Friday, August 2, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 56


( Translated into Tamil by Dr. Sankarkumar, USA )


ஜெய் ஸாயிராம். 
அனைவ‌ருக்கும் இனிய‌ பாபாநாள் ந‌ல்வாழ்த்துக‌ள்.
இந்த‌ப் ப‌திவில் 3 அனுப‌வ‌ங்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஜ‌ப்பானில் வ‌சிக்கும் ராதா, அங்கே இருக்கும் ஒரே ஒரு பாபா ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதத்தையும், திரு. ஆஷிஷ் என்பவர் தான் எப்படி பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருந்து பாபாவின் அண்மையை வேண்டுகிறார் என்பதையும், கனவில் பாபாவைக் கண்ட ஒரு அன்பரின் அனுபவ‌மும் இடம் பெறுகின்றன.  ஸாயிபாபாவின் விருப்பப்படியே அனைத்தும் நிகழ்கின்றன என்பது மேலும் உறுதியாகிறது. ஜெய் ஸாயிராம். 
 மனிஷா.
ஸாயிபாபா நான் சமைத்த கிச்சடியை ருசித்தார்

அனைவ‌ருக்கும் ஜெய் ஸாயிராம்.
ஜ‌ப்பானில் இருக்கும் ஒரே பாபா ஆல‌ய‌த்தில் நிக‌ழ்ந்த‌தைப் ப‌ற்றி எழுதுகிறேன். இந்த‌க் கோவில் எங்க‌ளுக்கெல்லாம் ஒரு பூலோக‌ சுவ‌ர்க‌ம். பாபாவின் அடிய‌வ‌ர்க‌ளான‌ ஒரு ஜ‌ப்பானிய‌ த‌ம்ப‌தியின‌ரால் இந்த‌க் கோவில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு சில‌ க‌ட்டுப்பாடுக‌ளால், வியாழ‌ன், ச‌னி ஆகிய‌ இரு தின‌ங்க‌ளில் ம‌ட்டுமே ம‌திய‌ம் 1 ம‌ணி வ‌ரை இது திற‌ந்திருக்கும்.
ஒவ்வொரு வியாழ‌ன்றும் நாங்க‌ள் ச‌த்ச‌ங்க‌ம் நிக‌ழ்த்தி, ஸாயி அம்ருத‌வாணியைப் ப‌டித்து ஆர‌த்தி செய்வோம். சென்ற‌ மே 23-ந் தேதிய‌ன்று எங்க‌ள‌து திரும‌ண‌ நாளாக‌வும், அன்று வியாழ‌னாக‌வும் இருந்த‌தால், எங்க‌ள் இல்ல‌த்தில் ஏற்பாடு செய்திருந்தேன். அன்று காலை நான் வ‌ழ‌க்க‌மாக‌ அபிஷேக‌ம் செய்யும்போது, இந்த‌ முறை ஆல‌ய‌த்துக்கே சென்று, அங்கேயே இதைப் ப‌டித்தால் என்ன‌ என‌ ஒரு எண்ண‌ம் தோன்ற‌வே, ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கேட்ட‌தில், அவ‌ர்க‌ளும் ம‌கிழ்வுட‌ன் ஒப்புக் கொண்ட‌ன‌ர்.
அப்போதே காலை 8 ம‌ணி ஆகிவிட்ட‌தால், குறைந்த‌து 9 ம‌ணிக்காவ‌து கிள‌ம்பினால்தான், சுமார் 1.30 ம‌ணி தூர‌ப் ப‌ய‌ண‌த்தில் இருக்கும் அங்கே செல்ல‌ முடியுமென்ப‌தால், அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஒரு கிச்ச‌டியைக் கிண்டிக்கொண்டு 11.15 ம‌ணி அள‌வில் ஆல‌ய‌ம் அடைந்தேன். ம‌ற்ற‌ ந‌ண்ப‌ர்க‌ளும் பிர‌சாத‌ம் கொண்டு வ‌ந்திருந்த‌ன‌ர்.
பாபா முன் அவ‌ற்றை வைத்துவிட்டு, அமிர்த‌வாணியை ஆர‌ம்பித்தோம். ஆல‌ய‌ம் ஒரு சிறிய‌ வீடு போல் இருக்கும். அதைப் பார்த்துக் கொள்ப‌ரும், அவ‌ருடைய‌ அழ‌கான‌ நாயையும் த‌விர‌ வேறு எவ‌ரும் இல்லை. பாபாவின் பிர‌திமை மிக‌ப் பெரிய‌து. ப‌ளிங்கினால் செய்யப்படாமல், வேறொரு வெள்ளைக் கல்லில் ஆனது. பாபாவின் முகம் மிக அழகாக ஒரு ஜப்பானியர் முகம் போல இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் எனக்குக் கொள்ளைப் பிரியம்!
பாராயணம் தொடங்கியதுமே திடீரென கிச்சடியின் நறுமணம் மூக்கைத் துளைத்தது. நான் சமைத்தபோது அந்த வாசனை இருக்கவில்லை. ஆரத்திக்கு முன், எல்லாப் பிரசாதங்களிலிருந்தும் ஒரு கரண்டி எடுத்து பாபாவுக்குச் சமர்ப்பித்தது வழக்கம். என் பாத்திரத்தைத் திறந்தபோது, அதிலிருந்தூ யாரோ ஒரு ஸ்பூன் எடுத்துச் சாப்பிட்டதுபோல் தடயம் இருந்தது. சாதாரணமாக, கிச்சடி சமைத்ததும், அதன் சூடு ஆறியபின், அதன் மீது கெட்டியாக சமதளமாகவே இருக்கும். அதில் எப்படி இந்தத் தடயம் வந்தது என வியந்தேன். அதைக் கண்ட அனைவருமே மெய் சிலிர்த்துப் போனோம்.
இனி மாதா மாதம் ஒரு முறையாவது அம்ருதவாணியை ஆலயத்தில் படிப்பது என முடிவு செய்தோம். கடந்த இரு மாதங்களாக பாபா அருளால் இதைச் செய்தும் வருகிறோம்.நாம் அன்புடன் அவருக்குச் செய்யும் அனைத்தையும் பாபா மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார். பொறுமையையும், நம்பிக்கையையும் நமக்கு அளிக்கிறார்.
ஸாயிராம்.
ராதா.
 =============

