Friday, November 4, 2011

Shirdi Sai -The Saviour-Experience By Sai Devotee

சாயிபாபாவின் அருள்


அன்பானவர்களே
நான் சில தவிர்க்க முடியாத வேலையில் ஈடுபட்டு இருந்ததினால் முன்பு போல தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும். விரைவில் என்னுடைய தளத்தில் முன்பு போல கட்டுரைகள் வெளியாகும். நான் கட்டுரைகளை வெளியிடாததினால் என்னுடைய உடல் நலம் குன்றிவிட்டதோ என கவலைப்பட்டு கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
இன்று பெயர் கூற விரும்பாத இன்னொரு சாயி பாபாவின் பக்தையின் அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன்.
மனிஷா
---------------------

சகோதரி மனிஷா,
நான் என்னுடைய அனுபவத்தை இன்று கூற விரும்புகிறேன். இது பக்தர்களுக்கு அவர் மீது வைத்து உள்ள நம்பிக்கையை மேலும் பெருக்கும் என எண்ணுகிறேன்.
நாம் பூர்வ ஜென்மத்தில் பெற்ற கர்ம வினையை அனுபவித்தே தீர வேண்டும். நமக்கு ஏற்படும் துயரங்களை பொறுத்துக் கொண்டு சாயியை வழிபட வேண்டும்.
நமக்கு ஏற்படும் துயரங்களுக்கு கடவுளைக் குறைக் கூறி பயன் இல்லை. அவை நமது பூர்வ ஜென்ம வினைகளின் பலனே என எண்ணிக் கொள்ளப் வேண்டும்.
நாம் சாயி பாபாவுக்கு கொடுக்கும் குரு தட்க்ஷணை நாம் செய்யும் நல்ல காரியங்கள், தானம் மற்றும் அவருடைய புகழைப் பரப்புவதே.அவர் தனது பக்தர்களை எப்படி எல்லாம் காப்பாற்றுகிறார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவரை நினைத்து துதித்தபடியே நாம் இருக்க வேண்டும்.
தினமும் அவரை நினையுங்கள், வணங்குங்கள், அவரை நம்முடைய குடும்பத்தில் ஒருவராகவே நினைக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும். அவர் அதையெல்லாம் கேட்கின்றார்.அதற்கேற்ப அவர் நமக்கு உதவி புரிகிறார். தயவு செய்து இதனுடன் உள்ள படத்தை வெளியிடவும். இனி என் கதைக்கு வருவோம்.
நான் மாதவிடாய் கோளாறினால் அவதிப் படுகின்றேன். என்னால் சரிவர வேலை செய்ய முடியாமல் தவித்தேன். சாயிபாபாவையும் வேண்டினேன். நான் ஒரு மருத்துவரிடம் சென்றேன். அவர் என்னை சோதனைகள் செய்தப் பின் எனக்கு கருப்பையில் கோளாறு உள்ளதாகக் கூறி இரண்டு மருந்துகளை அடுத்தடுத்த மாதவிலக்கு ஏற்படும் நாளில் சாப்பிடுமாறுக் கூறினார். ஆனால் அவை வேறு சில தொந்தரவை தற்காலிகமாக தரும் என்றார். நான் ஒரு வேலை மருந்தை சாப்பிட்டவுடன் எனக்கு வேறு பிரச்சனை ஏற்பட்டதினால் மருந்தை நிறுத்திவிட்டு இன்னொரு மருத்துவரிடம் சென்றேன். அவரும் என்னை சோதனை செய்தப் பின் கருப்பையில் கான்சர் நோய் இல்லை என்று கூறி எனக்கு வந்துள்ள பிரச்சனை தீர அந்த இரண்டு மருந்துகளை சாப்பிட்டே ஆகா வேண்டும், வேறு வழி இல்லை என்று கூறிவிட்டார்.
நான் வருத்தத்துடன் வீடு திரும்பினேன். சாயிபாபாவின் அருள் புத்தகத்தை திறந்தபோது அதில் அவர் சீரடியில் வந்த காலரா நோய் எப்படி அவர் அருளினால் தீர்ந்தது என்றதைக் குறிக்கும் வாசகம் இருந்தது. ஆகவே அவர் நிச்சயம் எனுடைய வியாதியை குணப்படுத்துவார் என நம்பினேன்.
என்னுடைய அலுவலகத்தில் எனக்கு மேல் பதவியில் இருந்த என்னுடைய நண்பர் ஒருவர் சாயி பக்தர். அவர் மூன்று முறை சாயி விரத்தை செய்தது தனது பிரச்னைக்கு வழி கண்டு உள்ளார். அந்த வீரத்தைப் பற்றி இணைய தளத்தில் படித்து உள்ளேன். எனக்கோ அப்படிப்பட்ட வ்ரதங்களை செய்து பழக்கமும் இல்லை, மன நிலைமையும் இல்லை. ஆனால் என் நம்பர் என்னை சாயி விரதம் அனுஷ்டிக்குமாறு வற்புறுத்தினார்.
நானும் வேறு வழி இன்றி சாயி விரத்தை துவக்கினேன். மூன்று வாரங்கள் செய்தப் பின் மூன்றாம் வார பூஜை இறுதியில் என் மீது யாரோ தண்ணீர் தெளிப்பது போலஉணர்ந்தேன். ஆனால் உடை நனையவில்லை. அது சாயியின் அருளாகவே இருந்து இருக்க வேண்டும்.
நான்காம் வாரம் நான் சாயியின் ஆலயத்துக்கு சென்றபோது எனக்கு வாடிக்கையாக பூ தருபவள் கூறினாள் 'எனக்கு சாயிபாபா கனவில் வந்து இரண்டு இலைகளைக் கொண்ட வேப்பிலையை சாப்பிடுமாறு உனக்கு அறிவுரைக் கூறுமாறு கூறினார்' என்றாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வேப்பிலையோ கசக்குமே என்றதற்கு அவள் அதை தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு அந்த நீரை குடிக்குமாறு கூறினாள். நானும் அதை செய்தேன். மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தேன்.
ஏற்கனவே வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு மகான்கள் ஏன் இப்படிப்பட்ட அவஸ்தையை கொடுக்க வேண்டும் என நினைக்கலாம். என்ன செய்வது. பூர்வ ஜென்மத்தில் செய்த பாபங்களை இந்த ஜென்மத்தில் இப்படி கஷ்டப்பட்டே கழிக்க வேண்டும்.
நான் பூஜைகளை சரிவரச் செய்தாலும் விரதத்தில் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. என் உடல் நிலை அப்படி. ஆகவே நான் காலையில் சாப்பாடு, மாலையில் சிறிது டிபன் மற்றும் இரவு பலகாரம் செய்து விரதம் இருந்தேன். பாபாவிடம் அதற்க்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
ஒன்பதாவது நாள் பூஜையை முடிக்க வேண்டும். முதல் நாளே கடையில் சென்று அன்னதானத்துக்கான இனிப்புகள், தண்ணீர் பாக்கேட்டுக்கள், போன்றவற்றை வாங்கி வைத்து விட்டேன். இரவு கடுமையான ஜுரம். மறுநாள் என்னால் விரத பூஜையை செய்ய முடியுமா என்பது போல உடல் நிலை இருந்தது. ஆனால் நல்ல வேலையாக பாபாவின் அருளினால் மறுநாள் நலமாக பூஜையை முடித்தேன். அதற்க்கு அடுத்த வாரம் எனக்கு மாதவிடாய் வந்தது. சாதாரணமாக இருந்தது. அதன் பின் அடுத்தடுத்து வந்த மாதவிடாய் சாதாரணமாகவே இருந்தது. எல்லாமே பாபாவின் அருள்.
நாம் எந்த அளவு பாபாவை ஆரதிக்கின்றோமோ அதைவிட அதிகமாக நமக்கு நன்மைகளை அவர் செய்கிறார். பூஜை செய்ய முடியாதவர்கள் விளக்கு ஏற்றி வைத்து ஊதுபத்தி ஏற்றி அவரை வணங்கலாம்.
இந்த உலகில் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீக வழியில் செலுத்த கடவுள் பல மகான்களை படைத்து மனித உருவில் அனுப்புகின்றார். நாம் பரபிரும்மனை நம்பவேண்டும். சாயியின் பக்தர்கள் பாபாவே பரப்பிரும்மன் என நினைக்கின்றார்கள். நாமும் அவரை சேவித்து நன்மைகளை அடையலாம்.
சாயி பக்தை 
------------------------------------

