Thursday, August 18, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 17


அன்பானவர்களே
அனைவருக்கும்  பாபா தின வாழ்த்துக்கள். பாபாவின் லீலை ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டே உள்ளது.   அதை அனுபவிக்கும் ஒவ்வொரு பக்தரும் தம்முடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் அதுவே பாபாவின் புகழை மேலும் பரப்ப உதவும். இனி இவற்றை படித்து மகிழவும்.
ஜெய் சாயி ராம்
மனிஷா

லீலை  1:
என்னுடைய சங்கடங்கள் அனைத்திலும் பாபா துணை நின்றார் 

மனிஷாஜி ,
என்னுடைய வயது 34 . நான் கணவர் மற்றும் சிறு குழந்தையுடன்  அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். நாங்கள் அனைவருமே பாபாவின் பக்தர்களே. என்னுடைய E Mail id யை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நான் சமீபத்தில்தான் சாயியின் ஒன்பது வார விரதத்தை செய்து முடித்தேன் . அந்த நேரத்தில்தான் எனக்கு பல சங்கடங்கள் நேர்ந்தன. அவை அனைத்தையும் பாபாவே நிவர்த்தி செய்துவந்தார். அதில் ஒன்று அமெரிக்காவில் குடிமகனாகும் பச்சைக் கார்ட் விஷயம்.
அதைப் பெறுவதற்கு சில மருத்துவ சிகிச்சைகள் செய்து முடிக்க வேண்டும். அதில் என்னுடைய தோலின் சோதனையில் TB எனக் காட்டியது. அதனால் எனக்கு கிடைக்க வேண்டிய பச்சைக் கார்ட் கிடைக்காமல் போய் விட வாய்ப்பு உள்ளது என்பதினால் என் மனம் வேதனை அடைந்தது. ஆனால் என் நுரையீரல் சோதனைக்கு X Ray எடுத்தோம். அதில் அனைத்தும் சரியாக இருந்தது. ஆகவே அந்த பிஒரச்சனை தீர்ந்தது.
அடுத்து என்னுடைய கையின் கீழ் (அக்குள்) சிறிய கட்டிப் போல வந்தது. அது சரியாக வேண்டுமே என பாபாவை வேண்டினேன். மருத்துவரிடம் சென்றேன். அவரும் அது விழக் கிருமிகளினால் (Virus) இருக்கலாம் என்று கூறி அதற்கு மருந்து தந்தப் பின் ஒரு வாரம் பொறுத்துப் பார்க்குமாறும் அப்போதும் சரி ஆகவில்லை என்றால் பயாப்சி சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். நான் அனைத்தும் நல்லபடியாக வேண்டும் என பாபாவையே வேண்டினேன். அது சரியாகிவிட்டால் என் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக கூறினேன். நல்லவேளையாக பாபாவின் அருளினால் அது ஒரே வாரத்தில் சரியாகி விட்டதினால் அதை உங்கள் தளம் மூலம் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பாபா பாது காத்து விட்டார்.
கடந்த ஒரு வாரமாக எனக்கு சிறிது தலை சுற்றலாக உள்ளது என்றாலும் பாபா என்னைப் பாதுகாப்பார் என நம்புகிறேன். அவருக்கு கோடி நமஸ்காரங்கள்.
இதை உங்கள் தளத்தில் பாபாவின் படத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் செய்துவரும் சீரிய முயற்சிக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
சாயியின் ஒரு பக்தை.  

