Saturday, September 1, 2012

Sai Baba Saved Life Of A Calf-Sai Devotee

பாபா பசுமாட்டின் கன்றைக் காப்பாற்றினார்

 
( Slightly condensed and translated into Tamil by Santhipriya)


அனைவருக்கும் சாயிராம்
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள். சாயிபாபா கருணை வடிவானவர். அவர் தான் செய்வதை தான் கடைபிடிப்பதும் அல்லாமல்  மற்றவர்களுக்கும் அதையே போதிப்பார். உன் வீட்டு வாயிலில் வருவது யாராக இருந்தாலும், மனிதரோ இல்லை மிருகமோ அவர்களை உதாசீனப்படுத்தாதே என்று உபதேசிப்பார்.
சாயிபாபா தனக்கு கிடைக்கும் உணவை மிருகங்கள், பறவைகள் நாய்கள் என அனைத்துடனும் பங்கிட்டுக் கொள்வார். அப்படி செய்யாத பக்தர்கள் மீது அவர் கோபப்படுவது உண்டு.
பாபா தான் போதிப்பதை தானும் கடைபிடிப்பார் என்பதற்கு கீழுள்ள அனுபவக் கட்டுரை ஒரு உதாரணம்.
மனிஷா
-------------
அன்புள்ள மனிஷாஜி
நான் உங்கள் வலை தளத்தை தொடர்ந்து படிப்பவன். நீங்கள் சாயிபாபாவுக்கு செய்யும் சேவை மகத்தானது. சாயிபாபா மனிதர்களுக்கு மட்டும் அல்ல மிருகங்களுக்கும் தக்க நேரத்தில் வந்து உதவுவார் என்பதற்கு இந்த என்னுடைய அனுபவம் ஒரு உதாரணம். இந்த நிகழ்ச்சி  நடந்தது 2012 ஆம் வருடம் ஜூலை மாதம் 30 ஆம் தேதி.  அது ஒரு திங்கட்கிழமை. காலை ஒன்பது மணி ஆயிற்று. நான் அலுவலகத்துக்குகு என்னுடைய இரண்டு சக்கர வண்டியில் கிளம்பிச் சென்று கொண்டு இருந்தேன். அப்போது தூரத்தில் ஒரு வெண்மை நிற பசுவின் கன்றுக் குட்டி நின்று கொண்டு என் வீட்டையே பார்த்தவாறு இருந்தது. அந்த வாசனையில் இருந்தே அது சமீபத்தில் பிறந்து இருக்க வேண்டும் என்று தெரிந்தது. அதன் காலில் ஒரு காயம் இருந்ததைக் கண்டேன். அதில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. அதன் அருகில் சென்றதும் அதன் நாற்றம் சகிக்காமல் இருந்தது.
அதைக் கண்ட எனக்கு அந்த காயத்தின் வலி புரிந்தது. அலுவலகம் சென்றப் பின்னரும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை. அதற்கு உதவி செய்யாமல் இருந்து விட்டோமே என்ற தவிப்பு இருந்தது.  அதற்கு உதவி செய்ய மிருக மருத்துவ உதவி அலுவலகத்துக்கு தொலைபேசியில் கூறலாம் என நினைத்தாலும் அவர்களுடைய தொலைபேசி எண் என்னிடம் இல்லை.
அன்று மாலை வீடு திரும்பினேன். என்னுடைய தாயார் என்னிடம் எங்கள் வீட்டு வாயிலில் வந்து நின்று கொண்டு இருந்த அந்த கன்றின் அவஸ்தைப் பார்க்குமாறு கூறினாள். காலை முதலே அது அவஸ்தைப்படுவதாகவும், அதனுடைய தாய் பசு இரண்டு மூன்றுமுறை அங்கு வந்து கத்தி அழுது விட்டு போனதாகவும் கூறினாள். யாருமே வந்து அந்த பசுமாட்டிற்கு சொந்தம் கொண்டாடவில்லை என்றும் கூறினாள் . அடுத்த வீட்டுக்காரர் மிருக மருத்துவ உதவி அலுவலகத்துக்கு தொலைபேசியில் கூறியும் யாரும் அதன் உதவிக்கு வரவில்லை. ஆனால் அனைவரும் அதற்கு உண்ண ஏதாவது கொடுத்தார்கள். மாலை வரவும் மெல்ல மெல்ல அதன் உடல் நிலை மோசம் அடைய அது அப்படியே படுத்துக் கொண்டு விட்டது. நானும் என்னுடைய தாயார் கொடுத்த  தேநீர்  மற்றும் பிஸ்கட்டை உண்டு விட்டு வெளியில் சென்று நின்று கொண்டு என்ன செய்யலாம் என யோசனை செய்தேன். மனதுக்குள் அதற்கு உதவி செய்யுமாறு சாயிபாபாவையே வேண்டிக் கொண்டு இருந்தேன்.
