Tuesday, February 28, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 32.


(This article has been translated into Tamil  by Ramya Kartick with the help
of Kalpana, Lavanya and Nithila  in the translation. 
It is a joint effort by the four ladies -  Santhipriya)




அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள் !
அனைத்து பக்தர்களும், சாய் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்துடன் அனைவரும் தனது அனுபவங்களை அனுப்பிக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொருஅனுபவமும் இரக்கமுள்ள நம் சாய் பாபாவின் அன்பையும், பாசத்தையும் காட்டுகிறது.ஒரு குழந்தையானது தன் தாயை மறக்கலாம்.ஆனால் ஒரு தாயால் எப்படி தன் குழந்தையை மறக்க முடியும்?. தன் குழந்தைகளை ஒரு போதும் தவிக்க விடமாட்டேன், அவர்களின் அருகிலேயே இருந்து அவர் நலன்களை கருத்தில் கொள்வேன் என பாபா உறுதி அளித்த பின் எப்படி அவர் நம்மை விட்டு விலகுவார் ?
ஒரு குழந்தையானது தன் கண்களைஅறியாமையின் காரணமாக மூடி, இருண்டுவிட்டது என நினைக்கும் போது, ஒரு தாயானவள் ஒளியை கொடுத்து சரியான வழியில் அழைத்துச் செல்லுவாள்.நமது பாபா தான் பாசத்தை காட்டி நம் நலனை கருதி தாயாக நல்வழிப்படுத்துகிறார்.நடமாடும் கடவுளாக இந்த கலியுகத்தில் அவர் இருக்கும் போது, பாபா நம்மை பெரும் நோய் எனும் குழப்பதில் ஒரு போதும் விடமாட்டார்.
கீழே சாய் பக்தர்களின் சில சாய் அனுபவங்கள் இதே நெகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜெய் சாய் ராம்.
மனிஷா


பாபா என்னை தக்க சமயத்தில் காத்தார்.அவரே என்னை நம்பினார்

மனிஷா அவர்களே. இந்த கதை மிகவும் ரகஸியத்திற்குரியது.இதை பகிர்ந்துக் கொள்ளலாமா எனக் கூட தெரியவில்லை.இருந்தாலும் பாபா தான் நம் வாழ்நாளில் சாகும் தருவாயிலும் வந்து காப்பார் என உணர்த்த இதை பகிர்ந்துக் கொள்கிறேன்.
வாசகர்களே.. நான் எனது வேலை சம்மந்தப்பட்ட கதையை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.போன வருடம் என்னை பாடாய்படுத்திய கதை தான் இது.இன்னும் நான் நல்ல அரசாங்க அதிகாரியாய் இருப்பதற்கு காரணம் நம் பாபா தான்.
என்னை பற்றி சிலவற்றை சொல்லியே ஆகவேண்டும். நான் ஒரு முதுகலை பட்டதாரி. படித்துமுடித்து சில காலம் வேலையில்லாமல் இருந்தேன். கடைசியாக வேறுவழியில்லாமல் ஒரு அரசுப்பணியில் சேர்ந்தேன் (ரகசியம் கருதி என் பணியின் முழு விவரத்தையும் என்னால் கொடுக்க முடியவில்லை. நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...) நான் எதிர்ப்பார்ததோ ஒரு சாதாரண சுமூகமான வேலை. கிடைத்தது இது தான், எதிர்ப்பார்த்த வேலையில்லை தான் என்ற போதிலும் இது தான் நமக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக்கொண்டேன்.
