Friday, August 12, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 16.


அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்.   பாபா தனது குழந்தைகள் மீது எத்தனை அன்பு வைத்து உள்ளார் என்பதை இந்த அனுபவங்கள்  உணர்த்தும். தனது பக்தர்களுக்கு ஏற்படும்
சோதனைகளை பாபா  எப்படி நிவர்திக்கின்றார் என்பதும் இதன் மூலம்  புரியும்.
மனிஷா


லீலை  1:

பாபா என் தந்தையின் உயிரைக் காப்பாற்றினார் 
முதலில் நான் பாபாவிற்கு மானசீகமாக வணக்கங்களை தெரிவிக்கின்றேன். இன்று என்னுடைய தந்தை நல்லபடியாக இருக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் பாபாவின் அருள்தான். அந்த அனுபவத்தைதான் இன்று எழுதி உள்ளேன்.
1998 ஆண்டு நடந்தது இது. நான் சிறியவள். எங்களுடைய  குடும்ப வாழ்கை நன்கே சென்று கொண்டு இருந்தபோது  ஒரு முறை  என் தந்தை உடல் நலமின்றி ஆனார். மெல்ல மெல்ல உடல் நிலை மோசமானது. முதலில் கால் முட்டிகளில் வலி என்று கூறிக் கொண்டு இருந்தவர் சில நாட்களில் அது அதிகமாவதைக் கண்டார்.  அவருக்கு இருமலும் ஏற்பட்டது. அவர் துப்பினால் ரத்தமும் வந்தது, உடலில் வெள்ளையாக திட்டுப் போல ஏற்படலாயிற்று. நாங்கள்  அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் சில சோதனைகளை செயுமாறுக் கூறினார்.
சோதனைகள் முடிந்ததும் என்னுடைய தந்தை தன் நண்பர் ஒருவருடன் சென்று அந்த சோதனை விவர அறிக்கையை வாங்கி வரச் சென்றார். அந்த அறிக்கையை கண்டதும்  நாங்கள் அனைவரும் திடுக்கிட்டோம்.  அவருக்கு வந்திருந்த நோய்  ரத்த  புற்று நோய் எனத் தெரிந்தது.  அதைப் பார்த்த மருத்துவர்களும்  அவருக்கு  வந்துள்ள வியாதி இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகவும் இனி அதிகபட்ஷம் மூன்று மாதங்களே அவர் உயிருடன் இருப்பார் எனவும் கூறினார். என் தாயார்  பாபாவின் தீவீரமான பக்தை என்றாலும்  அதைக் கேட்டு  நிலை குலைந்து போனாள். எங்கள் குடும்ப சொந்தக்காரர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பி விட்டோம். என்னுடைய தாயார் பெங்களூரில் மருத்துவராக இருந்த என்னுடைய ஒரு மாமாவிடமும்  அதைப் பற்றிக் கூற அவர் உடனே என் தந்தையை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு வருமாறு கூறினார். நானும் என்னுடைய சகோதரனும் எட்டே வயதான சிறியவர்கள் என்பதினால் என்ன நடகின்றது எனத் தெரியாமல் இருந்தோம். எதோ வியாதி என்பது மட்டுமே தெரிந்தது. ஆனால் கான்சர் என்றால் என்ன, எங்கள் தந்தைக்கு வந்துள்ளது என்ன வியாதி என்றெல்லாம் தெரியாது.  என் பெற்றோர்கள் உடனே பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார்கள்.
