Friday, June 8, 2012

My Real Experience Of Sai's Presence-Devotee Basant Agarwal

எனது உண்மையான பாபா தரிசனம் 


(Translated into Tamil by Mrs. Ramya) 

ஜெய் சாயி ராம்
அனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்.
சாயி சரித்திரத்தில், பலமுறை உரைக்கப்பட்டதை போல, பாபா தம் குழந்தைகளை காக்க தக்க சமயத்தில் வருகிறார் . இன்றும் அது எத்தனை உண்மை. அதற்கு சான்றாக கீழே உள்ள அனுபவம் பசந்த் அகர்வால் அவர்களால் பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளது .ஜெய் சாயி ராம் .
சாயி ராம்
மனிஷா 
 
----------------------------------------

எனது பெயர் பசந்த் குமார் அகர்வால். நான் நோயிடாவின்(உ.பி) ஒரு பிரபலமான பல்கலைகழகத்தின் துணை பேராசியராக பணிபுரிகிறேன்.நான் சந்த்ராபுதூரில் உள்ள சன்பா ஜன்கிரில் வசிக்கிறேன்.நாங்கள் மொத்தம் ஐந்து சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. நான் மட்டும் கற்பிக்கும் துறையில் இருக்கிறேன். என் மற்ற சகோதரர்கள் சொந்தமாக எங்கள் ஊரிலேயே தொழில் செய்கிறார்கள்.
என்னுடைய சாய் பாபாவின் அனுபவத்தையும், எப்படி அவரை நேரில் கண்டு அவரின் ஆசியையும் உதவியையும் பெற்றேன் என்பதை பகிர்ந்துக் கொள்கிறேன்.
இதை எழுதும் முன் பாபாவை ஆசி வழங்குமாறும், இந்த கதையை முறையாக நான் எழுதவும் வேண்டுகிறேன் .அதில் தவறு ஏதேனும் ஏற்பட்டால் அவரே எனக்கு தண்டனையும் கொடுத்துவிடுவார்.
என்னுடைய மூத்த சகோதரர் (வயது 43) சிறு வயது முதலே இதயத்தில் பாதிப்பு கொண்டவர்.பல சிகிச்சைகளை பார்த்து கடைசியாக அறுவை சிகிச்சை மூலமாக (AIIMS மருத்துவமனை )அவரின் ஒரு இதய குழாயை மாற்றினோம்.அந்த அறுவை சிகிச்சையின் பின் அவர் நலமாக ஊருக்கு சென்று அவரின் தொழிலையும், மற்ற அன்றாட வேலைகளையும் நன்றாக செய்து வந்தார்.
ஒரு வருடம் கழித்து அவரின் உடலில் எதோ வலி ஏற்பட அவர், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் உட்கொண்டு வந்தார்.மேலும் தலை வலி அதிகமாக அதை அதிக அளவில் மாத்திரையை அவர் எடுத்து வந்தார்.
நாள்பட அவரின் தலைவலி அதிகரித்துக் கொண்டே சென்றது.பல சிகிச்சைகளை செய்தும் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது.அதன் காரணம் என்னவென யாராலுமே சொல்ல முடியவில்லை.கடைசியாக பல நாட்கள் தாமதமானதால், பிரச்சனை அதிகமாகி, அவரின் இரத்ததின் அடர்த்தி மிகவும் லேசாகி, அது அவரின் மூளைக்கு சென்று சேர்ந்துக் கொண்டிருந்தது.
அதனால் அவரின் மூளை எந்த நேரத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகி செயலிழந்து , அது அவரின் உயிருக்கே பிரச்சனை ஆகும் நிலை ஏற்பட்டது.
தெரிந்த நண்பர் ஒருவர், மீண்டும் சகோதரரை AIIMS கே அழைத்து செல்லும்படி கூறி உள்ளார்.எனவே என் அம்மாவும் அப்பாவும் அதற்கு சம்மதித்து அவரை, ராய்கார்ட் (Raigarh) எனும் ஊரில்  இருந்து   இருந்து   நிஜாமுத்தின் (Nizzamuddin) எனும் இடத்துக்கு ரயிலில் அழைத்து வர முடிவு செய்தனர்.எனது மற்ற இரு சகோதரர்களும், என் வயதான அம்மா அப்பாவை மூத்த சகோதரருடன் ரயில் நிலையத்திற்கு வந்தனர். நிஜாமுத்தினுக்கு  (Nizzamuddin)  வர வேண்டிய ரயில் வந்ததும் மூவரையும் ஏற்றிவிட்டு சென்றனர்.
திடிரென, ரயில் ஏற்றிவிட்ட பின், எனது இரு சகோதரர்களும் தவறு செய்துவிட்டோமே. நலமில்லாத அண்ணனை வயதான பெரியவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டோம். நடுவில் எது வேண்டுமெனில் ஏற்படலாம். பெரியவர்கள் என்ன செய்வார்கள்? நாமும் உடன் சென்று இருக்க வேண்டும் என நினைத்து அழுதனர்.ஆனால் ரயில் சென்ற பின் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.
