Friday, August 24, 2012

Sai Leela's On Sai Blessed Kid Shri Nikesh.

என்குழந்தை நிகேஷுக்கு 

 
(Article condensed and translated into Tamil by : Santhipriya)

அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தம்மால் தீர்க்க முடியாத சிக்கல் தோன்றுவது உண்டு. அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களால் முடிவு செய்ய முடியாது. ஆனால் அவர்கள் அந்த நேரத்தில்அவர்கள் வணங்கும் குருவின் மீது நம்பிக்கை வைக்கும்போது, அந்த குரு அவர்களுக்கு தக்க உதவி செய்கிறார்.
இந்த கூற்றை எடுத்துக் காட்டுவது போல நடந்து உள்ள பாபாவின் ஒரு பக்தரின் அனுபவம் மயிர்க் கூச்சல் எடுக்க வைக்கின்றது. அதை படிக்கும்போது பாபா எப்படி எல்லாம் தனது பக்தர்களுக்கு உதவுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நிகேஷின் குடும்பத்திற்கு பாபா பரிபூரண அருள் புரிய வேண்டும் என்று அவரை வேண்டுவோம்.
மனிஷா
---------------------------------------------
 
ஓம் சாயிராம்.
கடந்த மே மாதம் இரண்டாம் தேதி புதன் கிழமை அன்று என்னுடைய மனைவி கர்பமுற்று 39 வாரங்கள் ஆகி இருந்த நிலையில்செயற்கை முறையில் பிரசவ வலியை ஏற்படுத்தி குழந்தைப் பிறக்க அவளை மருத்துவ மனையில் சேர்த்தேன். அவள் இன்னும் ஆறு மணி நேரத்தில் குழந்தைப் பெற்றெடுப்பாள் என்று மருத்து ஆயாக்கள் கூறினார்கள். பாபாவின் அருளினால் குழந்தை இந்த பூமியை தொட இருந்த நேரத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தோம். என்னுடைய மணிக் கணினியில் (லேப்டாப்பில் ) விஷ்ணுஸ் சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை கேட்டுக் கொண்டு இருந்தோம்.
காலை ஒன்பது மணி இருக்கும். நர்ஸ் எனப்படும் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் வந்து குழந்தையில் தலை இன்னும் மேலே வரவில்லை என்பதினால் அது மேலே வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்கள். அதற்காக ஒவ்வொரு முப்பது நிமிடம் கழிந்ததும் என்னுடைய மனைவியை அவள் படுத்துள்ள நிலையில் இருந்து மாற்றி மாற்றி படுக்குமாறு கூறினார்கள். நான் சாயி சத்சரித்திரத்தைப் படிக்கத் துவங்கினேன். மதியம் நர்ஸ் வந்து மனைவியில் கர்பப் பையில் இருந்த நீரை வெளியேற்றினால்தான் குழந்தை வெளி வருவதை உறுதி செய்ய முடியும் என்றாள். ஆனால் அந்த நேரத்தில் ஆண் மருத்துவர் மட்டுமே அங்கு இருந்ததினால் அவர் மூலம் அதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக் கொள்ள அவர்கள் அதை செய்து முடித்து விட்டு இன்னும் நான்கு மணி நேரத்தில் குழந்தை வெளியில் வரும் என்றார்கள். அப்போது மணி மாலை நான்கு ஆகி இருந்தது.
மாலை ஆறு மணியாயிற்று. பெண் மருத்துவர் வந்து அவளை மீண்டும் சோதனை செய்தப் பின், கர்பப்பையில் உள்ள நீரை வெளியேற்றியப் பின் குறைந்தது 4 அல்லது 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றார். நாங்கள் பாபாவை வேண்டிக் கொண்டே அமர்ந்திருந்தோம். மடிக் கணினியில்  பாபாவின் பஜனைகளை போட்டு அதைக் கேட்டுக் கொண்டு இருந்தோம். மேலும் ஒவ்வொரு 30 நிமிடத்துக்குக் பின்னர் படுத்துள்ள நிலையை மாற்றி மாற்றிக் கொண்டே படுத்துக் கொண்டதினால் என்  மனைவியும் சோர்வடைந்து  இருந்தாள்.  அதனால் அவர் அயர்ந்து தூங்கி விட்டாலும் வியாழன் அன்றைக்கா அல்லது வெள்ளிக் கிழமையா என்று  குழந்தைப் பிறக்கும் எனக் காத்து இருந்தபோது பாபா தினமான வியாழர்  கிழமை இரவு 11 .44 மணிக்கு என் குழந்தை பிறந்தான்.