லீலை  2:
கனவில் பாபா எனக்கு அருள் புரிந்தார் 
 
மனிஷாஜி,
இது என்னுடைய இரண்டாவது அனுபவம். இதற்க்கு முன்னாள் நான் ஒரு எழுதிய அனுபவம்  http://www.shirdisaibabakripa.org/2011/05/sai-babas-blessing-for-my-9-thursday.html யில்
வெளியாகி உள்ளது.
இது 2004 ஆம் ஆண்டு நடந்தது. என் கணவருடன் சேர்ந்து வாழ அமெரிக்கா செல்ல வேண்டும் விசா v(H4) த்தேவையாக இருந்தது. அதற்க்கு விண்ணப்பித்தேன். அவர்கள்  அதற்கு பதிலாக  சில கேள்விகளை கேட்டு இருந்தார்கள். எனக்கு அதற்கு முன்னால் விசா பற்றி எதுவும் தெரியாது என்பதினால் எப்படி பதில் தர வேண்டும் என்பதில் குழம்பினேன். கவலை அடைந்தேன். என் கணவரோ கவலைப் படாதே என ஆறுதல் கூறினார்.  ஆனாலும் எனக்கு கவலையாக இருந்தது. மறு வாரம் சென்னைக்குச் சென்று அதற்கான பதிலை கொடுத்தப் பின் ரயிலில் திரும்பி வந்து கொண்டு இருந்தேன்.  மனதார பாபாவை வேண்டிக் கொண்டேன். எனக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக  வழியில்  ஏதாவது உன் ஒரு படத்தைக் காட்டு என வேண்டினேன். ஆனால் பாபாவின் படம் எதுவுமே தென்படவில்லை. மன வருத்தத்துடன் இரவு என் படுக்கையில்  (Birth) ஏறி படுக்கச் சென்றேன். சிறிது நேரத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரனிடம் இருந்து தொலைபேசி  செய்தி வந்தது. நான் யாருக்கும் செய்திகளை  செல்போனில்  அனுப்புவது இல்லை. ஆனாலும் வந்துள்ள செய்தியைப் பார்க்கலாம் என அதை திறந்தேன். என்ன அதிசயம். அதில் பாபாவின் படம் இருந்தது. நான் மானசீகமாக பாபாவுக்கு நன்றி கூறினேன்.
வீடு திரும்பிய  நான்  சாயி சரித்திரத்தை ஒரு வாரம் படித்து முடித்தேன். வியாழன்  கிழமை விடியற்காலை என் கனவில் பாபா பச்சை நிறத்தில் காட்சி தந்தார். அதுவே என் விசாவுக்கு பாபா பச்சைக் கொடி காட்டி விட்டதற்கான அறிகுறி என மகிழ்ச்சி அடைந்தேன். அது போலவே அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு விசாவும் கிடைத்தது. பாபா நான் உனக்கு நன்றி கூற வேண்டும். என் அருகிலேயே நீ இருந்துகொண்டு என்னை வழி நடத்திச் செல்ல வேண்டும்.
மனிஷாஜி என்னுடைய E mail Id யை வெளியிட வேண்டாம். பாபாவின் பக்தர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக உங்கள் இணைய தளம் இருப்பதற்கு உங்களுக்கும் நன்றி. 

 
லீலை 3:
பாபாவின் மீதான நம்பிக்கை
 
மனிஷாஜி 
சாய் ராம்
என்னுடைய E mail Id யை வெளியிட வேண்டாம்.
இந்த வருடம் எனக்கு சரியாக அமையவில்லை. ஒன்று மாற்றி ஒன்று கெடுதலே வந்தது. என் வேலையையும் விட்டுவிட்டேன். ஆனாலும் பாபா என்னைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.
என் மன நிலை சரியாக இல்லாததினால் உடனே வேறு வேலைக்கு முயற்சி செய்யவில்லை. சில காலம் அப்படியே இருந்தேன்.
அதன் பின் ஜூலை மாதம் நான் வேலைக்கு செல்லும் மன நிலைக்கு வந்தேன். பல இடங்களிலும் விண்ணப்பம் செய்தேன்.  பாபா கூறுவாரே '' என்னை எப்போது என் பக்தர்கள் அழைத்தாலும் அவர்களுக்கு உதவுவதற்கு அங்கு செல்வேன்'' என , அதை நினைத்துக் கொண்டு எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க நீதான் அருள வேண்டும் என அவரிடம் வேண்டிக் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பினேன். எனக்கு ஒரு வேலைக் கிடைத்தது. ஆனால் என் தகுதியை எடைப் போட்டுப் பார்க்க  சில மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்னரே நிரந்தர வேலை என்றும் கூறினார்கள். அந்த நிறுவனம் நல்ல நிறுவனம். நல்ல இடத்திலும் அமைந்து இருந்தது. ஆகவே பாபாவை அந்த வேலைக் கிடைக்க வேண்டும் என  பிரார்த்தனை செய்து கொண்டேன். இரண்டாவது நாளே நான் செய்ய வேண்டிய  வேலையைப் புரிந்து கொள்வதில் சிரமமாக இருந்தது என்றாலும் பாபாவின் அருளினார் அதைவும் நல்லமுறையில் செய்து முடித்தேன். பாபா நம்மை சோதிப்பார். ஆனாலும் கை விட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.