டெல்லிக்கு வர வேண்டிய ரயில் வந்து சேர 26 மணி நேரமாகும். அதற்குள் எந்த கேட்ட செய்தியும் வரலாம் என மிகவும் வருத்ததுடன் இருந்தனர் அனைவரும் .நானும் இங்கே டெல்லியில் மருத்துவரிடம் எல்லாமே முன்னேற்பாடு செய்து டெல்லி ரயில் நிலையத்தில் காத்து இருந்தேன்.
கடைசியாக ரயில் வந்த உடன் நான் உடனடியாக அவர்கள் இருக்கும் ரயில் பெட்டிக்கு சென்றேன். அம்மா,அப்பா மற்றும் அண்ணனும் ரயிலில் இருந்து இறங்கினர். ரயிலில் இருந்து இறங்கிய அடுத்த நொடியே என் அண்ணன் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு எதோ சக்தி கிடைத்து அவராக எழுந்து தண்டவாள பாலத்தை கடந்து வெளியே எங்களுடன் நடந்து வந்தார்.
நாங்கள் வெளியே வந்ததும், அங்கே இருந்த அனைத்து ஓட்டுனர்களும் எங்களிடம் இருந்து விலகி நின்று ஒரு திசையை காட்டி செல்ல சொன்னார்கள். அங்கே வயதான ஒரு முதியவர் அமைதியாக நின்று இருந்தார். அவரிடம் செல்ல வண்டிய மருத்துவமனை பற்றி கூறினேன்.அவர் உடனே தன் பழைய கால வண்டியை எடுத்து வந்தார். அந்த மாதிரியான வண்டியை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை.
அவர் AIMMS மருத்துவமனையை நோக்கி வேகமாக ஓட்டி மாலை 4 மணிக்கு சென்றார். அதிசியமாக அந்த சமயம் எந்த வித சாலை நெரிசலும் இல்லாமல் வண்டி நல்லவிதமாக சென்றடைந்தது.அங்கே மருத்துவமனையில் முக்கியமானவர்களுக்கான வரிசை இருந்தது.பின் நான் அந்த ஓட்டுனரிடம், நான் என் அண்ணனை அழைத்து உள்ளே செல்கிறேன். அதுவரை என் பெற்றோர்களிடம் இருங்கள். மிகவும் நேரம் ஆனால் நான் உங்களை கைபேசியில் அழைக்கிறேன். நீங்கள் என் பெற்றோர்களை நோயிடாவில் உள்ள என் வீட்டில் விட்டுவிடுங்கள் எனக் கேட்டேன்.
எப்போதும் மருத்துவர் மாலை 6 மணிக்கு முன் வந்தது இல்லை.ஆனால் அன்று மருந்துவர் வந்திருந்தார். நான் உடனடியாக மருத்துவரிடம் சென்று நடந்த அத்தனை விஷயங்களையும் கதவின் அருகில் இருந்தே கூறினேன். உடனே மருத்துவர் என் அண்ணனை பார்த்துவிட்டு CT ஸ்கேனுக்கு எழுதி கொடுத்தார்.நான் அவரை அழைத்து உடனடியாக சோதனை கூடத்திற்கு அழைத்து சென்றேன்.அவர்களும் அண்ணனுக்கு ஸ்கேன் பார்த்துவிட்டு உடனே முடிவுகளை கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்டு மீண்டும் மருத்தவரிடம் சென்று காண்பித்தேன்.அவர் உடனடியாக இதய தீவிர சிகிச்சை பிரிவில் சேருமாறு கூறினார்.
இதை கேட்ட உடன் நான் காத்திருக்கும் ஓட்டுனரை அழைத்து, என் பெற்றோர்களை என் வீட்டில் விட்டுவிடுங்கள். நாங்கள் இங்கேயே இருக்க வேண்டிய சூழல்.என்னால் வர முடியாது எனக் கூறினேன்.நானும் யாரின் துணையும் இல்லாமல் தனியாகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து,பின் என் அண்ணன் ஒரு மணி நேரத்திற்குள் அவசர சிகிசை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பல நாட்களுக்கு பின், பிரபலமான நரம்பு மற்றும் இதய மருத்துவர்களால் என் அன்னான் பழைய நிலைக்கு வந்தார்.பின் நான் அந்த அமைதியான ஓட்டுனரை நினைத்து பார்த்தேன். ஆரம்பத்தில் இருந்து நடந்தவற்றை நினைத்து பார்த்த போது தான் தெரிந்தது அவர் வேறு யாரும் இல்லை நம் பாபா தான் என்று.
ஏனெனில் அவர் இல்லாமல் எங்களால் என் அண்ணனின் சிகிச்சையை பிரச்சனை இல்லாமல் நடத்தி இருக்க முடியாது.


