Monday, October 10, 2011

Sai Baba Mightier Than Problem-Experience By Sai Kartikeya Bisht.

பிரச்சனைகளை விட சாயியே உயர்ந்தவர்
-சாயி கார்திகேயாவின் அனுபவம் 

சாயி சரித்திரா XXX
கருணை இல்லமான சாயியிடம் சரணடைந்தால் அவருடைய அன்பைப் பெறலாம். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே பயத்தை நமது விலக்கி அனைத்து தீமைகளையும் தடுப்பார். அவர் உருவம் அற்றவர். ஆனால் பக்தர்களின் பக்தியினால் அவர் ஒரு உருவத்தை எடுத்து வந்தார். தம்மை நாடி வரும் சிஷ்யர்களுக்கு மன விடுதலை தந்து ஆத்ம ஞானம் பெற வழி காட்டுவதே சாதுக்களின் கடமை. அதைதான் சாயியும் செய்கின்றார். அவர் பாதங்களை பிடித்துக் கொள்பவர்களின் பாபங்கள் விலகி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள். அதைப் புரிந்து கொண்ட பண்டிதர்கள் பல இடங்களில் இருந்தும் அவரிடம் வந்து காயத்தரி மந்திரம் முதல் வேத மந்திரங்களை கூறி ஜெபிக்கின்றார்கள். எந்த பெரும் குணங்களும் இல்லாத நமக்கு பக்தி என்பதின் அர்த்தம் தெரியாது என்பதினால் நம்மை  பலரும் விலக்கி வைக்கக்  கூடும். ஆனால் சாயி நம்மை கை விடமாட்டார். அவர் யாருக்கு அருள் புரிகின்றாரோ அவர்கள் பலம் பெறுகிறார்கள், உண்மையான ஞானத்தை அடைகின்றார்கள்.
சாயிக்கு தமது பக்தர்களின் ஆசைகள் தெரியும். ஆகவே அவர்கள் வேண்டுவதை அவர்களுக்கு தேவைப் படும்போது  அவர் தருகின்றார். ஆகவே நாம் அவரை வேண்டி  வணங்குவோம். நம்முடைய அனைத்து துன்பங்களையும் அவர் விலக்க  வேண்டும் என வேண்டுவோம் . யாருக்கு துன்பம் ஏற்படுகின்றதோ அவர்கள் சாயியை வணங்கித் துதிக்கும்போது அவர்களது துயரத்தை நீக்கி மன அமைதியை அவர் தருகிறார்.
பாபாவின் லீலைகளும் கதைகளும் அமிர்தம் போன்றவை. அதைப் பருகின்றவர்கள் சாயியின் மகிமையை புரிந்து கொள்வார்கள். எவர்  ஒருவர் அதை கேலி செய்து விதண்டாவாதம் செய்ய நினைக்கின்றார்களோ அவர்கள் அவற்றை படிக்கத் தேவை இல்லை. நமக்குத் தேவை அவர் மீதான அதீ அன்பும் பக்தியும்தான். யார் ஒருவர் ஞானிகளின் சேவகர்கள் என தம்மைப் பற்றி  நினைக்கின்றார்களோ அவர்களால் மட்டுமே சாயியின் கதைகளை நம்ப முடியும், அந்த அமுதத்தைப் பருக முடியும் . உண்மை  நிலைப் புரியாத மற்றவர்கள் அதை கதை என்றே நினைப்பார்கள்.  சாயியின் லீலைகள் எனும் அமுதத்தைப் பருகுகின்றவர்கள் அவருடைய லீலைகள் கல்பதாறு மரம் போன்றது என்பதை உணருவார்கள்.