நாங்கள் எங்களுடைய பாட்டி தாத்தாவுடன் இருந்தோம். என் பெற்றோர்கள் பெங்களூருக்கு சென்றார்கள். அவரை ஒரு மருத்துவ மனையில் சேர்த்து இருந்தார்கள். அங்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டு இருந்தது. ஒரு வருடம் ஆயிற்று. எங்களால் எங்கள் பெற்றோர்களை அத்தனை நாட்கள் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அழுதோம். வேறு என்ன செய்வது. எங்கள் வாழ்கையில் மிக சோதனையான கட்டம்  அது.
எங்களுடைய அனைத்து சொந்தக்காரர்களும் அங்கு சென்று தந்தையை பார்த்து விட்டு ஆறுதல் கூறுவார்கள். என் தாயார் அழுத வண்ணமே இருந்தாள் . அவள் பாபாவிடம் பக்தி கொண்டு அவரை பிரார்த்தனை செய்து வந்தாலும் அவளால் சோகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சில நேரத்தில் என் தந்தையின் உடல் நிலை மிக மோசமாகும். மயக்கம் போட்டு விழுவார். அவருக்கு 40 -50  பாட்டில்கள் ரத்தம் கூடத் தேவைப்பட்டது.
ஆனாலும் சில நாட்களில் அவர் சற்று குணம் அடைந்து மருத்துவ மனையில் இருந்து  வெளியேறி வீடு வந்து சேர்ந்தார். அவர் மருத்துவ மனையில் இருந்தபோது தாய் மற்றும் தந்தையின் உறவினர்கள் பலரும் ரத்தம் தந்து  உதவினார்கள். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தார்கள். ஆனால் வீடு வந்தவருக்கு திடீரென மலேரியா காய்ச்சலும்  வந்துவிட்டது. நாங்கள் மீண்டும் பீதி அடைந்தோம்.
என் தாயார் பாபாவின் மீதான நம்பிக்கையை விடவில்லை. அவள் பிரார்த்தனை தொடர்ந்தது. மெல்ல மெல்ல என் தந்தையின் உடல் நிலை சீராயிற்று.  மருத்துவம் தொடர்ந்தது. மருத்துவ அறிக்கையில் அவர் வியாதி குணமாகிக் கொண்டு வந்ததைக் கண்டார்கள். அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள். மெல்ல மெல்ல உடல் நிலை தேற இன்று அவர் பூரண குணம் அடைந்து நலமாக உள்ளார். அதற்குக் காரணம் பாபாவின் அருளே. அதை சின்ன வயதில் நான் உணரவில்லை. காரணம்  பாபா யார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் அவள் பாபா என்பவரை வணங்கித் துதிப்பதை மட்டும் பார்த்து இருக்கின்றேன்.  நாளடைவில் என் தாயார் அவரைப் பற்றி எனக்குக் கூறினாள்.
என் தந்தையை மீட்டுக் கொடுத்த பாபாவுக்கு நான்  நன்றி கூற வேண்டும். எனக்கு அவர் அதைவிட வேறு என்ன பெரிய பரிசு தர முடியும்?  பாபா எங்கள் துயரங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு நிவாரணம் தருகிறார் என்பதை உணருகிறேன். பாபா உனக்கு நன்றி. நீங்கள் எப்போதுமே எங்களுக்கு அருள் புரிந்தவாறு இருக்கின்றீர்கள்.  நாங்கள் செய்யும் தவறுகளை மன்னித்து  உங்கள் வாக்கை வேத வாக்காகக் கொண்டு வாழ எங்களுக்கு  சக்தி கொடுங்கள்.
அனந்த  கோடி  பிரும்மானந்த  நாயக   ராஜாதிராஜ  யோகிராஜ்  பரப் பிரும்ம ஸ்ரீ  சச்சிதானந்தா  சத்குரு  சாயிநாத்  மகாராஜ்  கி  ஜெய்  !!!


