Sunday, December 4, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 22.........continued

சாயிபாபாவின்  அருள் 

2. "ஸாயி எனக்கு ஒரு புதுவாழ்வு அளித்து, 
மீண்டும் என்னை முகம் மலர‌ச் செய்தார்!"

"ஒரு ஸாயி அன்பர் சொல்கிறார் --

அன்பார்ந்த மனீஷா அவர்களுக்கு,
உங்க‌ள‌து சேவைக்கு நான் மிக‌வும் ந‌ன்றியுடையவளாவேன்.எனக்குத் தேவையான போதெல்லாம் ஒரு சக்தியை இந்த‌ வ‌லைத்த‌ள‌ம் ‌கொடுத்திருக்கிற‌து. என‌து மோச‌மான‌ நேர‌ங்க‌ளில் இந்த‌த் த‌ள‌ம் எப்ப‌டியெல்லாம் உதவி புரிந்திருக்கிற‌து என்ப‌தைச் சொல்ல‌ வார்த்தைக‌ளே இல்லை.
ஸாயியின் பூர‌ண‌ ஆசியால் நிக‌ழ்ந்த‌ என‌து இந்த‌ அனுப‌வ‌த்தை இங்கே ப‌கிர்ந்து கொள்கிறேன்.
நான் ஒருவ‌ரை ம‌ண‌க்க‌ விரும்பினேன். ஆனால், அவ‌ர‌து பெற்றோர்க‌ள் எங்க‌ள‌து திரும‌ண‌த்துக்கு ஒப்புக்கொள்ள‌ ம‌றுத்து விட்ட‌ன‌ர். அத‌ற்கு அவ‌ர்க‌ள் கொடுத்த‌ ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ள்:
1. நான் குள்ள‌ம்.
2. என‌து மூக்குக் க‌ண்ணாடி அணிந்து உள்ளவள்
3. என‌து க‌ண்க‌ளின் நிற‌ம் [ப‌ச்சை]
நாங்க‌ள்  அவர்களை எவ்வ‌ள‌வோ ச‌மாதா‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றும், ஒவ்வொரு முறையும் அவ‌ர்க‌ள் ம‌றுத்து விட்ட‌ன‌ர். மிகுந்த‌ ம‌ன‌ அழுத்த‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ என‌து நிலையைக் க‌ண்ட‌ என‌து பெற்றோர், மீண்டும் அவ‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ விரும்புவதாக த‌க‌வ‌ல் அனுப்ப‌, அத‌ற்கு அவ‌ர்க‌ள், 'எந்தப் பக்கம் நீ பார்க்க விரும்பவில்லையோ, அந்தப் பக்கம் ஒருபோதும் போக நினைக்காதே'எனச் சொல்லி என்னுடைய பெற்றோரை சந்திக்க மறுத்து விட்டதும் அல்லாமல்
நான் விரும்பிய‌ அந்த‌ ந‌ப‌ருக்குத் த‌குந்த‌ ஜோடியைத் தேட‌த்  துவங்கினார்கள்.  நானும், 'அந்த‌ ந‌ப‌ரும்' எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அனைத்து வழிமுறைகளையும் உபயோகித்துப் பார்த்தும் எங்களுக்கு உதவ  ஒருவ‌ரும் முன் வ‌ர‌வில்லை. அத‌ன் பின்னர் ஒரு பக்கம்  நான் விரும்பிய நபரின் பெற்றோர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளைக் கைவிடாமல் 'தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவருக்கு கடவுளும் உதவி செய்வார் ' என்ற நம்பிக்கையில் நான் கடவுளை வேண்டத் துவங்கினேன்.
'மனிதர்கள் நியாயமான வேண்டுகோளை நிராகரிக்கும்போது  க‌ட‌வுள் நிச்ச‌ய‌மாக உதவி செய்வார் ; இல்லையென்றால், இல்லை என்றால் உலகில்  ம‌னித‌ர்க‌ளின் ஆட்சியே மேலோங்கிப் போய்விடும்.  கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் கண்டிப்பாக எங்களுக்கு உதவி செய்ய வருவார், அப்படி அவர் இல்லை என்றால் , இந்த உலகில் நற்செயல்கள் செய்வதற்கான அர்த்தம் இல்லாமல் போய் விடும்' எனவும் நம்பத் தொடங்கினேன். எங்களது பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்க்க வேண்டும் என நான் பிச்சை எடுப்பது போல பிரார்த்தித்தேன். 'எல்லாருடைய சம்மதத்துடனும் எங்களது திருமணம் நடந்து நாங்கள் இன்பமாக வாழ அருள் புரிய வேண்டும்' என நான் வேண்டினேன்.
‌ஒருநாள் இரவு, யாரோ என்னைப் பெயர் சொல்லி அழைப்பது போலக் உணர்ந்தவள் என் எதிரில்  ஸாயிபாபா அங்கே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 'நீ விரும்புவ‌து போலவே நிச்சயம் நடக்கும்' என அவர் சொன்னார். சட்டெனக் கண் விழித்த நான், அது ஒரு கனவு என உணர்ந்தாலும், அது ஏற்படுத்திய அதிர்வலைகளை மிகத் தீவிரமாக உணர்ந்தேன். அதன் பிறகு நான் சற்று மனதிடம் அடைந்தாலும்  அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள்  மேலும் மோசமாகிக் கொண்டே இருந்தன. ஆகவே நாங்கள் இருவருமே . 'எங்களைப் பற்றி இனி எவரிடமும் பேசக்கூடாது எனவும், அனைத்தையும் ஸாயிராம் மீதே போட்டு விட்டு, எங்களுக்கு எது நல்லதென அவர் நினைக்கிறாரோ அதையே அவர் நடத்தட்டும்' என  முடிவு செய்தோம்.