வாழ்வின் இல‌க்கை அடைய‌ பாபா காட்டும் வ‌ழி

த‌குந்த‌ வ‌ரைப‌ட‌ம் இல்லாம‌ல் இத்த‌னை நாள் செல‌விட்டேன். பாபா அருளால் இப்போது ந‌ல்வ‌ழி கிட்டிய‌து. இதுவே நான் பாபாவை அணுகிய‌தால் என‌க்குக் கிடைத்த‌ பொக்கிஷ‌ம்.
அவ‌ரைப் ப‌ற்றி அறியாத‌போது, ம‌ன‌ம் போன‌ப‌டி வாழ்ந்தேன். ஆனால், இப்போது அவ‌ர் என‌க்கு ஆசி த‌ந்து, நேர்வ‌ழி காட்டுகிறார். ம‌னித‌ ஆசையால் விளையும் உலக‌ப் பொருட்க‌ளை வேண்டிய‌போதும், அவ‌ற்றையெல்லாம் ஒரு அன்பான தந்தை போல பாபா என‌க்கு அளித்தார்.
இப்போதோ, ப‌ண‌ம் குறைவின்றி இருந்தும், பொருட்க‌ளின் மீது நாட்ட‌மில்லை. ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரிருந்தும் த‌னிமையையே நாடுகிறேன். எத்த‌னையோ அழைப்புக‌ள் வ‌ந்தாலும், கூட்ட‌த்தைத் த‌விர்க்கிறேன்.
பாபா என‌க்குத் த‌ந்த‌தைப் ப‌ற்றி எந்த‌க் குறையும் இல்லை. இதையெல்லாம் ஏன் செய்தார் எனும் கேள்வியே என‌க்குள்.  கிடைத்ததை மகிழ்வுடன் ஏன் அனுபவிக்க விருப்பமில்லாமல் போனது எனச் சிந்தித்ததில், இவையெல்லாம் மாயையே என்பதும், என் இலக்கு இதுவல்ல என்பதும் பாபா அருளால் எனக்கு விளங்கியது.
ஆலயம் செல்லவும், வழிபாடுகளில் கலந்துகொள்ளவும், ஓம் ஸாயிராம் எனும் நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கவுமே நான் விரும்புகிறேன். நாமத்தை உச்சரிக்கும்போது, அது எனக்குள் என் மூச்சுடன் கலப்பது தெரிகிறது. சில சமயம், பாபாவின் உருவமும் தெரிகிறது.  மகிழ்வுடன் அழ வேண்டும்போல் தோன்றுகிறது.  எனக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் சீக்கிரமே சரி செய்து, என்னை நான் அடைய வேண்டிய இலக்கில் செலுத்துமாறு பாபாவை வேண்டுகிறேன். அது தீர்ந்ததும், என் வாழ்க்கை முழுவதையும் பாபாவுக்கே அர்ப்பணிக்க நினைக்கிறேன். 
பாபாவை உறுதியாகப் பற்றினால், நீங்கள் எதுவும் செய்யாமலேயே அனைத்தையும் அவர் நடத்திக் கொடுப்பார் எனும் உண்மை
