Friday, June 8, 2012

Experiences Of Devotees At Shivamma Thayee's Roopen Agrahara Temple- Bangalore




( Narrations slightly condensed and Translated into Tamil by Sankarkumar )


ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள். இன்றளிக்கும் பதிவு தனித்துவமானது. "சிவம்மா தாயீ" என்னும் ஸாதுவினால் நிர்மாணிக்கப்பட்டு, பங்களூருவில் இருக்கும் 'ரூபன் அக்ரஹார ஷீர்டி ஸாயிபாபா ஆலயத்தைப்' பற்றிய அடியார்களின் அனுபவங்களைத் தாங்கிவரும் பதிவு இது. இதனைப் படிக்கும் முன், அன்பர்களின் கவனத்துக்கு ......
சிவம்மா தாயீ என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட ரூபன் அக்ரஹார ஷீர்டி ஸாயிபாபா ஆலயம் சென்ற மே மாதம் 22-ம் நாளன்று தனது 42-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. மே 29-ம் தேதி சிவம்மா தாயீ அவர்களின் பிறந்த நாள். இந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்களையோ, ஆலயத்துக்குச் செல்ல விரும்புவோரோ இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலய அர்ச்சகரின் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆலயத்துக்குச் சென்று வந்தவர்களின் அனுபவங்களைப் படிப்பது நமக்கெல்லாம் பெரிய ஆசீர்வாதம். ஜெய் ஸாயி ராம்.
மனிஷா
************