வேலையில் சேர்ந்த சில வருடங்கள் எல்லாமே நன்றாக சென்றது. எனக்கு வேலையும் பிடித்திருந்தது. பெண்ணாக இருந்தபோதிலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமால் ஆண்களுக்கு நிகராக என்னால் பணி செய்ய முடிந்தது. என்ன செய்தாலும் ஒரு சிறு கையெழுத்து இட்டாலும் கடவுளை பிரார்த்தனை செய்யாமல் செய்ததே இல்லை. அதனால் வேலையில் எனக்கு நிகர் நானே என்று சொல்லும் நிலைக்கு வந்தேன். எல்லோரிடமும் நன்றாக பழகி, அனைவருடனும் அன்பு பாராட்டி வந்தேன். இருந்தாலும் என் தன்னிகரில்லாதனமே மற்றவர்களை என்னிடம் பழக தடுத்தது. அதுவே அவர்களுக்கு என் மேல் ஒரு வெறுப்பை ஏற்பட காரணமாக அமைந்தது. நாளுக்கு நாள் அந்த கூட்டதவரின் எண்ணிக்கையும் கூடியது. நான் யாரையெல்லாம் நம்பகமானவர்கள் என்று நினைத்தேனோ அவர்கள் எல்லாம் என் முதுகில் குத்த ஆரம்பித்தார்கள். பாபா சத்தியாமாக கூறுகிறேன் என்னை சுற்றிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் கொடுக்கும் உணவு அல்லது தண்ணீரைக் கூட ஏற்றுக்கொள்ள பயந்தேன் என்றால் உங்களுக்கே புரியும் எந்த மாதிரியான மனிதர்கள் என்னை சுற்றியிருந்தார்கள் என்று.  இப்படி இருந்த போதிலும் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகவே உழைத்தேன். ஏனென்றால் பாபா எல்லாரையும் கவனிப்பதால் மற்றவர்கள் நமக்கு தீங்கு செய்த போதிலும் அவர்களுக்கு நன்மை செய்ய மட்டுமே மனம் வந்தது. ஒரு நாள் என் உயரதிகார்களே எனக்கெதிராக சதி செய்தார்கள். நான் நியாயமாக நேர்மையாக இருந்தது தான் என் தவறு. திருமணமாகாததால் என்னால் வேலையில் அதீத ஈடுபாடுடனும் நேர்த்தியாகவும் செய்ய முடிந்தது. என் பெற்றோர்களுக்கும் என் பக்கம் இருந்தனர்.  உயரதிகரிகளே என் எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள் என்றால் நம்புவீர்களா? என் மேல் எந்த பழியும் இல்லை என்று பாபாவுக்கு தெரியும். என்னுடைய வேலையில் யாராலும் எந்த தவறையும் கண்டுபிடிக்கவே முடியாது. என்னை அத்தனை வெறுத்த போதிலும் மற்றவர்களுக்கு வேலையில் உதவியும் செய்து வந்தேன். அவர்கள் என்னை மாட்டிவிட ஒரு மிகப்பெரிய சதியை தீட்டினார்கள். ஒரு தடவை அபிஷியலாக லீவில் இருந்த போதிலும் என்னை அதிகம் தொந்தரவு செய்ய தொடங்கினார்கள். நான் இதை சொன்னேன் அதை சொன்னேன் என்று வீணாக என்னை பற்றி புரளி பேசினார்கள். நான் ஒரு அலுவலக காரியத்தில் ஒத்துழைக்கவில்லை என்று அவர்கள் என் மேல் கொடுத்த பொய் புகாரால் என் மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. (இதையும் என்னால் தெளிவாக சொல்ல இயலாத ஒரு சூழிநிலையில் உள்ளேன். புரிந்துகொண்டதற்கு நன்றி வாசகர்களே!)  ஒரு நாள் ,தவறான புகாரின் காரணமாக எனக்கு கடிதம் அலுவலகத்தில் கொடுத்துவிட்டார்கள். மேலும் அந்த அதிகாரி அனைவரும் உனக்கு எதிராக உள்ளனர்.எனவே நீ வேறு இடத்திற்கு மாறி சென்றுவிடு எனக் கூறினார்.நான் மனமுடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.தலமையகத்தில் எனக்கிருந்த ஒரு நம்பகமான அதிகாரியிடம் நான் அனைத்தையும் கூறினேன்.நான் பைத்தியமே பிடிக்கும் நிலையில் இருக்கும் போது பாபா எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.ஆனால் நான் வேலையை விட்டுவிட எண்ணி அந்த அதிகாரியிடம் கூறினேன்.அவர் என்னை தடுத்தார்.ஆனால் நான் பாபாவை மனதார வேண்டினேன்.நான் அந்த அதிகாரியிடம் அவர்கள் என்னை மனதளவில் காயப்படுத்துகிறார்கள் எனக் கூறினேன். ஒரு கட்டத்தில் நான் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து போவதே மேல் என நினைத்து அந்த காரியத்தை செய்ய துணிந்தேன்.உடனே எனது நெருங்கய தோழி எனது கைகளை இறுக பிடித்து முட்டாள்த்தனமாக எதையும் செய்யாதே எனக் கூறினார்..இதை கூறியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்.