Sunday, October 2, 2016

Shirdi Sai Baba Centre, Texas


 சீரடி சாயி மையம், டெக்ஸாஸ் 
ஆஷாலதா 

 (தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா)


அன்பார்ந்த சாயி பக்தர்களே

வியாழக் கிழமை, பாபாவின் தினம் இரண்டுக்கும் இனிய வாழ்த்துக்கள். 

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மகிமை மூலம் மற்றொரு சாயி ஆலயம் குறித்த தகவலை நமக்கு பாபா தந்து இருக்கின்றார்.

சகோதரி ஆஷாவுக்கு அருள் புரிந்து அவள் மூலம் இன்னொரு சாயி ஆலயம் குறித்த தகவலை நமக்கு சாயி பாபா தந்து இருக்கின்றார். டெக்ஸ்ஸாஸ் மானிலத்து சாயி ஆலயம் குறித்து ஆஷா லதா நமக்கு தகவல்களை தருகின்றார். வேறு எங்கேனும் சாயி ஆலயம் இருந்தகால் அது குறித்து எனக்கு தகவல் அளித்தால் அவற்றை பிரசுரிக்கின்றேன். என் E மெயில் முகவரி : manisha.bisht@saimail.com 

ஜெய் சாயிராம்
மனிஷா




சீரடி சாயி மையம் , டெக்ஸாஸ் (இர்விங்)

நாலரை ஆண்டுகளாக பிளோரிடா மானிலத்தில் இருந்த சாயிபாபா ஆலயத்தில் பண்டிதராக இருந்த முகோதிபுரம் குரு ராமச்சந்தீரர் என்பவருக்கு டெஸ்ஸாசில் கட்டப்பட்டு வந்திருந்த சாயி ஆலயத்தில் 15 நாட்களுக்கு தற்காலிகமாக பணிபுரிய அழைப்பு வந்தது. 15 நாட்களுக்குப் பின் அவர் திரும்பவும் பிளோரிடா ஆலயத்துக்கு திரும்பிச் சென்று விடவேண்டும். ஏன் எனில் அங்கிருந்து ஒரு பண்டிதரை மட்டுமே அவர்களால் இங்கு அனுப்ப முடிந்து இருந்தது. ஆனால் சாயிபாபாவின் எண்ணமோ வேறாக இருந்துள்ளது. அவர் இந்த ஆலயத்தில் பணி புரிய வேண்டும் என்பதற்காக ராமாச்சார்யாயுலு அங்கேயே சாயி ஆலயத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தார்.

அந்த காலத்தில் டெஸ்ஸாசில் சாயிபாபாவின் ஆலயம் கிடையாது என்பதினால் சாயி பக்தர்கள் அங்கிருந்து பிளோரிடாவுக்கு சென்று சாயி ஆலயத்தில் சாயிபாபாவை தரிசித்தப் பின் திரும்பி வந்தார்கள். ஆகவே சாயிபாபா ராமாச்சார்யாயுலு மூலம் டெஸ்ஸாசில் சாயி ஆலயம் எழும்ப ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு சாயிபாபாவின் பூரண அருள் இருந்தது.

2004 ஆம் ஆண்டு ராமாச்சார்யாயுலு சீரடி சாயி பாபா ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அங்கு சாயிபாபாவின் சிறிய விக்ரஹத்தை (பிரதிமா) வாங்கினார். ஆனால் என்றும் இல்லாத வினோதமாக அந்த கடைக்காரர் அவருக்கு தருவதற்கு முன்னால் அந்த விக்கிரஹத்தை சாயி ஆலயத்தில் கொண்டு சென்று அதை பாபாவின் பாதத்தின் அடியில் வைத்து அவரிடம் தந்தார்.
அதைக் கண்ட ராமாச்சார்யாயுலு தனக்கு சாயிபாபா காட்டிய கருணையை எண்ணி வியந்தார். அவர் தன்னுடைய வீட்டில் அந்த விக்கிரஹத்தை வைத்து ஒவ்வொரு வியாழக் கிழமையும் அபிஷேகமும் பஜனையும் செய்யத் துவங்க அவருடைய நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் அதில் கலந்து கொள்ளத் துவங்கினார்கள்.

