Sunday, December 25, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 24



அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்.
இன்று பாபாவின் பலதரப்பட்ட அனுபவங்களை சிலர் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். எப்போதாவது ஒருநாள் பாபாவின் குழந்தைகளாகிய நாம்  பாபா நம்மை என்றுமே கைவிடுவதில்லை என்பதை உணருகிறோம். அவரவருக்கு தேவையான நேரம் எது என்று பாபா கருதுகிறாரோ அப்போது அவரே முன் வந்து நம்மைக்  காப்பாற்றுகிறார்.
முதல் அனுபவம் நமது தளத்தை தொடர்ந்து படித்து வருபவர் எழுதியது . அதில் ஐந்து புகைப்படங்களை அனுப்பி தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். நான் இத்தனை படங்களை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை.
மனிஷா
---------------
ஒரு அனுபவம் 



அன்புள்ள சகோதரி

நான் பாபாவின் இந்த லீலையை நான் உங்களுடன்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பலதரப்பட்ட படங்களைப் பார்த்த எனக்கு நானும் அப்படி எதையாவது வரைய  நினைத்தும் அதை செய்ய முடியாமல் என் மனம் வெறுமையாகவே இருந்தது. அதனால் பாபாவை மனதார வேண்டிக் கொண்டபோது எனக்கு ஒரு நல்ல கருத்து கிடைத்தது.
இங்குள்ள படத்தைப் பாருங்கள். அதில் உள்ள படத்தின் விவரம் கீழே தந்துள்ளேன்.
18 என்பது சாயிபாபாவின் சமாதி வருடமான 1938 என்பதைக்  குறிக்க 51 என்பது சாயி சரித்திரத்தின் பாகத்தைக் குறிக்கும். நான் இதை என் குடும்பத்தினருக்கு காட்டினேன். என் சகோதரன் அதைப் பார்த்துவிட்டு வியந்து நிற்க என் தந்தையோ அதில் சிறிது மாற்றத்தை செய்தார். மோட்ஷம் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் சொல்லாக இருக்காது என்பதினால் அதை அமைதி என மாற்றினார். ஆகவே என்னுடைய எந்த முயற்சி ஒரு மைல் கல் அல்ல, இது புன்முறுவல் கல் .
எவை  அனைத்தையும் பாபாவே  என்னுள் இருந்து செய்துள்ளார். அவரை வேண்டுபவர்களின் வேண்டுகோளை அவர் நிறைவேற்றுகிறார். அவர் நமக்கு உதவுவாரோ  இல்லையோ, நமக்கு ஏற்படும் அனைத்துமே கர்ம வினைப் பயன் என்பதினால் பாபாவை யாரும் தவறாக எடுத்துக் கொள்வது இல்லை. .
கடவுளே மனிதர்கள் மற்றும் உயிர் இனங்கள் அனைத்தையும் பாதுகாக்கின்றார்.சாயியே   நம்மைக் காப்பவர், கடவுள், ஏழை பணக்காரன், எந்த ஜாதி, என்ன நிறம், என்ன குலம்  என எதையும் பார்க்காமல் அனைவரையும் ஒன்றுபோலவே நடத்தி அருள் புரிபவர். இந்த உலகில் உள்ள அனைத்து துன்பத்திற்கும் வழி  வேண்டும் என்றால் அனைவரிடமும் நாம் அன்பு செலுத்தி வெறுப்பை விலக்கிக் கொள்ள வேண்டும்.
மன அமைதி கிடைக்க அனைவரிடமும் அன்புடன் இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும். பாபா அனைவரையும் ரட்ஷிக்கட்டும்.
சாயியை வணங்கி துதிப்போம்.
-----------------
இன்னொரு  அனுபவம்  
 
 

அன்புள்ள மனிஷா
சாயிபாபாவுடனான என்னுடைய இந்த அனுபவத்தை பிரசுரிக்கவும். நான் நேற்றுதான் உங்களுடைய உடல் நலம் பற்றி விவரம் கேட்டு e மெயில் மூலம் கடிதம் அனுப்பினேன். அதன் பின் என்னுடைய பிரச்சனையில் கவனம் சென்றது. நாம் அனுபவிப்பது அனைத்துமே பூர்வ ஜென்ம கர்மாக்களின் விளைவே என்பதை உணர்ந்தேன். நான் என்னுடைய தந்தையின் மூக்குக் கண்ணாடியை வாங்கச் செல்ல வேண்டும். இருட்டாகி விட்டது. குளிர்காலம் என்பதினால் வீதியில் வெளிச்சம் அதிகம் இல்லை. நான் ஏதாவது ஆட்டோ  கிடைக்குமா எனப் பார்த்தேன். அப்போது ஒரு ஆட்டோ என் அருகில் வந்து நின்றது. நான் போக இருந்த தூரத்துக்கு 80 முதல் 100 ரூபாய் வரை அதிக கட்டணம் கேட்பார்கள். என்ன செய்வது என யோசனை செய்தபடி எத்தனை வேண்டும் எனக் கேட்டதும், அவனோ  50 ரூபாய் என்று கூறினான் . நான் பாபாவின் கருணையை எண்ணி வியந்தேன். ஆட்டோவில் அமர்ந்து கொண்டதும்தான் தெரிந்தது . அவனும் பாபாவின் பக்தன். வண்டி முழுவதும் பாபாவின் படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன . நான் அவனிடம் சற்று தள்ளி அமருமாறு கூறி விட்டு அவற்றை என்னுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நான் செய்திருந்த பூர்வ ஜென்ம புண்ணியத்தினால்  இந்த ஆட்டோ கிடைத்துள்ளது என எண்ணினேன்.  நான் இறங்கும்போது அவனுக்கு அவன் கேட்டதை விட அதிகமாக போட்டு 60 ரூபாய் தந்தேன். அவன் நன்றியுடன் அதை பெற்றுக் கொண்டு சென்றான். பாபாவை ஆத்மார்த்தமாக வணங்கினால் நடப்பது அனைத்துமே நல்லபடியாகவே இருக்கும் என்பதையே எது காட்டியது .
சாயிராம்.
(Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.