மே மாதம் ஐந்தாம் தேதி வீடு திரும்பினோம். இரண்டு நாட்கள் கழிந்து மீண்டும் குழந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதும், அவனை சோதித்த மருத்துவர் குழந்தை பிறந்தபோது 15 % எடை குறைவாக இருந்ததினாலும், அவன் குடித்த பாலை வாந்தி எடுத்து விட்டதினாலும் அவனுக்கு பலம் கொடுக்க தாய் பாலை தவிர்த்து வேறு ஊட்டச் சத்தான செயற்கை பாலைக் கொடுக்குமாறு கூறினார்கள். அன்று இரவு குழந்தை அழகை நிறுத்தவே  இல்லை என்பதினால் மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவசர  சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். அங்கு அவனை சேர்த்தப் பின் அவன் உடல் நிலைக் குறித்து அடுத்த   24 மணி நேரம் கழிந்தால்தான் மேலும் எதையும்  கூற முடியும் என்று கூறி விட்டார்கள். அந்த நிலையை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. மே மாதம் எட்டாம் தேதியன்று நடு இரவில் என் மனைவி பிராணவாயுவில் (ஆக்ஸிஜன்) வைத்திருந்த  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்தபோது திடீர் என மின் தடை ஏற்பட பிராணவாயு தடைப்பட்டு  குழந்தை உயிர் அற்ற ஜடம் போல ஆகி விட்டது. என் மனைவி மயக்கம் அடைந்தாள். அமெரிக்காவில் குறிப்பிட்ட காரணத்துக்காக இல்லாமல் பொதுக் காரணத்துக்காக யாரையும் மருத்துவ மனையில் சேர்த்தால் அவர்களுக்கு அனைத்து சோதனைகளையும் செய்யாமல் மருத்துவம் தர மாட்டார்கள் என்பதினால் என் குழந்தை நிகேஷிற்கும் அந்த சோதனைகள் நடந்து கொண்டு இருந்தது.  இரண்டு முறை செயற்கை சுவாச சிகிச்சை வழி முறையை செய்து அவன் வயிற்றில் இருந்த தண்ணீரை வெளியே எடுத்தார்கள். இப்படியாக சாக இருந்த என் குழந்தையை இரண்டாவது முறையாக பாபா காப்பாற்றினார்.
சோதனை முடிவுகள் அனைத்தும் வந்தன. அவற்றில் எந்த குறையும் இல்லை என்பதினால் குழந்தையை தனி பிரிவில் வைத்து அதை கவனித்துக் கொள்ள தனி நர்ஸையும் அமர்த்தினார்கள். மீண்டும் அவனுக்கு அனைத்து சோதனைகளையும் செய்தபோது அனைத்து முடிவுகளும் அவனுக்கு வேறாக  இருந்தன. அதுவும் பாபாவின் விளையாட்டோ?
மே மாதம் எட்டாம் தேதியன்று மருத்துவர்கள் என் குழந்தையின் உடலுக்குள் உணவு செல்லும் முறையை சோதித்துக் கொண்டு இருந்தபோது  குழந்தை விக்கியதினால் அவன் உண்ட உணவு வயிற்றில் செல்லாமல் நுரையீரலில் சென்று விட மீண்டும் குழந்தை மூச்சு இல்லாமல் போயிற்று. மிகவும் கஷ்டப்பட்டு குழந்தையை பிழைக்க வைத்தார்கள். அதுபோன்று ஒரு  சோதனையான கட்டத்தை  தன்னுடைய  வாழ்நாளில் அங்கு கண்டதில்லை என்று அங்கிருந்த நர்ஸ் கூறினாள்.