மனிஷா
--------------
அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள். இதோ சாயியின் லீலையை காட்டும் இன்னொரு அனுபவம். என் குடும்பத்தில் ஏற்பட்டது. என் இணையதளத்தை தவறாமல் படிப்பவர்களுக்கு என்னுடைய மகன் கார்த்திகேயா நல்ல ஓவியம் வரைபவன் என்பது தெரியும். போன வருடத்தைப் போலவே இந்த வருடமும் குருபூர்ணிமா தினத்தன்று சாயிபாபாவின் ஒரு படத்தை வரைய அவன் முடிவு செய்து இருந்தான். ஆனால் பள்ளியில் கொடுக்கப்பட்ட அதிக வீட்டுப் பாடங்களினால் அதை அவனால் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவன் படத்தை வரைய ஆரம்பித்தான். படத்தை வரையத் துவங்கியவன் பாதியிலேயே அதை நிறுத்தி விட்டு பிறகு முடித்து விடுவதாகக் கூறினான். நான் பல முறை அவுனுக்கு அது பற்றி நினைவு மூட்டியும்  அவன் நான் நிச்சயம் முடித்து விடுவேன் என்றே கூறினான். ஆனால் நான் அதற்கு மேல் அவனைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பாபா எப்போது தன்னை வரைய வேண்டும் என நினைக்கின்றாரோ அப்போதுதானே அதை முடிக்க முடியும் என நினைத்தேன் .
குருபூர்ணிமாவும்  வந்தது. அவன் படத்தை வரைந்து முடிக்கவில்லை. நான் மீண்டும் நினைவு படுத்தியதும் இன்று நிச்சயம் முடித்து விடுவேன் என்றான். ஆனால் எப்போதும் போல அன்றும் மறந்துவிட்டான்.
சில நாட்களுக்கு முன்னர் நான் சகோதரர் சிரீஷ் என்பவர் பாபாவுக்கு கொடுத்த வாக்குறுதியை பற்றிய கட்டுரையை வெளியிட்டு இருந்தேன். அதில் பாபாவிற்கு கொடுக்கும்  வாக்குறுதியை எப்படி நிறைவேற்றினால்  அதற்கேற்ப பாபாவும் எப்படி  அருள் புரிவார் என்பது பற்றி கூறப்பட்டு இருந்தது. அதை என் மகனிடம் படித்துக் கூறினேன்.
சனிக்கிழமை என் மகன்கள் இருவரும் பேஸ்கெட் பால் விளையாடச் சென்றார்கள். அப்போது விளையாட்டில் என் மகன் கார்த்திகேயா கீழே விழ அவன் மீது இன்னொருவன் விழுந்துவிட அவன் கை விரலில் அடிபட்டுக் கொண்டான். அதை நாங்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டோம்.
மறுநாள் அவன் விரல்  வலிக்கின்றது என்றான். ஆகவே நாங்கள் மறுநாள் மருத்துவ மனைக்கு சென்று X ரே எடுக்கலாம் என முடிவு செய்தோம்.
மறுநாள் அவன் கைவிரல் நீல நிறமாகிவிட நங்கள் உடனே மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு X ரே எடுத்தப் பின் அங்கு சோதனை முடிவை பெற்றுக் கொள்ள காத்திருந்த நான் பாபாவின் மகாசமாதி பற்றி அவனுக்கு கதை கூறிக் கொண்டு இருந்தேன். அப்போது நான் பாபாவின் படத்தை அவன் முடிக்கவில்லை என்பதை மீண்டும் நினைவூட்ட அவன் நிச்சயமாக அதை முடித்து விடுவதாக மீண்டும் கூறினான்.
சோதனை முடிவை தந்த அந்த மருத்துவர் வேறு ஒரு சோதனை செய்ய வேண்டும் எனவும் ஒரு வேளை  உள்ளுக்குள்ளே சதை கிழிந்து இருக்கலாம் எனவும்  அபிப்பிராயப்பட்டார்.
அதைக்  கேட்ட நாங்கள்  கவலை அடைந்தோம். பாபாவை அங்கேயே வேண்டிக் கொள்ள ஆரம்பித்தோம். அப்போது எங்கள் முகத்தைப் பார்த்த கர்திகேயாவும் எதோ கவலைப்படும் வகையில் உள்ளது என்பதை புரிந்து கொண்டான்.
