Friday, August 2, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 57



(Edited Translated Tamil version by Santhipriya)

ஜெய் சாயி ராம்
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்
சாயி சரித்திரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவார்கள். அதைப் படிப்பதின் மூலமே நாம் சாயிக்கு நெருக்கமானவர்களாக ஆக முடியும். அதில் உள்ள ஒவ்வொரு பாகமும் சாயியின் லீலைகளை எடுத்துரைக்கின்றது. சாயி சரித்திரத்தில் நம்முடைய வாழ்கையின் அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் உள்ளன.
அதைப் படிப்பதின் மூலம் நமக்கு மன அமைதி கிடைக்கிறது. அதை பக்தியோடு படிக்கையில் நாம் சாயியுடன் ஒன்றிணைந்து உள்ளதை உணர முடியும். அதில் உள்ள சில சம்பவங்களைப் படிக்கும்போது நமக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடும்.
சாயி சரித்திர புத்தகம் இல்லாதவர்கள் இதன் மீது அழுத்தி அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்று சாயியுடனான மூன்று அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவற்றில் இரண்டு ஷீரடி சாயியிடம் பக்தர்கள் பெற்ற அனுபவம் மற்றும் மூன்றாவது சாயியின்  பாராயண மகிமை ஆகும்.
மனிஷா
-----------

சீரடிக்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது

சாயி பக்தர்களுடைய எண்ணங்களை பிரபலப்படுத்தி அவற்றை வெளியிட்டு வரும் உங்கள் வலை தளத்துக்கு மிக்க நன்றி. நான் சீரடிக்கு செல்ல ஆசைப் பட்ட அனுபவத்தை எழுதுவதாக கொடுத்த உறுதி மொழியைக் காப்பாற்ற இதை எழுதி உள்ளேன்.

1) நாங்கள் சீரடிக்கு செல்ல முடிவு  செய்தபோது பல பிரச்சனைகள் தோன்றின. நாங்கள் போக முடியாமல் ஆகிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டபோதிலும் முடிவாக பாபாவின் அருளால்  நாங்கள் சீரடிக்கு கிளம்பிச் சென்றோம்.
2) சீரடிக்கு செல்ல வேண்டிய எங்கள் ரயில் மூன்று மணிக்கு கிளம்ப இருந்தது. நாங்கள் அனைவரும் முன்னதாகவே சென்று காத்திருந்தோம். ஆனால் எங்களுடைய மூத்த சகோதரர் இன்னமும் வந்து சேரவில்லை. இளைய சகோதரனுக்கோ அலுவலகத்தில் விடுமுறையும் கிடைக்கவில்லை. கவலையுடன் காத்திருந்தபோது எப்படியோ கடைசி நிமிடத்தில் இளையவன் வந்து விட்டான்.
b) கடைசி நேரத்தில் மூன்று மணிக்கு கிளம்பிய ரயிலில் ஓடி வந்து என்னுடைய மைத்துனரும் இளைய சகோதரனும் ஏறிக் கொண்டார்கள். ஆனாலும் மூத்த சகோதரன் வரவில்லை என்பதினால் நாங்கள் குடும்பத்துடன் சீரடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என்பதை அறிந்தபோது மனதில் வருத்தம் ஏற்பட்டது.
c) காத்திருப்போர் பட்டியலில் இருந்த எங்களுடைய பயணச் சீட்டுக்களுக்கு பதிவும் கிடைத்துவிட்டது.
2) பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரை தரிசனம் செய்தோம். அவர் முகம் அமைதியாக காட்சி அளித்தது.
3) சீரடிக்கு சென்ற மறுநாள் பாபாவின் காக்கட்  ஆர்திக்கு செல்ல வரிசையில் நின்று இருந்தோம். ஆர்தியை ஒலிபரப்பிக் கொண்டு இருந்த தொலைபெட்டியில் அதை கண்டு களித்துக் கொண்டு இருந்தோம். பாபாவிற்கு ஆலய பூசாரி அலங்காரம் செய்து  கொண்டு இருந்தார். அவருக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு ஆடைகள் போடப்பட்டபோது நான் நினைத்தேன் ' பாபா உன் தலையில் தங்கக் கிரீடம் இல்லாமல் இருந்தாலும் நீ அற்புதமாக இருப்பாய் '. நாங்கள் பாபாவை தரிசனம் செய்ய அவர் சிலை இருந்த கூடத்தை அடைந்தபோது பாபாவின் தலையில் கிரீடம் இல்லை. அது எனக்கு கனவு போல இருக்க என்னுடைய சகோதரியிடம் பாபாவின் தலையில் கிரீடம் இல்லையா என்று கேட்க அவளும் ஆமாம் என்றாள். நான் மனதில் நினைத்ததை நிறைவேற்றிய பாபாவின் கருணையை எண்ணி மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.
4) அனைவரது வேண்டுகோட்களையும் பாபாவின் பாதத்தில் சமர்பித்தப் பின்னர் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டோம்.
5) நாங்கள் திரும்பி வருவதற்கான பயணப் பதிவு   ஜூலை மாதம் 17 ஆம் தேதிக்கானது. ரயில் காலையில் 11 மணிக்கு கிளம்ப வேண்டும். எதோ காரணத்தினால் நாங்கள் கிளம்புவதற்கு அதிக நேரம் ஆயிற்று. காலை 10.15 மணிக்கு வண்டியைப் பிடித்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு பயணித்தோம். ரயில் நிலையம் செல்ல அரை மணி நேரம் போதும். ஆனால் வண்டிக்காரன் விரைவாக செல்லாததினால் நாங்கள் கவலை அடைந்தோம். ஒரு வழியாக ரயிலடைந்தபோது ரயில் கிளம்பத் துவங்கியது. ஓடிச் சென்று ரயிலைப் பிடித்து ஊர்  திரும்பினோம். சகோதரி மனிஷா இதை என் பெயருடன் வெளியிடவும்.
மிலன் சாவன்த்
----------------