புதிய ஆலயம் எழும்பும்வரை இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது. அப்போதுதான் ஒரு குழந்தைக்கும் தந்தையான அந்த பண்டிதர் 15 நாட்கள் பணிபுரிய அங்கு வந்தார். அப்போது அவருக்கு வேறு எங்கும் வேலையும் கிடையாது. ஆனால் அதிசயமாக அவர் அங்கு வந்தபின்  15 நாட்களுக்குள் புதிய வேலையும் கிடைத்தது. அவருக்கு அமெரிக்காவிலேயே தங்க பச்சை நிற அட்டையும் கிடைத்தது. இது மிகவும் அதிசயம்தான். ஏன் என்றால் அங்கேயே பல வருடங்களாக தங்கி இருந்த பலருக்கும் பச்சை நிற அட்டை கிடைத்து இருக்கவில்லை. இது சாயி பாபாவின் கருணை அல்லவா.

சாயிபாபாவின் ஆலயம் அமைக்கும் பணியில் ராமச்சந்திரஜியுடன் மேலும் இரண்டு சாயி பக்தர்களான சதிஷ் ரங்கராஜன் மற்றும் கோவிந்த ரங்கராஜன் இருவரும் இணைந்தார்கள் .

அதற்கு இடையில் பிளானோ மற்றும் இரவின் என்ற இரண்டு இடங்களிலும் கூட தன்னுடைய பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற சாயிபாபாவின் ஆலயம் அமைய சாயிபாபா விரும்பினார். அதையும் இந்த மூவரின் முயற்சியினாலேயே செய்து முடித்தார்.

2005 ஆம் ஆண்டு சாயி ஆலயம் பதிவு செய்யப்பட்டது. அந்த ஆலயத்துக்கான விக்ரஹம் ஜெய்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அதை வரவழைப்பதில் முக்கிய பங்கு ஆற்றியவர் சதீஷ்ஜி ஆவார். ஜெய்ப்பூரில் இருந்து பெங்களுர் வழியே அந்த விக்ரஹம் கொண்டு வரப்பட்டது. பெங்களூரில் கோபால் பாபா என்பவர் அந்த விக்ரஹத்துக்கு பூஜைகளை செய்தார். பெங்களுர் மும்பாய் வழியே நியூயார்க் நகருக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து சாலை வழியே இங்கு கொண்டு வரப்பட்டது. 




சாயி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகள்

04/11/08 (வெள்ளிக் கிழமை ): பல பூஜைகள் மற்றும் ஹோமங்கள் (6.00pm to 9.30pm)
04/12/08 (சனிக் கிழமை ): பல பூஜைகள் மற்றும் ஹோமங்கள் / விஷ்ணு சஹஸ்ரநாமம்
(7.30am to 1.00pm மற்றும் 5.00pm to 10.00pm)
04/13/08 (Sun): விக்ரஹ பிரதிஷ்டை / சாயிபாபா ஆரத்தி (7.00am to 1.00pm)

ஏப்ரல் 13 ஆம் தேதிதான் சாயியின் விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு ஆகி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பீடத்தில் சாயிபாபாவை அமர வைக்க முடியவில்லை. அவர் என்ன லீலை செய்ய நினைத்தாரோ தெரியவில்லை. நாங்களும் அன்று அங்கு சென்று அவர் ஸ்தாபனம் செய்ய இருந்ததை பார்க்க ஆவலாக காத்திருந்தோம். பஜனைகள் நடந்தன. அனைவரும் என்ன என்னவோ செய்தும், எந்தெந்த உபகரணங்களை கொண்டு வந்து முயற்சித்தும் சாயி பாபாவை பீடத்தில் அமர வைக்க முடியவில்லை. பீடம் சரியாக இல்லை போலும். அனைவர் கண்களிலும் நீர் நிறைந்தது.

என்ன வினோதம். என்ன செய்வது என அனைவரும் குழம்பி நின்றபின் மீண்டும் பிரதிஷ்டை செய்ய விக்கிரஹத்தை பீடத்தில் வைக்க முயன்றபோது அடுத்த சில கணங்களில் எந்த சிரமமும் இன்றி அதே பீடத்தில் சாயி பாபாவின் சிலை நன்கு அமர்ந்துகொள்ள அனைவரும் ஒருமிக்க குரலில் 'சாய்நாத் மகாராஜ் கி ஜெய் !! அனந்த கோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதிராஜா பரப்ரஹ்ம சச்சிதானந்த ஸ்ரீ சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் !' என கோஷமிட்டார்கள். 

