ரூபாய் தானம் பின் ஆலயத்தில் நுழைந்தோம். பாபாவின் உடல் முழுவதும் பூக்களால் மூடப்பட்டு இருந்தது. முகம் மட்டுமே தெரிந்தது. அவர் என்ன உடை அணிந்து இருந்தார் என்பது தெரியவில்லை. அவரை சரியாக காண முடியவில்லையே என நான் வருந்தினேன். வரிசையில் நின்று வணங்கிய பின் நகர்ந்தோம். பாபாவின் பாதத்தில் இருந்து பூவை எடுக்க என் தோழி மறந்து விட்டதினால் அடுத்த சன்னதிக்கு சென்றவள் பூவை எடுத்து வர மீண்டும் அங்கு சென்றாள். யதேர்சையாக அவள் பாபாவை பார்த்தபோது அவர் தோள்பட்டை தெரிந்தது. அதில் அவர் போட்டு இருந்த பச்சை நிற சால்வையும் தெரிந்தது. அதை அவள் வந்து கூற நான் ஓடிச் சென்று பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என் விருப்பத்தை பாபா நிறைவேற்றி விட்டார்.
வீடு வந்த நான் அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன். பாபா எனக்குக் கூறுவது போல இருந்தது '' உன் எண்ணத்தை நிறைவேற்றாமல் என்னுடைய துவாரகாமாயியில் இருந்து எப்படி உன்னை போக வைப்பேன்?''
பாபா நான் உன்னை மனதார நேசிக்கின்றேன். எனக்கு உன் அருள்தான் என்றென்றும் தேவை.

குறிப்பு: கட்டுரையின் சுவையைக் கருதி பக்தர்களின் கட்டுரையின் காணப்படும் அளவிற்கு மீறிய சில அலங்காரமான வார்த்தை உபயோகப் பகுதிகளை தவிர்த்து உள்ளேன். அதற்கு வருந்துகிறேன்.
NOTE : In the translated version I have avoided certain lines of the articles which were highly narrative and diluted the impact of the article. I regret the said act.

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.