ஸாயிராம் தீதி.
ஓராண்டுக்கு முன்னம் நிகழ்ந்த இன்னொரு அதிசயத்தைப் பகிர விழைகிறேன். 'சிவம்மா தாயீ ஆலயம், பங்களூரு' என்னும் தலைப்பில் தங்களது ஆலய வலைதளத்தில் நீங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த ஆலயம் பற்றிய அதிசயமே இது. அத்துடன் மேலும் சிலரின் அனுபவங்களையும் இணைத்திருக்கிறென். 2011, மே மாதம் எனது குடும்பத்தாருடன் காரில் தெற்குப் பக்கம் பயணித்துக் கொண்டிருந்தேன். பங்களூரு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, ஏதோ ஒரு உந்துதலால், அங்கிருந்து நான் மட்டும் நேராக பங்களூரு செல்லவேண்டும் எனத் தோன்றியது. இத்திட்டத்தை நான் சொன்னதும் என்னுடன் வந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
என்னைப் பாதுகாப்பதிலும், என் மீதுள்ள அன்பினாலும் என்னை [பெண்ணாகிய] அங்கே தனியே விடுவதென்பது அவர்களால் இயலாத காரியம். ஆனால், அதிசயமாக அது நடந்தது. 30 - 45 நிமிட வாக்குவாதங்களுக்குப் பின் அவர்கள் என்னைத் தனியே விட, நான் ஒரு பேருந்தில் ஏறி பங்களூரு நொக்கிப் பயணிக்கலானேன். பேருந்தில் செல்வது எனக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால், எனக்குப் பக்கத்து இருக்கையில் யாரும் வராமல் இருக்க வேண்டுமே என நினைத்தேன். அதுவும் அது போலவே நிகழ்ந்தது.
'எலெக்ட்ரானிக் ஸிடி'யைத் தாண்டி பேருந்து செல்லும்போது, வெள்ளைநிற கஃப்னியுடன் தன் கரம் உயர்த்தி பாபா என்னை ஆசீர்வதிப்பது போல ஒரு காட்சி, கண்களை மூடியிருந்த எனக்குத் தெரிந்தது. சட்டென்று கண் விழித்த நான், இத நிச்சயம் பாபாவின் ஆசியே என நினைத்து மகிழ்ந்தேன். பாபாதான் என்னை இந்தப் பயணத்துக்குத் தூண்டியிருக்கிறார் என உணர்ந்தேன்.
இன்னும் இரு தினங்களில் ஆலய ஆண்டுவிழாவும் தாயீயின் பிறந்தாள் விழாவும் நடைபெற இருக்கிறது எனவும், அதற்காக 'நாம ஸப்தாஹம்' நடைபெற உள்ளது எனவும் எனக்குத் தெரியும். இதைப் பற்றி சற்று விவரமாகச் சொல்கிறேன்:
ஒருநாள் மதியம் நானும், எனது தோழியும் பாபா புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டு, அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், இருவருக்குள்ளும் ஒரே நினைவு வந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆஸ்திரேலியப் பெண்மணியுடன் நாங்கள் சிவம்மா தாயீ ஆலயத்துக்குச் சென்று வந்திருந்தோம். அந்த பெண்மணி இந்தியா வரும்போதெல்லாம் அங்கு செல்வராம். ஆனால், அது எங்களுக்கு நினவில் இல்ல
சிவம்மா தாயீ ஆலயத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என என் தொழிக்குத் தோன்றியிருக்கிறது. 'நாம ஸப்தாஹம்' ஒன்று செய்யப்பட வேண்டும் என எனக்குள் தோன்றியது. எங்கே, எப்போது என்றெல்லாம் தோன்றவில்லை. இருவரும் ஒரே கருத்தையே நினைத்து, அதையும் சொல்லிக் கொண்டோம்.
அதைப் பற்றி அதிகம் நினைக்காமல், எங்களது வாசிப்பைத் தொடர்ந்தோம். அதில் சிவம்மா தாயீயின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. பாபாவும், அவரது அடியர்களும் என்பது பற்றிய புத்தகம் அது. நாங்கள் படித்துக் கொண்டிருந்த பக்கத்தில், இறை நாமம் சொல்வதின் பெருமையைப் பற்றி பாபா சொன்ன வாசகம இருந்தது மேலும் ஆச்சரியத்தைக் கூட்டியது. இது ஏதோ ஒரு சாதாரணமான நினைப்பு அல்ல; பாபாவின் தூண்டுதல் எனப் பட்டது. அதை ஏற்று, செயல்படுத்தத் தொடங்கினோம்.
பல பாபா ஆலயங்களை நிர்மாணித்த ஒரு பெரியவரிடம் சென்று ஆலோசித்தோம். அவரும் உதவுவதாக வாக்களித்தார். மறுநாள் ஆலயத்துக்குச் சென்று, அர்ச்சகரிடம் எங்கள் திட்டத்தைக் கூறினோம். மிகவும் சந்தோஷமடைந்த அவர், தாயீக்கும் இது பிடித்த செயலே எனக் கூறி, எங்களை ஊக்குவித்தார். அர்ச்சகர்களே செய்ய நினைத்ததாகவும், அன்பர்களின் ஆதரவு போதுமான அளவில் இல்லாததால், இயலாமல் போனதென்றும் எங்களிடம் தெரிவித்தனர்.
ஆலய ஆண்டு விழா இன்னும் 15 நாட்களில் வரவிருப்பதாகவும், அதற்கும், தாயீயின் பிறந்தநாளுக்கும் இடையே சரியாக ஒரு வார இடைவெளி இருப்பதால் அப்போதே செய்யலாம் எனவும் அவர்கள் கூறியதும், தருணம் சரியாக வாய்த்ததமைந்து மகிழ்ந்தோம். அந்தப் பெரியவரின் உதவியுடன், அன்பர்களுக்குத் தெரிவித்தும், நிதி வசூல் செய்தும், பகலிலும் இரவிலும் தனித்தனியே நாம ஜபம் செய்ய ஆட்களை நியமித்தும் பணி ஜரூராகத் துவங்கியது.