 
நானும் மிக மகிழ்சசி அடைந்தேன். அதன் பின்னரே அதற்கான காரணத்தை பண்டிதர் கூறினார். பாபா நவமி முகூர்த்தத்தில் பீடத்தில் அமர விரும்பவில்லை. அவர் தசமி முகூர்த்தத்திலேயே பீடத்தில் அமர எண்ணினார். அதனால்தான் இப்படி நடந்துள்ளது.

நான் மயிர்க்கூச்சல் எரிய அப்படியே நின்று கொண்டு இருந்தேன். என்னை நம்புங்கள், இன்று கூட அந்த அற்புதமான காட்சி என் கண்களை விட்டு அகல மறுக்கின்றது. சாயி பாபா தனது ஆத்மார்த்தமான யாரோ ஒரு பக்தர் அங்கு வரும் வரையில் அப்படி செய்தாரோ என்னவோ தெரியவில்லை. இப்படி எல்லாம் மகிமை செய்து பாபா தமது பக்தர்களை மகிழ்விப்பார்.

பிரதிஷ்டை முடிந்த பின் மத்தியான ஆர்த்திக்கு நாங்கள் குறுந்தட்டைப் போட்டபோது அது இசைக்கவில்லை. காலையில் கூட அது நன்கு வேலை செய்தது. ஆகவே பண்டிதர் அங்கு என்னை பாடுமாறு கூற மனதில் பதிந்திருந்த மத்திய ஆராத்திப் பாடலை நான் அங்கு பாடியது இனிமையான அனுபவம் ஆகும். புதிய ஆலயத்தில் நான் சாயியின் பெயரை உரத்த குரலில் பாடியது என்னுடைய அதிர்ஷ்டமே. நான் முன்னர் ஒருமுறை எனக்கு சாயி ஆலயத்தில் கிடைத்த மேல்போர்வை மகிமைக்கு குறித்து எழுதி உள்ளேன்.

ஆலயத்தில் நடைபெறும் வைபவங்கள் :-
  • சாயி  புண்ணயதிதி
  • ஸ்ரீ ராமா நவமி
  • மஹா சிவராத்திரி
  • குரு பூர்ணிமா
  • தத்த ஜெயந்தி
மற்ற வைபவங்கள் நடைபெறும் நாட்கள் இந்து நாட்காட்டியில் காணப்படும் பண்டிகைகள் ஆகும்.

ஆர்த்தியின் முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் வீபூதி பிரசாதம் தரப்பட்டது.

எதிர்கால பணிகள் :-
இந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்ட பண்டிதர் விரும்பினார். சாயியின் அருளால் அது நடைபெறும்.

ஆலய விலாசம்

Shirdi Sai Center of Texas
1037, West Rochelle Road,
Irving,
Texas 75062.

ஆலயம் செல்லும் வழி

Nr.Intersection from MacArthur Blvd and Rochelle Drive
- Irving.
(Temple is located next to Taj Grocers in the same complex)

தொடர்பு கொள்ள முகவரி

தொலைபேசி எண் :-

ஆலய அலுவலகம் - 972-992-2714

கைபேசி -214 236 4011

இணைதளம் – http://www.shirdisairam.org/

E மெயில் : saicenter_irving@yahoo.com

ஆலய நேரம்

9.00 a.m. - காகட் ஆர்த்தி
12.00 Noon - மத்தியான ஆர்த்தி
(1.00-6.00 Pm - ஆலயம் மூடப்பட்டு இருக்கும் )
(விசேஷ நாட்களைத் தவிர )
6.30 Pm - தூப் ஆர்த்தி
8.30 Pm - சேஜ் ஆர்த்தி
9.00 Pm - ஆலயம் மூடப்படும்

வியாழக் கிழமைகளில்
11.00 a.m. - அபிஷேகம் -ஷீர்டி சாய் பாபா
7.30 - 8.30 p.m. - சாயி பஜனைகள்

திங்கட்கிழமை
7.00 p.m. - சிவ அபிஷேகம்

அனைவருக்கும் வணக்கம்
ஆஷாலதா

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.