என்னால் என்னை நிருபிக்க இயலாமல் போனதை எண்ணி வருந்தினேன்.உடனே நான் பாபாவிடம் ஏன் எனக்கே எல்லாம் நடக்கிறது..ஏன் என்னை நம்ப தவறுகிறார்கள் என மனம் வெறுத்து கேட்டேன்.ஏன் எல்லாரும் என்னை எதிர்க்கின்றனர்.  சூழ்நிலை எத்தனை மோசமாக இருந்தாலும் நான் பாபாவை தொழுவதை நிருத்தவில்லை. என்னிடம் பாபா, சோர்ந்து போகாதே.நீ உன் பழைய அதே இடத்திற்கு தக்க மரியாதையுடன் செல்லுவாய் எனக் கூறுவதாக தோன்றும்.  நான் பாபாவை பற்றி நினைத்தது உண்மையானது. அனைத்து அதிகாரிகளும் கலந்துரையாடி, ஒரு மாதம் கழித்து என்னை அதே இடத்திற்கு மேலதிகாரியின் கடிதத்தின் பேரில் அனுப்பினார்கள்.நான் திறமை மிக்க அதிகாரி என்றும்,எனது சேவை அவர்களுக்கு தேவை எனவும் கூறினார்கள்.தவறான புகார்க்கு சரியான காரணமில்லாமல் போனது.கடைசியாக நான் என் இடத்திற்கு சென்றேன்.. என் பாதுகாப்பு கருதி எனது அதிகாரிகள் என் மீது கவனம் செலுத்தி வந்தனர்.இனி நான் என்ன சொல்ல.. நம் பாபாவின் கருணை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.எனது எதிரிகள் என்னை பார்க்க வெட்கப்பட்டு அஞ்சினர்.அவர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கினார். நான் உறுதியாக நம்புகிறேன்.பாபா இருக்கும் போது நான் ஒரு போதும் இறக்க மாட்டேன்.  தினம் தினம் நான் பாபாவின் அற்புதங்களை பார்க்கிறேன்.பல விஷயங்கள் மாறி போனது.எந்தவித அலுவலக முடிவு எடுக்கும் முன் நான் பாபாவை வழிபடுவேன்.நான் பாபாவிற்கு கடன்பட்டிருக்கிறேன்.பாபா அனுமதிக்கும் போது நான் ஷீரடிக்கு சென்று வருவேன்.ஏனெனில் எனது வாழ்க்கையே பாபாவின் கருணையால் கிடைத்தது தான்.என் மனதின் ஆழத்தில் இருந்து உங்களை நேசிக்கிறேன் பாபா.என்னுடன் எப்போதும் இருக்கும் என் தோழியை ஆசிர்வதியுங்கள். அனைத்து பக்தர்களையும் ஆசிர்வதியுங்கள் பாபா.இந்த கதையை பகிர்ந்து பாபாவிற்கு நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்தேன்.ஆரம்பத்தில் இதை எழுத சற்று தயங்கினேன்.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடிக்க எண்ணினால், பாபாவை மனதில் ஒரு நிமிடம் நினையுங்கள்.அவர் வந்து உதவுவார்.
ஜெய் சாய் ராம். பாபாவின் பக்தர்களுக்கு என்றுமே வெற்றி நிச்சயம்.



பாபாவின் கருணையால் கிடைத்த 10 ரூபாய்.

சாய் ராம் சகேதரி மனிஷா
டிசம்பர் 22 முதல் டிசம்பர் 26 2011 வரை எனக்கு பாபாவின் கருணையால் ஷிரடியில் தங்க வாய்ப்பு கிடைத்தது. ஷிரடியை நான் எப்போதும் பேபர் பெடி என்று தான் கூறுவேன்.பேபர் பேடி என்பது பெங்காலி மொழி , இந்தியில் மைக்கா எனவும் கூறலாம். இதன் அர்த்தம் தந்தையின் வீடு என்பதாகும்.என்னுடன் 19 மாதம் ஆன என் மகள் டால்( சாய்னா) மற்றும் அவளின் நாணி சுமித்ததியும் வந்திருந்தனர்.
பாபாவின் கருணையால் நான் சிறுவயதிலில் இருந்தே பாபாவின் பக்தையாக இருக்கிறேன்.நான் பாபாவிடம் சாய் பக்தரான ஒருவரை தான் மணந்துக் கொள்ளுவேன் என கூறி இருந்தேன். பாபாவின் கருணையால் ஆரம்பத்தில் காளியின் பக்தராக இருந்த என் கணவர், திருமணத்திற்கு முன் முற்றிலும் சாய் நாதரின் பக்தராக மாறினார்.இப்போது, எனக்கு சாய் எந்தளவு என்பதைவிட அவருக்கு அதிகம் எனப் பெருமையாக கூற முடியும்.
பாபா எங்களுடையவர் என நாங்கள் நினைத்ததால், எங்களின் குழந்தையை நாங்கள், சாய்தது எனவே பாபாவை அழைக்க பழக்கினோம். சாய்தது என்றால் தாத்தா என அர்த்தம்.
என் குழந்தை பாபா சிலையோடு விளையாடுவாள்.காலை எழுந்ததும் அவருக்கு வணக்கம் தெரிவிப்பாள்.அவரை குளிப்பாட்டுவதிலும், உணவு அளிப்பதிலும், உடை மாற்றும் போதும் எனக்கு உதவியாக இருப்பாள். ஆரத்தியின் போது அவளது கைகளை தட்டி அவளும் பாட்டு பாடுவாள்.பாபாவின் தலையில் உள்ள துணியை படித்து இழுத்து அவருடன் விளையாடுவாள்.இவ்வாறு தான் எங்களின் ஒவ்வொரு நாளும் கழியும்.