சாயி பாராயணத்தை வெற்றியுடன் படித்து முடித்தேன்

மனிஷாஜி
நான் படித்து முடித்த ஸ்ரீ சாயி சத் சரித்திர அனுபவத்தை அனைவருடன் பங்கு கொள்கிறேன்.
நான் புத்தகங்களை வேகமாகப் படிப்பவன் அல்ல. முன்னர் சாயி சரித்திரத்தைப் படிக்கையில் என்னால் நாள்  ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பாகங்களை மட்டுமே படிக்க முடிந்திருந்தது. அதைப் படித்து முடிக்க 30 முதல் நாற்பது நாட்கள் பிடித்தது.
என்னுடைய தாயார் அதை ஒரே வாரத்தில் படித்து முடித்து விடுவாள். நான் வேகமாக படிப்பவன் அல்ல என்பதனால் சிறுவர்களுக்கான சாயி சரித்திரத்தை 2 அல்லது 3 நாட்களில் படித்து முடிப்பது உண்டு. ஆகவே அதைப் படிக்கவாவது சாயி எனக்கு அருள் புரிந்து இருக்கிறார் என மகிழ்வது உண்டு.
ஒருமுறை மே மாதம் அன்று நான் சாயி சரித்திரத்தை ஒன்பது முறை படித்து முடிக்க வேண்டும், அதுவும் ஒவ்வொரு முறையும் ஒரே வாரத்தில் அதை படித்து முடிக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டேன். சாயியிடமே அந்த சக்தியை எனக்குத் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவரை சரண் அடைந்தவர்களை அவர் என்றுமே தவிக்க விட்டது இல்லை.
திடீர் என நினைத்துக் கொண்டு என்னுடன் என்னுடைய சகோதரியும் சேர்ந்து அதைப் படிக்கத் துவங்கினாள். அவள் மிகவும் வேகமாக படிப்பவள் என்பதினால் இருவரும் சேர்ந்து காலையில் ஒன்றரை மணி நேரம் மற்றும் மாலையில் ஒன்றரை மணி நேரம் என அதற்கு ஒதுக்கிக் கொண்டு ஒரே வாரத்தில் பாராயணத்தை செய்து முடித்தோம்.
அதைப் படிக்கையில் அதற்குக் தேவையானது சுயக் கட்டுப்பாடு  என்பதை உணர்ந்தேன். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக நேரம் ஒதுக்கிக் கொண்டு படித்தேன். ரயில் மற்றும் பஸ்ஸில் செல்லும்போதும் படிக்க  பழகிக் கொண்டதினால் ஒரே வாரத்தில் அதை முழுமையாக படித்து முடிக்க முடிந்தது.
இப்படியாக 4 அல்லது 5 முறை வேகமாகப் படித்து முடித்து விட்டதினால் மீண்டும் மீண்டும் அதையே படித்ததினால் ஏற்பட்ட சலிப்பு  மனதில் சற்று தொய்வை ஏற்படுத்தியது. எப்படியோ நினைத்தபடியே ஒன்பது முறை அதை படித்து முடித்தேன்.
அதைப் படிக்கையில் சாயி எனக்கு சில குறிப்புக்களை காட்டினார்.
1) காலையில் எழுந்ததும் நான் கபார்டே என்று கூறுவேன். அதை ஏன் கூறினேன் என்பது தெரியவில்லை. ஆனாலும் அன்று முழுவதும் நான் படித்தவை கபார்டேயை சுற்றிய விஷயங்களாகவே இருந்தன.
2)  இன்னொரு நாள் ராம ராஜ்யா என நினைத்தபடி எழுந்திருக்க அன்று காலை சாயி சரித்திரத்தைப் படித்தபோது சாயி தன்னுடைய  சீடர்களுக்கு உபதேசித்த ராம ராஜா பற்றிய கதையே இருந்தது.
3) இன்னொரு நாள் சாயி ஊஞ்சலில் ஆடுவதை எண்ணிக் கொண்டு இருந்தபோது அவர் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடும் பாகத்தை படிக்க நேரிட்டது.
4) இன்னொருநாள் சாயி தன்னுடைய பக்தர்களுக்கு எதைக் கொடுக்கிறார் என எண்ணியபோது அன்று அவர் பக்தர்களுக்கு கொடுத்த அனைத்தையும் படித்தேன்
5) இன்னொரு நாள் சன்ஜீநாகரை  குறித்து எண்ணினேன். அன்று அவரைப் பற்றிய செய்தியை படிக்க நேரிட்டது.
இன்றுவரை அவை அனைத்தும் எப்படி ஏற்பட்டன என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பாராயணத்தை ஒன்பதுமுறை நான் படித்து முடிக்கும்வரை சாயி என்னை கவனித்துக் கொண்டே இருந்துள்ளதை உணர்ந்தேன்.
சாயியின் கருணைக்கு எல்லையே இல்லை என்பதினால் அவர் மீது பக்தி கொள்பவர்கள் அவரிடம் இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று விரும்புகிறேன்.
-------------------------