அந்த நிலையைக் கவனித்த என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவி நாமே அதை மருத்துவ மனைக்கு அனுப்பலாம் என்று யோசனைக் கூறினாள். நான் மனதில்  பல தெய்வங்களையும் அந்த கன்றுக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொண்டாலும் தொடர்ந்து சாயிபாபாவை வேண்டிக் கொண்டே இருந்தேன். என்னுடைய ஒன்று விட்ட சகோதரனின் மனைவி மிருக மருத்துவ உதவி அலுவலகத்துக்கு தொலைபேசியில் மீண்டும் அழைப்பு கொடுக்க அவர்களோ தம்மால் உடனே வர இயலாது என்றும் அத்தனை அவசரம் என்றால் அதை அழைத்து வந்தால் வைத்தியம் செய்வதாக கூறினார்கள். ஆகவே அவள் ஒரு வண்டிக்காரனை அழைத்தாள். அவனும் அரை மணி நேரத்தில் வருவதாகக் கூறினான் ,ஆனால் அரை மணி நேரமாகியும் வெகுநேரம் கழித்தே வந்தான். வண்டி வந்ததும் அந்த கன்றை எங்களால் வண்டியில் ஏற்ற முடியவில்லை. என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டிற்கு வேலையாக இருவர் வந்தார்கள் . ஆனால் வீடு பூட்டி இருந்ததினால் திரும்பப் போய்க் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் அந்த நிலையை எடுத்துக் கூறி வண்டியில் கன்றை ஏற்றிவிட உதவ முடியுமா எனக் கேட்க அவர்களும் தயங்காமல் அதற்கு உதவினார்கள். வண்டிக்காரனுக்கு பணம் கொடுக்க என்னிடம் பணமும் இல்லை. ஆனால் என் சகோதரனின் மனைவியே அதற்கும் பணம் கொடுத்து அந்த வண்டிக்காரனை மருத்துவமனையில் அந்தக் கன்றை விட்டுவிடுமாறு கூறி அதற்கான செலவுக்கும் பணம் தந்து அனுப்பினாள். அது நலமடையும் வரை உன் நாமத்தை மனதில் கூறிக் கொண்டே இருப்பேன் என சாயியிடம் மனதாரக் கூறினேன். எனக்கு சில சொந்த பிரச்சனைகள் இருந்தது. அந்த  பிரச்சனைகளினால் குழம்பிக் கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு நிலையை உருவாக்கி என் கவனத்தை வேறு வழியில் சாயிபாபா திருப்பி இருந்துள்ளார் என்று நினைத்தேன். மருத்துவமனையில் இருந்து தொலைபேசியில் அழைத்த மருத்துவர் தாம் அதற்கு நல்ல முறையில் மருத்துவம் செய்வதாகவும் ஆனால் ஏதாவது மரணம் என அதற்கு ஏற்பட்டால்  அந்த விளைவுக்கு நான்தான் உத்திரவாதம் ஏற்க வேண்டும் என்று கூற பாபாவை வேண்டிக் கொண்டே அந்த கூற்றை நான் ஏற்றுக் கொண்டேன். அவரும் அதன் காலில் இருந்த கட்டியில் இருந்து புண்களை அகற்றி கட்டுப் போட்டு குணப்படுத்தி அது எந்த இடத்தில் இருந்து வந்ததோ அங்கேயே அனுப்பி வைத்தார். இரண்டொரு நாளில் கன்றும் நல்ல குணம் அடைந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு திடமான மன பக்குவம் கிடைத்தது. சாயி யாரைக் காப்பாற்ற நினைப்பாரோ அவர்களை மரணம் தழுவாது என்பதும் நான் இந்த உடலைத் துறந்து சென்றாலும் என்னுடைய பக்தர்களின் துயரங்களைக் களைய ஓடி வருவேன் என்ற பாபாவின் வார்த்தையும் சத்தியமானவை என்பதும் புரிந்தது .

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.