எங்கள் வீட்டில் வைத்துள்ள பாபாவின் சிலை :
இப்போது என் ஷிரடி தரிசனத்தை பற்றி கூறுகிறேன்.அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக கோவிலில் உள்ள காவலர்களின் ஒழுங்கற்ற அணுகுமுறையை அனுபவித்து இருப்பார்கள்.எல்லாரும் அப்படி இல்லை.. ஆனால் பலர் பக்தர்களை தள்ளிவிடுவதும், அடுத்தவர் சிலையின் அருகில் வந்திவிட்டால், பாபாவின் தெய்வீக தரிசனத்தை மனதாரை பார்த்துக் கொண்டிருப்பவர்களை விரட்டுவதுமாக இருப்பார்கள்.பக்தர்கள் அனைவரும் ஒரு குற்றவாளிகளை போல தள்ளப்படுகிறார்கள். நான் தவறாக கூறி இருந்தால் மன்னித்துவிடுங்கள்.ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி ,வயதில் முதியவராக இருந்தாலும் சரி பாரபட்சமின்றி அனைவரையும் தள்ளிவிடுகிறார்கள்.சிறிய பெண்கள் ,பெரியவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை.காவலர்களும் அன்றாடம் உள்ள கூட்டத்தை சமாளிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என அறிவேன்.இருந்தாலும் அனைவரிடமும் அன்பாய் இரு என பாபா போதித்தது எங்கே போனது ? இந்த காவலர்கள் அவர்களின் பொறுமையை இழந்து, பக்தர்களின் நலனை பற்றி யோசிப்பதே இல்லை.ஒரு அஞ்சலில் காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கலந்துரையாடலை படித்து இருந்தேன். ஆனாலும் அவர்களின் அணுகுமுறையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.இந்த பிரச்சனையை பாபாவின் காலடியில் விட்டு நான் என் கதையை தொடருகிறேன்.
பாபாவின் கோவிலில், பாபாவின் அருகே செல்லும் வாய்ப்பு கிடைத்து செல்லும் போது காவலர் எங்களை அளவுக்கதிகமாக தள்ளினார். உண்மையாக எனக்கு என்ன ஆனாலும் பாபாவின் ஆசிர்வாதமாக நினைத்துக் கொள்ளுவேன்.நான் அந்த காவலரை முறைத்துக் கொண்டிருக்கும் போது தான் குழந்தை மிக சத்தமாக அழுக ஆரம்பித்தாள். அந்த காவலர் குழந்தையின் நாணியையும் வேகமாக தள்ளினார்.அவரின் சுபாவத்தின்படி ,அவர் என்னை ஆசுவாசப்படுத்தினார்.
எப்படி ஒரு 19 மாதமே ஆன இளம் குழந்தையால் தாங்க முடியும்? குழந்தையின் எலும்புகள் கூட மிகவும் மிருதுவாக தானே இருக்கும். அதுவும் இல்லாமல் காவலர்கள் அதிகப்படியான சக்தியை கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும், வயதானவர்களையும் தள்ளினால் அவர்கள் கீழே விழுந்து அடிபடவும் வாய்ப்புள்ளது.
தாய் உள்ளத்திற்குரிய குணத்துடன் நான், அந்த காவலரை பார்த்து, என்ன நினைத்துக் கொண்டு, என்ன செய்திருக்கிறீர்கள் என கோபத்துடன் கேட்டேன்.எனக்கு இருந்த அளவில்லா கோபத்தில் நான் அந்த நிமிடத்தில் நான் சாய் மேல் கோபம் அடைந்தேன்.பாபாவால் எப்படி இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது என. மேலும் நான் கேட்ட கேள்விக்கு அந்த பெண் காவலர் மிகவும் கடுமையாக பதிலளித்தார்.. ஏன் ? என்ன ஆனது ? எனக் கோபமாக கேட்டார். நான் என்ன ஆனது என உங்களுக்கு தெரியாதா? குழந்தை எப்படி அழுகிறது என பாருங்கள்.. நான் இப்படி தள்ளினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என கேட்டேன்.அதற்குள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அனைத்து காவலருக்கும் மேல் நிலையில் உள்ள காவலர், பெண் காவலரின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார். அந்த இடத்தில் அந்த பிரச்சனை முடிந்தது. ஆனால் எனக்கு கோபம் அடங்கவில்லை.அதன் பின் நான் சாயியை ஒரு பார்வைக் கூட பார்க்கவில்லை.என் குழந்தை அதிகமாக அழுதுக் கொண்டு தது நா என்றது. அர்த்தம் தது இல்லை என்பதாகும்.
நாங்கள் கோவிலின் வெளியே வந்து, துவாரகாமிக்கு செல்லும் வரிசை நின்றோம்.நான் பாபாவின் மீது கோபம் அடைந்து, சீக்கிரமே என் விடுதிக்கு செல்ல நினைத்தேன். வலியால் அழுதுக் கொண்டிருந்த குழந்தைக்காக அழ என் தாயுள்ளம். நினைத்தது.அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டேன்.பாபாக்கு எல்லாம் தெரியும். நான் ஆழமான வலியில் இருக்கிறேன் என அவருக்கு தெரியும்.எனவே வெளியே என்னை போகவிடாதபடி வரிசையில் நிற்க வைத்தார்.
