Tuesday, December 13, 2011

Celebrating 125 Years of Nirvikalpa Samadhi Of Shirdi Sai Baba On 10th December 2011.


சீரடி சாயி பாபாவின் நிர்விகல்ப சமாதியின்
125 வருட தினத்தை 

10 .12 .2011 அன்று கொண்டாடுவோம் 

அன்பானவர்களே
அனைவருக்கும் சாயிராம்
இன்று எனக்கு வந்த ஒரு கடிதம் மூலம் ஒரு முக்கியமான ஆனால் இதுவரை நானா அறிந்திராத விஷயத்தை பற்றித் தெரிந்து கொண்டேன். அதற்க்கு முன்னர் சாயி  சரித்திரத்தில் உள்ள ஒரு முக்கியப் பகுதியை நீங்கள் படிக்க  வேண்டும் என்பதற்காக கீழே அதை தந்துள்ளேன்.
சாயி சரித்திரத்தின் 44 மற்றும் 45 ஆம் பகுதியில் ஸ்ரீ ஹேம பந்த் எழுதி உள்ளது இது : 1886 AD வருடத்திற்கு 32 வருடங்களுக்கு முன்னர் பாபா தன்னை ஒரு புதிய சோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டார். அன்று மகரஷீர்ஷா மாதம் பூர்ணிமா எனும் பௌர்ணமி தினம்.  பாபா ஆஸ்த்துமா நோயினால் கடும் உபாதைக்கு உள்ளானார். ஆகவே அவர் மூச்சை இழுத்துக் கொண்டு தான் சமாதி அடைந்து விட முடிவு செய்தார். அவர் பகத்  மல்லாஸ்பதியை அழைத்துக் கூறினார் '' என்னுடைய உடலை பத்திரமாக பார்த்துக் கொள். நான் திரும்ப வந்தால் சரி, இல்லை என்றால் என் உடலை அங்கு புதைத்து விட்டு அந்த இடத்துக்கு அடையாளமாக இரண்டு கொடிக் கம்பங்களை நட்டு வை '' எனக் கூறி ஒரு இடத்தைக் காட்டினார். சரியாக இரவு பத்து மணிக்கு அவர் பிராணன் செயல் இழந்தது.  அனைத்து கிராம மக்களும் அதைக் கேட்டுவிட்டு அங்கு வந்தார்கள். பாபாவின் உடலை தகனம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் பகத்  மல்லாஸ்பதியோ அதற்கு மறுத்து விட்டு அங்கேயே பாபாவின் சடலத்தைப் பாதுகாத்தபடி மூன்று நாட்கள் இருந்தார்.
மூன்று நாட்கள் கழிந்ததும் விடியற்காலை மூன்று மணிக்கு பாபா உணர்வு பெற்றதை கண்டார். மெல்ல மெல்ல அவர் உடலில் மீண்டும் மூச்சு விடும் சப்தம் கேட்டது. கண்கள் திறந்தன. வயிறும் மேலும் கீழும் அசைந்தது. கைகளை தூக்கினார். ஆமாம் பாபா மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து விட்டார்.
இவற்றைப் பார்த்து பக்தர்கள் தம்முள் ஒரு கேள்வியை  எழுப்பிக் கொள்ளலாம்.  ஐந்து புலன்களை அடக்கிய மனித உடல் அழியக் கூடியதே. ஆனால் மூன்றரை முழ உடலில் பாபா புகுந்து கொண்டு பல வருடங்கள் இருந்து விட்டு சென்றாரா அல்லது அவர் தனக்குள் தானாகவே இன்னமும் அழியாமல் இருக்கின்றாரா?
பரப்பிரும்மன்  எனக் கூறுகிறோமே அதை இயக்குபவரே சாயி பாபாதான். ஆகவே அவர் உலகம் முழுதும் வியாபித்திருக்கின்றார் என்பதே உண்மை. அவர் இல்லாத இடமே இல்லை.  தனது  கடமையை நிலை நாட்ட  ஒரு உருவிலே வந்தவர் தனது கடமை முடிந்தவிட்டவுடன், தன்னுடைய ஆத்மாவை சுமந்து கொண்டு இருந்த உடலை தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்.  தன்  முன்னோடிகளான தத்தாத்திரேயர் மற்றும் கங்காபூரை சேர்ந்த ஸ்ரீ நரசிம்ஹா ஸ்வாமிகளைப் போல சாயி பாபா இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றார். அவரிடம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்டவர்களுக்கும், அவரை  தூய்மையாக வணங்கி வழிபடுவோற்கும் அந்த உண்மை புலப்படும்.
மனிஷா