முதல் நாள் ஜபம் தொடங்கி, எல்லாம் சரியாகவே நடந்தது. பாபா அமர்வதற்கும், அவர் சாய்ந்து கொள்வதற்குமாக இரு திண்டுகள் போடப்பட்டன. இந்தக் கோயிலின் அமைப்பும் த்வாரகாமாயியின் அமைப்பை ஒத்திருப்பதால், ஒரு திண்டை, அந்தக் கம்பிகளுக்கு அருகில் வைத்தோம். இரவு நாம ஜபம் செய்ய வந்தவர்களிடம் பணியை ஒப்படைத்துவிட்டு நாங்கள் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களில் ஒருவர், 'அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, இப்படி நாம் எல்லாருமே கிளம்பி வருவது சரியல்ல. அப்போது அது முறையான நாம ஸப்தாஹம் ஆகது' எனச் சொன்னதும், 'எங்களில் ஒருவராவது அங்கு இருந்திருக்க வேண்டுமே' என நினைத்து வருந்தினோம். மறுநாள் இரவு எங்களில் இருவர் அங்கேயே தங்கினோம். பாபா அங்கு அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்போது, நாங்களும் இருக்க வேண்டும் என நினைத்தோம்.
ஆனால், இப்படி உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்; அது முறையுமல்ல என கூ இருந்தவர்கள் வற்புறுத்தியதால் அரைமனதுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நேரத்தில் மழை பலமாகப் பெய்யத் தொடங்கியது. எங்களுடன் வந்தவர்களில் பலரும் அங்கேயெ காத்திருக்க நேரிட்டது. உள்ளிருந்து 'ஓம் ஸாயி, ஸ்ரீ ஸாயி' என்னும் நாம ஸ்மரணம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. நான் மட்டும் மெல்ல பாபா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று, அங்கு மண்டியிட்டு, 'பாபா, நான் இரவு முழுவதும் இங்கேயே தங்குகிறேன். அதுவே எனக்கு வேண்டும்' என வேண்டினேன்.

அடுத்த நிமிடமே மழை நின்றுவிட்டது. இதை மிகை எனச் சிலர் கூறலாம்; ஆனால் இதுவே உண்மையில் நிகழ்ந்தது. தெய்வ கட்டளை போல மழை சுத்தமாக நின்று போனது. 'பாபாவின் கட்டளை இது. நான் இன்றிரவு இங்கேதான் இருக்கப் போகிறேன்' என நான் எடுத்த முடிவை மாற்ற எவராலும் இயலவில்லை. எனது திட சித்தத்தைக் கண்ட எனது நண்பர்களில் சிலர் வீடு திரும்பினர். ஒரு சிலர் என்னுடன் தங்கி நாம ஜபத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு தாண்டியதும், என் மனதில் ஒரு வேண்டாத எண்ணம் குடி கொண்டது. இது ஆலயம்; சரி! ஆனல், இதற்குக் கீழே சிவம்மா தாயீயின் ஸமாதி இருக்கிறதே எனச் சற்று கலக்கமாக இருந்தது. என்னுடன் ஒரு சில பெண்களும், தாய்மார்களும் கூட அங்கே அப்போது இருந்தனர். அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். அப்போது மேலே கூரையில் பாபா தனது அபய ஹஸ்தத்துடன் காட்சி தந்தார். நான் மெய் சிலிர்த்துப் போனேன். திரும்பிய இடமெல்லாம் பாபா தெரிந்தார். இது கனவல்ல; நான் தூங்கவுமில்லை; கண்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்தேன்.
இந்தக் காட்சி என்னை அமைதிப்படுத்த, நானும் மற்றவர்களுடன் நாம ஸ்மரணையில் கலந்து கொண்டேன். மறுநாள் காலை 6 மாணி அளவில் பகல் நேர அன்பர்கள் வரவே, நான் வீட்டுக்குக் கிளம்பினேன். இரவு முழுதும் அங்கே தங்கி நாம ஜபம் செய்ய நேரிட்டதைக் குறித்து, என்னுடன் அங்கே தங்கியிருந்த மற்றப் பெண்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இனிவரும் இரவுகளிலும் இதுபோலவே செய்வது என முடிவெடுத்தோம்.

 இதே நாளில் இகழ்ந்த இன்னொரு 
அதிசயத்தைப் பற்றி இப்போது சொல்கிறேன் 

மாலை ஆரத்தி நேரம். நிறைய விளக்குகளை த்வாரகாமாயியைச் சுற்றி ஏற்றி வழிபடலாம் என எனக்குத் தோன்றியது. ஆனால், ஒரு சில தோழிகள் அது சரியானதல்ல. மேலும் மண் விளக்குகள் எல்லாம் கோவிலுக்குப் பின் பக்கம் ஒரு மூட்டை கட்டி வைக்கப் பட்டிருக்கிறது.' எனச் சொன்னார்கள். அவற்றைச் சுத்தம் செய்வது முடியாத செயல்" எனச் சொன்னார்கள். ஆனால் எங்களில் சிலர் இதை எப்படியும் செய்வது என முடிவெடுத்தோம். சன்னிதியைச் சுற்றிலும் அவற்றை வைத்து அலங்கரித்தோம். அதன் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.