துவாரகாமிக்குள் சென்று நான் பாபாவிடம் கேள்விகளை கேட்டேன்.எப்படி நீங்கள் இதை அனுமதித்தீர்கள். டால் என்னை போலவே ,உங்களை மிகவும் நேசிக்கிறாள்.இது எனக்காக மட்டுமில்லை. எத்தனை பக்தர்கள், வயதானவர்கள் உட்பட இப்படி தள்ளிவிடப்படுகிறார்கள்.அவர்களின் எலும்பு உடைந்தால் என்னாகும் என்றேன். மேலும் நான் பாபாவிடம் 10 ரூபாய் சம்மந்தமாக ஒரு கோரிக்கை வைத்தேன். அதனை இங்கே கூறமுடியாததற்கு மன்னிக்கவும். அவர் அமர்ந்திருந்த கல்லில் தலை வைத்து வணங்கி எழும் போது என் கையில் ஒரு 10 ரூபாய் இருந்தது. எனக்கு மிகவும் ஆச்சர்யம்.அங்கே இருந்த காவலரிடம் ஏன் நீங்கள் எனக்கு இந்த பணத்தை கொடுத்தீர்கள் எனக் கேட்டேன்.ஏனெனில் இவர் பாபா கல்லில் இருந்து மலர்களை எடுத்து என்னிடம் தர முயற்சித்துக் கொண்டிருந்தார்.அதற்கு அவர்.. நான் ஏன் 10/- கொடுக்க வேண்டும் என்றார்.
நான், இதை என்ன செய்யட்டும் என்றேன். அதற்கு அவர் நான் என்ன சொல்வது ? வேண்டுமெனில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்றார்.எனவே இரண்டு மனதுடன் நான் பணத்தை பாபாவின் உண்டியலில் போட்டேன். அது வேறு யாரோ ஒருவரின் பணமாக இருந்து அவர் பாபாவிற்கு கொடுக்க எண்ணி இருந்தால், அதை நாம் வைத்திருப்பது தவறு என நினைத்து உண்டியலில் போட்டுவிட்டேன்.இருந்தாலும் இது பாபா எனக்கு கொடுத்ததாக இருந்தால் பணத்தை நான் வைத்து இருக்க வேண்டும் என நினைத்தேன்.ஏனெனில் 10 ரூபாய் சம்மந்தமாக நான் ஒன்றை வேண்டி இருந்தேன்.
உடனே அந்த காவலர் ஓடி வந்து பணத்தை என்ன செய்தீர்கள் எனக் கேட்டார். நான் உண்டியலில் போட்டு விட்டேன் என்றேன். அதற்கு அவர், ஏன் ? பாபா என்னிடம் அவர் கொடுத்ததாக கூறி அந்த பணத்தை உங்களுக்கு கொடுத்தார் என்றார்.
அப்படியா? நான் இங்கே நடந்த சில விஷயங்களுக்காக பாபாவிடம் முறையிட்டேன் என நடந்த அத்தனை விஷயங்கலையும் அவரிடம் கூறினேன்.
அதறகு அவர் அப்படியா? நீங்கள் அமைதியான மனதுடன், பாபாவிடம் பேசிக் கொண்டு இங்கேயே இருங்கள். நான் ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன் எனக் கூறி துவாரகாமியிலேயே எங்கள் மூவரையும் அமர செய்து எங்கேயோ சென்றார்.
நான் அங்கேயே பாபாவிடம் எனக்கு 10/- கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தேன்.பாபாதான் எனக்கு 10/- கொடுத்தார் என அறியாமல் முட்டாள்தனமாக உண்டியில் போட்டுவிட்டேனே என எண்ணிக் கொண்டிருந்தேன்.ஆனால் அவர் இன்றி ஏதும் நடக்காது.உண்டியில் போட்டது கூட அவர் விருப்பமே என நினைத்தேன்.
பின் காவலர் 4/- யை கொண்டு வந்து கொடுத்து 2/- யை நானும், 2/- யை என் கணவரும் வைத்திருக்கும்படிக் கூறினார்.மேலும் இதை வைத்து பாபாவிடம் வணங்குமாறு கூறி கொஞ்சம் சப்பாதிகளை கொடுத்தார்.
நான் அவருக்கு நன்றி கூறி தங்கி இருந்த விடுதிக்கு வந்தேன்.ஆனாலும் என் மனதில் 10/- பற்றிய எண்ணம் ஓடி கொண்டிருந்தது.நான் பாபாவிடம் 10/- யை கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் தான் கொடுத்தீர்கள்.. பின் ஏன் என்னிடம் இருந்து வாங்கிவிட்டீர்கள் ?அதை திருப்பி தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தேன்.