மே மாதம் 11 ஆம் தேதி. என் குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் உண்ணும் உணவு வயிற்றில் செல்லாமல் மூச்சுக் குழாய் வழியே நுரையீரலுக்கு சென்று விடுவதாகவும், அது  ஒருவிதமான  உடல் கோளாறு எனவும், மூச்சுக்குழாய் மற்றும் வயிற்றுக்கு உணவு செல்லும் பாதையில் ஏற்படும் வியாதியான 'பிஸ்டுலா' எனும் அந்த கோளாறை நிவர்த்திக்க வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேட்ட என் மனைவி மீண்டும் மயக்கம் அடைந்தாள். வேறு வழி இன்றி  அவனுக்கு கைதேர்ந்த ஒரு குழந்தை நல மருத்துவர் வந்து அறுவை சிகிச்சை செய்வதாக ஏற்பாடு ஆயிற்று. அந்த மருத்துவர் வந்து எங்களுக்கு அந்த அறுவை சிகிச்சையை எப்படி செய்வார்கள் என்பதை எடுத்துக் கூறினார். அதன்படி வயிற்றைக் கிழித்து விலா எலும்புகளை சரி செய்தப் பின் மூச்சுக் குழாய் மற்றும் உணவு செல்லும் பாதையை மாற்றி அமைப்பார்கள் என்றும் அதனால் அந்த பாதைகள் சற்று அளவில் சுறுங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார் . அதைக் கேட்ட நாங்கள் இனி  குழந்தைப் பிழைப்பது அரிதே என்பதை உணர்ந்து கொண்டு பாபாவை வேண்டத் துவங்கினோம்.
என் மனைவிக்கு பாபாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குழந்தைப் பிறந்தப் பின் குறிப்பிட்ட நாட்களுக்கு பாபாவின் ஆலயத்துக்கு செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு இருந்ததினால் அது நடக்கவில்லை. ஆகவே பாபா யாராவது ஒரு உருவில் வந்து அந்த துயரமான நேரத்தில் தனக்கு ஆறுதல் அளிக்க மாட்டாரா என அவள் வேண்டிக் கொண்டாள். மறுநாள் அந்த மருத்துவமனை நர்ஸ்  வந்து என் மனைவியின் மன நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அவர்களுடைய தேவாலயத்தின் மதகுருவுடன் பேச விருப்பமா எனக் கேட்டாள். அதற்கு என் மனைவி ஒப்புக் கொண்டதும்  அவருடன் பேசிய என் மனைவி பிறந்தக் குழந்தையினால் நாங்கள் அதுவரை பட்ட அனைத்து துயரத்தையும்  கூறியப் பின் அவர் அவளை ஆசிர்வத்தித்தார்.  அடுத்து ஒரு அதிசய நிகழ்ச்சி நடந்தது. குழந்தை நல மேன்மை மருத்துவர் வந்து குழந்தையை மீண்டும் சோதனை செய்தப் பின் தான் அந்தக் குழந்தைக்கு வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு எளிய வழியில் -எண்டாஸ்கோபி எனும் முறையில் செய்ய உள்ளதாக கூறினார். அதற்காக குழந்தையை வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். அந்த அறுவை  சிகிச்சையை செய்ய உள்ளது அமெரிக்காவிலேயே பிரபலமான அமெரிக்க நாட்டின் மருத்துவர் கிளென் என்பவர் என்றும், ஆகவே அந்த மருத்துவ மனையில் அந்த அறுவை சிகிச்சை செய்ய கிடைக்கும் நாளை பொறுத்து அதை அவர் செய்வார் என்றும் கூறினார்.
