Sunday, January 29, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28/...... continued

 சாயிபாபாவுடனான
"பாபா எப்போதும் எங்கும் இருக்கிறார்!"
ஸாயிராம்.
எனது பெயரைத் தெரிக்க வேண்டாம் என விரும்புகிறேன். 'ஒரு ஸாயி அடியவர்' என மட்டுமே குறிப்பிடவும். ஸாயி எனது பிரார்த்தனைகளை மீண்டும் கேட்டார்.
சகோதரி மனிஷா அவர்களே,
எப்படி இருக்கிறீர்கள்? எனது இந்த அனுபவத்தைத் தயவு செய்து வெளியிடுங்கள். ஸாயி லீலையை நான் இங்கு அளிப்பது இது மூன்றாம் முறை. எனது மின்னஞ்சல் முகவரியைத் தயவு செய்து வெளியிட வேண்டாம். ஸாயி தனது குழந்தைகளுக்கு இன்னொரு ஸாயி குழந்தையான உங்கள் மூலம் உதவி புரிகிறார். ஸாயிராம் வழியாக நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அனுபவம் 1 :
முன்னதாக பாபா எனது சகோதரியின் நுரையீரல் கட்டி அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றினார் என்னும் செய்தியை ஸாயி லீலையில் தெரிவித்திருந்தேன். நேற்று அவரது மருத்துவரிடம் பரிசோதனைக்காகவும், ஆறு மாதங்களுக்குப் பின்னரான 'ஸ்கேன்' எடுப்பதற்காகவும் சென்றார்.
பாபாவின் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருப்பினும், இந்தப் பரிசோதனை குறித்து நான் பதட்டமாகவே இருந்தேன். அன்பான ஸாயி மாதாவிடம் நான் பிரார்த்தனை செய்து, சோதனை முடிவுகள் சாதகமாக வந்தால், இந்தத் தளத்தில் இதுபற்றி எழுதுவதாக உறுதி கொடுத்தேன். நமது ஸாயி மிகவும் கருணையுள்ளவர். தமது பக்தர்களின் நெருக்கடியான நேரங்களில் அவர் எப்போதுமே கூட இருக்கிறார். முடிவுகள் நலமாகவே வந்தன. மேலும் ஆறு மாதங்களுக்குப் பிறகு மருத்துவர் வரச் சொல்லியிருக்கிறார். ஸாயிநாதா! உங்களுக்கு என் வந்தனங்கள். மிகவுமே நேசிக்கிறேன் உங்களை, பாபா.....

அனுபவம் 2 :
ஒருமுறை நான் எனது அத்தை வீட்டுக்குச் சென்றேன். ஸாயிநாதரைப் பற்றிய பேச்சு எங்களது சம்பாஷணையில் வந்தது. ஸாயிபாபா மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவராக அந்த சமயத்தில் அவர் இருந்தார். ஒருமுறை அத்தையும், அவரது கணவரும் ஷீர்டி சென்றனர். ஸாயிபாபாவின் தரிசனத்துக்குச் சென்றபோது, பாபாவின் உருவச்சிலைக்கு முன்பாக நின்றபோது, 'நீங்கள் இருப்பது உண்மையெனில், யாரேனும் ஒரு பக்தரின் கைகளால் எனக்கு ஒரு ரோஜாப்பூ கிடைக்க வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டார். அப்போது நமது ஸாயி என்ன செய்தார் தெரியுமா? ஸாயி மூர்த்தியின் அருகில் நின்றுகொண்டிருந்த பண்டிட்ஜி ஒரு ரோஜாப்பூவை எனது அத்தையின் கணவரிடம் கொடுத்தார். பிறகு மேலும் சில மலர்களை எனது அத்தைக்கும் கொடுத்தார். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அன்று முதல் அவர் பாபாவின் தீவிர பக்தையாக மாறிவிட்டார். எவ்வளவு அழகான ஸாயிலீலை இது?

அனுபவம் 3 :
புனித நாளில் பாபா எனது இல்லம் வந்தார்....

ஸாயி ஸத்சரிதத்தில், ஹேமந்த்பந்த்தின் வீட்டிற்கு ஒரு புனித நாளன்று ஸாயி வந்த லீலையைப் படித்திருக்கிறேன். புனிதமான பௌர்ணமி நாளன்று பாபா ஹேமந்த்பந்த்தின் இல்லத்துக்கு வந்த அதிர்ஷ்டத்தை, அந்த அத்தியாயத்தைப் படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.
அதன் பிறகு நான் அதுபற்றி மறந்து போனேன். ஒரு புனித நாளன்று, பாபாவுக்குப் பூஜை செய்ய நினைத்து, அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். வெளியில் சென்றுதான் பூக்கள் வாங்க வேண்டுமென்பதால், அப்படியே செய்தேன். திரும்பி வந்து கதவைத் திறந்ததும், ஸாயி ஸன்ஸ்தானிலிருந்து வந்த ஒரு 'கவர்' இருந்தது. மிகவும் மகிழ்வுடன் அதை எடுத்து உடனே திறந்து பார்த்தேன்.
ஒரு ஸாயி படமும், சில 'உதி' பொட்டலங்களும் அதில் இருந்தன. மிகவும் சந்தோஷத்துடன் நான் ஸாயி மாதாவுக்குப் பூஜை செய்தேன். ஸாயி ஸன்ஸ்தானத்திற்கு எப்போதோ நான் நன்கொடை அனுப்பியது நினைவுக்கு வந்தது. எனவே அவர்கள் இப்போது பிரஸாதம் அனுப்பியிருக்கிறார்கள் என நினைத்தேன். இதுவா பாபாவின் சங்கல்பம்?
ஏனெனில், காலை 7 மணிக்கு எந்தத் தபால்காரரும் வந்து கடிதம் தந்திருக்க முடியாது. எனது பணிப்பெண்ணை விசாரித்தேன். அந்தப் புனித நாளைக்கு முன் தினம் அந்தக் கடிதம் வந்ததாகவும், அதைத் தர தான் மறந்துபோனதால், இன்று காலை [நான் பூக்கள் வாங்கச் சென்றிருந்த நேரத்தில்]வந்து, கதவின் பூட்டில் வைத்துச் சென்றதாகக் கூறினாள். புனிதமான பௌர்ணமி நாளன்று எனக்கு அது கிடைக்க வேண்டும் என்பதே ஸாயியின் சங்கல்பமாக இருந்திருக்கிறது.
பூரண நம்பிக்கையுடன் ஸாயியை வேண்டினால், அவர் நிச்சயம் தமது குழந்தைகளுக்குத் தருவார்.
ஸாயி அனைத்துக் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பராக.
அனந்தகோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ பரப்ருஹ்ம ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்.
ஸாயி மகள்.
(Translated into Tamil by Sankar Kumar)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.