இரண்டு நாட்களுக்கு பின் கடைசி நாளன்று காலை நல்ல தரிசனம் கிடைத்தது.நான் காலை ஆரத்திக்கு சென்றேன்.எத்தனை அழகாய் இருந்தது.இணைய தளம் மூலம் நான் பாஸ் வாங்கி இருந்தேன்.அதனால் சுலபாய் இருந்தது.நான் தங்கி இருந்த நாட்களுக்கு ஒரு ஆரத்தியும், ஒரு தரிசனத்தையும் இணைய தலம் மூலம் முன் பதிவு செய்திருந்தேன்.அனைத்து சாய் பக்தர்களும் அதை கடைப்பிடித்து நல்ல தரிசனம் பெறலாம்.நன்றி பாபா.. நன்றி சத்சன்.
காலை ஆரத்தி 1.30 லிருந்து 2 மணி நேரம் சென்றது.ஆரத்தி, பூஜை, அபிஷேகம் என 1 மணி நேரம் எடுத்தது. எப்பவும் காலை ஆரத்தியில் ஒரு பஜனை தான் இருக்கும் ..ஆனால் அன்று 7,8 என முடிவடையாத பஜனைகளை கேட்டேன்.அது பூஜாரி பாபாவின் இடத்தை சுத்தம் செய்யும் போது நடக்கும்.பாபாவிற்கு மங்கள ஸ்னானம்,அபிஷேகம்,சிறிய ஆரத்தி என கடைசியாக கூட்டத்திற்கான வழி திறக்கப்பட்டது.காவலரின் எந்த தடையும் இல்லாமல் என்னால் பாபாவின் அருகில் நின்று நல்ல தரிசனம் பெற முடிந்தது. 2 மணி நேரம் பாபாவின் முன்னால நிற்பது என்பது தெய்வீகமானது இல்லையா ?
கடைசி நாள் என்பதாலும், இந்த ஒரு நாள் தான் உங்களுடன் நான் இங்கே இருக்க முடியும் என்பதாலும் தான் இத்தனை அற்புதமான தரிசனம் எனக்கு கொடுத்தீர்களா? உங்களை விட்டு என்னை போக விடாமல் செய்கிறீர்களா பாபா? என பேசி மறுபடியும் என் மனதில் சுழன்றுக் கொண்டிருந்த 10/- யை திருப்பி தருமாறு பாபாவிடம் கூறினேன்.
என் வீட்டில் நான் நடத்தும் ஆரத்திகளின் வழிமுறைகளை பகிர்ந்துக் கொள்கிறேன். குளிர் காலங்களில் என்னால் சரவர செய்ய முடியாமல் சிலசமயம் ஆகும்.அதற்கும் பாபா என் மீது காலை ஆரத்தி மற்றும் பஜனைகளினால் கொண்டுள்ள கருணை ஆகும்.
நான் காலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து, பாபாவின் ஷிரடியின் நேரடி தரிசனத்தை போட்டுவிட்டு என் பூஜைகளையும் செய்வேன். பூஜாரியின் குரல் அத்தனை அருமையாக இருக்கும். எனக்கும் பூஜாரியின் குரலிலேயே என் வீட்டில் ஷிரடி பூஜை நடப்பது போன்று இருக்கும். அவரின் குரல் கொண்டு பூஜை செய்வது மனம் கனிந்த ஒரு செயல். அவரின் குரல் வளம் முன் முறையாக கற்ற எந்த பாடகர்களும் இல்லை என்பது என் கருத்து.
எனவே பூஜாரிக்கு நான் தினமும் மனதார நன்றி கூறுவேன்.பூஜாரியும் சேவைக்கு அவருக்கு நேரடையாக நன்றி கூறும் வாய்ப்பை இம்முறை பாபா வழங்கினார். அந்த கூட்டத்திலும் நான் பூஜாரியை கண்டு வேகமாக சென்று என் நன்றியை கூறினேன்.அதற்கு பாபா தான் அருள் புரிந்தார்.எப்போதும் 1,2 பஜனை நடக்கும் கோவிலில் அன்று 7,8 பஜனைகள் நடந்து அதை நான் கேட்டு மகிழ்ந்ததால் என்னை ஒரு அதிர்ஷ்டசாலி என்று நான் கூறுகிறேன்.அது மட்டுமின்றி என்னால், ஒரு வினாடி நின்றதற்கு தள்ளிவிட்ட அதே காவலர் முன், பாபாவிடம் அதிக நேரம் நிற்க முடிந்தது.  இத்தனைக்கும் நடுவில் எனக்கு அந்த 10/- பற்றிய எண்ணமும், யாராவது ஒருவர் வந்து என்னிடம் கொடுப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்.பின், விடுதியை காலி செய்ய வேண்டிய நேரம் வந்தது. நான் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே மாட்டப்பட்ட பாபாவிடம், எல்லாம் நன்றாக போனது..ஆனால் என்னுடை 10/- எங்கே.? அது இல்லாமல் இங்கே இருந்து நான் போக போவதில்லை. எப்படி கொடுப்பது என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறினேன்.  பின் நான் முன் சென்று விடுதி கட்டணத்திற்கு க்ரெடிட் கார்டு காட்டி பணத்திற்கு கையெழுத்து இட்டேன்.ஏனெனில் நான் மேக் மை ட்ரிப்(Make my trip) பணம் ஏற்கனவே செலுத்தி இருந்தேன்.  எல்லாம் முடிந்து நான் அங்கே இருந்தவரிடம் விடை பெற்றுக் கோள்கிறேன் எனக் கூறி திரும்பினேன். திடிரென ஒரு குரல்.. மேடம் உங்களின் 10/- பெற்றுக் கொள்ளவில்லையா? என  பல நாள் பசியில் இருந்தவள் போல, கண்களில் கண்ணீருடன், இதயம் படபடக்க அவரிடம், கண்டிப்பாக, ஆனால் எதற்காக இந்த 10/- எனக் கேட்டேன்.உங்களின் கட்டணம் 992/-.தவறாக நாங்கள் 1000/-யை எடுத்துவிட்டோம்.அது தான் இந்த பனம் என்ரனர்.அவர்கள் 2/-யை என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை.எனக்கு புல்லரித்தது. இப்போது எழுதும் போதுக் கூட .  அந்த 12/- பூஜை அறையில் வைக்கப்பட்டு வழிப்பட்டு வருகிறது