நாங்கள்  மகிழ்ச்சி அடைந்து தேவாலய மத குருவிடம் அதைப் பற்றிக் கூற அவர் அன்று மாலையே தனது மற்ற குருக்களுடன் மருத்துவ மனைக்கு வந்து பிரார்த்தனை செய்தார். மே மாதம் 15 ஆம் தேதி. குழந்தையை மிச்சிகனில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். அந்த சிகிச்சை முடிய சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம் என்று அவர்கள் கூறினாலும், அதற்கு மேலும் அதிக நேரமாக நாங்கள் காத்துக் கொண்டு இருந்தோம். அறுவை சிகிச்சை செய்த பின் வெளியில் வந்த மருத்துவர் கிளென் குழந்தையின் உடலுக்குள் மூச்சுக் குழாய் மற்றும், வயிற்றுக் குழாய் இரண்டும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து இல்லை என்றும், பிஸ்டுலா என்ற வியாதியும் அவனுக்கு இல்லை என்றும் கூற நாங்கள் ஆச்சர்யம் அடைந்தோம். அவரை நாங்கள் பாபாவின் உருவமாகவே பார்த்தோம்.
எங்கள் பிரச்சனை அதோடு நின்று விடவில்லை. பிஸ்டுலா எனும் கோளாறு இல்லை என்றாலும் திடீர் என குழந்தையின் நாக்கு சுறுங்கிக் கொண்டது. அதை சரி செய்ய மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அந்த சிகிச்சைக்கும் ஏற்பாடு ஆயிற்று. மே மாதம் 18 ஆம் தேதி ஆயிற்று. அந்த அறுவை சிகிச்சை துவங்கும் முன்னால்  அவன் மூக்குப் பகுதியை சோதனை செய்ய விரும்பிய மருத்துவர் அந்த சோதனை செய்யும் கருவியை மூக்கில் புகுத்தி சோதனை செய்தப் பின் அதை வெளியே எடுக்க  அவன் நாக்கு கோளாறு தானாகவே சரியாகி விட்டது. அதைக் கண்ட  அனைவரும் வியந்தார்கள், அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இதுவும் பாபாவின் மாயமே.
அதற்கு முன் என் மனைவி பிஸ்டுலா எனும் கோளாறு சரியானதும் பாபாவின் விரதத்தை செய்வதாக உறுதி கூறி இருந்தாள். அது சரியாகி விட்டதினால் நானும் அவளுடன்  சேர்ந்து விரதம் இருக்க முடிவு செய்தேன். ஆனால் குழந்தைக்கு மூச்சு விடக் கஷ்டமாக இருப்பதினாலும், அவன் பய உணர்வினால் உணவு வயிற்றில் செல்லாமல் உள்ளது என்பதாலும், சிறிது நாட்கள் குழந்தையை அங்கேயே வைத்து இருந்து அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். குழந்தையின் உணவு வயிற்றுக்குள் சரியாகச் செல்லாததினால் அவனுக்கு மூக்கின் மூலம் ஒரு குழாயை வயிற்று வரை சொறுகி வைத்து அதன் மூலம் உணவை செலுத்தி வந்தார்கள் . ஆனால் ஒருநாள் குழந்தை அந்தக் குழாயை வெளியில்  பிடுங்கி எடுத்து விட, மீண்டும் அதை உள்ளே சொறுகினார்கள். அவனை சோதனை செய்த  மருத்துவர்கள் அவனுக்கு உணவுக் குழாயின் கீழ் பகுதியில் கோளாறு இருக்கலாம் என நினைத்தார்கள். ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார்கள்.
ஆகவே அந்தக் கோளாறையும்  கண்டுபிடிக்க சில சோதனைகள் செய்தார்கள்.  அதன் பின் அனைத்தும் சரியாக இருப்பதைக் கண்டு பிடித்தார்கள். நாங்கள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி  மருத்துவ மனையை விட்டு வெளியேற  ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் இன்னமும் மூக்கின்  குழாய்  மூலம் உணவு செல்வதினால் அத்தனை விரைவாக வீட்டிற்கு செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார்கள்.  முடிவாக அனைத்தும் முடிந்தப் பின் ஜூன் 18 ஆம் தேதி மருத்துவமனையை விட்டுக் கிளம்ப ஏற்பாடு ஆயிற்று. மீண்டும் பாபா வேறு விதமாக நினைத்து இருந்துள்ளார். குழந்தையின் வயிற்றில் இருந்து திடீர் என  நிறைய அமிலத் தண்ணீர் வெளியில் வரத் துவங்கியது.   மீண்டும் வயிற்றை திறந்து அந்தக் கோளாறைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவு ஆயிற்று. அதை வியாழர் கிழமை செய்ய இருந்தார்கள்.
