Thursday, July 28, 2011

Sai Takes Away Our Fear And Worries-Experiences Of Sai Devotees


அன்பானவர்களே
இன்று பாபாவின் நாள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாம் எங்கு இருந்தாலும் பாபாவை நம்பினால் அவர் நம்மை காத்தருள்வார் என்பதற்கு இதோ சில அனுபவங்கள்.
மனிஷா

சாயி லீலை-1
என் பெயர் கிரண். திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய வேலையில் நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன். என்னால் அதை விடவும் முடியவில்லை, அதில் தொடரவும் முடியாது என்ற நிலையில் இருந்தேன். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் பாபாவை மறந்தும் விடுகிறோம் என்றாலும் அவர் நம்மை கைவிடுவது இல்லை. எனக்கு சுற்றிலும் ஆறுதலுக்கு பலர் இருந்தாலும் நான் அவர் பாதங்களில் விழுந்தே எனக்கு எப்போது இந்தக் கொடுமைகள் விலகி மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்று வேண்டுவேன். கடந்த மூன்று நாட்களாக நாம் பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரிடம் எனக்கு இனிமேல் இந்த கொடுமையை தாங்க சக்தி இல்லை, இனி நீதான் ஏதாவது செய்ய வேண்டும் என அழுதேன். இன்று குருபூர்ணிமா என்பதினால் இன்றும் அவர் ஆலயத்துக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்தேன். அதன் பின் எனக்கு மெல்ல மெல்ல மன அமைதி கிடைக்கலாயிற்று.
சாயிபாபாவை நம்முடைய தாயார் போலக் கருதி அவர் பாதங்களில் விழுந்து நம் துயரை கூறி அழுதால் அவர் நம்மை நிச்சயம் நம்மை காப்பாற்றுவார். அவர் எப்படி நம்மை கைவிடுவது இல்லையோ அப்படித்தான் நாமும் அவரை மறந்து விடக் கூடாது.
ஜெய் சாயி ......... யோகிராஜ்....சச்சிதானந்த சத்குரு சாயி மகராஜுக்கு ஜெய்.
கிரண்
சாயி லீலை-2