சரி, இப்போது எனக்கு இணையதளம் மூலம் வந்த கடிதத்தை அப்படியே பிரசூரிக்கின்றேன்.
தேவதாஸ்  பாட்கல்  டிசம்பர்   07 03:32PM +0530 
அன்பான சாயி பக்தர்களே
1886 ஆம் ஆண்டு சாயிபாபா மூன்று நாட்கள் சமாதி அடைந்தது அனைவருக்கும் தெரியும். அந்த கிராமத்தில் இருந்த அனைத்து மக்களும், மௌலிகளும் அவர் மடிந்து விட்டதாகவே எண்ணினார்கள். ஆனால் மல்லாஸ்பதியோ அந்த உடலுடன் காவலாக  மூன்று நாட்கள் இருந்தார். சாயிபாபா மீண்டும் பிழைத்து வருவார் என்றே நினைத்தார்.  அவர் வராமல் இருந்திருந்தால் இந்த உலகமே சாயிபாபாவை புரிந்து கொண்டு இருக்காது.  இது குறித்து  சாயி சரித்திரத்தில் விவரமாக எழுதி உள்ளார்கள்.அந்த நிகழ்ச்சி நடந்தது 1886 ஆம் ஆண்டு மகரஷீர்ஷா மாதம் பூர்ணிமா எனும் பௌர்ணமி தினம். அந்த தினம்  இந்த மாதம் 10 ஆம் தேதியன்று சரியாக 125 வருடத்திற்குப் பின்னால் மீண்டும் அதே போன்ற நாளிலும் மாதத்திலும் 2011 வருடத்தில்  வருகின்றது.  இந்த புனித தினம் அனைவராலும் கொண்டாட வேண்டிய தினமாகும். இந்த செய்தியை சாயி சமஸ்தானங்களுக்கும் தெரியப் படுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் இந்த தினத்தை தத்த  ஜெயந்தியாகவே கொண்டாட ஏற்பாடுகளை செய்துவிட்டார்கள். அந்த விழாவைப் பற்றிய செய்தியை   இதன்  மீது கிளிக்   செய்து  பார்க்கலாம். நான் இந்த நாளில் சாயி ஜெபம் செய்தவாறு இருக்க எண்ணி உள்ளேன்.  ஒவ்வொரு சாயி பக்தர்களும் இந்த நாளை அவரவர் பாணியில் கொண்டாடி மகிழ வேண்டும்.
ஜெய் சாயி ராம்
நிர்விகல்பா என்பது என்ன என்று தெரியாதவர்கள் கீழே உள்ளதைப் படிக்கவும்:
சமிஸ்கிரத மொழியில் நிர்விகல்பா என்றால் விழிப்புணர்ச்சி நிலையை உள்ளே இழுத்துக் கொள்ளுதல் அதாவது உடலின் இயக்கத்தையும் மனதின் இயக்கத்தையும் ஒன்று படுத்திக் கொள்வது; அல்லது கடலின் நுரைகள் கடலுக்குள் சென்று அமுங்கி விடுவது போல, தண்ணீரின் அலைகள் தண்ணீருக்குள்ளேயே முழுகி விடுவதைப் போல தான் செய்ய உள்ளதை அறிந்து கொண்டவர்,  தனது இயக்கத்தை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டவர் என்ற பொருளைத்  தரும்.  இந்த உண்மையான ஞான சமாதியைப் போல மற்ற  சமாதி நிலைகள் அமைந்து இருக்காது. மற்றவை அனைத்துமே  விழிப்புணர்வே திரும்ப முடியாத  சமாதி நிலைகள்.
(Translated by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.