பாபாவின் மகள்
சஞ்சுக்தா
பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் என் அன்பு
பாபா அனைவரையும் காப்பாற்றுவாராக




வங்கி கடனை பாபா ஏற்பாடு செய்தார்

சாய் ராம் !! அன்பு மனிஷா சகோதரி,
சாய் பக்தர்களையும், இந்த இணைய தளத்தையும் நல்ல முரையில் பராமரிக்கும் உங்களுக்கு நான் என் இதய பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன். அதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் அனுபவத்தை பகிர்வதற்கு முன் நான் எப்படி சாய் பக்தையானேன் என்பதை சிறு அறிமுகத்தோடு தொடங்குகிறேன்.
நான் எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்து அதை திருத்திக் கொள்ளவும். என் குழந்தை பருவம் முதல் கொண்டே என் வீட்டில் சாய் பாபாவின் பெரிய ப்ரேம் போட்ட படம் வீட்டில் இருந்தது.எப்போது நான் அவரின் முகத்தை போட்டோவில் பார்த்தாலும் அந்த முகத்தில் அமைதியும், ஆனந்தமும் குடி கொண்டிருக்கிறதே என்று நினைத்து சென்று விடுவேன். ஒருபோதும் அவரை வணங்கியதில்லை. 2010ம் ஆண்டு என் பெற்றோர் ஷீரடி வாசலை மிதிக்கும் அற்புத வாய்ப்பை பெற்றார்கள்.
அங்கேயிருந்து என் அம்மா சாய்பாபாவின் போட்டோ ஒன்றை வாங்கி வந்து எனக்கு தந்தார்கள். அந்த போட்டோவை பார்க்கும் போது சாய்பாபா என்னுடன் இருப்பதாகவே உணர்ந்தேன். பல முறை அவர் எனக்கு நல்வழியை காட்டியுள்ளார்.சிறிது மாதங்கள் கழித்து நான் சாய் விரதம் பற்றி தெரிந்து கொண்டேன். அந்த சமயம் எனக்கு வேலை இல்லை. அதனால் நான் வேலை கிடைக்கும் பொருட்டு பாபாவிற்கு விரத அனுஷ்டானங்களின்படி விரதம் இருந்தேன், அவரும் எனக்கு உலகத்தின் இரண்டாம் தரத்தில் இருந்த புகழ்பெற்ற கம்பெனியில் வேலை கிடைக்கும்படி செய்தார். நான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதன் பிறகு என்னால் விரதத்தை சரிவிர கடைபிடிக்க முடியவில்லை. இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மறுபடி நான் விரதம் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து அதை போன வாரம் வியாழன் அன்று வெற்றிகரமாக முடித்தேன். நான் எங்கள் இடத்துக்கு அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று அங்கே இருந்த ஏழை மக்களுக்கு உணவும், என் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு சாய் விரத புத்தகத்தையும் அளித்தேன்.
சாய் ராம் !!!

சாயி பக்தரை  பாதுகாத்தவர்

நான் என் அனுபத்தை சொல்லப் போகிறேன். தயவு செய்து என் பெயரையோ இமெயில் முகவரி யையோ வெளியிட வேண்டாம். என் பெற்றோர் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி புதியதாக கட்ட இருந்த வீடு இப்போது இருக்கும் வீட்டிற்கு எதிரில் இருந்தது. என் தந்தை நவம்பர் மாதம் வங்கியில் லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தார். எப்படியும் 2 வார காலத்தில் லோன் சாங்க்ஷன் ஆகும் என்று அறிந்து கொண்டோம்.அதனால் என் பெற்றோர் எனக்கு திருமணம் நிச்சயித்திருந்தபடியால் லோனுக்காக காத்திராமல் இப்போதே வீடு கட்ட தொடங்கினால் லோன் பணம் வருவதற்கும் பயன்படுத்த சரியாக இருக்கும், கால தாமதமும் ஆகாது என முடிவெடுத்து வீடுகட்ட தொடங்கினார்கள். ஆனால் லோன் சொன்னபடி சாங்க்ஷன் ஆகவில்லை. லோன் பணம் இன்று வரும் நாளை வரும் என என் தந்தை இருந்த பணத்தையெல்லாம் வீட்டின் கட்டுமானத்திற்கே போட்டார்.