நானும் என் மனைவியும் பாபாவின் ஆலயத்துக்கு சென்றோம். அவர் முன்னால்  நின்று எங்கள் நிலையைக் கூறி கதறினோம். சற்று நேரம் பொறுத்து அவர் எங்களுக்கு ஆறுதல் தருவது போல உணர்ந்தோம். அந்த அறுவை சிகிச்சைக்கும் அதில் சிறந்த  மருத்துவரான கிளென் வந்தார். அந்த அறுவை சிகிச்சையில் அந்த கோளாறுக்கான சிகிச்சையை செய்தார்கள்.
எங்களுடைய கர்மாவே அனைத்திற்கும் காரணம் என்பது http://www.shirdisaiheals.com என்ற தளத்தைக் கண்டபோது தெரிந்தது. மெல்ல மெல்ல குழந்தை நலம் அடையத்  துவங்க நாங்கள் மருத்துவ மனையில் இருந்து அவனை ஜூலை மூன்றாம் தேதியன்று வீட்டிற்கு அழைத்து வந்தோம். இன்னமும் அவனுக்கு ஓரளவு மூச்சு இறைக்கும்  பிரச்சனை உள்ளது. பாலும் குடிக்க மறுக்கிறான். ஆனாலும் அவன் அதில் இருந்து விடுபடுவான் என்று அந்த நல்ல நாளை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறோம்.

குழந்தையின் எடை அதிகரித்த அற்புதம்
குழந்தையின் எடை மிகக் குறைவாக உள்ளது என்று கூறி விட்டு அவனுக்கு சத்துணவு கலந்த பாலை தருமாறு மருத்துவர் கூறி இருந்தபோது நடந்த சாயி மகிமை இது. ஐந்து நாட்கள் தொடர்ந்து எடையைப் பார்த்தாலும் அவன் எடை ஏறவே இல்லை என்பதினால்தான் குழந்தையின் எடை மிகக் குறைவாக உள்ளது என்று கூறி விட்டு அவனுக்கு சத்துணவு கலந்த பாலை தருமாறு மருத்துவர் கூறினார். ஆனால் அவர் கூறியதின் மறுநாள் வந்து குழந்தையின் எடையை பார்த்தபோது அவன் 280 கிராம் அதிக எடையுடன் இருந்தான். நான்கு எடை இயந்திரங்களில் அவனை சோதித்தபோதும் அவனுடைய எடை அதே அளவு இருந்ததைக்  காட்ட சாதாராணமாக ஓரே நாளில் அத்தனை எடை உயராது என்பதினால் அதைக் கண்ட மருத்துவர் எங்களை நிகேஷ் அதிக ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறான் என்றார்.

பெயர் மாற்றம்
ஒருநாள் நாங்கள் குழப்பத்தில் இருந்தபோது குழந்தையின் பெயரில் இருந்த பெயரை மாற்ற வேண்டும் என ஆயிற்று . என் மூத்த மகனின் பெயர் சாய்கிரிஸ் என்பதினால் இரண்டாவதாக பிறந்த நிகேஷின் பெயரை சாய்நிகேஷ் என வைத்து இருந்தோம். ஆனால் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததினால் சாயியின் அற்புதங்கள் என்ற புத்தகத்தை எழுதிய சகோதரர் ரணதீர் கொடுத்த ஆலோசனைப்படி குழந்தையின் பெயரை ஸ்ரீ நிகேஷ் என வைக்க வேண்டியதயிற்று. அதற்கும் பாபாவே காரணமாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம்.
நிகேஷுக்காக தயவுசெய்து நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்
சாயிராம்
பாலாஜி

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.