எல்லா விளக்குகளையும் ஏற்றினோம். கடைசி விளக்கை ஏற்றி முடிக்கையில், மின்சாரம் தடைபட்டுப் போனது! ஆனால் எங்கள் ஆலயமோ விளக்கொளியில் மின்னியது. ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி' என்னும் சப்தமும், தாள ஓசையும் முழங்க அர்ச்சகர் ஆரத்தி காட்டினார். இது ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். மின்சாரம் தடைப்படும் எனத் தெரிந்தே பாபா இப்படிச் செய்தார் என நினைத்தேன். எல்லாமே திட்டமிட்டபடி நடந்தேறின.
ஜெய் ஸாயி ராம்.

 அன்றிரவு நிகழ்ந்த இன்னொரு அழகான அனுபவம்

நள்ளிரவு 12 மணியைத் தாண்டியிருந்தது. வந்திருந்த அன்பர்களில் பலர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். நாங்களும், டோலக் அடிக்கும் சிலரும் மட்டுமே இருந்தனர். ஆலயத்தின் வெளிக்கதவு திறந்திருந்தது. ஆனால், சன்னிதி அருகில் இருந்த கதவு லேஸாக மூடப்பட்டிருந்தது. இத்தனை நேரமாக, இத்தனைப் பேர்கள் இருந்தும், பாபாவுக்கு உணவளிக்க வில்லையே என்பது புரிந்தது. [குறிப்பு: அர்ச்சகர்கள் மட்டுமே நைவேத்யம் சமைப்பார்கள். ஒரு வட இந்தியப் பெண்மணி வந்து அவர்களுக்கு உதவி செய்வார். ஸப்தாஹம் தொடங்கியதும், மேலும் சில பெண்களும் இதில் பங்கு பெற்றனர்]. ஆரத்த ஒழுங்காக நடைபெற்றாலும், நாங்கள் பாபாவுக்கு உணவு எதுவுமே அளிக்கவில்லை.
திடீரென 'எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடு' என ஒரு குரல் எனக்குக் கேட்டது. அடியார்கள் கொண்டு வந்து படைத்திருந்த பிஸ்கட், இனிப்புகள், பழங்கள் என இருந்தன. அவற்றை எடுத்து பாபாவின் முன் படைத்தோம். அப்போது எங்களில் ஒருவர் கதவைத் திறக்கும்படி சொல்ல, வெளியே சென்று திறந்ததும், அங்கே ஒரு நாய் இதற்கெனவே காத்திருப்பது போல நின்று கொண்டிருந்தது.
ஏதோ ஒரு உந்துதலில், என் தோழி, ஒரு பிஸ்கட் பொட்டலத்தைப் பிரித்து, அந்த நாய்க்கு முன் வைத்தாள். அவையனைத்தையும் அது தின்றுவிட்டது. அடுத்து இன்னொரு பாக்கெட்டைக் கொடுக்க அதையும் நாய் தின்றுவிட்டது. இப்படியே பதினொன்று பொட்டலங்கள் காலியாகின. அவ்வளவு பசி போலும் அந்த நாய்க்கு! அப்போதுதான், உள்ளிருந்து ஒரு குரல் கேட்டதும், பாபா சாப்பிடுவார் என நினைத்து, படத்தின் முன் வைத்தோமே தவிர, தார்க்கட் என்னும் பெண்மணிக்கு ஒரு பசியுள்ள நாய் உருவில் பாபா வந்த நிகழ்வு எங்களுக்கு நினைவுக்கு வந்தது. அதையே நிதரிசனமாக இப்போது பாபா எங்களுக்குக் காட்டினார் என உணர்ந்தேன். இதைப் போல பல சம்பவங்கள் நிகழ்ந்து, எங்களை மகிழ்த்தி, ஆன்மீகப பயிற்சியும் பாபாவால் எங்களுக்குத் தரப்பட்டது.