மூன்று மாத காலம் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. தந்தையிடம் இருந்த சேமிப்பு அனைத்தும் கரைந்து போயின. இந்த மாத சம்பளம் எல்லாவற்றையும் தந்துவிட்டார். இனி அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பணம் கூட கையில் என்பதை உணர்ந்தார். என் தந்தையை இது போன்ற மோசமான நிலையில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையில் அவர் உடல்நலனும் பாதிக்க தொடங்கியது. நேரத்திற்கு சாப்பிடாமல், நேரத்திற்கு தூங்காமல் இருந்தார். போன மாதக்கடைசியில் லோன் பணம் வந்த பிறகு மேற் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கலாம் அதுவரை கட்டுமானப்பணியை நிறுத்த சொல்லி சொல்லிவிட்டோம். கட்டுமானப்பணியை நிறுத்தினால் கட்டிட மூலப்பொருட்கள் வீணாவதோடல்லாமல், கட்டிடமும் சேதமாகும் என்பதை உணர்ந்தோம். என் திருமணத்திற்காக வைத்திருந்த நிலத்தை என் பெற்றோர் விற்கத் தீர்மானித்தார்கள். அது தான் கடைசி வழியாக இருந்தது. என் பெற்றோரின் நிலையை எண்ணி நான் மிகவும் வருந்தினேன்.
போன வார வியாழக்கிழமை நான் என் தந்தையை வற்புறுத்தி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் சென்று, பாபாவிடம் வரும் வியாழன்னுக்குள் லோன் கிடைக்குமாறு செய்யும்படி வேண்டிக் கொண்டேன். என் வேண்டுதல் நிறைவேறினால் பாபாவிற்கு ரோஸ் கலர் சால்வை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். நான் வரிசையில் நின்று கொண்டிருந்த போதே இப்படி வேண்டிக் கொண்டேன், என் வேண்டுதல் நீ நிறைவேற்றுவதாக சம்மதம் தெரிவித்தால் எனக்கு என்னுடைய விருப்ப மலரை தர வேண்டும் என.
நான் பாபாவின் சிலைக்கருகில் சென்றதும், பூசாரி நான் விரும்பி கேட்ட அதே மலரை எனக்கு தந்தார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பாபாவிற்கு நன்றி சொன்னேன். அதன் பிறகு சென்ற ஞாயிறு அன்று என் தந்தை நிலத்தை விற்பதற்காக நில புரோக்கரை அழைத்தார். நான் மிகுந்த கவலை அடைந்தேன். மறுபடி பாபாவை வேண்டிக் கொண்டேன். நான் விரும்பிய மலரை பாபா தந்த நிகழ்ச்சியை நினைத்து என்னை தேற்றிக் கொண்டேன்.
செவ்வாய்கிழமையன்று, நிலத்தை விற்க ஏற்பாடானது. மாலை நேர ஆரத்தி முடிந்த பிறகு என் தந்தைக்கு பேங்கில் இருந்து லோன் கிடைத்து சாங்க்ஷன் ஆகி விட்டதாக போன் வந்தது. அதுவரை பேங்கில் இருந்து எந்த நம்பிக்கையான தகவலும் வரவில்லை. திடீரென லோன் சாங்க்ஷன் ஆன விஷயத்தை போன் மூலம் தெரிந்து கொண்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை. நான் உடனே பாபாவின் சிலை அருகில் சென்று என் ஆழ்மன பக்தியோடு வேண்டி கொண்டு நன்றி சொன்னேன். அப்போது என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தன.
நேற்று நானும் என் தந்தையும் சாய்பாபா கோவிலுக்கு சென்று வேண்டிக்கொண்டபடி ரோஸ் கலர் சால்வையை செலுத்தினோம். அந்த பெரிய கூட்டத்தையும் தாண்டி பூசாரி பாபாவின் கழுத்தில் இருந்த பெரிய ரோஜாப்பூ மாலையை என் தந்தையிடம் தந்தார். அந்த சமயம் இன்னொரு நபர் அந்த மாலையை தனக்கு தரும்படி இடையூறு செல்ல, அப்போது பூசாரி இந்த மாலை இவருக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி என் தந்தையிடம் தந்தார். எதிர்பாராத அந்த சம்பவம் பாபாவே தன் முழுமன சம்மதத்தோடும், ஆசிர்வாதத்தோடும் தந்ததாகவே உணர்ந்தோம். உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்தோம் மிக்க நன்றி பாபாவே.
தயை கூர்ந்து உங்களுடையை ஆசிகளை அனைவருக்கும் தருவீராக.
சாய் ராம் !!

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.