 

மனிஷாஜி
சாயி சரித்திரத்தில் பாபா கூறுவார், நீ என்னை நினைத்தால் நான் அடுத்த கணமே உன் முன் வருவேன். அதை அவர் பல வகைகளிலும், ஸ்டிக்கர், புகைப்படம், பாட்டு  போன்றவற்றின் மூலம் நமக்குக் காட்டுவார்.
நான் கடந்த பத்து நாட்களாக கடுமையான முதுகு வழியால் அவஸ்தைப்பட்டு வந்தேன். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் உட்கார்ந்து கொண்டு பாபாவை பிரார்தித்தபடி இருந்தேன். 'பாபா நீ எங்கே இருக்கின்றாய். இந்த கட்டிடத்தில்தான் இருக்கின்றாயா? என்னால் வலி தாங்க முடியவில்லை. எனக்கு அதை குணப்படுத்துவாயா. நீ நான் வேண்டுவதை நீ காது கொடுத்துக் கேட்கின்றாயா' என நான் பாபாவுடன் மனதில் பேசிக் கொண்டு இருந்தேன்.
திடீரென யாரோ அழைப்பதைப் போல உணர்ந்து இடது புறம் திர்ம்பிப் பார்த்தேன். சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த பாபாவின் படத்தில் யாரோ வீபுதியை தூவி இருந்தது போல படம் இருந்தது. (படத்தை இணைத்து உள்ளேன்) . நான் உன்னுடனே இங்கேயே இருக்கின்றேன் என்பதை அதன் மூலம் பாபா எனக்கு கூறிவிட்டார். அந்த வீபுதி யாரோ அங்கு வந்து தூவியது போல வாசனையாக இருந்தது.
நான் உடனே என் வீட்டினரை உரக்கக் கூவி அழைத்தேன். அவர்கள் வந்து அந்த வீபுதியை வழித்து பத்திரமாக எடுத்து வைத்தார்கள். நான் பாபாவை மனதார வணங்கினேன். உலகில் உள்ள அனைத்து பாபாவின் பக்தர்களுக்கும் இந்த லீலை மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.
(In to Tamil: Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.