அவனுக்கு அவனுடைய  கராத்தே ஆசிரியர் கண்ணாடி குத்தி அடிபட்டுக் கொண்ட போது  பல சிகிச்சை செய்தும் குணமாகாததையும் , அவருக்கு முடிவாக ஆபிரேஷன் செய்ய வேண்டி இருந்தது என்பதையும், அதை செய்தும் அவர் பூரண குணம் அடையவில்லை என்பதும் நினைவுக்கு வர கவலை அடைந்தான். அவன் கண்களில் கண்ணீர் வந்தது. அவனை தேற்றினோம். பாபா இருக்கின்றார் கவலைப்படாதே  என்று கூறினோம். அவனையும் பாபாவின் நாமத்தை உச்சரித்தபடி இருக்குமாறு கூறினோம்.
நாங்கள் அடுத்த சோதனைக்கு சென்றபோது என் மகன் கூறினான்,' அம்மா நான் பாபாவின் படத்தை முடித்து விடுகிறேன். அது மட்டும் அல்ல இனி ஒவ்வொரு வருடமும் அவர் மகா சமாதி அல்லது குருபூர்ணிமா தினத்தன்று அவர் படத்தை ஓவியமாக வரைவேன் என அவருக்கு உறுதி மொழி தருகிறேன்'. அதைக் கேட்ட நான் மனம் நெகிழ்ந்து போனேன். அவருடைய மகா சமாதியான இன்று அவர் பெயரை ஜெபிக்குமாறு கூறினேன். என் நண்பர் வீட்டில்  லட்ஷ லலிதா சஹஸ்ரநாம ஜெபம் நடந்தது. நானும் என்னுடைய கணவரும் அதற்கு சென்று இருந்தோம். அதில் கலந்து கொண்டு விட்டு திரும்பும்போது நம் வீட்டிலும் பாபாவின் ஜெபம் செய்ய வேண்டும் என என் மகன் கூற நாங்கள் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தோம். உன் பரிசோதனை முடிவு எப்படி வேண்டும்னாலும் வரட்டும். ஆனால் பாபாவுக்கு நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என என் மகனிடம் கூறினேன்.
அதன் பிறகு சோதனையின் முடிவு வந்தது. அதில் அவனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்று கூறிவிட்டு , அவனுக்கு போடப்பட்டு இருந்த கட்டையும் பிரித்து விட்டார்கள். அவன் வீட்டிற்கு வந்ததும் பாபாவின் உடியை  அதன் மீது தடவினான். பாபாவிற்கு நன்றி கூறினான். அதன் பின்னர் 10 நிமிடத்திற்கு ஐஸ் ஒத்தடம் எடுத்துக் கொண்டப் பின்னர் அவன் குருபூர்ணிமாவில் முடிக்காமல் வைத்து இருந்த பாபாவின் ஓவியத்தை வரைந்து முடித்தான். இது பாபாவின் வழிமுறை. 10+ வது படிக்கும் மாணவன் என்றாலும் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை எப்படியாவது உணர்த்துவார்.
கார்த்திகேயா வரைந்துள்ளது கவன்கார் என்பவர் வீட்டில் இருந்த படத்தைப் போன்றது. இது அதைப் போன்றது இல்லை என்றாலும் அதைப் போலவே அவன் வரைய முயற்சி செய்து உள்ளான். 

இந்த படத்தை அவன் 'சீரடி சி சாயிபாபா' என்ற புத்தகத்தின் மேல் அட்டையில் உள்ள படத்தைப் பார்த்து வரைந்து உள்ளான். அதைப் பார்த்து கார்த்திகேயா படத்தை வரைந்தவுடன் எனக்கு மறந்து போன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அந்த புத்தகத்தைப் பற்றி ஒரே நாளில் நான் சிறு விவரம் எழுதினேன். அந்த புத்தகத்தைப் பற்றிய விவரம் பின்னர் வெளியிட உள்ளேன்.
என் மகன் கார்த்திகேயா வரைந்து உள்ள படத்தைக் குறித்து E-mail manisha.bisht@saimail.com என்பதில் அல்லது இதில் உங்களுடைய கருத்துக்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
(Into Tamil by Santhipiriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.