அன்புள்ள சகோதரி மனிஷா
என் பெயரை வெளியிட வேண்டாம். நான் எழுதியதில் குறை இருந்தால் சரி செய்து வெளியிடவும். நான் இந்த குடும்பத்தில் சேருவதற்கு (மனிஷாவின் இணையத்தளம் ) காரணமான சாயியிடம் நன்றி கூறுகிறேன்.
நான் நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய பெற்றோர்களின் எதிர்பார்பை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் மேலும் மேலும் பல பிரச்சனைகளில் முழுகினேன். எங்கு செல்வது எனத் தெரியவில்லை. மரணத்தின் எல்லைக்கே சென்று விட்டது போன்ற நிலையில் இருந்தேன்.
நான் அதிகம் கூற விரும்பவில்லை. நான் நன்கு படிக்கவில்லை என்பதினால் பெற்றோர்களிடம் அதிகம் புளுகிக் கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. காரணம் என்னை சுற்றி இருந்த ஊதாரித்தனமான நண்பர்கள் கூட்டமே . வாழ்கை என்பது உல்லாசமாக இருந்து கழிக்க வேண்டியது என்றே நினைத்து வந்தேன்.
நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு என்னுடைய பெற்றோர்கள் தந்த பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டு அவர்களிடம் பொய்யைக் கூறிக் கொண்டு அவர்களை கூறி திசை திருப்பிக் கொண்டு இருந்தேன். அதனால் நல்ல மார்க்குகள் படிப்பில் கிடைக்கவில்லை. என்னுடைய தாயார் என்னை அருகில் வைத்துக் கொண்டு என்னுடைய தந்தை எப்படி கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துத் தருகிறார் என்பதையும், பலவிதமான அறிவுரைகளை வழங்கினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் நான் இல்லை.ஒரு நாள் என்னுடைய ஒரு நண்பன் குடித்துவிட்டு காலேஜிற்கு வந்தான்.
அங்கு இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடேயே ஏற்பட்ட வாய் தகராறு பெரிய கைகலப்பாக மாறி சண்டை இட்டுக் கொண்டார்கள். நான் தூர இருந்தவாறு அதைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அந்த சண்டையில் கலந்து கொள்ளவில்லை. அடுத்து காலேஜ் அதிகாரிகள் வந்து அந்த சண்டையை அடக்கினார்கள்.  சண்டையிட்டுக் கொண்டவர்களை பிரின்சிபால் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அதில் அங்கு நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த நானும் ஒருவன். நான் அந்த சண்டையில் கலந்து கொள்ளவே இல்லை, எனக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறினாலும் காலேஜை விட்டு எங்களை வெளியேற்ற முடிவு செய்து எங்கள் பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறி விட்டார்கள்.
நான் வீட்டிற்குப் போக பயந்தேன். அவை அனைத்தும் எப்படி நடந்தது என எண்ணிக் கொண்டே மன வருத்தத்துடன் நடக்கையில் தூரத்தில் ஒரு ஆலயத்தில் இருந்து இனிய பாட்டு ஓசை கேட்க நானும் என்னை அறியாமல் அங்கு நடந்து சென்றேன். அங்கு சென்று அமைதியாக உட்கார்ந்த நான் என் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என யோசனை செய்தேன்.
ஒரு அரை மணி நேரம் இருக்கும். அப்போது என் தோள்களை உலுக்கி பிரசாதம் தந்தபோதுதான் அது சாயிபாபாவின் ஆலயம் என்பது தெரிந்தது. அதன் பின் அங்கேயே அமர்ந்து கொண்டு பாபாவின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். மனதில் அமைதி தோன்றியது. சற்று நேரம் அங்கு அமர்ந்து இருந்தபோது அங்கு என் நண்பன் ஒருவன் வந்து என்ன நடந்தது எனக் கேட்டான். நான் நடந்ததை அவனிடம் கூற அவன் பாபாவின் அருளினால் அனைத்தும் சரியாகிவிடும் என ஆறுதல் கூறினான். அவன் பாபாவிடம் என் குழப்பங்கள அனைத்தும் தீர்ந்தால் நான் என்னிடம் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டு விடுவதாக உறுதி கூறி விட்டு செல்லுமாறு கூற நானும் பாபாவை வணங்கிவிட்டு அப்படியே உறுதி மொழியை எடுத்துக் கொண்டேன்.
வீடு திரும்பியதும் கம்பியூட்டரை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தபோது சகோதரி மனிஷாவின் இணையதளத்தை பார்க்க நேரிட்டது. ஆகவே அவர்களிடம் என் துயரத்தை எழுத அவள் எனக்கு அறிவுரை தந்து பதிலும் எழுதினாள். பெற்றோர்களிடம் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறுமாறும், பாபா அதற்கு மேல் நடப்பதை பார்த்துக் கொள்வார் என்றும் அறிவுறுத்தி இருந்தாள். ஆகவே மனதில் தைரியம் வந்தது.
மறுநாள் காலை எழுந்து என் தந்தையிடமும் தாயாரிடமும் நடந்தவற்றைக் கூறி அழுதேன். நான் பயந்ததற்கு மாறாக அவர்கள் என்னை கடிந்து கொள்ளவே இல்லை. இனி அப்படியெல்லாம் கெட்டவர்களுடன் சேர மாட்டேன் என்ற உறுதி மொழியை அவர் என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார். மறுநாள் என்னுடன் என் தந்தை காலேஜிற்கு வந்தார். உள்ளே நுழைந்ததும் என்ன அதிசயம், என் தந்தை பேசும் முன்பே பிரின்சிபால் நானும் அந்த கூட்டத்தின் அருகில் நின்று கொண்டு இருந்ததினால் அதில் தொடர்ப்பு கொண்டவன் என தவறுதலாக கருதி என் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் நான் அதில் சம்மந்தப்படவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டதினால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், அதனால் எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துவதாகவும் கூறி எங்களை அனுப்பினார். நான் வெளியில் வந்து என் தந்தையை அணைத்துக் கொண்டேன். சகோதரி மனிஷா தந்த அறிவுரையினால்தான் என் பிரச்சனை முடிவுக்கு வந்தது. நான் தற்போது நன்கு படித்து நல்ல மார்க்குகள் எடுக்கின்றேன். பெறோர்கள் சொல்படிக் கேட்டு நடக்கின்றேன். சாயி ஆலயத்துக்கும் விஜயம் செய்கின்றேன். தேவை இல்லாமல் செலவு செய்து ஊதாரித்தனமாக இருப்பது இல்லை.

பாபாவின் புதல்வன்

லீலை-3

நான் பாபாவைப் பற்றி என்னுடைய சித்தி மூலம் அறிந்து கொண்டேன். அவள் எனக்கு நிறைய கதைகள் கூறி, சாயி ஆலயத்துக்கும் அழைத்துச் செல்வது உண்டு. நான் பாபாவை நினைத்தால் அவர் உருவம் என் கண் முன் தோன்றும். உடனே கண்களை மூடிக் கொண்டு விடுவேன். அவர் என்னுடன் இருப்பதை பலமுறை உணர்ந்து உள்ளேன். அவர் எனக்கு நிறைய அறிவுரைகளைக் கூறுவார். நான் இன்று நல்ல நிலையில் இருக்கின்றேன் என்றால் அதற்கு பாபாவே காரணம். அவர் என் உள்ளத்திலேயே இருந்து கொண்டு எனக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்.

வர்ஷா


(Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.