அதற்க்கு இடையில் பாபா என்னுடனேயே இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாகப் பல சமிக்ஞைகள் தந்தார்.
திடீரென எனக்கு 'உதி' கிடைக்கப் பெற்று, எனது கண்களும் ஸாயி மஹிமையினால் சரியாகின. [இதைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்].
எனது திருமணத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனது தாயாரிடம் ஸாயிபாபா என் கனவில் கூறிய செய்தியை சொல்ல, இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பார்க்கலாம் என அவர் முடிவு செய்தார். நிலைமை மேலும் மோசமானது. ஒரு வியாழக்கிழமை காலையில், நான் விரும்பியவரின் தாய் மரணமடைந்த செய்தி கேட்டுக் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன். [அதே சமயம், தனது பெற்றோரே சகலமும் தனக்கு என எண்ணிக் கொண்டிருக்கும் 'என்னுடையவருக்கு' என்ன ஆகுமோ எனும் எண்ணமும் தோன்றியது.] நான் சற்று சுயநலம் பிடித்தவளாகத்தான் ஆனேன் [என்னை மன்னியுங்கள் பாபா; இப்படி நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை] ஆனால் உடனே என் தவறை உணர்ந்து வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அந்தக் குடும்பத்தினருக்கு  தேவையான பலத்தைக் கொடுக்குமாறு பாபாவை வேண்டிக் கொண்டேன். 'அந்தத் தாயின் சம்மதம் இல்லாமல், இப்போது எப்படி இந்தக் கல்யாணம் நடைபெற முடியும்?" என பாபாவை நான் கேள்வியும் கேட்டேன்.
அதை அடுத்து ஒரு அதிசயம் நிகழ்ந்தது! 'அவருடைய'குடும்பத்தினர் என்னைச் சந்திக்க விரும்புவதாக ஒரு பத்து நாட்களுக்குள் எனக்குச் செய்தி கிடைத்தது! தனது கடைசிக் காலத்தில், இந்தத் திருமணம் நிகழ்ந்தேற வேண்டுமென அந்தத் தாய் விரும்பி , மற்றவர்களையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தாராம்! [நாங்கள் இருவரும் இதுபற்றி எவரிடமும் பேசவில்லை]. ஸாயி நிகழ்த்திய அற்புதமே இது! இருபது நாட்களுக்குள் எங்களது திருமண நிச்சாயதார்த்தம் நடத்தப்பட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் எங்களது கல்யாணமும் நிகழ்ந்தேறியது.
ஸாயிபாபாவின் மஹிமையினாலேயே எங்களது திருமணம் நிகழ்ந்தது. அவரே இந்தப் புது வாழ்வை எனக்கு அளித்தார். 'கடவுள் நம் வேண்டுகோளை நிறைவேற்றுவார் ' என்பதையும் காட்டினார். இன்று என் கணவரின் தாய் உயிரோடு இல்லை. அவர் இல்லாத வெறுமையை எங்களது வாழ்வில் உணர்கிறோம். ஆனால், நான் புகுந்த வீட்டினரின்  உறவினர்கள் என் மீது காட்டும் அன்பைப் பார்க்கும்போது, என் பெயரைக் கேட்டாலே கோபமுற்றவர்களா இவர்கள் என்பதை என்னால் நம்பவே இயலவில்லை. காலம் அனைத்தையும் சரி செய்கிறது. அவரது தாயாரின் இனிய நினைவுகளுடன் எங்களது வாழ்க்கையை நடத்திக் கொள்ள இப்போது முயன்று வருகிறோம்.
‌ஸாயிராம் ஒருவரே அவருடைய லீலைகளை அறிந்துகொள்ள‌த் தக்கவர்.
ஸாயிராம்... உங்களை நான் மிகவுமே நேசிக்கிறேன்; என் வாழ்வில் நீங்கள் வந்தமைக்கு மெத்த வந்தனங்கள்; எப்போதுமே என் கூடவே இருக்க அருள் புரியுங்கள்!
நேசிக்கிறேன் பாபா.... மிகமிக அதிகமாக உங்களை நேசிக்கிறேன்!
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய்......!!
Translated into Tamil by: Sankarkumar
Edited and published by : Santhipriya

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.