மே மாதம்  31, 2011

மூன்றாம் நாள் நாம ஜபம். எல்லாம் முறையாக நடந்தது. பல பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர். கோவிலுக்கு அருகில் சிவம்மா தாயியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. 3 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து நாமத்தை இசைத்தனர். அங்கிருந்து கிளம்பிச் செல்லவே அவர்களுக்கு மனமில்லை. பலருக்கும் தனித்தனியே அனுபவங்கள் கிடைத்ததாகச் சொன்னார்கள்.
பிரசாத வினியோகம் செய்துகொண்டிருந்த ஒரு சிறுமி, வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, இருக்கிற உணவு போதுமோ என அஞ்சினாளாம். அப்போது, பாபா அவளிடம் ' கொடுப்பது நான்! கவலைப்படாதே' எனச் சொன்னதாகக் கூறினாள். இன்னொரு சிறுமியும் இதேபோல கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கும்போது, வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து பயந்தாளாம். அப்போது பாபா அவளிடம் ' நீ செய்யும் அனைத்துமே என் மூலம் செய்யப்படுபவை என உணர். எனவே பயப்படாதே' என தைரியம் கூறினாராம். அவரே அனைத்தையும் இயக்குகிறார் என்பதைப் புரியவைத்து, எங்களது கர்வத்தை அடக்கிய இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இந்த நேரத்தில் இங்கே இருந்து, இதில் ஈடுபட்டோமே என்பதே மகிழ்ச்சி. வாசிப்பவரால்தன் பியானோவுக்குப் பெருமை; அதற்கென்று தனியே ஏதும் இல்லை.


சன்னிதிக்கு இடப்புறம் சிவம்மா தாயீயின் சிரித்த முகத்துடனான படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கிறது. அன்றிரவு 3 மணி அளவில் நான் ஒரு அற்புதக் காட்சியைக் கண்டேன். நாங்கள் இசைப்பதற்குச் சரியாக, தாயீயின் உதடுகளும் அந்தப் படத்தில் அசைந்து கொண்டிருந்தன. 'ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி' என்னும் மந்திரத்தை அவரும் சொல்லிக் கொண்டிருந்த அந்தக் காட்சி என்னைப் பரவசப்படுத்தியது. அன்றிரவு பல முறை அந்தக் காட்சியை நான் கண்டேன். ஆனால், மறுநாள் அதே போலத் தெரியவில்லை. இது போல பல அதிசயங்களை 7 நாட்களும் நாங்கள் அனுபவித்தோம்.

எட்டாம் நாள் காலை

7 நாட்கள் பூர்த்தியானதும், எட்டாம் நாள் காலையில், நாமஜபம் நடந்து கொண்டிருக்கும்போது, வெள்ளை வேட்டி, ஜிப்பா அணிந்து, நீளமான தாடியுடன், தலையில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டியிருந்த ஒரு வயதானவர் கோவிலுக்கு வந்து, சிவம்மா தாயீ முதன்முதல் பாபாவை வைத்திருந்த ஒரு பழைய சிதிலமடைந்த பலகை ஒன்றின் மீது சற்று நேரம் அமர்ந்திருந்தார். பாபாவை வணங்கிய பின்னர், அவர் கிளம்பிச் சென்றுவிட்டார். இறுதி நாள் என்பதால் பலரும் வந்து போய்க் கொண்டிருந்ததால், நாங்கள் நாம ஜபத்திலேயெ தீவிரமாக
ஈடுபட்டிருந்தோம்.
10.30 மணி அளவில் ஸப்தாஹம் பூர்த்தியானதும், விமரிசையாக ஆரத்தி நடந்தது. பாபாவின் திருவுருவப் படத்தை பால்கியில் வைத்து, பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போதுதான், முன்பு பார்த்த அதே வயதானவர் சன்னிதிக்கு வெளியே முன்னர் தாயீ நிறுவிய பாபாவின் வெள்ளிச் சிலைக்கு அருகில அமர்ந்திருப்பதைக் கண்டோம். சமையலறையில் இருந்த பெண்ணிடம், அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுக்குமாறு சொன்னதற்கு, பால்கி திரும்பிவந்து, பாபாவுக்கு நைவேத்தியம் செய்த பிறகே கொடுக்க இயலும் என அங்கிருந்தவர்கள் சொல்லி விட்டனர். ஆனால், பாபா எந்த வடிவில் வருவார் என யாருக்குத் தெரியும்? எனவே நாங்கள் வற்புறுத்தியதன் பேரில், அவருக்கு சர்க்கரைப்பொங்கல், கலந்த சாதம், தயிர் சாதம் ஆகியவற்றைக் கொடுக்க, அவரும் மகிழ்வுடன் உண்டார்.
சென்ற ஆண்டு நிகழ்ந்த இவற்றையெல்லாம் இப்போது ஏன் எழுதினேன் எனத் தெரியவில்லை. இந்த ஆண்டு இரு முறை பங்களூருக்குச் சென்று, நாம ஸப்தாஹம் பற்றி அர்ச்சகர்களிடம் கலந்து ஆலோசித்தேன். தொடங்கிய இந்த நிகழ்ச்சியை விடாமல் நடத்த வேண்டும் என நினைத்தேன்.
முதல் முறை சென்று இது பற்றிக் கேட்டபோது, அர்ச்சகர் இதை உற்சாகமாக ஆமோதித்தாலும், அவரது சகோதரர் [இவரும் ஒரு அர்ச்சகர்] கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி முடியும்வரை காத்திருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார். பாபா நினைத்தால் இது நடக்கும் என நானும் வந்துவிட்டேன்.
ஒரு சில வாரங்களுக்கு முன், எனது நண்பர்களுடன் நான் சென்றபோது கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருந்ததைப் பார்த்து சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அர்ச்சகர்கள் மட்டும் ஏனோ தயங்கினர். சுற்றுச் சுவர் எழுப்பிய பின்னர், இது பற்றிப் பேசலாம் எனச் சொல்லி விட்டனர். அதற்கான ஆரம்ப கட்ட வேலையே இன்னும் தொடங்காததால், இது எப்போது நிகழும் என எனக்குத் தெரியவில்லை.