 மற்றவருக்கும் தெரியவேண்டுமென நான் இங்கே எழுதுகிறேன்.பாபாவை அணுகி அவரைச் சரணடையுங்கள். நல்லதொரு படகோட்டியாக அவர் உங்களை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பார். நம் அனைவரையும் பாபா ஆசீர்வதிப்பாராக.
ஓம் ஸாயிராம் ஹரே ஹரே!
ஆஷிஷ்.
 =============
கன‌வில் பாபா த‌ரிச‌ன‌ம்
ஓம் ஸாயிராம்.
ஸாயி ம‌ஹ‌ராஜுக்கு என் அடி ப‌ணிந்த‌ வ‌ந்த‌ன‌ம். ஸாயி லீலைக‌ள் அனைத்துமே அற்புத‌மான‌வை. அவை ந‌ம் வாழ்வின் போக்கையே மாற்ற‌ வ‌ல்ல‌வை. அவ‌ர‌து அருளின்றி இவை நிக‌ழ்வ‌தில்லை. ஸாயி ஸ‌த்ச‌ரித‌ப் பாராய‌ண‌ம் செய்யும்போது, என் க‌ன‌வில் வ‌ந்து ஒரு முறையாவ‌து த‌ரிச‌ன‌ம் த‌ர‌ வேண்டினேன். அதிச‌ய‌மாக‌, என‌க்கு நான்கு முறை அது கிட்டிய‌து. அவ‌ற்றுள் ஒன்றை ம‌ட்டும் இங்கே குறிப்பிட‌ விரும்புகிறேன்.
பாபாவின் மிக‌ப் பெரிய‌ ப‌ளிங்குச் சிலை! அவ‌ர‌து பாத‌ங்க‌ள் அலைக‌ளைத் தொட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌. இத‌மான‌ க‌ட‌ல் காற்றும், நீர்த் துளிக‌ளும் என் முக‌த்தின் மீது ப‌ட‌ நான் வேக‌மாக‌ அவ‌ரை நோக்கி ஓடுகிறேன்.
இதோடு என‌ காட்சி நிறைந்த‌து.  இத‌ன் மூல‌ம், ச‌ம்ஸார‌ ஸாக‌ர‌த்தின் அக்க‌ரைக்கு கொண்டு செல்வ‌தாக‌ ஸாயிபாபா‌ த‌ம‌து ப‌க்த‌ருக்கு உறுதி அளிப்ப‌தாக நான் உண‌ர்கிறேன். இதைக் க‌ருத்தில் கொண்டு, அவ‌ர‌து பாத‌ங்க‌ளை உறுதியாக‌ப் ப‌ற்றிக் கொண்டு, ந‌ற்செய‌ல்க‌ள் புரிந்து, எப்போதும் ஸாயி, ஸாயி, ஸாயி என‌ச் சொல்லிக் கொண்டிருப்ப‌தே சிற‌ந்த‌ சாத‌னை ஆகும்.
இதைத் த‌விர‌ வேறேதும் குறிப்புக‌ள் தோன்றினால், அவ‌ற்றைச் சொல்லுமாறு வாச‌க‌ர்க‌ளைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஸாயிபாபாபா ந‌ம் அனைவ‌ரையும் ஆசீர்வ‌திப்பாராக‌.
ஜெய் ஜெய் ஸாயி - நீங்க‌ள் இல்லாம‌ல் எவ‌ராலும் எதுவும் செய்ய‌ இய‌லாது.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.