லீலை  2: 
சீரடிக்கு சென்றபோது  நடந்த அற்புதம் 

1979 ஆண்டு நானும் என்னுடைய நண்பன் ஆனந்த் என்பவனும் மும்பையில் இருந்து சீரடிக்கு மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டோம்.  மறுநாள் காலை பத்தரை மணிக்கு சீரடியில் ஆரத்திக்கு செல்ல முடிவு செய்தோம்.
மாலை ஆயிற்று. சீரடிக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும் எனும்போது  நாங்கள்   பயணம் செய்த வண்டியில் எதோ கோளாறு ஏற்பட்டதை  உணர்ந்தோம். வண்டியில் எதோ ஒரு  சப்தம் வந்து கொண்டு இருந்தது.  மாலை நேரம் ஆகி விட்டதினால் மெதுவாக ஓட்டிக் கொண்டுஅருகில் இருந்த கிராமத்தை அடைந்தோம். மறுநாள் சீரடி ஆரத்திக்கு  எப்படி  செல்வது என யோசனை செய்தவாறு வண்டியை சரி செய்து கொடுக்க யாராவது கிடைப்பார்களா எனத் தேடினோம். ஐந்து நிமிடமாயிற்று. ஒரு வெள்ளை உடை அணிந்த முதியவர் எங்களை நோக்கி வந்தார். எங்களிடம் என்ன ஆயிற்று எனக் கேட்டு அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று  இளைப்பாருமாரும் தான ஏதாவது வண்டி  பழுது பார்பவரை  அழைத்து வருவதாகவும் விடியற் காலை எழுந்து சீரடிக்கு செல்லலாம் என்றும் கூறினார்.
அந்த கிராமத்திலேயே வண்டிகளை பழுது பார்த்து சரி செய்பவர் இருந்தார். அவரை அழைத்து வந்தப் பெரியவர் எங்கள் வண்டியை சரி செய்து தந்தார். மறுநாள் விடியற் காலை கிளம்பி  சீரடியை அடைந்து பாபாவின் ஆரத்திக்கும் சென்றோம். திரும்பும் வழியில் நன்றி கூறுவதற்காக அந்த கிராமத்தில் எங்களுக்கு உதவியவரை தேடினோம். அப்படி எவருமே அங்கு கிடையாது என்று அவர்கள் கூறினார்கள். அப்படி என்றால் எங்களுக்கு உதவியது யாராக இருக்கும்? பின்னர்தான் தெரிந்தது பாபாவே வந்து எங்களுக்கு உதவி உள்ளார் என்பது.
ஸ்ரீராம்
சஞ்சய்    


லீலை 3:
சாயியின் அருள்- ஒரு அனுபவம்

நான் சஹாரா டெலிவிஷனின்  கேளிக்கை பிரிவில் வேலை செய்து வருகின்றேன்.  நானும் பாபாவின் பக்தனே. நான் நம்மைப் போல உள்ள சாயி  பக்தர்களின் அனுபவங்களை படித்து வருகிறேன். சமீபத்தில் அதில் வெளியாகி இருந்த சாயியின் லீலை என்ற ஒரு கட்டுரையை படித்தவுடன் என் கண்களில் நீர் நிறைந்தது.  அதில் சகோதரி ஒருவர் தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எழுதி இருந்ததை படித்தவுடன் எனக்கும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. காஷ்மீரில் உள்ள என் வயது 42 ஆகின்றது.  நான் 10 வயது முதலேயே சாயியின் பக்தன்.
இந்த பூமியில் நல்ல காரியத்தை செய்தால் அவர்களை பாபா நிச்சயம் ஆசிர்வதிக்கின்றார் என்பது உண்மை. 2004 ஆம் வருடம் என் கணவர் மற்றும் மகனுடன் சீரடிக்கு சென்று தரிசனம் செய்தேன். அதன் பின் பல முறை அங்கு செல்ல விரும்பினாலும்  போக முடியவில்லை.
யாருக்காவது உதவி என்றால் அதை நான் செய்வது உண்டு. ஒரு நாள் நான் சாலை விபத்தில் ஒருவர் காயம் அடைந்து கைகள் ரத்தம் சொட்டக் கிடந்தார். ஆனால் யாருமே சென்று அவரைக் காப்பாற்றவில்லை.  முதலில் நானும் தயங்கினேன் என்றாலும் முடிவாக தைரியம் அடைந்து அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி பெறச் செய்தேன். அந்த நல்ல காரியத்தை நான் செய்த்திநாளோ என்னவோ அடுத்து ஒருவாரம் பாபா தினமும் எனக்கு கனவில் வந்து காட்சி தந்தார்.  ஆனால் சீரடி செல்ல வேண்டும் என்ற  என் ஆசை நிறைவேறவில்லை. என்னுடைய தோழி ரமா என்பவள் சீரடிக்கு சிலருடன் செல்ல ஏற்பாடு செய்து இருந்தால். அவர்களில் ஒரு பெண்ண கடைசியில் வரவில்லை என்று கூறிவிட ரமா என்னை அழைத்தாள். எனக்கும் உன் மகனுடன் சீரடிக்கு வரவேண்டும் என '' சீரடி பாபா கூறுகிறார்'' என்ற பாபாவின் புத்தகத்தில் இருந்து அவருடைய பதில் கிடைத்துக் கொண்டே இருந்தது. ஆகவே நான் குருபூர்ணிமாவுக்கு ராமாவுடன் கிளம்பிச் சென்றேன். அன்று  என் கனவில் நான் பச்சைநிற சேலை உடுத்திக் கொண்டு அதே நிறப் போட்டியும் நெற்றியில் வைத்துக் கொண்டு இருந்தது போல காட்சியைப் பார்த்தேன். நான்   அவர் ஆலயத்துக்கு சென்று இருந்தபோது ஏலத்தில் பாபாவின் பச்சை நிற சால்வை எனக்குக் கிடைத்தது. குருபூர்ணிமா தினத்தன்று என்னுடைய கணவரின் பிறந்த நாள். ஆகவே அதை பாபாவின் ஆசிர்வாதமாகவே நினைத்தேன்.  நான் சீரடியில் இருந்து திரும்பி வந்ததும் எனக்கு பல நன்மைகள் ஏற்பட்டன. நாம் செய்யும் நல்ல காரியங்கள் நமக்கு நல்ல கர்மாவை தருகின்றன . தன்னுடைய பக்தர்களை பாபா  கைவிடுவது இல்லை.
என்னுடைய அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த பாபா, உனக்கு நன்றி பாபா நன்றி.
அஞ்சு கவுல்