 
நடந்ததில் சில உண்மைகள்    

சாதரணமாக ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால், அனைத்து ஓட்டுனர்களும் முன் வந்து எங்கே செல்கிறீர்கள் என போட்டி போட்டு கொண்டு கேட்ப்பார்கள். ஆனால் எங்கள் விஷயத்தில் அனைவரும் வணங்கிக் கொண்டும், எங்களை விட்டு விலகி கொண்டும் அந்த வயதான முதியவரை கை காட்டினர்.
டெல்லியில் அனைத்து ஓட்டுனர்களும், வேன், அம்பாசிட்டர் , டேக்சியை தான் வைத்து இருப்பார்கள். யாரிடமும் பழைய கால வண்டி இருக்காது.
டெல்லியில் எப்போதும் சாலை நெரிசல் இருக்கும். ஆனால் எங்களுக்கு அப்படி நடக்கவில்லை
பொதுவாக டேக்சி ஓட்டுனர்கள் பணமில்லாமல் அதிக நேரம் காத்திருக்க மாட்டார்கள்.
எப்போதும் AIMMS ல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் காரணமாக தாமதமாக தான் வருவார்கள். எங்களுக்கு அப்படி நடக்கவில்லை .
எப்போதும் நோயாளிகள் வரிசையாக தான் உள்ளே செல்ல வேண்டும். நாங்கள் முன்னதாக உள்ளே சென்றதை யாரும் தடுக்கவில்லை.
எப்போதும் மருத்துவர் ஆற அமர பிரச்சனையை ஆராயிந்து தான் முடிவு எடுப்பார்கள். ஆனால் எங்கள் நிலையில், பிரச்சனையை சொன்ன ஒரே வரியில் புரிந்துக் கொண்டு செயல்பட்டார்கள்.
CT உடனே எடுக்கப்பட்டதும், முடிவுகள் உடனே கொடுக்கப்பட்டதும் ஆச்சர்யமான விஷயம் தான்.
மருத்துவர் கூற்று படி, மூளையில் அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஏனெனில் பல இடங்களில் இரத்தம் கட்டி இருந்தது.ஆனால் அது கடைசியில் தேவை இல்லாமல் போனது.
இதற்கு எல்லாம் காரணம் என் அண்ணன் சாயி பாபாவின் பக்தர்.அன்று பாபாவே என் அண்ணனுக்காக வந்து உதவியுள்ளார்.
நீங்கள் நினைத்து பாருங்கள். கடவுள் நம்முடன் இருக்கும் போது என்ன கெட்டது நடக்க போகிறது? அது தான் எங்களுக்கும் நடந்தது.பாபாவை நேரில் கண்டதும், அவரின் ஆசியினால் அனைத்து காரியங்களும் தடையின்றி நடந்ததையும் இன்றும் நினைத்து பார்க்கிறேன்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.