வேண்டுகோள் 

இதைப் படிக்கும் அன்பர்களே இந்த நிகழ்சி எப்படி நடைபெற வேண்டும் எனத் தீர்மானிக்கட்டும். "அவர்"தான் அனைத்தையும் செய்கிறார் என்றாலும், நாமெல்லாரும் வேண்டினால், அதற்கு அவர் மறுப்பு சொல்லாமல், நிறைவேற்றி வைப்பார்.
இன்னொரு வேண்டுகோள். இந்தக் கோவிலைச் சார்ந்து சாவடி என்னும் ஒரு கட்டடமும் இருக்கிறது. த்வாரகாமாயியில் பாபா அமர்ந்திருப்பது போன்ற் ஒரு பெரிய படம் இங்கே இருக்கிறது. பாபா இதில் இளமையாகவும், தெய்வீகமாகவும் காட்சி அளிக்கிறார். இந்த அருமையான இடத்துக்கு எதிரே வண்டி வண்டியாகக் குப்பை கொட்டிக் கிடக்கிறது. அந்த ஆஸ்ரமத்தில் வசிப்பவர்களால் கொட்டப்பட்ட குப்பையே இது. ஒருவரே இதைச் சுத்தம் செய்வது என்பது இயலாத காரியம். ஆனால், நம்மில் ஒரு 20 பேர் சேர்ந்தால், இதைச் செய்ய முடியாதா, என்ன? எனது தோழியோ யாரையும் எதிர்பார்க்காமல் நாமே தொடங்குவோம் என்கிறார். ஆனால் நிச்சயம் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்த சேவையில் பங்குபெற விரும்புவோர் மனிஷா தீதி மூலம் என்னைத் தொடர்ப கொள்ளலாம். [Email: shirdisaibabakripa@yahoo.com]
கோவில் தேரை ஒரு கூடாரத்தால் மூடியிருக்கிறார்கள். மிக அழகாக வண்ணம் பூசப்பட்ட தேர் இது. சிவம்மா தாயீ இதை ஆர்வமுடன் செய்தாராம். இதில் பாபாவை அமரவைத்து, இழுத்துச் செல்ல வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், அவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றி, நமக்கும் மகிழ்சியளிக்கச் செய்வது நம் கடமையல்லவா? நமக்கு மட்டுமின்றி, இங்கிருக்கும் அனைவருக்குமே அது மகிழ்வளிக்கும்.

ஆலய அர்ச்சகரின் அலைபேசி எண்:  09945531187
ஆலயத்தின் முகவரி இங்கே:   CLICK  HERE




Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.