சீரடிக்கு விஜயம் செல்ல எனக்கு சாயி அருள் புரிந்தார்

நான் பெங்களூரில் வசிக்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் சாயியின் பக்தராக உள்ளேன்.  என்னுடைய அனுபவத்தை அனைவருடன் பங்கு கொள்கிறேன்.
ஜூன் மாதம் 28 ஆம் தேதி சீரடிக்கு செல்ல ஆசைப்பட்டேன். பயணத்துக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே முன் பதிவு செய்தேன் என்றாலும் காத்திருப்போர் பட்டியலில் பயணச் சீட்டு இருந்தது. ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்றுதான் முன் பதிவுக்கான பயண இருக்கையின் இடம் உறுதியாயிற்று. நான் பாவை வேண்டுவது உண்டு. பாபா என்னுடன் என் தாயாரும் பாட்டியும் வருவதினால் ரயிலில் என் பயண இருக்கையின் நிலையை உறுதி செய்.
அதற்கு முன்னால் என் பயண இருக்கையின் நிலை உறுதி ஆகவில்லை. என்னுடைய பாட்டி மற்றும் தாயாரின் தத்கால் பயணச் சீட்டுக்கு 1800 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. என்னுடைய சகோதரனோ பதிவு இருக்கை இல்லாமலேயே பயணிக்க முடிவு செய்து விட்டான்.
திடீர் என நாங்கள் பயணம் செய்ய வேண்டிய நாளன்று எங்கள் இருவருக்குமான பயண இருக்கை உறுதி ஆயிற்று. நாங்கள் சீரடிக்கு சென்று அற்புத தரிசனம் செய்தோம்.
பாபாவின் மூன்று வேளை ஆரத்தியையும் கண்டு களித்தோம். வரும்போது புனித வேப்ப மரத்தின் மூன்று இலைகள் எனக்குக் கிடைத்தன. ஆகவே பாபா எங்களுடன் துணைக்கு வருகிறார் என்பதை உணர்ந்தோம்.
ஒம் ஸ்ரீ சாயி ராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.