Friday, August 3, 2012

Shivamma Thayee Temple -Experience By Radha Shreedhar-Part 2.


(Translated into Tamil by Santhipriya)


அனைவருக்கும் சாயிராம் 
இன்று  சாயி பக்தையான ராதா சகோதரியின்  இரண்டாவது அனுபவத்தை வெளியிடுகிறேன்.  படித்து மகிழவும்
மனிஷா 
 ---------------------------------------
சாயிராம்
இன்று நான் எனக்கு சிவம்மா தாயீ ஆலயத்தில் கிடைத்த இரண்டாவது அனுபவத்தைப் பற்றி எழுதுகிறேன்.
ஒரு நாள் எனக்கு உடல் நலமில்லை என்பதினால்  நுண்ணொலி  கதிர்பட சோதனை நடந்து (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்) முடிந்தது. அதன் பின்  நான்   இன்னொரு மருத்துவ  செல்ல வேண்டி இருந்தது என்பதால் அலுத்துக்  கொண்டேன்.
அனைத்தும் முடிந்ததும் நான் மருத்துவ சோதனை அறிக்கையை பிரித்துப் பார்க்கவே பயந்தேன். நெஞ்சு படபடத்தது. ஆகவே நான் பாபாவின் ஆலயத்துக்குச் சென்று அந்த அறிக்கையை அவர் முன்னால்தான் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
என்னுடைய  ஸ்கேனை  ஜெயநகரில் (பெங்களுர்) செய்து கொண்டேன். என்னுடைய  வண்டி ஓட்டி ஜெயநகரில் பாபாவின் பெரிய ஆலயம் இருப்பதாகவும், ஆனால் அது உள்ள சரியான இடம் தெரியாது என்றும்  கூறினான். அன்று  வியாழர் கிழமை.  அவனுக்கு ஆலயம் உள்ள இடம் தெரியாது   என்பதினால் அங்கும் இங்கும் அலைந்து ஆலயத்தை தேடினோம். எங்களால் அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சோதனை அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்பதினால் எனக்கு கண்ணீரே வந்து விட்டது.
நானும் பெங்களூருக்குப் புதியவள். என்னுடைய வண்டியை ஓட்டி வந்தவனுக்கோ நான் மருத்துவ அறிக்கையை பாபாவின் முன்னால்தான் பிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த விவரம் தெரியாது. ஆகவே அவன் என்னிடம் 'மேடம், ரூபன்  ஆக்ரஹாரம் எனும் இடத்தில் உள்ள ஆலயத்துக்கு செல்லலாமா ' என்று கேட்டான். மணி மதியம் ஒன்று ஆகி விட்டது. அந்த நேரத்தில் எந்த ஆலயம் திறந்து இருக்கும்?  ஆனால் நான் எதோ ஒரு உந்துதலினால் சரி என்று கூறி விட்டேன். அதிக வண்டிகளினால் சாலை சற்று  நெரிச்சலாக இருந்ததினால் அங்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆயிற்று. ஆனால் ஆலயத்துக்கு சென்ற என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அந்த நேரத்தில் அந்த ஆலயத்தில் இருந்தப் பள்ளி சிறுவர்கள் மதிய ஆரத்தியை பாபாவின் சன்னதியில் பாடிக் கொண்டு இருந்தார்கள்.  நான் உள்ளே போனபோது  அந்த ஆலயத்தை மூடிக் கொண்டு  இருந்தார்கள். உடனே நான் அங்கு சென்று ஆலய பூசாரியிடம் என் மருத்துவ சோதனை அறிக்கையை பாபாவின் பாதத்தில் வைத்துவிட்டுக் கொடுக்குமாறுக் கேட்டேன். நான் கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்தேன்.  அவரும் அதை வைத்துவிட்டு எடுத்து வந்து  'பாருங்கள் அம்மா,  நீங்கள் வேண்டிக் கொண்டது வெற்றிகரமாக நடக்கும்.  பாபா இதன் மீது பூவைப் போட்டுக் கொடுத்துள்ளார்' என்று சிரித்தவாறு  கூறி விட்டு அதை என்னிடத்தில் கொடுத்தார். நான் மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் விட்டப் பின் அதை எடுத்துக் கொண்டு போய் சிவம்மா தாயீயின்  சமாதியில் வைத்து விட்டு அதை அங்கேயே பிரித்துப் படித்தேன்.  அதில் பாதகமாக எதுவும் இல்லை என்பதைக் கூறவும் வேண்டுமா? அந்த அறிக்கை மீது பாபாவின் மீது இருந்து விழுந்திருந்த வெள்ளை நிறப் பூவுடன் கொடுத்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. சாதாரணமாக ஆரத்தி எடுத்து முடிந்ததும் அங்கு வரும் குழந்தைகளுக்கு தரப்படும்  பிரசாதம் அனைத்துமே தீர்ந்து விடும். ஆனால் அதிருஷ்டவசமாக அன்று எனக்காக ஒரே ஒரு பிரசாதம் பாக்கி வைக்கப்பட்டு இருந்தது போல பிரசாதம் கிடைத்தது.
இந்த அனுபவத்தை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது.  நான் பாபாவை நேசிக்கிறேன்.  பாபா நீதான் உன் அனைத்து பக்தர்களுக்கும் நம்பிக்கை மற்றும் பொறுமையைக் கொடுத்து அருள் புரிய வேண்டும்.
ராதா ஸ்ரீதர்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.