லீலை-4
என் நண்பருக்கு  பாபா பிள்ளை வரம் தந்தார்.
என்னுடைய ஒரு நண்பர் தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என கடந்த எட்டு வருடமாக குறைப்பட்டுக் கொண்டு அழுதார். நான் அவளிடம் 'கவலைப்படாதே, சாயிக்கு தேங்காய் பிரசாதம் படைத்து விடு. உனக்கு அவர் நிச்சயம் அருள் புரிவார் ' என்று கூறினேன்.  ஒருநாள் வியாழர் கிழமை நாங்கள் இருவரும் சாயி பாபாவின் ஆலயத்துக்கு சென்றோம்.
அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. வரிசையில் நாங்கள் நின்று இருந்தபடி  பாபாவை தரிசிக்க சென்று கொண்டு இருந்தோம். இருந்தோம். பூசாரி அங்கு தென்படவில்லை. ஆகவே என்ன செய்வது எனக் குழப்பமாக இருந்தது. நாங்கள்  வரிசையில் நடந்தபடி பாபாவின் சன்னதியை அடைந்தபோது எங்கிருந்தோ இருந்து பூசாரி வந்தார். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் அந்த தேங்காயைக் கொடுத்து  அதை பாபாவின் பாதத்தில் வைத்து விட்டுத் தருமாறு கேட்க அவரும் அதை செய்து  தந்தார். அதை வீட்டிற்கு  எடுத்துச் சென்று உணவு தயாரித்து அவளும் அவள் கணவரும் உண்டார்கள். அவள் ஒன்பது வார விரதத்தையும் துவக்கினாள். அது முடிவதற்குள் அவள் கர்பிணியாக ஆன நல்ல செய்தியை என்னிடம் கூறி பாபாவுக்கஇம்  நன்றி கூறினால். இரண்டு மாதம் ஆயிற்று. அவளுக்கு சக்கரை வியாதி வந்துவிட இன்சுலின் போட்டுக் கொள்ளும்படி ஆயிற்று. ஐந்தாவது மாதம் மஞ்சள் காமாலை  நோய்  வேறு  வந்துவிட்டது.  அவள் வெறுத்துப் போனாள். ஆனால் நான் 'பாபா உன் பொறுமையை சோதிக்கின்றார்...கவலைப் படாதே , அவர் உன்னைக் கைவிட மாட்டார்' என ஆறுதல் கூறினேன்.  கடைசியாக அவளுக்கு போன மாதம் அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. பாபாவின் அருளினால் அனைத்தும் நல்லவிதமாக முடிந்தது.
பாபாவின் கால்களில் தலை வைத்து வணங்குகிறேன்
N. ப்ரியா 


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.